Jun 8, 2009

கிராமத்து மக்கள்...


மீன்கொத்தி பறவை ஒரே இடத்தில் பறந்து கொண்டே நின்று பொத்தென்று தண்ணீரில் விழுந்து மீன்பிடிக்கும் சாதூர்யத்தை பார்த்திருக்கிறீர்களா?

பூவரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? காக்கா முட்டை என்ன நிறம் தெரியுமா? குளத்தில் மேல்துண்டை வைத்து மீன் பிடித்த அனுபவம் உண்டா?

தந்தையின் கைகளில் படுத்துக்கொண்டு நீச்சல் பழகிய அனுபவம் இருக்கிறதா? அடைகாக்கும் கோழியின் சீற்றத்தை கண்டு ஓடியதுண்டா? காக்கை தூக்கிச்சென்ற கோழிக்குஞ்சு குற்றுயிராய் கீழே விழுந்து உயிருக்கு போராடும் போது பதை பதைத்து நின்றதுண்டா? இவையெல்லாம் கிராமத்து மக்கள் தினம் உணர்வுபூர்வமாக அனுபவிக்க கூடியது. ஆனால் நகர வாழ்க்கையில் ஏதோ... சினிமாவில் பார்த்ததாகத்தான் இருக்கும்.

வாழ்க்கையை தொலைச்சிட்டு, நம்மளும் வாழுகிறோம்னு ஏதோ நாள கடத்திட்டு வர்றோம். டாடி, வாத்து பறக்குமானு புள்ள கேள்வி கேட்கிறான். அத வுடுங்க. முந்தாநாளு ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒரு வாண்டு அது ஆத்தாகிட்ட கேக்குது "மம்மி ரைஸ் எங்க செய்றாங்க"? நிலமை எங்க போய்க்கிட்டுருக்கு பார்த்திங்களா?

நம்ம கூட்டத்தில் பாதி ரெண்டுங்கெட்டானா அலையுது. சொந்த ஊர காலி பண்ணிட்டு டவுனுக்கு வந்த நம்ம ஜனம் ஊர மறந்து போயி ரொம்ப நாளாச்சி.

கபடமில்லாத வெள்ள மனசுக்காரன் எங்க பாக்க முடியுது? பக்கத்து வீட்ல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கிடந்த பெரிசு ஏதாவது செத்தா கூட எதிர்வீட்டுக்காரனுக்கு தெரிய மாட்டுக்கு!

ஆத்தா, அப்பன், அத்த, மதினி, மச்சான், சொக்காரன், சொந்தம்னு கூடி வாழ்ந்த ஜனம், இப்ப மூலைக்கு ஒன்னா சிதறிக்கிடக்கு. அப்பங்கிட்ட அடி வாங்கினா, குழந்த ஆத்தாக்கிட்ட ஓடும், ஆத்தாவும் திட்டினா, வாசல்ல வெத்தில இடிச்சுக்கிட்டு இருக்கிற பாட்டிக்கிட்டா போவும்.

கிழவி குழந்தய தூக்கி "நாசமா போறவன் புள்ளய என்னமா அடிச்சிருக்கான்" என்று தேற்றுவாள். அப்புறம் அவகாலத்து கதைய ஒன்ன எடுத்து விடுவாள். அதுல சீதையும் வருவா, கண்ணகியும் வருவா. கத கேட்டு வளர்ந்த சமூகம் அது. திண்ணையில் கத கேட்டு, குட்டைல குளிச்சி, சோளக்கஞ்சி குடிச்சு, அய்யனார கும்பிட்டு தெம்பா அலஞ்சவங்க அவங்க. இப்ப காத்தடச்ச பேப்பர் பைல கொஞ்சுண்டு சிப்ஸ் இருக்கு. அத 20 ரூவா கொடுத்து வாங்கி கொறிச்சிட்டு டிபன் சாப்பிட்டேன் என்கிறான். உடம்புல என்னத்த ஒட்டும். முதலிரவுல பொண்டாட்டி கிட்ட "சுகர் கம்ப்ளைண்டு" என்கிறான். பளபளனு விடியறதுக்கு முந்தியே தொழுவத்தில் இருந்து மாடுகள அவுத்துவிட்டு மேய்ச்சலுக்கு பத்திட்டு போறவன், நீச்சத்தண்ணிய ஒரு செம்பு குடிச்சிட்டு போவான். தூக்குச்சட்டியில அமுக்கி, அமுக்கி சோளாச்சோறு இருக்கும், வெயிலு சாயிர நேரத்தில் அத திண்ணுட்டு, எருமையோட சேர்ந்து, அவனும் கம்மாயில குளிப்பான்.

பாலு கறந்தால் அறைப்போனி அப்படியே குடிப்பான். வயக்காட்டுக்கு போறவன் காலைல மம்மட்டிய புடிச்சானா உச்சி வெயிலுக்கு கொஞ்சம் இளப்பாறுவான். அவனுக்கு வாக்கப்பட்டவ கலயத்தில் பழைய சோற புளிஞ்சுவச்சு கொண்டு வருவா.

வாய்க்கால்ல ஓடுற தண்ணில கால நனைச்சுக்கிட்டே பழயது சாப்பிட்டு திரும்பவும் வயல்ல இறங்குவான். சும்மா வைரம் பாஞ்ச கட்டையாட்டம் உடம்ப வச்சிருப்பான். நோய் நொடி அண்டிரும்???? அப்பெல்லாம் வீட்டு வேலைக்கு வர்ற ஆள திண்ணயில உக்கார வச்சு இலை போட்டு, சோறு போடுவாங்க அவன் அத எல்லாத்தையும் மிச்சம் வைக்காம திண்ணாத்தான் அவன் வேலைக்கு லாய்க்கு. இல்லாட்டி வெரட்டிவிட்டிருவாங்க!

அப்ப உடல் வருத்தி வேர்வ சிந்துனான். இப்ப நாம "வாக்கிங்" போறோம். யார்கிட்ட போய் இதைச் சொல்ல. காலைல நீராகாரம் குடிச்சிட்டு அப்ப போனான். இப்ப நீராகாரம் வேண்டாம்! அட அந்த செம்பக்கூட காணமுங்க.

பொருளாதாரமே பிரதானமாகிப் போன உலகில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊருக்கு புலம் பெயரும் மக்கள் பல சுகங்களை தியாகம் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

பூர்விக வீட்டையும், நடைபழகிய கிராமத்து தெருக்களையும், அந்த நிம்மதியான் வாழ்வையும் நகரத்து சத்தத்திற்கு இடையே அசைபோட்டு பார்க்க கூட நேரமில்லை நம்மில் பலருக்கு.

பிழைப்பு தேடி புலம் பெயர்த்தவர்களுக்கும், சொந்த ஊரை மறந்து தீப்பெட்டி சைஸ் குடியிருப்புகளில் பக்கெட் தண்ணியில் குளித்து வருபவர்களுக்கும், புகை மண்டல நகரத்தில் "ஏசி" வைத்து வாழ்பவருக்கும், இன்னும் பலருக்கும் இந்த கட்டுறை ஒரு "ஆட்டோகிராப்பாக" தெரியும்.

இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் வேளையில், நகரில் வசித்து ஓய்வு பெற்ற பலரும், நிம்மதி தேடும் செல்வந்தர்களும், தங்களது சொந்த கிராமங்களுக்கு ரயில் ஏறுவார்கள் என்பது உண்மை.

பெண் என்ற (என்றால்) தெய்வம் ...

பெண் என்பவள் யார்?
அவளின் குணாதிசயங்கள் யாவை?
அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?
அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? - ஏன்?


பெண் என்பவன் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகிறான். ‘கடலின் ஆழத்தைவிட ஆழமானது பெண்ணின் மனம்’ என்பார்கள். உலகில், எழுதப்பட்ட இலக்கியங்களில் பெரும்பங்கு - பெண்’ என்ற புதிரைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் எழுதப்பட்டவைதாம்.

கொஞ்சம் பெரிய சைஸ் காக்கையைப் போல் இருக்கும். அழகே இல்லாத ஒரு பெண் மயிலைக் கவர, கம்பீரமான, வானவில்லைப் பல் வண்ணங்களைக் கொண்ட தோகையை உடைய அழகிய ஆண் மயில் ஏன் ஆடிப்பாட வேண்டும்? ஏதோ முட்டையிட்டோம். குஞ்சுபொரித்தோம். இனி அதுவாயிற்று அதன் வாழ்க்கையாயிற்று என்று ‘தேமேய யென சும்மா இராமல் ஒரு தாய்ப் பருந்து ஒருமீனைக் கொன்று ஏன் குஞ்சுக்கு ஊட்ட வேண்டும்? காடும் மேடும் திரிந்து, புல்லும் சருகும் சேர்த்து ஏன் ஒரு கூட்டைக் கட்ட வேண்டும்?

இதற்கெல்லாம் விடை ‘அன்பு’ என்பீர்கள். அன்பு என்பது என்ன? அது ஒரு இரசாயன மாற்றமா, ஹார்மோன் சுரப்பா, இல்லை வேறு ஏதாவதா? பசிக்கும்போது சாப்பிடுவதைப்போல அன்பு என்பது ஒரு உடலின் தேவையா, இல்லை அதைவிட மேலானதா?

சைனாவின் ‘யின் - யாங்’ தத்துவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். “யின்”என்பது பெண் தத்துவம். “யாங்” என்பது ஆண் தத்துவம். யின் என்பது பெண்மை, பூமி, இருள், செயலுக்கு உள்ளாவது. யாங் என்பது ஆண்மை, வானம், வெளிச்சம், செயல்படுவது, ஊடுருவுவது.


பூமியைப் போன்றவள் பெண்:

பொறுமைக்காக மட்டுமல்ல “Down to eartt” என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல, பெண் மிகவும் லௌகினமானவள் Very practical.

ஷேக்ஸ்பியரைப் பற்றியோ, குண்டலினியைப் பற்றியோ, பைசாவிற்கு லாயக்கற்ற த்த்துவங்களைப் பற்றியோ அவளுக்கு அக்கறையில்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் அவள் வீடு, அவள் கணவன், அவள் குழந்தைகள்.

இதைச் “சுயநலம்” என்று சொல்வது மிகவும் தவறான கருத்து. பெண் மட்டும் இப்படி சுயநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமான பல ஆண்களின் தாராள மனத்தினால் பல வீடுகள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டிருக்கும்.

“Charity begins at home” இரக்கம் இல்லறத்தில் ஆரம்பிக்கிறது என்பார்கள். தனக்கு மிஞ்சினால்தான் தானம். தனக்காகவும், தன் கணவனுக்காகவும எப்போதும் ஓயாமல் சிந்திப்பவள் பெண். ஒரு முட்டையில் கருவின் எதிர்காலத்திற்குத்


தேவையான அனைத்து ஊட்டப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைப் போல, பெண் தன் குழந்தையின் எதிர்காலத்திற்காக அக்கறையோடு சேமித்து வைக்கிறாள்.

விதை வளர்வதறகுத் தேவையான நீர், ஆக்ஸிஜன், நைட்ரஜன், தாதுப்பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் நிலமானது சேமித்து வைத்திருக்கிறது. வானம் பொய்த்தாலும், பூமி பொய்ப்பதில்ல. மழையைத் தராமல் வானம் வறண்ட பாலைவனத்தில் கூட எங்கோ ஒரு மூலையில் சோலை இருப்பதைப்போல, பெண் என்பவள் அன்பு என்ற நீரூற்றை உடைய பூமி.

இருளைப் போன்றவன் பெண்

வானவெளியில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இருள் பூமியில் பாதி வெளிச்சம் மறுபாதி இருள். வெளிச்சத்தில், பகல் வேளையில் உழைத்துக் களைத்த உயிரினங்கள் இளைப்பாற வீடு திரும்புவது இருளில்.

ஓய்வெடுக்கும் உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஆனந்தமாகக் காதல் செய்வதும் இருளில். காதல் செய்த உயிரினங்கள் களைத்துப் போய் தன்னை மறந்து உறங்குவதும் இருளில். எனவே, இருள் என்பது ஓய்வு, இனப்பெருக்கம், அமைதி.

இருள் என்பதற்கு இப்படி பல நற்குணங்கள் இருந்தாலும், அதற்கு சில எதிர்மறை குணங்களும் உண்டு. இருள் என்பது யாரிடமாவது அடைக்கலம். தேடும் தன்மை. பெண்களிடம் காணப்படும் எல்லாவிதமான பயங்களும்,


சகலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஒருங்கே உருவெடுத்த ஒரு வடிவம் பெண்.

தன் திறமையைத் தானே உணராத அனுமாரைப்போல, அன்பு என்ற நீரூற்று தனக்குள்ளேயே இருந்தாலும் உண்டு. இருள் என்பது பயம். இருள் என்பது பாதுகாப்பற்ற தன்மை. இருள் என்பது யாரிடமாவது அடைக்கலம் தேடும் தன்மை. இருளின் இந்த எதிரிடையான குணங்களும் பெண்களிடம் காணப்படும். எல்லா விதமான பயங்களும், சகலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஒருங்கே உருவெடுத்த ஒரு வடிவம் பெண்.

தன் திறமையைத் தானே உணராத அனுமாரைப்போல, அன்பு என்ற நீரூற்று தனக்குள்ளேயே இருந்தாலும், எப்போதும் அதை வெளியே யாரிடமாவது தேடி அலைபவள் பெண்.

இளம் வயதில் பெற்றோரிடம், பருவத்தில் காதலனிடம், திருமணத்திற்குப் பிறகு கணவனிடம், தாயான பிறகு குழந்தைகளிடம் என்று எப்போதும் யாரையாவது அண்டியே இருப்பவள் பெண். அவளால் தன் காலில் தானே நிறக முடியாது என்று பிறர் குறை கூறுவது உண்டு. ஆனால், இது குறையல்ல. இதுதான் நிறை. பிறரிடம் எப்போதும் எதிர்பார்த்து, அதை அவர்கள் தந்தாலும், தராவிட்டாலும் பெண் எப்போதும் தந்து கொண்டேதானிருக்கிறாள்.

எனவே, அண்டி வாழ்வது பெண்ணிற்கு குறையல்ல நிறை. பெற்றோரைச் சார்ந்து வாழும் குழந்தை அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைக்கிறது. காதல் வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் பெண்ணின் இந்த அண்டிவாழும் குணம்தான். கணவன் - மனைவி இணை பிரியாமல் இருப்பதற்கு காரணமும் இக்குணம் தான் சார்ந்து வாழ்தல், இயல்பானது. ஆரோக்கியமானது.

செயலுக்கு உள்ளாவது பெண்

ஆங்கிலத்தில் “Passive” என்பார்கள். இதன் பொருள் செயல்படாமல் இருப்பது. செயல்படாமல் இருப்பது என்பதற்கு பொருள் செயலுக்கு உள்ளாவது என்பது பொருள். செயலுக்கு உள்ளாவது என்றால் வேறு ஏதோ செயல்படுகிறது என்றுதானே பொருள்? ஆம். ஆணைச் செயல்பட வைத்து அந்த செயலுக்கு உள்ளாவது பெண்.

ஒன்றும் தெரியாத அப்பாவி ஆணை, தன் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி ‘அடப்பாவி’ ஆணாக்குபவள் பெண். ஒன்றும் தெரியாதது போல் ஒரு பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழி, ஒரு ஆண் அறிவாளியாக மாறித்தானே தீர வேண்டும்?

“என்னங்க இதைத் திறந்து குடுங்க’ என்று மூடியைத் திறக்க முடியாதது போல் பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழுவது இயல்புதானே? துருப்பிடித்த மூடியைத்திருகி, கையெல்லாம் சிவந்திருந்தாலும் தன் ஆண்மை வெளிப்பட ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததற்காக ஒரு ஆண் பெண்ணிற்கு நன்றி செலத்துகிறான். அடிமையாகிறான்.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது இப்படித்தான் தூண்டி விடுபவள் பெண். தூண்டப்படுவது ஆண். செயல்பட வைப்பவள் பெண். செயலைச் செய்வத ஆண். இதைத்தான் நாகரீகமாக ‘செயலுக்கு உள்ளாவது’ என்கிறார்கள். செயல்படாமல் இருப்பது என்ற அர்த்தத்தில் அல்ல.

ஹிந்துஸ்தான் லீவர் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தன் சோப்புப்

பொருட்களை இந்தியாவில் ‘விற்பனை செய்யத் திட்டமிட்டபோது ஒரு சர்வே நடத்தியது. Who is the decision maker தீர்மானம் செய்வது யார்? ஆணா, பெண்ணா?என்பதுதான் கேள்வி.

ஒவ்வொரு வீடாகப் புகுந்து இதே கேள்வியைக் கேட்டார்கள். ‘உங்க, வீட்டில யாருங்க ‘தீர்மானம் பண்றது?’

‘எங்க வீட்டில எல்லாமே அவருதாங்க.”

வந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆஹா, என்ன ஒரு அடக்கம்! பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியாவை இதனால்தான் தாய்நாடு, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து அந்த அதிகாரிகள் எதற்கும் கேட்டுப் பார்க்கலாமே என்று ஆண்களிடம் அதே கேள்வியைக் கேட்டார்கள்.

தீர்மானம் எடுக்கறதெல்லாம் நான்தாங்க. ஆனா, அவ என்ன தீர்மானம் எடுக்கச் சொல்றாளோ அதைதாங்க நான் செய்வேன்.’

இது ஒரு நகைச்சுவைப் போலிருந்தாலும், இதுதான் உண்மை. செயல்படுவது ஆண். செயல்பட வைப்பது பெண்..

இன்னும் சில ஆண்கள் கொஞ்சம் கௌரமாய் சொல்வார்கள். “முக்கியமான விஷயங்களைப் பத்தி நான் யோசிப்பேன். தேவையில்லாத சாதாரண விஷயங்களை அவள் தீர்மானிப்பாள்”.

“அப்படியா…?”

“ஆம்.. நான் எந்த வேலைக்குப் போக வேண்டும். எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும், வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் போன்ற சாதாரண விஷயங்களையெல்லாம் அவள் தீர்மானிப்பாள். ஜார்ஜ் புஷ் செய்வது சரியா? இந்திய அரசியல் எப்போது மாறும்? போன்ற தீவிரமான விஷயங்களைப் பற்றி நான்தான் யோசிப்பேன்.

விளையாட்டல்ல. நிறைய ஆண்களின் நிலை இதுதான்.

கிரகிப்பது பெண்

எல்லாவற்றையும் கிரகித்து உறிஞ்சி விடுவது பெண்ணின் குணம். ஆண் என்ன தப்பு செய்தாலும், பொய் சொன்னாலும் உடனே பெண் புரிந்து கொண்டு விடுவாள் என்றும் இதற்கு அர்த்தம் சொல்லலாம். சாணம், குப்பை ன்று தப்போட்டாலும் அதை மூடி மறைத்து, கிரகித்து எருவாக மாற்றக்கூடிய குணம் என்ற பொருளிலும் கூறலாம்.

இந்த “யின் - யாங்” சின்னத்தை கூர்ந்து கவனித்தால், இன்னொரு உண்மை புலப்படும். இருட்டு, வெளிச்சம், இரண்டும் பின்னப பிணைந்து காணப்படுகிறது. இருட்டில் ஒரு சிறிய வட்டமாக வெளிச்சம் காணப்படுகிறது. வெளிச்சத்தில் ஒரு சிறிய வட்டமாக இருள் காணப்படுகிறது. ஆம், இருட்டில் வெளிச்சத்தின் விதை இருக்கிறது.

ஒரு பெண்ணில், ஆணின் விதை இருக்கிறது. ஒரு ஆணில், பெண்ணின் விதை இருக்கிறது.

எவ்வளவு தோல்வியிலும் ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷத்திலும் அட்டா இன்னும் கிடைச்சிருக்கலாமே என்ற வருத்தம் இருக்கிறது. ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷம்தான் ஒருவனைத் தொடர்ந்து ஊக்குவித்து மேலும் மேலும் செயல்பட வைக்கிறது. அடடா இன்னும் கிடைச்சிருக்கலாமே என்ற வருத்தம்தான் சந்தோஷத்தால் திமிராகி மேற்கொண்டு எதையும் செய்யாமல் இருத்தலைத் தவிர்த்து முடங்கிப் போகாமல் தொடர்ந்து மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வைக்கிறது.

தோல்வியில் வெற்றியின் விதை இருக்கிறது. வெற்றியில் தோல்வியின் விதை இருக்கிறது. வெற்றியும், தோல்வியும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. ஒன்றில்லாமல் வேறில்லை.

‘நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை’ என்று ஆணும் பெண்ணும் பின்னிப் பிணைந்து வாழ்வதற்கும் காரணம் இந்த விதைதான். இந்த கொக்கிதான் (The Hook) பொம்மலாட்டக் கயிறு போன்றது. இது பொம்மைகள் ஆடலாம், பாடலாம். ஆனால் பொம்மை ஆடுவதற்குக் காரணம் அதற்குப் பின்னாலிருந்து இயக்கும் சூத்ரதாரி.

ஷாஜஹானைப் போல் ஒரு ஆண் ஒரு பெரிய அழகிய உன்னதமான தாஜ்மஹாலையே கட்டிவிடலாம். ஆனால், அந்த தாஜ்மகஹாலை உற்றுக் கவனியுங்கள். அந்த அழகிய வெண்மையான கற்களை ஊடுருவிப் பாருங்கள். கயிறுகள் தெரியும். அந்தக் கயிறுகள் மும்தாஜின் கையில் போய் முடிவடைகின்றன.

Jun 7, 2009

பருவம் என்பது 13 வயதிலிருந்து 19 வயது வரை


கொடி அசைந்ததும் காற்று வந்ததா - காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

பழைய திரைப்படப் பாடல் என்றாலும் இன்றும் அது ஏற்றுக் கொள்ளலாம் போலத் தான் இருக்கிறது.
பருவம் என்பது எது? ஏன் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?

பருவ நிலை மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் இருக்கிறது. பருவத்தில் பெய்யும் மழை தான் பயிரையே வாழ வைக்கிறது. ஆக பருவம் என்பது மனித வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தப் பருவம் என்பது 13 வயதிலிருந்து 19 வயது வரை என்கிறார்கள்.

இந்தப் பருவத்தில் உடலில் மட்டுமல்ல மனதிலும் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. அது வரைக்கும் குழந்தைகளாய் இருந்தவர்கள் டீனேஜ் நிலை வந்ததும் சட்டென தங்களைப் பெரியவர்களாய் நினைத்துக் கொண்டு குழந்தைத் தன்மையை இழக்கிறார்கள்.

அது வரை இருந்த ஆசைகளும் விருப்பங்களும் வித்தியாசமான கோணத்தில் செல்கின்றன. டீன் ஏஜ் எனும் பருவ வயது பதிமூன்று வயதில் ஆரம்பமாகிறது. இது ஒரு ஆணை விட பெண்ணை அதிகம் பாதிக்கிறது காரணம் அவளது உடல் நிலை மாற்றங்கள். மார்பக வளர்ச்சியும், மென்சஸ் எனப்படும் மாதவிடாய் நிகழ்வும் அவளிடம் பெரும் மாற்றத்தை உண்டாக்குகிறது.

இந்த வயதில் எதிர்பாலரிடம் கவர்ச்சி வருவது இயல்பு. டீனேஜ் பெண்ணுக்கு

சிரித்துப் பேசும் பையனிடம் மனம் செல்வதும் அழகாய் வெட்கப்படும் இளம் பெண்ணிடம் ஒரு ஆணுக்கு ஆசை ஏற்படுவதும் இயற்கை. இந்த வயதில் அறிவை விட மனம் தான் அதிகம் வேலை செய்யும். ஆசைப்பட்டதை அடைய வேகம் வரும்.. ஆனாலும் டீன் எஜ் பருவத்தினர் சற்று யோசிக்க வேண்டும்.

இதனை ஆங்கிலத்தில் affection என்று கூறுவார்கள். டீன் ஏஜ் பொழுது வரும் இந்த கவர்தல், பிடித்தல் எல்லாவற்றையும் உடனடியாக positive ஆக எடுத்துக் கொள்ளாமல், இது உண்மையான காதலா அல்லது வெறும் affection என்று இக்கால பருவத்தினர் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆனால் இரண்டிலும் எது வரம்பு மீறியது, எது வரம்புக்கு உட்பட்டது என்று

புரிந்து கொள்வதில் தான் சற்றே குழம்பி விடுகிறார்கள் எனலாம்...காதல் வேறு காமம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காதலிப்பது தவறல்ல - ஆனால் உணவில் உடுக்கும் உடையில் தரம் பார்த்து செயல்படும் போது எதிர்கால வாழ்க்கைத் துணையை தனக்கு ஏற்ற தரத்திலுள்ளதா என ஆராயவும் சிலர் தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் தனது பெற்றொரிடமோ ஆத்ம தோழமையிடமோ மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.

இசை கேட்பது, புத்தகம் படிப்பது, உறவினரிடம் மனம் விட்டு பேசுவது என்பது போன்ற செயல்களினால் மனத்தில் ஒரு தெளிவையும் உண்டாக்கி கொள்கிறார்கள்.

பருவ வயதில் உடல் பிரக்ஞை, பெருசுகளால் வரும் சில விஷமங்களை '
எதிர்கொள்வது, படிப்பு, எதிர்காலம் என்று நிறைய பிரச்சினைகள், சவால்களை டீன் ஏஜ் பருவத்தினர் சந்திக்கிறார்கள். நவீன விஞ்ஞான யுகத்தில் செல்போன், கம்ப்பூட்டர் என்று அவர்களை திசை திருப்ப ஆயிரம் வழிகள்.

அனைத்தையும் மீறி டீன் ஏஜ் பருவத்தினர் சாதிக்க வேண்டுமானால் பருவ வயதில் சினேகமாய் பழகி, பழகும் காலத்திலேயே புரிந்து கொண்டு விட்டால் எதிர்காலம் ஒரு சுவாரசியமுடனும் உணர்ச்சிப் பெருக்கோடு புத்திசாலித்தனமும் கலந்து நம் டீன் ஏஜினரை வரவேற்க தயாராக உள்ளது!!

நாம் நம் கண்களை நன்றாக பாதுகாக்க...






இன்றைய காலக்கட்டத்தில் கணினியின் அவசியம் மிகவும் இன்றியமையாதது. இன்று எல்லா துறைகளிலும் கணினி புகுந்து விட்டது. அதனால் இன்று வேலை செய்பவர்கள் காலையில் முதல் மாலை வரை கணினி முன் உட்கார்வது தவிர்க்க முடியாதது. அதனால் உடம்பில் மற்ற உறுப்புகளை விட நமது கண்கள் தான் அதிகமாக வேலை செய்கிறது. ஆனால் நாம் நமது கண்களை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் நாம் தெரிந்தே கண்களை கெடுத்து கொள்கிறோம்.

ஆனால் நமது வேலை செய்யும் நேரத்தில் சிறிது நேரத்தை பயன்படுத்தி சின்ன சின்ன கண்பயிர்ச்சிகள் செய்வதன் மூலம் நாம் கண்களை நன்றாக பாதுகாக்க முடியும். இந்தபயிர்சிக்கு பெயர் "20 - 20 - 20".

1. முதலில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை உங்கள் கவனத்தை கணினியிலேருந்து திசை திருப்பி 20 அடி தொலைவிலுள்ள பொருளை உற்று பார்கவேண்டும். இதனால் அசதியான உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெரும்.

2. அதேபோல் 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டவேண்டும். இதனால் உங்கள் கண்களின் ஈரபசப்பு தன்மை குறையாமல் இருக்கும். மேலும் கணினியால் ஏற்படும் கண்ணெரிச்சல் குறையும்.

3. அதெபோல் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரே இடத்தில் உட்காராமல் எழுந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். இதனால் உங்கள் உடம்பிற்கு சீரான இரத்த ஓட்டம் ஏற்படும்.


இவ்வாறு நீங்கள் "20 - 20 - 20" பயிற்சியை நடைமுறை படுத்தினால் நிச்சயமாக் கண்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வகை பயிற்சி எளிதாக இருந்தாலும் பழகத்திற்கு கொண்டு வருவது சிரமம்தான் ஆனால் முயற்சி செய்தால் நன்மை நமக்குதான்.

பின்குறிப்பு:
இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் சம்பந்தம் இருக்கு , இந்தப்படம் உங்கள் கண்களுக்கு இரண்டு இரண்டாக தெரிந்தால் உங்க கண்ணு நல்ல கண்ணு. ஆனால் ஒழுங்காக தெரிந்தால் நல்ல கண்மருத்துவரை பாருங்கள்.

Jun 6, 2009

Undersea Internet கேபிள்.

கடலுக்கடியில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் cables எவ்வாறு பதிக்கப்படுகிறது என்பது புகைப்படங்களாக தரப்பட்டுள்ளது.

Affected parts "Internet sea cables"
Do you know about internet cable cut? this is a cable network spread worldwide. See map below; Illustration: describes the network area





The ship used for cabling





Contents of cable Polythin cover of "Sabec" Anti rust iron Alumunium protector from water infiltration cover of poly carbon Compact copper Glotein petrochemical 8-fiber optics







Installation being used for cabling





Cable in the bottom of sea





Interrupted Cable: Due to damage of outer cover



And this also interruption reason













Jun 5, 2009

புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம்...

மார்க் ட்வெய்ன் ஒரு முறை சொன்னாராம், "புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம். நான் 1000 தடவைகள் அந்த மாதிரி நிறுத்தியிருக்கிறேன்" என்று.

புகைப்பதை நிறுத்துவதற்கு எளிதான வழியென்று Cold Turkey முறை என்று ஒன்று சொல்கிறார்கள். முதலில் புகைப்பதை நிறுத்துவதற்கான ஒரு நாளை தேர்ந்தெடுக்கவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தள்ளி ஒரு நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம் என்கிறார்கள். பிறகு அந்த நாளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக புகைக்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டே சென்று, குறிப்பிட்ட நாளில் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும். ஆனால் இது ஆகிற வேலையாக எனக்குப் படவில்லை.

ஒரு கணவனிடம் மனைவி ஒருத்தி முறையிட்டாளாம், "என்னங்க, என் தம்பி சந்நியாசம் வாங்கப் போகிறானாம். கொஞ்சம் கொஞ்சமா உலக ஆசைகளையெல்லாம் ஒன்னு ஒன்னா விட்டுகிட்டிருக்கான்."

அதற்கு கணவன் "கவலைப்படாதே! உன் தம்பி கண்டிப்பா சந்நியாசியா ஆக மாட்டான்" என்று ஆறுதல் சொன்னானாம்.

உடனே மனைவி, "அதெப்படி உறுதியா சொல்றீங்க?"

கணவன், "இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சந்நியாசி ஆக முடியாது. அதனால உன் தம்பி சந்நியாசி ஆக மாட்டான்" என்று சொன்னான்.

அதற்கு மனைவி "பின்னே கொஞ்சம் கொஞ்சமா ஆகாம, எப்படி சந்நியாசி ஆவாங்க?" என்று கேட்டாளாம்.

உடனே கணவன் "இப்படித்தான்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சந்நியாசியாகி போய் விட்டானாம்.

புகைப்பது, குடிப்பது போன்றவைகளையும் இப்படித்தான் டக்கென்று ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து ஒரேயடியாக விட்டு விட வேண்டும். ஆனால் இப்படி நிறுத்துவதற்கு, சந்நியாசம் வாங்க எவ்வளவு மனப்பக்குவம் தேவையோ அந்தளவுக்கு மனவலிமை தேவை.

சரி, "டக்"

நிறுத்தியாயிற்று. 10 நிமிஷம் ஆயிற்று. 30 நிமிஷம். ஒரு மணி நேரம் ஆயிற்று. அடுத்த தம் போட வேண்டிய நேரம். "தம் அடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாலும் அந்த தம் அடிக்க வேண்டும் போல் இருக்கும் உணர்வு வரும்பொழுது என்ன செய்வது?"

அந்த மாதிரி உணர்வு ஏற்படும் நேரத்தில், யாரிடமாவது பேசுங்கள், சிறிது காலாற நடை போடுங்கள்(அப்படியே நடந்து பெட்டிக்கடைக்கு போய் விடாதீர்கள்!), தண்ணீர் குடித்து பாருங்கள். செய்யும் வேலையில்/வேறு ஏதாவது பொழுதுபோக்கில் முழு கவனத்தையும் செலுத்த முயலுங்கள்.

"தினசரி சாப்பிட்டவுடன் ஒரு தம் அடித்து பழகியாயிற்று. இப்பொழுது திடீரென்று எப்படி அதை மாற்றுவது?"

டோட்டலாக தம் அடிப்பதுடன் சம்பந்தப்பட்ட அந்த பழக்க முறையையே மாற்றுங்கள். உதாரணத்திற்கு, சாப்பிட்டவுடன் தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமாக சாப்பிடும் இடத்தில் சாப்பிடாமல் வேறு இடத்தில் சாப்பிடுங்கள். காபி குடித்தவுடன் தம் அடிக்க வேண்டுமா? காபி குடிக்கும் நேரத்தில் டீ குடித்து பழகுங்கள். காலையில் ஆஃபீஸ் வரும் வழியில் நின்று ஒரு தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமான வழியை மாற்றி புது வழியில் வர முயலுங்கள். இது போல் தம் அடிக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட மற்ற பழக்க முறைகளில் இருக்கும் ஒழுங்கு முறைகளை உடைத்துப் போடுங்கள்.

"நான் இது போல் பல தடவைகள் தம்மை விட முயன்றிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் முடியவில்லையே. என்ன செய்ய?"

திரும்பவும் முயலுவோம். தவறில்லை. சென்ற தடவைகளில் தம்மை விட முயன்ற பொழுது என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஞாபகப்படுத்தி, அவற்றை தவிர்க்க முயலுங்கள்.

முக்கியமான தேவை மனவலிமை. முதல் மூன்று நாட்கள் தாண்டுவது மிகக் கடினம். அதற்குபின் கொஞ்சம் பழகிவிடும். தொடர்ந்து மூன்று மாதம் பிறகு மூன்று வருடம் இருந்து விட்டால், அப்புறம் சுத்தமாக நினைவையே விட்டு விடலாம்.
முயற்சி திருவினையாக்கும்.

Jun 4, 2009

தமிழில் ரிசர்வ் வங்கி இணைய தளம்




இந்திய ரிசர்வ் வங்கி இந்திய மொழிகளில் தன்னுடைய இணைய தளத்தை வெளியிட்டுள்ளது.(இது பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு உதவட்டும்). நம் தமிழ் மொழியிலும் இணைய தளத்தை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி முக்கியமான தகவல்களையும் தனது அறிவிப்புகளையும் தமிழிலே வெளியிட்டுள்ளது வரவேற்கக்கூடிய விஷயம்.
இத்தளத்தில் ரிசர்வ் வங்கியின் பணி மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், ரிசர்வ் வங்கியின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் , பத்தரிக்கை குறிப்புகள் ,வங்கியின் கடன் விகிதங்கள், வங்கிகளின் சேவைக்கட்டணங்கள், இந்தியாவில் உள்ள் பொதுவுடமை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என, குழந்தைகள் மற்றும் புதியவர்களுக்கென நிதிசார் கல்விகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்தளத்தில் செய்திகள் உள்ளது .அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு தளம்.

http://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/Home.aspx

Jun 1, 2009

பொருளாதார கட்டுபாட்டு கருவி


நமக்கு ஒரு கருவி தேவை படுகிறது. கருவியா அது என்ன ?
எடுத்துக்காட்டு ;

ஒரு அறையில் குளிர் கட்டுபாட்டு(Air condition) கருவி உள்ளது.அதன் வெட்ப நிலை 72 டிகிரி யாக உள்ளது

1. இப்போது அறையின் வெளிப்புறத்தில் காற்று குளிர் அளவு 65 டிகிரியாக மாறுகிறது என்றால். குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் அளவை 65 ==> 72 அதிகமாகும்.
65 ==> 72

2. இப்போது அறையின் வெளிப்புறத்தில் காற்று குளிர் அளவு 80 டிகிரியாக மாறுகிறது என்றால். குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் அளவை 80 ==> 72 சீராக்கும்.
80 ==> 72

பாடம் என்னவென்றால் 65 ஆக இருந்தாலும் சரி அல்லது 80 ஆக இருந்தாலும் சரி
குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் 72 டிகிரி அளவை அரையின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

"நமக்கு இதுபோன்று கட்டுபாட்டு கருவி தேவை படுகிறது.
பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat)"

இந்த பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat) நமது பொருளாதார சீரமைப்புக்கு உதவும்.நம்முடைய கஷ்ட காலத்திலும் செழுமை காலத்திலும்.
சீரான பொருளாதார வசதியை தர இந்த பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat) நமக்கு தேவை படுகிறது.

விரிவாக சில விளகத்துடன்

சிந்தனை --> உணர்வு --> செயல் = பயன்
Thoughts -->Feelings-->Action = RESULTS
சிந்தனை = நீங்கள் சிந்திங்கும் விதம்
உணர்வு = உங்களது அனுபவங்கள்
செயல் = நீங்கள் செய்யும் முயற்சிகள் அல்லது செயல்
இத்தணையும் சேர்ந்துதான் அமைகிறது
"பொருளாதார வரைபடம் (FINANCIAL BLUEPRINT)"

வெற்றியாளர்களுக்கும் , வெற்றியடையதவர்களுகும் (நன்றாக படியுங்கள் வெற்றியடையதவர்கள் தோல்வியாளர்கள் அல்ல ) உள்ள வித்தியாசங்கள் அவர்களின் பொருளாதார வரைபடம் (FINANCIAL BLUEPRINT) பொறுத்தே அமையும்.

வெற்றியாளர்கள் => "நான் என் வாழ்கையை உருவாக்குகிறேன்! "
வெற்றியடையதவர்கள் ==> " என் வழக்கை அமைந்த விதத்தில் நான் வாழ்கிறேன்!"
எவ்வளவு வித்தியாசங்கள்

பொதுவாக வெற்றியடயாதவர்களை பாதிக்கப்பட்டவர்(VICTIM) என்று சொல்லலாம்.

இப்படி பாதிக்கப்பட்டவர்(VICTIM) மூன்று விஷயங்களை கூறுவார்கள்.

1.குறை (Blame)
2.மதிபிடுதல் (Justify)
3.புலம்பல் (Complain)

குறை :-
மட்டறவர்களை குறை கூறுவது
பெற்றோர் , வேலை, அலுவலகம் ,அரசாங்கம், உடன் பணிபுரிவோர்,பொருளாதாரம்,
இப்படி பலவற்றை குறை கூறுவது.

மதிபிடுதல்:-
"எனக்கு நான் சம்பாதிக்கும் பணம் போதுமானது , எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்".
பொதுவாக குடும்பத்தையும் செறிவு (Richness) இதையும் ஒப்பிடும் பழக்கம் தவறானது. நமக்கு குடும்பமும் அதனுடன் சேர்ந்த செறிவு (RICH) வேண்டும்.

புலம்பல்:-
தன்னை தாழ்மையாக எண்ணி புலம்பல் அல்லது உடல்நிலை சரிஇல்லை என்று புலம்புவது

இப்படி மூன்று விஷயத்தால் பாதிக்கபடுவர்.

அதனால் இந்த பொருளாதார வரைபடத்தை (Financial BluePrint) மாற்றவேண்டும்.

"முதல் ஒரு 7 நாட்களுக்கு குறை சொல்வது , தவறான மதிபிடு, புலம்புதல் ஆகியவற்றை தவிருங்கள் "


அந்த 7 நாட்களும் (எதோ படத்தின் பெயர் போல உள்ளதா <{;o) ) உங்களக்கு நல்ல சிந்தனைகள் , உணர்வுகள் , செயல்கள் நடக்கும். இந்த 7 நாட்கள் பயன்கள் உங்களுக்கு பிடித்துவிடும் அதையே தொடர்ந்து செய்வீர்கள்.