Nov 20, 2013
சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..!
Nov 3, 2013
பயமுறுத்தும் மருத்துவர்கள் ...
Jul 4, 2010
ஆண் என்றால் யார்?,..
ஆண் என்பவனுக்கும் பெண் என்பவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அதிகம், பெண்ணுக்கு அது மிக சொர்பமே.
இந்த டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன், இரண்டு சமயங்களில் உற்பத்தி ஆகிறது. ஒன்று: கரு உருவாகிய ஆறு வாரத்தில் அதன் மரபணுக்களில் ஒரு Y குரோமோசோம் இருந்தால், அது டெஸ்டோஸ்டீரோனை சுரக்க வைக்கிறது. அதுவரை பெண்பாலை போலவே இருக்கும் இந்த வருங்கால ஆணின் உடலில் இந்த டெஸ்டோஸ்டிரோன் பாய்ந்த உடன் அந்த கருவின் உடலும், மூளையும் மனமும் ஆண்மை படுத்த பட்டுவிடுகிறது. இது தான் முதல் கட்டம்.
அதன் பிறகு குழந்தை பிராயத்தில் மேற்கொண்டு டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி ஆவதில்லை. அதனால் தான் ஆண் குழந்தைகளின் உடல் தோற்றமும், குரலும், தோலும், பெண்ணை போலவே இருக்கின்றன. ஆனால் இந்த பையன் வயதிற்கு வரப்போகும் காலம் நெருங்க நெருங்க, அவன் விந்தகங்கள் மீண்டும் டெஸ்டோஸ்டீரானை மிக அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மீண்டும் ஒரு முறை, ஆண்மைபடுத்தும் படலம் அமலாகிறது. இன பெருக்க உருப்புக்களின் வளர்ச்சி, ரோம வளர்ச்சி, குரல் மாறூதல், எலும்புகள் நீளுதல், தசைகள் புடைத்தல் என்று இந்த டெஸ்டோஸ்டீரோன் கலந்த உடன் அந்த பையனின் உடலில் பல மாற்றங்கள் உருவாகுவதை நம்மால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.
Jun 20, 2010
அவளுக்கென்று ஒரு நல்ல கணவன்...
Feb 15, 2010
அதனால் மனைவியை காதலியுங்கள்.!.!.
காதலில் தோற்ற தேவதாஸ், காதலை கல்லறையில் முடித்துக்கொண்ட லைலா-மஜ்னு, காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான்... என்று காதலால் பிர பலமானவர்கள் பலர் உள்ளனர்.
இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.
"அன்பே
நீ வெளியில் வராதே;
வண்ணத்து பூச்சிகளெல்லாம்
நீ தான் மலரென்று
தேனெடுக்க
முற்றுகையிட்டுவிடும்'' என்று, காதலிக்கும் போது காதலியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்த வர்கள்கூட, கடைசியில், 'அப்படியா நான் சொன்னேன்?' என்று அரசியல்வாதிகள் ஸ்டை லில் பல்டி அடிப்பதையு
ம் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.
அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் ராமையா அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.ஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந் திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.
படகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.
Feb 3, 2010
கழுகு,அழகு,சிந்தனை...
ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.
ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.
முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.
"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"
இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக
Jan 5, 2010
தவளையும் பூமியும்

கொதிக்கும் தண்ணீரில் ஒரு தவளையை போட்டோம் என்றால், உடனடியாக அது வெளியே தாவிக் குதித்து தப்பிவிடும். அதே தவளையை மெதுவாக சூடாகிக் கொண்டிருக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டோம் என்றால்,அது பேசாமல் உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்து கொண்டே இருக்கும் - கடைசியில் அது இறக்கும் வரை.
புவி வெப்பமடைதலும் இதேபோன்று மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும். அதை நாம் உணரத் தலைப்படும்போது, எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும்.
கடந்த பத்தாண்டுகளாக பூமி வெப்பமடைந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்த்ததற்கு மாறாக புவி வெப்பமடைதலின் விளைவுகள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. கணிக்கப்படும் அதன் பாதிப்புகள் ரத்தத்தை உறைய வைக்கின்றன. துருவப் பகுதிகளில் நொறுங்கி விழும் பனிப்பாறைகள், ஐரோப்பாவில் எதிர்பாராத வெப்பஅலைகள், ராஜஸ்தானில் பெருவெள்ளம், உலகெங்கும் பனிச்சிகரங்கள் சுருங்கி வருகின்றன - எல்லாம் புவி வெப்பமடைதலின் பின்விளைவுகளே.
கடந்த 50 ஆண்டுகளில் பனிச்சிகரங்கள் பெருமளவு சுருங்கிவிட்டன. இதே வேகத்தில் பனிச்சிகரங்கள் உருகி வந்தால், வடஇந்தியாவில் இமயமலை ஜீவநதிகளைச் சார்ந்து வாழும் பெருமளவு மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவர்.
புவி வெப்பமடைதலின் எதிர்விளைவுகளை அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருவது ஒரு 'தர்மசங்கடமான உண்மை'. உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் புவி வெப்பமடைதல் ஏற்படுத்தவுள்ள உடனடி ஆபத்துகளை உணராமல் இருந்து வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்கள் உள்ளன.
இந்த நேரத்தில் எழும் முக்கியமான கேள்வி: பூமியை அழிக்கும் சக்தி படைத்த புவி வெப்பமடையும் விளைவைத் தடுக்க பன்னாட்டு அரசுகள் ஏன் பெரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றன என்பதே.
இதை அறியாமை என்று சொல்ல முடியாது, அலட்சியம் என்றே சொல்ல வேண்டும். தங்களது நடவடிக்கையும், வாழ்க்கை முறையும்தான் புவி வெப்பமடைதற்கு காரணம் என்பதை மக்கள் (குறிப்பாக பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உணராமல் இருக்கிறார்கள். அளவை மீறி பெருகிவிட்ட கார்களில் பயன்படுத்தும் எரிபொருள், நிலக்கரியால் தயாரிக்கப்படும் மின்சாரம், விமானப் பயணம், காடுகளை அழிப்பது போன்றவைதான் கடற்கரைகளை மூழ்கடிக்கின்றன, சுட்டெரிக்கும் வெயிலை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் உணரவில்லை
நமது ஒரே வீடான இந்தப் பூவுலகு புவி வெப்பமடைதலில் சிக்கித் திணறி வருகிறது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்து பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. அதற்குப் பிறகு உலகை அச்சுறுத்தும் விளைவாக புவி வெப்பமடைதல் உருவாகி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?
Jul 10, 2009
கடன்,கடன் & கடன்...
1. மிக மிக அவசியத் தேவைகளுக்கு வாங்கலாம்.2. தொழில் விரிவிற்குச் சரியாகத் திட்ட மிட்டு, கணக்கிட்டுக் கடன் வாங்குதல் வேண்டும்.
பலர் மிகக் குறைவான வட்டிக்குப் பணம் கிடைக்கிறது என்பதன் காரணமாகவும், சில மிக அவசியமில்லாத தேவைகளுக் காகவும், வாங்கி விடுகின்றனர். இவ்வாறு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களது,
1. சேமிப்பு பாதிக்கப்படுகிறது.
2. எதிர்பாராத செலவுகள் அவர்களுக்கு வரும்போது தடுமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பாய் அமையும்.
3. அவசியம் இல்லாததற்கு கடன் வாங்கும் பொழுது மனதில் சுமைதான்.
கடன் வாங்கும்பொழுதே இதைத் திருப்பிக் கட்டுவது எதன் மூலம் (Source of Income) என்பது பற்றியும் எப்பொழுது திருப்பிக் கட்டப் போகிறோம் என்பது பற்றியும், எவ்வளவு வட்டி என்பது பற்றியும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல் வருமானம் வந்த உடன் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் சிலபேர் வருமானம் வந்த மகிழ்ச்சியால் வேறெதற்கோ செலவு செய்து விட்டு, அடுத்த வருமானத்தில் கொடுத்து விடலாம் என்று கடனைத் தள்ளிப் போட்டு விடுகின்றனர்.
கடனைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்துவதால் கடன் வாங்கிய இடத்தில் நாணயம் காப்பாற்றப்படும் நமக்குள்ளே நம்மைப் பற்றிய ஒரு சுயமதிப்பு அதிகரிக்கும். கம்பீரம் பெருகும். நாணயத்தைக் காப்பாற்றி விட்டால் அவசரத் தேவைகளுக்கு எப்பொழுதும் பணம் கிடைக்கும்.
தொழில் தேவை தவிர வேறு எதற்குமே வாழ்க்கையில் கடன் வாங்காத அளவிற்கு வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்தால் வாழ்க்கை சந்தோசமாக அமையும். ‘கடனை நண்பர்களிடமும் உறவினர் களிடமும் வாங்க வேண்டாம்; கடனை வங்கியிடம் வாங்குங்கள். ஏனென்றால் உறவுகள் கோபப்படாமல் இருப்பது மிக முக்கியம். ஆடம்பரச் செலவுகளையும், தவிர்க்கக் கூடிய செலவுகளையும் தவிர்க்க வேண்டும். அது சேமிப்பாக மாறினால் வாழ்வுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.
போலிக் கௌரவத்திற்காக செய்யப்படுகிற செலவுகளை நீக்க வேண்டும். அதனால் பெறுகிறமதிப்பைவிடப் பணம் நிறைய சேர்த்து வைத்தால் அதற்குக் கிடைக்கிற மதிப்பே வேறு. ஆடம்பரச் செலவுகள் செய்து கிடைக்கிற அங்கீகாரத்தைவிட அந்தப் பணத்தைச் சேமித்து ஆபத்துக்கு உதவினால் வருகிறசந்தோசம் பெரிது.

KIM WOO - CHOONG : Founder & Chairman, DAEWOO GROUP சொல்கிறார். ‘பணத்தை முதலீடு செய்யுங்கள். வீண் சுகங்களுக்காக அதைப் பயன்படுத்த வேண்டாம். சிறு சிறு செலவு களைப் பற்றியும் கவனமாக இருங்கள். ஏனென்றால் கப்பலில் உண்டாகும் சிறு துளை யானது அக்கப்பலையே மூழ்கடித்து விடும்.
சிலர் திருமணத்திற்காகக் கடன் வாங்கி செலவிடுகிறார்கள். பிறகு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். திருமணங்களில் செய்யப்படுகிற, பல செலவுகளைக் குறைத்து அந்த பணத்தை மணமக்களுக்குக் கொடுத்தால் அவர்களுடைய வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிப்பார்கள்.
வள்ளுவர் சொல்கிறார், ‘அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’.
பொருள் : தன் வருவாய் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை இருப்பது போலத் தோன்றி இல்லாமலே கெடும்.
இப்பொழுது நிறுவனங்களில் Cost control, Cost Production என்று எந்தெந்த வகைகளில் எல்லாம் வீண் செலவுகளைக் குறைத்தால் வருமானத்தை அதிகப்படுத்தலாம் என்ற ஆராய்ச்சிகள் பெருகி வருகின்றன. சரியாகப் பட்ஜெட் போட்டுக் குடும்பத் திலும், தொழிலும் திட்டமிட்டு செலவு செய்தால் வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் நடத்தலாம்.
சில தொழில் செய்வோர், தொழிலில் வருகிற இலாபத்தை மிகப்பெரும் வீடுகள் கட்டியும், பல கார்கள் வாங்கியும், விருந்தினர் மாளிகை கட்டியும் செலவிட்டு விடுகின்றனர். எதிர்பாராத விதத்தில் வரவேண்டிய பணம் வராத பொழுது, Working Capital - பொருள் உற்பத்தி செய்ய தேவைப்படுகிறபணம் இல்லாமல் தவித்துக் கடன் வாங்குவர். Market குறைந்து விட்டாலோ, எதிர்பாராத ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ தொழில் முடக்கம் ஏற்பட்டுவிடும். ஆகவே, தொழிலுக்குத் தேவைப்படுகிற பணத்தை மற்றசெலவுகளுக்கு ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை மாற்றாமல் இருப்பது நல்லது.
பல தொழிலதிபர்கள் இன்னும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். மிகப்பெரும் கோடீஸ்வரர் TATA கூட பல ஆண்டுகள் வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். தொழிலையும், தொழில் வளர்ச்சியையும் முக்கியமாகக் கருதுபவர்கள் பெரும் செல்வந்த ராக மாறுவார்கள்.
முதலீடு செய்தல் (Investment) இந்தியாவில் பல பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நிறுவனங்களைப் பற்றி சரியாக ஆராயாமல் அவற்றில் முதலீடு செய்து அவற்றில் கோடிக்கணக்கான பணத்தை இழந்தது எல்லோர்க்கும் தெரியும். இப்பொழுது ஒரு எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டிருக்கிறது. முதலீட்டு ஆலோசகர்களை (Investment Consultant) கண்டுபிடித்து அணுகி ஆலோசனை கள் கேட்டு முடிவெடுத்து முதலீடு செய்தால் பணத்திற்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
‘Investigate before investing’ அதாவது, ‘முதலீடு செய்யும் முன்பு தகவல் சேகரித்து அலசி ஆராயுங்கள்’ நீங்கள் பணம் போடும் நிறுவனம் பணத்தை வாங்கி வைத்து எதில் முதலீடு செய்கிறார்கள்? என்கிற விவரங்களைக் கேளுங்கள். அவர்கள் அதை தவறான வழியில் அல்லது வளர்ச்சியடையாத துறைகளில் முதலீடு செய்தால் பணம் திரும்பி வராது. நீங்கள் முதலீடு செய்யும் நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் கம்பெனியின் வரலாறு, அதன் நம்பகத்தன்மை அதன் அரசு அங்கீகாரம் போன்ற பல விபரங்களை தெளிவாக்கி பின் முதலீடு செய்யுங்கள். பொதுவாக எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் எல்லாப் பகுதிகளும் வெளிச்சமாய்த் தெரிய வேண்டும். ஏதேனும், இருட்டுப் பகுதி இருந்தால் தோல்விகள் வர வாய்ப்புண்டு. ‘Whenever there is darkness There is a possibility for failure’ சேமிப்பு (Savings) உலக அளவில் பொதுவாகச் சொல்லப் படுகிற ஒரு கருத்து சம்பாதித்த வருமானத்தில் குறைந்தது 10% சேமிக்க வேண்டும்.
சேமிப்பு என்று போட்டுவிட்டால், அதை எந்தச் சிக்கலான நேரத்திலும் செலவழிக்க எண்ணக்கூடாது. சேமிப்பு விதி (The Law of Savings) என்ன சொல்கிறதென்றால், ஒரு மனிதன் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டுமென்றால் வாழ்க்கை முழுவதும் தங்களுடைய வருமானத்தில் குறைந்தது 10% சேமிப்பு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
Parkinson’s Law என்ன சொல்கிற தென்றால், வருமானத்தின் அளவிற்குச் செலவுகள் பெருகிக் கொண்டே இருக்கும்.
சிலர் செய்வது என்னவென்றால் பணச் சிக்கல் என்று வந்துவிட்டாலே முதலில் கை வைப்பது சேமிப்பைத் தான். ஒருவருக்கு வருமானத்தைப் பெருக்கும் சக்தியும், காலமும் இருக்கும்பொழுதே சேமிப்பை எடுக்காமல் வாழ முடியவில்லை என்றால், வருமானம் இல்லாமல் போகும் வயதான காலத்தில் என்ன செய்ய முடியும்?...
Jun 8, 2009
கிராமத்து மக்கள்...

மீன்கொத்தி பறவை ஒரே இடத்தில் பறந்து கொண்டே நின்று பொத்தென்று தண்ணீரில் விழுந்து மீன்பிடிக்கும் சாதூர்யத்தை பார்த்திருக்கிறீர்களா?
பூவரச இலையில் பீப்பி செய்து ஊதியதுண்டா? காக்கா முட்டை என்ன நிறம் தெரியுமா? குளத்தில் மேல்துண்டை வைத்து மீன் பிடித்த அனுபவம் உண்டா?
தந்தையின் கைகளில் படுத்துக்கொண்டு நீச்சல் பழகிய அனுபவம் இருக்கிறதா? அடைகாக்கும் கோழியின் சீற்றத்தை கண்டு ஓடியதுண்டா? காக்கை தூக்கிச்சென்ற கோழிக்குஞ்சு குற்றுயிராய் கீழே விழுந்து உயிருக்கு போராடும் போது பதை பதைத்து நின்றதுண்டா? இவையெல்லாம் கிராமத்து மக்கள் தினம் உணர்வுபூர்வமாக அனுபவிக்க கூடியது. ஆனால் நகர வாழ்க்கையில் ஏதோ... சினிமாவில் பார்த்ததாகத்தான் இருக்கும்.
வாழ்க்கையை தொலைச்சிட்டு, நம்மளும் வாழுகிறோம்னு ஏதோ நாள கடத்திட்டு வர்றோம். டாடி, வாத்து பறக்குமானு புள்ள கேள்வி கேட்கிறான். அத வுடுங்க. முந்தாநாளு ஓட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒரு வாண்டு அது ஆத்தாகிட்ட கேக்குது "மம்மி ரைஸ் எங்க செய்றாங்க"? நிலமை எங்க போய்க்கிட்டுருக்கு பார்த்திங்களா?
நம்ம கூட்டத்தில் பாதி ரெண்டுங்கெட்டானா அலையுது. சொந்த ஊர காலி பண்ணிட்டு டவுனுக்கு வந்த நம்ம ஜனம் ஊர மறந்து போயி ரொம்ப நாளாச்சி.
கபடமில்லாத வெள்ள மனசுக்காரன் எங்க பாக்க முடியுது? பக்கத்து வீட்ல ரொம்ப நாளா இழுத்துக்கிட்டு கிடந்த பெரிசு ஏதாவது செத்தா கூட எதிர்வீட்டுக்காரனுக்கு தெரிய மாட்டுக்கு!
ஆத்தா, அப்பன், அத்த, மதினி, மச்சான், சொக்காரன், சொந்தம்னு கூடி வாழ்ந்த ஜனம், இப்ப மூலைக்கு ஒன்னா சிதறிக்கிடக்கு. அப்பங்கிட்ட அடி வாங்கினா, குழந்த ஆத்தாக்கிட்ட ஓடும், ஆத்தாவும் திட்டினா, வாசல்ல வெத்தில இடிச்சுக்கிட்டு இருக்கிற பாட்டிக்கிட்டா போவும்.
கிழவி குழந்தய தூக்கி "நாசமா போறவன் புள்ளய என்னமா அடிச்சிருக்கான்" என்று தேற்றுவாள். அப்புறம் அவகாலத்து கதைய ஒன்ன எடுத்து விடுவாள். அதுல சீதையும் வருவா, கண்ணகியும் வருவா. கத கேட்டு வளர்ந்த சமூகம் அது. திண்ணையில் கத கேட்டு, குட்டைல குளிச்சி, சோளக்கஞ்சி குடிச்சு, அய்யனார கும்பிட்டு தெம்பா அலஞ்சவங்க அவங்க. இப்ப காத்தடச்ச பேப்பர் பைல கொஞ்சுண்டு சிப்ஸ் இருக்கு. அத 20 ரூவா கொடுத்து வாங்கி கொறிச்சிட்டு டிபன் சாப்பிட்டேன் என்கிறான். உடம்புல என்னத்த ஒட்டும். முதலிரவுல பொண்டாட்டி கிட்ட "சுகர் கம்ப்ளைண்டு" என்கிறான். பளபளனு விடியறதுக்கு முந்தியே தொழுவத்தில் இருந்து மாடுகள அவுத்துவிட்டு மேய்ச்சலுக்கு பத்திட்டு போறவன், நீச்சத்தண்ணிய ஒரு செம்பு குடிச்சிட்டு போவான். தூக்குச்சட்டியில அமுக்கி, அமுக்கி சோளாச்சோறு இருக்கும், வெயிலு சாயிர நேரத்தில் அத திண்ணுட்டு, எருமையோட சேர்ந்து, அவனும் கம்மாயில குளிப்பான்.
பாலு கறந்தால் அறைப்போனி அப்படியே குடிப்பான். வயக்காட்டுக்கு போறவன் காலைல மம்மட்டிய புடிச்சானா உச்சி வெயிலுக்கு கொஞ்சம் இளப்பாறுவான். அவனுக்கு வாக்கப்பட்டவ கலயத்தில் பழைய சோற புளிஞ்சுவச்சு கொண்டு வருவா.
வாய்க்கால்ல ஓடுற தண்ணில கால நனைச்சுக்கிட்டே பழயது சாப்பிட்டு திரும்பவும் வயல்ல இறங்குவான். சும்மா வைரம் பாஞ்ச கட்டையாட்டம் உடம்ப வச்சிருப்பான். நோய் நொடி அண்டிரும்???? அப்பெல்லாம் வீட்டு வேலைக்கு வர்ற ஆள திண்ணயில உக்கார வச்சு இலை போட்டு, சோறு போடுவாங்க அவன் அத எல்லாத்தையும் மிச்சம் வைக்காம திண்ணாத்தான் அவன் வேலைக்கு லாய்க்கு. இல்லாட்டி வெரட்டிவிட்டிருவாங்க!
அப்ப உடல் வருத்தி வேர்வ சிந்துனான். இப்ப நாம "வாக்கிங்" போறோம். யார்கிட்ட போய் இதைச் சொல்ல. காலைல நீராகாரம் குடிச்சிட்டு அப்ப போனான். இப்ப நீராகாரம் வேண்டாம்! அட அந்த செம்பக்கூட காணமுங்க.
பொருளாதாரமே பிரதானமாகிப் போன உலகில் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊருக்கு புலம் பெயரும் மக்கள் பல சுகங்களை தியாகம் செய்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
பூர்விக வீட்டையும், நடைபழகிய கிராமத்து தெருக்களையும், அந்த நிம்மதியான் வாழ்வையும் நகரத்து சத்தத்திற்கு இடையே அசைபோட்டு பார்க்க கூட நேரமில்லை நம்மில் பலருக்கு.
பிழைப்பு தேடி புலம் பெயர்த்தவர்களுக்கும், சொந்த ஊரை மறந்து தீப்பெட்டி சைஸ் குடியிருப்புகளில் பக்கெட் தண்ணியில் குளித்து வருபவர்களுக்கும், புகை மண்டல நகரத்தில் "ஏசி" வைத்து வாழ்பவருக்கும், இன்னும் பலருக்கும் இந்த கட்டுறை ஒரு "ஆட்டோகிராப்பாக" தெரியும்.
இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் வேளையில், நகரில் வசித்து ஓய்வு பெற்ற பலரும், நிம்மதி தேடும் செல்வந்தர்களும், தங்களது சொந்த கிராமங்களுக்கு ரயில் ஏறுவார்கள் என்பது உண்மை.
May 13, 2009
திருமணப்பதிவு ஏன்? எப்படி?
இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த திருமணங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. காலப்போக்கில் இந்த சட்டங்கள் பல மாறுதல்களை சந்தித்து ஓரளவிற்கு வளர்ந்துள்ளது. எனினும் நடைமுறையில் மதங்களை புறக்கணிக்கும் திருமணங்களை நிறைவேற்றுவதற்கோ, அவற்றை அங்கீகரிப்பதற்கோ மதம் சார்ந்த யாரும் தயாராக இருப்பதில்லை. அவர்களுக்கான ஒரே தீர்வு "சிறப்பு திருமணச் சட்டமே" ஆகும்.
எந்த சட்டத்தின்படி திருமணம் நடந்தாலும் அதைப்பதிவு செய்வது என்பது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் சொத்துரிமை, வாரிசுரிமை, குழந்தையின் முறைபிறப்புத் தன்மை ஆகியவற்றை நிரூபிக்க திருமணச் சான்றிதழே முக்கிய சான்றாவணமாக பயன்படுகிறது. 
மதம் சார்ந்த திருமணங்கள் முதலில் மதப்பழக்க வழக்கங்களின்படியே நடைபெறுகிறது. இதை பின்னர் திருமணப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதே நடைமுறையில் உள்ளது. ஆனால் திருமணம் நடக்கும் இடத்திற்கே பதிவுத்துறை அதிகாரிகளை வரவழைத்து திருமணத்தை பதிவு செய்வதற்கும் வசதி உள்ளது.
இந்து திருமணத்தை பதிவு செய்தல்.
இந்து திருமணச் சட்டத்தின்கீழ் திருமணத்தை பதிவு செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். மணமக்கள் இருவரும் ஒரே சாதியை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. எனவே சாதிகளை கடந்த மணமக்களும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்து அதை பதிவும் செய்யலாம். 
மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும். இந்து மதத்தின் எந்த ஒரு பிரிவு/சமூகத்தின் பழக்க வழக்கங்களின்படியோ, சுயமரியாதை திருமணமாகவோ இந்த திருமணம் நடக்கலாம். 
மணமக்களின் வயதை உறுதி செய்யும் சான்றிதழ்கள், திருமணம் நடந்ததற்கான சான்றுகளுடன் (திருமண அழைப்பிதழ், ஆலயங்களில் வழங்கப்படும் ரசீதுகள், பிற ஆவணங்கள்), அந்த திருமணப் பதிவாளரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மணமகன்/மணமகள் வசிப்பதற்கான சான்றிதழ் அல்லது திருமணம் நடைபெற்றதற்கான சான்று ஆகியவற்றுடன் திருமணப் பதிவாளருக்கு விண்ணப்பித்தால் திருமணம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
கிறிஸ்தவ திருமணத்தை பதிவு செய்தல்.
கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி கிறிஸ்தவர்களின் திருமணத்தை நடத்திவைக்கும் அதிகாரம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ள மதகுருமார்களுக்கும், திருமணப்பதிவாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மணமக்கள் இருவருமோ அல்லது மணமக்களில் எவராவது ஒருவர் கிறிஸ்தவராக இருக்கும் நிலையில் கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது. 
உரிய வயதடைந்த மணமக்கள், தாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவது குறித்து எழுத்துப்பூர்வமான அறிவிப்பை மாவட்ட திருமணப்பதிவாளரிடம் வழங்க வேண்டும்.
அந்த அறிவிப்பில் திருமணம் செய்துகொள்ளவிரும்பும் நபர்களின் பெயர், தொழில் அல்லது நிலை, வசிப்பிடம், அந்த இடத்தில் வசித்த காலம், திருமணம் நடத்தவேண்டிய இடம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
அதன் நகல் திருமணப்பதிவாளரின் அலுவலகத்தில் பொதுப்பார்வைக்கு வைக்கப்படும். இந்த திருமணத்திற்கு ஏற்கத்தகுந்த மறுப்புகள் இல்லாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இதையடுத்து இந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட மதகுரு அல்லது திருமணப்பதிவாளரால் நடத்தி வைக்கப்படும்.
இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்பட்ட திருமண பதிவாளர்கள் அல்லது மதகுருக்களிடமிருந்து பெறப்பட்டு அதன் நகல்கள் பதிவுத்துறை அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும்.
இஸ்லாமியத் திருமணங்கள்
இஸ்லாமியத் திருமணங்கள் முழுமையாக மதம் சார்ந்த நடவடிக்கைகளாகவே உள்ளன. மணப்பெண்களுக்கு மஹர் எனப்படும் மணக்கொடை கொடுத்து மணப்பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. 
இந்த திருமணங்கள் "நிக்காஹ் பதிவுப் புத்தக"த்தில் பதிவு செய்யப்படுகிறது.
இஸ்லாமியத் திருமணங்களை ஆண்கள் ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை என்ற நிலை இருப்பதால் பதிவுத்துறை அலுவலகங்களில் திருமணப்பதிவு அவசியமாக்கப்படவில்லை. எனினும் இஸ்லாமிய பெண்கள் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரினால் திருமணம் நடந்தததாக நிக்காஹ் பதிவுப் புத்தகத்தில் உள்ள பதிவு சான்றாக ஏற்கப்படுகிறது.
(குறிப்பு: மிகவிரிவான ஒரு தலைப்பு, மிகச்சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது)



