Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Dec 5, 2013

மரணத்திற்குப் பிறகும் இயங்கும் உடல் பாகங்கள்..!!!..



மனிதர்கள் இறந்தபிறகும் அவர்களது மூளை இயங்கிக் கொண்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆம் என்கிறார் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.

கேம்பிரிட்ஜ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் "மூளை என்பது மனதில் உள்ள ஒரு புரோகிராம் என்றே நான் கருதுகிறேன் அது கணினி போன்றது. மூளையை கணினியில் நகல் எடுத்து மரணத்திற்குப் பிறகும் கூட அதற்கு உயிரூட்ட முடியும் என்பது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமே" என்கிறார் 
 ஸ்டீபன் ஹாக்கிங்!

மூளையின் செயல்பாடுகளை கணியில் நகல் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மூளை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு மூளையை பிளாஸ்டிக்காக மாற்றி பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி

Aug 3, 2010

நமது பூமிக்கு நாம் செய்யவேண்டியவை...

TIME பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது.

1) லைட் பல்ப்ஸ்...
நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.

Jan 5, 2010

தவளையும் பூமியும்


கொதிக்கும் தண்ணீரில் ஒரு தவளையை போட்டோம் என்றால், உடனடியாக அது வெளியே தாவிக் குதித்து தப்பிவிடும். அதே தவளையை மெதுவாக சூடாகிக் கொண்டிருக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டோம் என்றால்,அது பேசாமல் உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்திருக்கும், உட்கார்ந்து கொண்டே இருக்கும் - கடைசியில் அது இறக்கும் வரை.

புவி வெப்பமடைதலும் இதேபோன்று மெதுமெதுவாக நிகழும் ஒன்றே. அதன் பின்விளைவுகள் படிப்படியாக வேகமடையும். அதை நாம் உணரத் தலைப்படும்போது, எல்லாம் கையை மீறிச் சென்றுவிட்டிருக்கும்.

கடந்த பத்தாண்டுகளாக பூமி வெப்பமடைந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்த்ததற்கு மாறாக புவி வெப்பமடைதலின் விளைவுகள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. கணிக்கப்படும் அதன் பாதிப்புகள் ரத்தத்தை உறைய வைக்கின்றன. துருவப் பகுதிகளில் நொறுங்கி விழும் பனிப்பாறைகள், ஐரோப்பாவில் எதிர்பாராத வெப்பஅலைகள், ராஜஸ்தானில் பெருவெள்ளம், உலகெங்கும் பனிச்சிகரங்கள் சுருங்கி வருகின்றன - எல்லாம் புவி வெப்பமடைதலின் பின்விளைவுகளே.

கடந்த 50 ஆண்டுகளில் பனிச்சிகரங்கள் பெருமளவு சுருங்கிவிட்டன. இதே வேகத்தில் பனிச்சிகரங்கள் உருகி வந்தால், வடஇந்தியாவில் இமயமலை ஜீவநதிகளைச் சார்ந்து வாழும் பெருமளவு மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவர்.

புவி வெப்பமடைதலின் எதிர்விளைவுகளை அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வருவது ஒரு 'தர்மசங்கடமான உண்மை'. உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் புவி வெப்பமடைதல் ஏற்படுத்தவுள்ள உடனடி ஆபத்துகளை உணராமல் இருந்து வருகின்றன. இதற்கு பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்கள் உள்ளன.

இந்த நேரத்தில் எழும் முக்கியமான கேள்வி: பூமியை அழிக்கும் சக்தி படைத்த புவி வெப்பமடையும் விளைவைத் தடுக்க பன்னாட்டு அரசுகள் ஏன் பெரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றன என்பதே.

இதை அறியாமை என்று சொல்ல முடியாது, அலட்சியம் என்றே சொல்ல வேண்டும். தங்களது நடவடிக்கையும், வாழ்க்கை முறையும்தான் புவி வெப்பமடைதற்கு காரணம் என்பதை மக்கள் (குறிப்பாக பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்) உணராமல் இருக்கிறார்கள். அளவை மீறி பெருகிவிட்ட கார்களில் பயன்படுத்தும் எரிபொருள், நிலக்கரியால் தயாரிக்கப்படும் மின்சாரம், விமானப் பயணம், காடுகளை அழிப்பது போன்றவைதான் கடற்கரைகளை மூழ்கடிக்கின்றன, சுட்டெரிக்கும் வெயிலை உருவாக்குகின்றன என்பதை அவர்கள் உணரவில்லை

நமது ஒரே வீடான இந்தப் பூவுலகு புவி வெப்பமடைதலில் சிக்கித் திணறி வருகிறது. 6 கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்து பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. அதற்குப் பிறகு உலகை அச்சுறுத்தும் விளைவாக புவி வெப்பமடைதல் உருவாகி வருகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?


Jul 13, 2009

“பூஜ்ய விவசாயம்” (Zero Farming)

எம். கே. கைலாஷ்மூர்த்தி வங்கித் தொழிலை விட்டுவிட்டு விவசாயத்தை மேற்கொண்டவர். கர்நாடகா மாநில சாம ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள டோடின்டு வாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது 6.5 ஏக்கர் பண்ணையில் ‘பூஜ்ய விவசாய முறை’யைக் கடைப்பிடிப்பதாகக் கூறுகிறார். அப்படியென்றால்...? இயற்கைக்குத் தன்னைப் பராமரிப்பது எப்படி என்று தெரியும்... அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது... நல்ல விளைச்சலைப் பெற நிலத்தை உழ வேண்டியதில்லை... உரம் போட வேண்டியதில்லை... களை எடுக்க வேண்டிய தில்லை என்பதுதான் பூஜ்ய விவசாயம். நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா? ஆனால் பூஜ்ய விவசாயம் குறித்து இவர் பரிசோதனை செய்து பார்த்து நமக்குச் சொல்லும் அனுபவங்கள் வித்தியாசமானவை. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மாசனோபு ஃபுகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி (The One-Straw Revolution) என்ற புத்தகத்தைப் படித்தபிறகு பூஜ்ய விவசாய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் தனக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார் கைலாஷ் மூர்த்தி.

விதைகள் மட்டுமே இடுபொருட்கள்

மற்ற விவசாயிகளைப் போலவே இவரும் முன்னர் நல்ல விளைச்சலைப் பெறவேண்டும் என்பதற்காக உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தி வந்தவர்தான். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் விளைச்சல் குறைந்து கொண்டே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் இயற்கை விவசாயத்திற்கு மாற முயற்சி செய்திருக்கிறார். “விதைகளைத் தவிர வேறு இடுபொருட்கள் எதையும் நான் பயன்படுத்தாதபோது பிரமிக்கத்தக்க மாற்றங்கள் படிப்படியாக ஏற்படுவதைக் கண்டேன். மண்ணின் இயற்கைச் சமநிலை செயல்படத் தொடங்கி எனது பண்ணை சிறு காடாகவே மாறியது. மருத்துவப் பயன் உள்ள செடிகள் உட்பட ஆயிரக் கணக்கான தாவரவகைகள் வளரத் தொடங்கின... பற்பல பறவைகளும் ஊர்வன வகையினவும் பண்ணையைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ளத் தொடங்கின. ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ சிறிது காலம் பிடித்தது... ஒரு ஏக்கர் நிலத்தில் நான் ஏக்கருக்கு 3 டன் நெல் அறுவடை செய்தபோது உரங்களும் நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப் பட்ட அண்டை நிலங்களில் ஏக்கருக்கு 1.18 டன் மட்டுமே கிடைத்தது... பூச்சி மருந்து தெளிப்பதால் பூச்சிகள் அழிக்கப் பட்டுவிட்டதாக முதலில் தோன்றினாலும் நாளாவட்டத்தில் மருந்தை மீறி உயிர் வாழும் கலையைப் பூச்சிகள் கற்றுக் கொள்கின்றன. பூச்சிகளை அப்படியே விட்டுவிட்டால் பயிர்கள் அவற்றைத் தாக்குப்பிடிக்கத் தொடங்கிவிடும்” என்று பல ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் கைலாஷ் மூர்த்தி.

மாயை தகர்ந்தது

கலப்பின விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைச்சலைப் பெற முடியும் என்ற மாயையை இயற்கை விவசாயம் தகர்த்து விட்டது. அதே சமயம், இரசாயன விவசாயத்திலிருந்து பூஜ்ய விவசாயத்திற்கு மாறுமுன் மூன்று ஆண்டுகளுக்கு இயற்கை உரங்களைப் பயன் படுத்தும் முறையை (Organic Farming) கடைப்பிடித்தபிறகே மாறவேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாக்க இது மிகவும் முக்கியமானது என்று இவர் எச்சரிக்கிறார். பூஜ்ய விவசாயம் பூமி சூடேறுவதைக் குறைக்கவும் உதவுவதால் எதிர் காலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் உயிரினப் பன்மையைப் பாதுகாக்க வும் பயன்படும் என்றும் இவர் கூறுகிறார்.அதெல்லாம் சரி... உலகின் மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்கு இயற்கை விவசாயம் கைகொடுக்குமா என்ற கேள்விக்கும் கைலாஷ் மூர்த்தி விடை வைத்திருக்கிறார். கடந்த 50, 60 ஆண்டுகளாக நிலத்தைப் பாழ்படுத்தி விட்டோம். அதன் பயனாக விளைச்சல் குறையத் தொடங்கி விட்டது. பூஜ்ய விவசாய முறை நிலத்திற்குப் புத்துயிரூட்டுகிறது. நிலத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பதைவிட என்ன செய்யக்கூடாது என்பது முக்கிய மானது என்று முடிக்கிறார் இவர்.பெங்களூர் தோட்டக்கலையியல் ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Horticultural Research) விஞ்ஞானிகள் இவரது பண்ணைக்கு வந்து பூஜ்ய விவசாய முறையைப் பரிசோதித்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கைலாஷ் மூர்த்தியுடன் தொடர்பு கொள்ள :
E-mail: kailashnatufarm@gmail.com


கைபேசி : 9880185757 / 9845125808