Nov 20, 2013
சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..!
Nov 16, 2013
குழந்தைகள் மற்றவர்களிடம் பழகும் விதம் ?.!...
குழந்தையைப் பற்றிய தங்கள் எதிர்பார்ப்புகளையும், குழந்தையின் உண்மையான நடத்தைகளையும் விவரித்துக் கொண்டே வந்தனர். அதுவரை அறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையன் அப்போது உள்ளே நுழைந்தான். உடனே பையனின் அம்மா ‘சாருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்’ என
பையனிடம் கூறினார். பையனோ மிகவும் வெட்கத்துடன் மறுத்தான். ஆனால் பெற்றோர்கள் விடவில்லை. திரும்பத் திரும்பத் அதட்டி அப்பையன் என் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்துச் சொல்லும் வரை கட்டாயப்படுத்தினர். கடும் நிராகரிப்புக்குப் பின்னும் கைகுலுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை உணர்ந்த அவர்களின் மகன்
Oct 21, 2013
நோய் தீர்க்கும் சதுரகிரி மலை
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
Jul 20, 2011
குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?
குழந்தைகளின் படிக்கும் திறமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நுண்ணறிவையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியையும் பொறுத்து அமையும். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் தொடக்க காலத்தில் பெற்றோர் குழந்தையின் கல்வியில் அதிகம் ஆர்வம் காண்பிப்பர். குறிபாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பது முறையாக நடந்து கொண்டிருக்கும்.தொடக்ககால ஆர்வமும், குழந்தைகளின் பாடங்கள் பெற்றோரல் கற்பிக்கக் கூடிய வகையில் மிக எளிமையானதாகவும் இருப்பது ஆகியவை அவ்வாறு முறையாக வீட்டில் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு காரணங்கள் எனலாம். குழந்தை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது பாடங்கள் பெற்றோரால் புரிந்து கற்பிக்க முடியாத வகையில் கடினமாகி விடுவதாலும், குழந்தையின் கல்வி மீது இருந்த தொடக்க கால ஆர்வம் குறைந்து போவதாலும்
Jun 9, 2011
தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது.....
“தவறான குடும்ப உறவுகள், அதைத் தொடர்ந்து குடும்ப அமைப்புக்குள் வரும் பிரச்னைகள் குறித்த புகார்கள்தான் காவல்துறையில் அதிகம் பதிவாகின்றன” என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர். குடும்பநல ஆலோசனை மையங்களிலும் இந்த ‘ஒருவன், ஒருத்தி எல்லை தாண்டிய பிரச்னை’தான் அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறது என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.
ஏன் இந்த உறவு சிக்கல்கள்… இத்தனை உறவுச் சிக்கல்கள்?!
நிபுணர்கள் தரும் பதில்கள்… நம் கேள்வியின் அவசியத்தையும், அதற்கான தீர்வின் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன.
சமூகநீதி மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகளாக தளராது குரல் கொடுத்து வரும் பேராசிரியை சரசுவதி, “ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூக ஒழுக்கம், நாகரிகத்தின் உச்ச வளர்ச்சி. ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்குமே இதுவரை சமூகம் கடைபிடித்து வந்த கட்டமைப்பை மீறுவதற்கான நிறைய வாய்ப்புகளும், வசதிகளும் பெருகிவிட்டன. சமூகத்திலும் முன்பு இருந்த இறுக்கம் சில விஷயங்களில் தளர்ந்திருக்கிறது. அதை எதிர்மறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள், எல்லை மீறி, குடும்பச் சூழலை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.
‘அவன், அதனால் இப்படிச் செய்தான்’, ‘இவள், இதனால் இந்த நிலைமைக்கு ஆளானாள்’ என்று தனி நபர் பிரச்னையாகப் பார்க்காமல், பெருகிவரும் இந்த பொதுப் பிரச்னையின் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டியதும், அதிலிருந்து மீள்வதற்கு வழி காட்டுவதும் சமூகத்தின் பொறுப்பு” என்று வழிகாட்டினார்.
“பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்” என்று யதார்த்தமாக ஆரம்பித்தார் ஆன்மிக சொற்பொழிவாளர் ‘நாகை’ முகுந்தன்.
“பெரிய அளவில் பொருளாதார மாற்றங்கள் வருவதற்கு முன்பு தனிநபர் ஒழுக்கம் பெரிய விஷயமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், இன்று கடவுள் பக்திகூட வியாபாரம் ஆகிவிட்டது.
Aug 7, 2010
பாசமும் நட்பும் - நிதர்சனமான உண்மை.
Jul 4, 2010
ஆண் என்றால் யார்?,..
ஆண் என்பவனுக்கும் பெண் என்பவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அதிகம், பெண்ணுக்கு அது மிக சொர்பமே.
இந்த டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன், இரண்டு சமயங்களில் உற்பத்தி ஆகிறது. ஒன்று: கரு உருவாகிய ஆறு வாரத்தில் அதன் மரபணுக்களில் ஒரு Y குரோமோசோம் இருந்தால், அது டெஸ்டோஸ்டீரோனை சுரக்க வைக்கிறது. அதுவரை பெண்பாலை போலவே இருக்கும் இந்த வருங்கால ஆணின் உடலில் இந்த டெஸ்டோஸ்டிரோன் பாய்ந்த உடன் அந்த கருவின் உடலும், மூளையும் மனமும் ஆண்மை படுத்த பட்டுவிடுகிறது. இது தான் முதல் கட்டம்.
அதன் பிறகு குழந்தை பிராயத்தில் மேற்கொண்டு டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி ஆவதில்லை. அதனால் தான் ஆண் குழந்தைகளின் உடல் தோற்றமும், குரலும், தோலும், பெண்ணை போலவே இருக்கின்றன. ஆனால் இந்த பையன் வயதிற்கு வரப்போகும் காலம் நெருங்க நெருங்க, அவன் விந்தகங்கள் மீண்டும் டெஸ்டோஸ்டீரானை மிக அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மீண்டும் ஒரு முறை, ஆண்மைபடுத்தும் படலம் அமலாகிறது. இன பெருக்க உருப்புக்களின் வளர்ச்சி, ரோம வளர்ச்சி, குரல் மாறூதல், எலும்புகள் நீளுதல், தசைகள் புடைத்தல் என்று இந்த டெஸ்டோஸ்டீரோன் கலந்த உடன் அந்த பையனின் உடலில் பல மாற்றங்கள் உருவாகுவதை நம்மால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.
Jun 20, 2010
அவளுக்கென்று ஒரு நல்ல கணவன்...
Jun 6, 2010
குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது
ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான
May 18, 2010
மாபெரும் சபையினில் நீ நடந்தால்…
இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.
நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
Apr 17, 2010
சிந்தனை செய் ...
இதற்கு ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம்.
சுரேஷ் தனது குடும்பத்துடன் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருக்கிறார். அவருடைய பத்து வயது மகள், காபி கோப்பையைத் தட்டி விட்டுவிடுகிறாள். காபி, சுரேஷ் அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டையில் விழுந்து விடுகிறது.
காபி, சட்டையில் விழுந்த சம்பவம், சுரேஷின் கட்டுப்பாட்டில் அடங்காதது. இது நம்முடைய கட்டுப்பாட்டில் அடங்காத 10% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது. இதற்கு அடுத்து ஏற்படும் நிகழ்வுகள், சுரேஷ் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில் இருக்கிறது. இது நம்முடைய 90% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது.
Feb 15, 2010
அதனால் மனைவியை காதலியுங்கள்.!.!.
காதலில் தோற்ற தேவதாஸ், காதலை கல்லறையில் முடித்துக்கொண்ட லைலா-மஜ்னு, காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான்... என்று காதலால் பிர பலமானவர்கள் பலர் உள்ளனர்.
இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.
"அன்பே
நீ வெளியில் வராதே;
வண்ணத்து பூச்சிகளெல்லாம்
நீ தான் மலரென்று
தேனெடுக்க
முற்றுகையிட்டுவிடும்'' என்று, காதலிக்கும் போது காதலியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்த வர்கள்கூட, கடைசியில், 'அப்படியா நான் சொன்னேன்?' என்று அரசியல்வாதிகள் ஸ்டை லில் பல்டி அடிப்பதையு
ம் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.
அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் ராமையா அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.ஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந் திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.
படகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.
Feb 3, 2010
கழுகு,அழகு,சிந்தனை...
ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.
ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.
முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.
"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"
இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக
Dec 7, 2009
பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
உங்கள் முன் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.ஓடி ஒளிய வேண்டாம்! நெஞ்சை நிமிர்த்தி வீரமாக அதனை அணுகுங்கள்!'அச்சமில்லை, அச்சமில்லை.. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற மகாகவியின் பாடலை நினைவு படுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சிறிது கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஆனாலும், 'சரி நடந்தது நடந்து விட்டது. நடந்ததை மாற்ற முடியாது. அதனை நினைத்து அப்படி செய்திருக்கலாம், இப்படி நடந்திருக்கலாம் என குழம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. இப்போது நாம் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்று தான். என்னவென்றால் இந்த பிரச்சனையில் இந்த சமயத்திலும் நமக்கு சில சாதகமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அவற்றை கண்டுபிடித்து அவற்றை உபயோகித்து இந்த பிரச்சனையை இருந்த இடம் தெரியாமல் வெற்றி கொள்ள முடியும்' என்ற உறுதி ஏற்க வேண்டும்.
பிரச்சனையில் ஜெயிப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் துணிவுடன் எதிர் கொண்டு ஜெயிப்பதில் தான் மனிதனின் வீரம் உள்ளது.
'இப்படி நடந்திருக்கலாம்..அப்படி பண்ணியிருக்கலாம்' என இறந்த காலத்தையே நினைத்து வருந்துவது கோழைகளின் செயல்!
நடந்தது நடந்து விட்டது. இப்போது நிகழ்காலத்தில் அதனை அலசி ஆராய்ந்து நாம் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தான் பிரச்சனையை போக்கும்.
குறைந்த பட்சம் இப்போது என்னென்ன செய்யலாம் என்று முடிவு எடுக்க வேண்டும். நல்ல வேளை பிரச்சனையை தீர்க்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை நினைத்து கவலையை போக்கிக் கொள்ள வேண்டும்.
முடிவெடுக்காமல் நடந்ததையே நினைத்து கோழையாய் வருந்துவது நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தடுக்கும். பிரச்சனையை மேலும் அதிகப் படுத்தும்.
முக்கியமான விஷயமென்னவென்றால் தவறான முடிவுகள் மட்டும் தோல்விக்கு காரணமல்ல. முடிவெடுக்காத தன்மையும் தான்!
ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் முடிவுகள் கூட நமது தன்னம்பிக்கையை அதிகரித்து பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்கு உதவும்.
ஆனால் பயந்து கொண்டு எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் நாம் மனதின் ஆழத்தில் அந்த பிரச்சனையை பார்த்து பயந்து அப்படி ஆகி விடுவோமோ, இப்படி ஆகி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று அர்த்தம். அந்த ஆழ்மன பயமே நாம் விரும்பத்தகாத விளைவுகளை அழைத்து வரலாம்.
ஆக பிரச்சனை வந்து விட்டால் துணிந்து அதனை எதிர் கொள்ள வேண்டும்.
'இந்த பிரச்சனைக்கு நாம் விரும்பும் முடிவு என்ன? இந்த முடிவு நமக்கும், மற்றவர்களுக்கும் இப்போதும், வருங்காலத்திலும் என்னென்ன முடிவுகளை ஏற்படுத்தும்' என நன்கு ஆழமாக அலசி எண்ணி பார்க்க வேண்டும்.
முடிவுகளின் விளைவுகளை நமது அனுபவத்தை வைத்தும், நண்பர்களின் ஆலோசனையை கேட்டும் கணித்து முடிவு எடுக்க வேண்டும்.
சிறிய முடிவுகள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை என்பதை உணர்ந்து நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அதற்காக பயந்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது இன்னும் பிரச்சனையை கொடுமையாக்கும்.
மேலும் அலசி ஆராய்ந்து முடிவு எடுப்பது சரியான முடிவு எடுப்பதற்கு மட்டும் உதவாமல், நாளை நாம் எடுக்கும் முடிவு எந்த விளைவை ஏற்படுத்தினாலும் ' நாம் ஒன்றும் ஒற்றையா ரெட்டையா போட்டு முடிவெடுக்கவில்லை..நன்கு அலசி ஆராய்ந்து தான் எடுத்தோம் என்று மனம் சமாதானமாகும்.
அடுத்தது நமது முடிவை அடைய, செயல் படுத்த தற்போது என்னென்ன வழிகள் உள்ளன என்று ஆராய வேண்டும்.
கண்டிப்பாக பிரச்சனையை ஆராய்ந்தால் நமக்கு சாதகமான ஆயிரம் வழிகள் இருக்கும்! அவற்றை ஒரு தாளில் எழுத வேண்டும். இதற்கு நமது படைப்பு ஆற்றலை உபயோகப்படுத்தினால் வித விதமான யோசனைகள் வரும்.
அடுத்தது தைரியமாக அவற்றை ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் போவதை கண் கூடாக பார்க்கலாம்.
மேலும் இந்த பிரச்சனையை அணுகும் செயல்பாடுகள் முழுவதிலும் நமது மனோபாவம் நேர்மறையாகவும், வெற்றியை எதிர் நோக்கி இருப்பதாகவும் இருக்க வேண்டும்.
ஒரு கப்பல் மாலுமியின் மனக் கண்ணில் சென்று சேர வேண்டிய இடம் குறிக்கோளாக இருப்பது போல் வெற்றி நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அது நமக்கு சரியான யோசனைகளையும், சரியான சூழ்நிலைலைகளையும் நம்முடன் இணைத்து விடும். வெற்றியை தேடித்தரும்.
இது என்னுடைய கருத்து மட்டுமே ஏற்கனவே நீங்கள் Probelm solving ங்கிற்கு சிறந்த நுட்பத்தை கையாண்டு வந்தால் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
Nov 20, 2009
...எனவே முத்தமிடுங்கள்!
என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு.அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி டைவர்ஸ் கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.
ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையில், தாம்பத்திய உறவு என்பது ஈர்ப்பும் ஆர்வமும் அற்ற ஒரு விஷயமாக, ஏதோ குளிப்பது போல் ஒரு கடமையாக அல்லது கோடைமழை போல் சட்டென்று கொட்டி அடங்கிவிடும் ஒரு விஷயமாக இருக்கிறது.
ஆர்வமற்ற இதுபோன்ற தாம்பத்திய உறவு இருக்கும் தம்பதியர்களுக்குள், மற்ற எந்த விஷயத்திலும்கூட பெரிய நெருக்கம் இருப்பதில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
சரி.. சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈர்ப்பும் ஆர்வமும் ஏன் குறைகிறது?
கணவனோ அல்லது மனைவியோ, குறிப்பிட்ட தன் துறையில் தான் வேகமாக முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் ‘வேலை வேலை’ என்று கவனம் முழுக்க வேலை பற்றியே சிந்திக்கும்போது, தாம்பத்திய உறவில் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போகலாம்.
அதிக வேலை அல்லது சரியான நேரத்தில் முடியாத வேலையால் ஏற்படும் உடல் அசதியும்கூட இதுபோன்ற ஆர்வமின்மைக்கு இட்டுச் செல்லலாம். கணவருக்கோ மனைவிக்கோ ஒருவரைப் பார்த்தவுடன் மற்றவருக்கு கிளர்வான உணர்வை ஏற்படுத்தும் டோப்பாமைன், நைட்ரிக் ஆக்ஸைடு, ஆக்ஸிடோஸின், டெஸ்டோஸ்டிரான் போன்ற சமாச்சாரங்கள் உடலில் போதுமான அளவில் இல்லாமல் குறைவாக சுரக்கும் நிலையும் காரணமாகலாம்.
சில வீடுகளில் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ சில குண நலன்களால் ஒருவர் மேல் மற்றவருக்கு மனசில் மரியாதை இல்லா ஒட்டாத நிலை ஏற்படுவதும் காரணமாகலாம்.
தாம்பத்தியத்தைத் தவிர வெளியே வேறு யாருடனாவது இருக்கும் ஆர்வத்தாலும் இப்படி தம்பதிகளுக்குள் ஈர்ப்பு குறையலாம்.. இதுபோல் இன்னும் ஏகப்பட்ட காரணங்கள்!
ஆனால், இந்த எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. சொல்லப் போனால் இந்தக் காரணம் பெண்களில் பலருக்கு மிகவும் பொருந்தும்.
அது.. தாம்பத்திய உறவு என்பது முறையாக, அதன் சுவாரஸ்யத்துடன் இதமாக அறிமுகம் ஆகாமல் போவதால், அதன் பேரில் சில பெண்களுக்கு ஏற்படும் பயமும் எரிச்சலும் கலந்த கஷ்ட உணர்வு!
எடுத்த எடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் நிறைய சாதத்தை அள்ளிப் போட்டால் சாப்பிடத் தோன்றுமா? அந்தப் பாத்திரத்தைப் பார்த்தவுடனே இருக்கும் பசியும் அல்லவா பறந்து போகும்!
என்னதான் பசிக்கு சாப்பிடவேண்டி இருந்தாலும் சாப்பிடத் தூண்டும் வகையில், அதை அழகாகப் பார்வையாக வைத்தால்தான் சாப்பிடும் ஆர்வம் வருகிறது. என்னதான் தேர்வுக்கு மார்க் எடுப்பதற்காக படிக்க வேண்டி வந்தாலும், ஆசிரியர் சுவாரஸ்யமாக சொல்லிக் கொடுத்தால்தான் அதைப் படிக்கவே ஆர்வம் வருகிறது.
அதேபோல்தான்.. என்னதான் மனதை மயக்கும் விஷயமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, இதமாக அதை அறிமுகப்படுத்தும் போதுதான் தாம்பத்திய உறவும்கூட பல பெண்களை விரும்பி ஆர்வம் கொள்ள வைக்கிறது.
பெண்களுக்கு தாம்பத்திய உறவை சுவாரஸ்யம் மிக்கதாக அறிமுகப்படுத்துவதில் முதல் முக்கிய பங்கு வகிக்கிறது முத்தம்....
இளம் மனைவியை எடுத்த எடுப்பிலேயே முரட்டுத்தனமாக அணைத்து, தங்கள் தேவைகளை ஆண்கள் நிறைவேற்ற முயலும்போது சில பெண்கள் பயந்து போகிறார்கள். அதனால் அவளைப் பொறுத்தவரை அந்த விஷயம் சுகமான ஒரு அனுபவிப்பாக இல்லாமல், டென்ஷனையும் பயத்தையும் ஏற்படுத்துவதாக மாறிப்போகிறது.

அதே இளம் மனைவியை கணவன் இதமாகப் பேசியபடியே மென்மையாக அவளை ஸ்பரிசித்து, மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட ஆரம்பித்து கன்னம், கழுத்து என்று ஒவ்வொரு இடமாக அவன் முன்னேறி வரும்போது அவளுக்குள் மனமெழுகு உருகத் தொடங்கிவிடும். அந்த விஷயத்தையே அப்புறம் அவள் ஆவலுடன் எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறாள்.
முத்தம், உங்கள் தாம்பத்தியத்தை திருப்திகரமாகக் கொண்டு செல்வதற்கு மட்டும் பயன்படுவதில்லை... ஆச்சர்யப்படுத்தும் பல விஷயங்களையும் செய்கிறது.
முதலில் கணவன் _ மனைவிக்கான மன நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ரொமான்டிக்காக தரப்படும் முத்தம், பிரியங்களை அதிகப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆக்ஸிடோஸின் கெமிக்கலை நிறைய சுரக்கத் தூண்டுகிறது.
ஆசையுடனும் ஆர்வத்துடனும் முத்தமிடுபவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்று பல ஆய்வுகளுக்குப் பின் கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பல்வேறு காரணங்களால் நம் தினசரி வாழ்க்கையில் ஏற்படும் கவலை, மன அழுத்தம், டென்ஷன் என்று பல பிரச்னைகள் தீர மெடிக்கல் ஸ்டோர் போகாமலே நீங்கள் வாங்க முடியும் ஒரே மருந்து முத்தம்தான்! அதனால் நோயற்ற ஹெல்தியான வாழ்க்கை வாழ முடிகிறது!
சோர்ந்த உடலுக்கும் மனசுக்கும் ஒரு மெகா பூஸ்ட் சாப்பிட்ட புத்துணர்ச்சி முத்தத்தால் கிடைக்கிறது. அதாவது இயல்பாக, ஒரு பெண்ணின் சராசரி இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 84 ஆகவும், ஆண்களுக்கு 72 ஆகவும் இருக்கிறது. முத்தமிடும் சமயத்தில் பெண்களின் துடிப்பில் 24_ம் ஆண்களின் துடிப்பில் 38_ம் அதிகரித்து, அதன் காரணமாக ரத்தம் வேகமாக பாய்ந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ரத்தம் சுத்தமாவதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது!

குறிப்பாக அடிக்கடி முத்தமிடுபவர்களின் முகம் இளமை குறையாமல் இருக்கிறது. ஒரு முறை முத்தம் தர சாதாரணமாக 12 முதல் 30 தசைகள் வரை இயங்க வேண்டியுள்ளது. அவற்றின் இயக்கம் முகத்தின் இளமையைக் காப்பாற்றித் தருகிறது. தவிர ஜப்பான் டாக்டர் டோமா என்பவர், தம்பதிகளின் வாயில் சுரக்கும் உமிழ்நீரை ஆராய்ந்துப் பார்த்துவிட்டு, முத்தமிடும்போது சுரக்கிற உமிழ்நீரில் ஏராளமான ஹார்மோன்கள் வெளிப்பட்டு அது மற்றவருடைய இரத்த ஓட்டத்தில் கலந்து, மனிதர்களுக்கு முதிர்ச்சி ஏற்படுவதைத் தடுக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்.
வேகமான இரத்த ஓட்டம் உடல் திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜனை அளிப்பதால், திசுக்கள் இளமையாகவும் உற்சாகத்துடன் இருக்கின்றன என்கிறார் மற்றொரு இத்தாலி நாட்டு நிபுணர்.
‘அடிக்கடி முத்தமிடுங்கள். உங்கள் வாய் நாற்றமில்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.
வயதாக ஆக எச்சில் சுரப்பது குறைவதால்தான், பல்லிலும் வாயிலும் உற்பத்தியாகும் பாக்டீரியாக்கள் சுத்தப்படுத்தப்படாமல் அங்கேயே தங்கி வாயை நாற்றம் ஏற்படுத்துகின்றன. ஆனால் முத்தமிடும்போது அதிக அளவில் எச்சில் சுரப்பதால், பாக்டீரியாக்கள் அவ்வப்போது சுத்தப்படுத்தப்பட்டு வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.
முத்தத்தால் உடல்ரீதியில் ஒரு கிளர்வான மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நாம் ஏற்கெனவே பேசிய டோப்பாமைன், எண்டார்பின் போன்ற விஷயங்களை முத்தம் தூண்டுவதால் இந்த கிளர்வும், திருப்தியும் ஒரு த்ரில்லான மகிழ்வும் கிடைக்கிறது.
தியானம் செய்தது போன்ற பலனையும் முத்தம் கொடுக்கிறது. மன அமைதியும், புத்துணர்ச்சியும் தந்து அடுத்தடுத்து செய்யும் வேலைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வைக்கிறது. எனவே முத்தமிடுங்கள்!
நன்றி:- திருமதி.லோகநாயகி அவர்கள்.
Nov 8, 2009
இந்த விசயத்திலுமா மூடநம்பிக்கை?

இப்போதெல்லாம் சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் ஜோதிடம்,சாஸ்திரமென்று மூடநம்பிக்கையான செயல்பாடுகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஒரு ஆணும், பெண்ணும் இணையும் உடலுறவு விஷயத்திலும் கூட சில மூட நம்பிக்கைக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
- அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்ததி போன்ற நாட்களில் உடலுறவு கூடாது.
- ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்தரம், சதயம் நட்சத்திரங்கள் உடலுறவுக்கு ஆகாது.
- மாதப்பிறப்பு, வருசப் பிறப்பு, விரததினம், விரதத்துக்கு முந்தைய, பிந்தைய தினங்கள், தீட்டு நாட்கள், ஞாயிற்றுக் கிழமை, கிரகணம் போன்ற நாட்களிலும் உடலுறவு கொள்ளக் கூடாது.
- இரவில் முதல் இரண்டு ஜாமத்திலும் (மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை), அதிகாலை நான்காம் ஜாமத்திலும் (அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை) உடலுறவு கொள்ளக் கூடாது.
ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் கிடைக்கும் மகிழ்ச்சியான நேரத்தில், மகிழ்வான மனநிலையில் அவர்களுக்குக் கிடைக்கும் உடலுறவும் அதன் மூலம் கிடைக்கும் இன்பமும் இந்த ஜோதிட சாஸ்திரங்களால் தள்ளிப் போடப்படுகின்றன. இதனால் அவர்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாவதுடன் மன அழுத்தங்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.
ஆண் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்கிற தவறான கருத்தும் தமிழ்நாட்டில் இருக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கும், உடலுறவு கொள்வதற்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்த நாளில் ஒரு ஆணையும், பெண்ணையும் பிரிந்திருக்கவே வலியுறுத்துகின்றனர். இது ஒரு தவறான செயலாகும்.
மேலும் நண்பகல் 12 மணி, இரவு 12 மணி ஆகிய நேரங்களில் உடலுறவு கொள்ளக்கூடாது என்கிறார்கள். இந்த நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் ஏதாவது தீமைகள் ஏற்படும் என்று எந்த மருத்துவச் செய்திகளும் இல்லை. இருப்பினும் இந்த நேரங்களைத் தவிர்த்து விடுகிறார்கள்.
ஆடி மாதம் உறவு வைத்துக் கொண்டால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். இப்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்றும் சொல்கிறார்கள். இதற்கு அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் எதுவுமில்லை. இருந்தாலும் புதுமணத் தம்பதிகளை ஆடி மாதங்களில் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. உலகில் எத்தனையோ குழந்தைகள் சித்திரை மாதத்தில் பிறக்கின்றன. அந்தக் குழந்தைகளின் தந்தைகளுக்கெல்லாம் பாதிப்புகளா வந்துவிட்டது?

ஒரு ஆண் மாதவிடாய் ஆன பெண்ணுடன் மாதவிடாய் ஆன நாள் முதல் 3 நாட்கள் வரை உடலுறவு கொள்ளக் கூடாது. பெண்ணுக்கு மாதவிடாய் ஆன நாள் முதல் 6, 8, 10, 12, 14, 16 ஆகிய இரட்டை வரிசை நாட்களில் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தையும், 5, 7, 9, 11, 13, 15 ஆகிய ஒற்றை வரிசை நாட்களில் உடலுறவு கொண்டால் பெண் குழந்தையும் பிறக்கும் என்கிறார்கள். இதில் சிறிது கூட உண்மையில்லை. மாதவிலக்கான நாட்களில் உடலுறவு கொள்வதால் இருவருடைய உடலுக்கும் மருத்துவ ரீதியாக எவ்வித நோய்களும், தொல்லைகளும் வரப் போவதில்லை. மாதவிலக்கான நாட்களில் பெண்களுக்கு மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எவ்வித பிரச்சனையுமில்லாவிடில் தாராளமாக உடலுறவு கொள்ளலாம். தவறில்லை என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். மேலும் ஒற்றை வரிசை, இரட்டை வரிசை நாட்களுக்கும் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இருந்தாலும் இதையும் சிலர் நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த ஜோதிட சாஸ்திரங்கள் தவிர, உடல் ரீதியாகவும் சில மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. உடல் ரீதியான நம்பிக்கைகளில் நிறம், உடல் பருமன், உயரம் போன்றவை குறித்து பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. பொதுவாக நிறம், பருமன, உயரம் போன்றவைக்கும் உடலுறவுக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை. இருந்தாலும் இவைகள் குறித்த தவறான கருத்துக்களில் பலர் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளாகவே தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மேலும் சிறிய மார்பகங்களுடைய பெண்களுடன் உடலுறவு கொள்வதில் ஆண்களுக்கு திருப்தி இருப்பதில்லை என்கிற தவறான கருத்தும் இருக்கிறது. மார்பகங்கள் பெரியதாகவோ, சிறியதாகவோ இருப்பது உடலுறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆண்தான் பெண்ணின் மார்பகம் பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். உண்மையில் சிறிய மார்பகங்களுடைய பெண்கள்தான் வேகமாகக் கிளர்ச்சியடைந்து உடலுறவில் ஆணுக்கு அதிகமான இன்பத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்ணின் மார்பகங்களின் அளவுக்கும் உடலுறவுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
தொந்தியுடையவர்களால் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாது என்கிற எண்ணமும் சிலரிடம் இருக்கிறது. இதுவும் தவறான ஒன்றுதான். உடலுறவில் தொந்தியுடையவர்களுக்கு சற்று சிரமங்கள் இருந்தாலும் உடலுறவுக்கென்று எத்தனையோ முறைகள் இருப்பதால் அவர்களுடைய இணைகளுக்கேற்றபடி சரியான முறையைத் தேர்வு செய்து, உடலுறவு கொள்ளும் போது இருவருமே இன்பமடையலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இப்படி ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவில் உடலுறவு குறித்து தனித்தனியான கருத்து வேறுபாடுகள் எத்தனையோ இருக்கிறது. இந்த கருத்து வேறுபாடுகளையெல்லாம் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். உடலுறவில் ஈடுபட விரும்பும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அவர்களுக்குள்ள நெருக்கமும் விருப்பமும்தான் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் உடலுறவில் அதிகமான இன்பத்தை அள்ளித் தருகிறது.
எனவே ஜோதிடம் மற்றும் உடல் வழியிலான தவறான எண்ணம் போன்ற மூட நம்பிக்கைகளைத் தூக்கி வீசுங்கள். உங்கள் ஜோடிக்கு உங்கள் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். ஒவ்வொரு இரவையும் இன்பமாக்கி மகிழுங்கள்.
இரவு நேரத்தில் இன்பமடைய
- படுக்கையறைக்குச் செல்லும் போது உங்கள் அனைத்துக் கவலைகளையும் கதவுகளை மூடும் போதே மூடிப்போட்டு விடுங்கள்.

- இன்றைய இரவு நாளை கிடைக்காமல் போகலாம் என்கிற எண்ணத்துடன் ஒவ்வொரு நாள் இரவையும் உல்லாசமாக்கிக் கொள்ளுங்கள்.
- உடல்நிலை, மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் கருதினால் உங்கள் துணையிடம் சொல்லி நாளை இரவை நமதாக்கிக் கொள்வோம் என்று நம்பிக்கையூட்டுங்கள்.
- புத்தகத்தில் படித்தது, படங்களில் பார்த்தது, பிறரிடம் கேட்டது என்று சொல்லி உங்கள் துணையிடம் எதிர்பார்த்து அது அமையாமல் ஏமாற்றமானால் அதை அடைய அடுத்தடுத்து முயற்சிக்கும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
- உங்கள் படுக்கையறை உங்களுக்கான இன்பக் களமாக இருக்க வேண்டுமே தவிர இருவருக்கிடையிலான கருத்து மோதல் களமாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Nov 4, 2009
தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?

உண்மைச் சம்பவங்கள்
சம்பவம் 1 :
எனது நண்பரின் நண்பர் ஒருவர் திருப்பூரில் Textile Industry நடத்தி வருகிறார். நல்ல வருமானம், கார், பங்களா, வாழ்க்கை இப்படி இருந்தபொழுது சோதனை, தோல்வி, தோல்வி, தோல்வி.
கடைசியில் வெறும் ஆளாக நின்றார். பங்களா பறிபோனது, கார்கள் போய்விட்டன. கடைசியில் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர வேண்டிய நிலைமையாகிவிட்டது. உலகமே சிரித்தது. உலகம் மதிக்கவில்லை. ஆனால் இவர் கலங்கவில்லை. ‘இப்பொழுது என்னிடம் ஒன்றும் இல்லை. ஆனால், எதிர்காலத்திலும் ஒன்றுமில்லை என்று பொருளில்லை. நான் இப்போதைக்கு இந்த வேலையைச் சரியாகச் செய்வேன்” என்று தீவிரமாக அந்தக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார்.
இருந்தாலும் “வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்கமாட்டேன். மீண்டும் வாழ்க்கையில் ஜெயிப்பேன்” என்றதீவிர எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார்.
இப்படியிருந்த போது Purchase Department-ல் பொருட்களை வாங்கும் பகுதியில் இவருடைய பொறுப்பு. இதில் பல இடங்களுக்குச் சென்று பல பொருட்களை வாங்க வேண்டும்.
இப்படி செய்து வந்த பொழுது ஒரு முக்கியமான அம்சத்தை இவர் கவனித்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் மிக அதிக விலைக்கு விற்பதை கண்டுள்ளார். அதற்கு அதிக போட்டியும் இல்லை. ஆனால் உண்மையில் அதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. ஆனால் விற்பனை விலையோ மிக அதிகமாக இருந்தது. இவருடைய எண்ணத்தில் “ஏன் இந்தப் பொருளை நாம் தயாரிக்கக் கூடாது” இந்த எண்ணம் மனதிற்கு வர வர அதைப் பற்றிய விபரங்களை எல்லாம் சேகரித்து வைத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து ஒரு வாடகைக் கட்டிடத்தில் தனது தொழிலை ஆரம்பித்தார். ஏற்கனவே வேலையில் இருந்த போது நிறையத் தொடர்புகள் இருந்தது. நிறைய order இவருக்குக் கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து மீண்டும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆனார்.
அவர் என்னுடைய பயிற்சியில் ஈரோட்டில் கலந்து கொண்டபோது சொன்னார். “என்னுடைய முதலாளியுடன் விலை உயர்ந்த காரில் கம்பெனி கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்தேன். இதேபோல் விலையுயர்ந்த காரை மீண்டும் வாங்குவேன் என்று முடிவெடுத்தேன். இன்று உங்கள் பயிற்சிக்கு அந்தப் புதிய காரில் தான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். இது உண்மைச் சம்பவம்.
மீண்டும் உலகம் பாராட்டியது. நண்பர்களே! இவர் அடைந்தது தோல்வி; அடைந்தது வீழ்ச்சி. ஆனால், மனத்தை அத்துடன் நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஜெயிப்பேன் என்றஉணர்வு அவரை மீண்டும் ஜெயிக்க வைத்தது.
தொழிலில் எத்தகைய தடங்கல் வந்தாலும், சோதனை வந்தாலும் அதையும் வாய்ப்புகளாகப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால் வெற்றி நிச்சயம். இதன் பெயர் Positive Thinking அதாவது உடன்பாட்டு எண்ணம் வேண்டும். அதேபோல என்ன சிக்கல், தடங்கல் வந்தாலும் அதிலும் ஏதேனும் செய்ய முடியும் என்றநேர்மறையான எண்ணம் வேண்டும். இந்த மனநிலை இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வெல்வார்கள்.
சம்பவம் 2 :
ஒரு அமெரிக்க ஆசிரியப் பெண்மணி வாழ்க்கையில் நிகழ்ந்தது. தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று வைத்திருந்தார். பலர் அவரை கேலி செய்து கொண்டு இருந்தார்கள். ‘நீயோ ஆசிரியர், நீ எப்படி அவ்வளவுப் பணத்தை சம்பாதிக்க முடியும்’ என்று.
ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் தன்னுடைய இலட்சியத்தில் தெளிவாக இருந்தார்.
இப்படி வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஒருமுறை ஒரு விபத்து ஏற்பட்டு ‘வீல்சேரி’ல் அமர வேண்டிய நிலைமையாகி விட்டது. அதாவது வீல்சேரில்தான் போகமுடியும், வரமுடியும். முழுமையாக பாதிப்பு. எல்லோரும் சொன்னார்கள் ‘இனி வாழ்க்கை முடிந்து விட்டது’ என்று. ஆனால், அந்தப் பெண்மணி ‘என் உடல்தான் முடங்கிவிட்டது. உள்ளம் முடங்கவில்லை. நிச்சயம் இந்த வாழ்க்கையில் என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன்’ என்று தீர்க்கமாக இருந்தார்கள்.
இப்படி இருந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்குள் ஒரு சிந்தனை இந்த ‘வீல்சேர்’ வசதியாக இல்லை. நல்ல வசதியான ஒரு வீல்சேரை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது என்றஎண்ணம் ஓடியது. இதையே ஒவ்வொரு நாளும் சிந்தனை செய்து அந்தச் சேரில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ செய்து கடைசியில் ஒரு அற்புதமான வீல்சேரை உருவாக்கினார். அந்த ‘வீல் சேரை’ இரண்டு மூன்று வகைகளில் தயாரித்து மக்களிடம் சோதனைக்கு அனுப்பும்போது, இது மிக அற்புதமாக இருக்கிறது என்று படிப்படியாக ஆர்டர் வந்தது. இதை அவர்கள் ஒரு ஒர்க்ஷாப்பில் தயாரிக்க கொடுக்க ஆரம்பித்து, படிப்படியாக வளர்ந்து அந்த ‘வீல்சேர்’ மூலமே ஒரு பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.
இதுவரை வீல்சேர் தயாரித்தவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள். அவர்கள் தயாரித்த ‘வீல்சேர்’ அவ்வளவு வசதியாக இல்லை. ஆனால், அந்த வலியும், வேதனையும் உடைய இந்தப் பெண் தயாரித்ததால் அது மிகச் சிறந்ததாக – பொருத்தமானதாக இருந்தது.
சாதாரண மனிதர்கள் விபத்தானவுடன் முடங்கியிருப்பார்கள். ஆனால் விபத்தையே -பிரச்சனையையே ஓர் வாய்ப்பாகச் சாதனை யாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
“பாதைகளை வழிமுறைகளை மாற்றுவேன். ஆனால், இலட்சியத்தை மாற்றமாட்டேன். அடைந்தே தீருவேன்” என்றதீவிர எண்ணம், அசைக்க முடியாத ஸ்திரமான எண்ணம் கொண்டு விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்!
பயிற்சிகள்
1. அழிக்கும் பயிற்சி (Erasian Technique)
தோல்விகள் நிகழ்ந்த பின்பு மனம் டென்ஷன், கோபம், கவலை உணர்வுகளால் அழுத்தப்படலாம். அதை நீக்க, உள்ளிருக்கும் உணர்வுகளை உங்கள் மேல் அன்பு, அக்கறை கொண்ட மனிதரிடம் முழுமையாகச் சொல்லி, இறக்கி வையுங்கள்.
அப்படி இல்லாவிட்டால் ஒரு பேப்பரை எடுங்கள். மனத்தில் உள்ள அத்தனை விஷயங் களையும் எழுதுங்கள். எதையும் விடாமல் என்னென்ன தோன்றுகிறதோ எல்லாவற்றையும் எழுதுங்கள். பின் அந்தப் பேப்பரைக் கிழித்துப் போட்டுவிடுங்கள். சுமை குறையும். ஒரு முறையில் தீராவிட்டால் மீண்டும் செய்யுங்கள்.
2. தூண்டும் பயிற்சி (Triggering Technique)
பொதுவாக தோல்வி ஏற்பட்டதற்குப் பிறகும் அந்த நினைவுகள் மனதுக்கு வந்து வந்து வேதனையைக் கொடுக்கும்.
நிகழ்ந்த சம்பங்களை அலசி ஆராயுங்கள். நிச்சயமாக அதில் ஏதேனும் ஓர்பாடத்தை இணைத்து விடுங்கள்.
எப்பொழுதெல்லாம் அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறதோ படிப்பினை – பாடம் – இருக்கும்.
சம்பவம் நினைவுக்கு வரும்பொழுது அதனுடன் கற்றஅப்பொழுதெல்லாம் அந்தப் பாடம் – செய்தி நினைவுக்கு வரும்.
‘கற்றபாடத்தைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சி செய்து வெல்வேன்’ என்று உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவு நாள் தோல்விகள் நினைவுக்கு வந்து உங்களை கீழே இழுத்துக் கொண்டு சென்றிருக்கும்.
ஆனால் இனிமேல் அந்த நினைவுடன் அதனால் கற்ற பாடம் நினைவிற்கு வந்து, அந்தச் சம்பவம், படிப்பினையைக் கொடுத்து உங்கள் உயர்வுக்குத் துணை செய்யும்.
3. மாற்றும் பயிற்சி (Conversion Technique)
இது, தோல்வியைச் சவாலாக மாற்றும் பயிற்சி. தோல்வி நினைவுகள் வரும்பொழுது உங்களுக்குள்ளே நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.
“என்னிடம் அளவு கடந்த அறிவு, திறமை, ஆற்றல், சக்தி இருக்கிறது. அதைச் சிறிதளவு பயன்படுத்தியதால்தான் தோல்வி. என்னிடம் மறைந்துள்ள மாபெரும் ஆற்றலை – வெளிக் கொணர்ந்து தொடர்ந்து செயல்புரிவேன், வெற்றி அடைவேன். அது என்னால் முடியும்! இது என் திறமைக்கு – என் வாழ்க்கைக்கு ஓர் சவால். நான் விசுவரூபம் எடுப்பேன். வெல்வேன்! என்னால் முடியும்!” என்று முழு மனத்துடன் கைகளை உறுதியாக வைத்து, விரல்களை மடித்து வீரத்துடன் சொல்லுங்கள். உள்ளுக்குள்ளே பெரும் சக்தி விசுவரூபம் எடுப்பதாய்க் கற்பனை செய்யுங்கள். தொடர்ந்து போராட உறுதி கொள்ளுங்கள். எழுந்து நில்லுங்கள்.
தோல்வி நினைவுகள் வரும்பொழுது – அதனோடு மூழ்கி விடாமல் – எழுச்சி கொண்டு செயல்படத் தயாராகுங்கள். தோல்விச் சம்பவங்கள் உங்களை மீண்டும் மீண்டும் விடாமல் போராடத் தூண்டட்டும்.
அவ்வாறு மாற்றி விட்டால் – வாழ்க்கை முழுவதும் வெற்றி – வெற்றி – வெற்றிதான்.
4. வெற்றி மனக்காட்சிப் பயிற்சி
(Creative Visualisation & Success Goal Imagery)
காலையிலும் மாலையிலும் அமைதியான ஓர் அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். கண் களை மூடிக்கொள்ளுங்கள். மூன்று முறைமூச்சை நன்கு இழுத்து – நிதானமாக வெளியிடுங்கள். பின் எதை அடைய நினைக்கிறீர்களோ – அதை அடைந்து விட்டால் – வெற்றி பெற்றதற்குப் பிறகு எப்படி இருக்கும் என்றநிறைவுக் காட்சியைத் தெளிவாக மனக்கண்ணால் பாருங்கள். பிரச்சனை இருந்தால் அல்லது தீர்ந்து விட்டால் எப்படி இருக்கும் என்ற நிலையைக் காட்சியாக மனதில் பாருங்கள். பிறகு மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற வெற்றிக் காட்சியை அடிக்கடி மனத்தில் பார்த்து வாருங்கள். இது உள் மனதில் பதிந்து அவ்வாறேநடக்கும்.
வெற்றிக் காட்சிகளையும், உடன்பாட்டு எண்ணங்களையும் மனத்தில் அடிக்கடி எண்ணாமல் விட்டுவிட்டால் தோல்விக் காட்சி களும், தோல்வியால் ஏற்பட்ட பின்விளைவு களும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து உங்களைக் கவலையடைய வைத்துச் செயல் பாட்டைத் தடுக்கும். சிந்தனையைக் குழப்பும்.
ஆகவே உடன்பாட்டு எண்ணங்களை நிரப்புங்கள். வெற்றி அடையுங்கள்.
உறுதிமொழிப் பயிற்சி (Charging Technique)
மனதுக்குள் கீழ்க்கண்டவாறு சொல்லிக் கொண்டே இருங்கள்.
நான் தன்னம்பிக்கை உள்ளவன்!
நான் சக்தி மிக்கவன்!
நான் சாதனையாளன்!
நான் அன்பு மிக்கவன்!
நான் உற்சாகமானவன்!
நான் சுறுசுறுப்பானவன்!
நான் மகிழ்ச்சி நிறைந்தவன்!
என்னால் முடியும்!
முடியும்! முடியும்!
வெற்றி நிச்சயம்!
Oct 28, 2009
ஆண்களைப் பற்றின ரகசியம்.?..

ஒரு பெண், மின்னல் என்று வைத்துக்கொள்வோமே. மின்னல் சின்ன வயதிலிருந்து இருபாலினருக்கான பள்ளியில் படித்து வந்ததால் ஆண்களிடம் சகஜமாக பேசும் சுபாவம் உடையவள். அவள் வேலையிலும் தினசரி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பல பேரை சந்தித்து சமாளிக்க வேண்டி இருந்ததால், மிகமிக கேஷுவலாக எல்லோரிடமும் பேசும் பழக்கம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. இவள் இப்படி இருக்க, வேலை நிமித்தமாய் இவளை ஒரு ஆசாமி பார்க்க வந்தான். மின்னலும் வழக்கம் போல, அவனைப் பார்த்து, பேசி, தன் பணிகளை மேற்கொள்ள, தொழில்ரீதியாக இருவருக்கும், பேச்சு வார்த்தை ஏற்பட்டிருந்தது. திடீரென்று ஒரு நாள், ``நாம் ரெண்டு பேரும் தனியா எங்கயாவது போய், ஜாலியா இருக்கலாமா?'' என்ற ரீதியில் ஏதோ கேட்க, மின்னலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அடப்பாவி, இவன் இப்படி நினைக்கும் அளவிற்கு நான் அவனிடம் எதுவுமே பேசவில்லையே. ரொம்ப ரொம்ப புரஃபெஷனலாக மட்டும் தானே இருந்தேன். அப்புறம் எப்படி, இவனுக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது? என்ன திமிர்! என்ன வக்கிரபுத்தி!'' என்ற மின்னல், ஒட்டு மொத்தமாய் ஆண் வர்க்கத்தையே சந்தேகப்பட ஆரம்பித்தாள்.
இன்னொரு பெண், இவள் பெயரை கொடி என்று வைத்துக்கொள்வோமே. இவள் ஹாஸ்டல் விடுமுறைக்காக சொந்த ஊர் போகும் போது, ரயிலில் உடன் வந்த ஒரு ஆசாமி தனக்கு பெட்டி எல்லாம் தூக்கி வைத்து உதவி செய்தானே என்று, அவனிடம் நட்பாக பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த ஆள் தனக்கு திருமணமாகி இருப்பதையும், வயதிற்கு வந்த இரண்டு மகள்கள் இருப்பதையும் சொல்ல, அட, நம்ம அப்பா மாதிரி என்று கொடியும், ``சேலம் வந்தா எங்க வீட்டுக்கு வாங்க அங்கிள்'' என்று தன் வீட்டு தொலைபேசி எண்ணைத் தர, அடுத்த நாளே, அங்கிள் ஃபோன் செய்தார், ``அடுத்த வாரம் சேலம் வர்றதா இருக்கேன். நாம் ரெண்டு பேரும் எங்கயாவது டின்னருக்கு போகலாமா?''
கொடிக்கு ரொம்பவே வியப்பாக இருந்தது... சும்மா இரண்டு வார்த்தை முகம் கொடுத்து, நன்றாக பேசி விட்டதாலேயே, டின்னருக்கு போகலாமா என்றால் என்ன அர்த்தம்? சீ சீ, இந்த ஆண்களே சரியான சபல கேசுகள், அவன் பொண்ணு கிட்ட எவனாவது இப்படி கேட்டா அப்பத் தெரியும்! என்று கொடி குமைய ஆரம்பித்தாள்.
மின்னல் ஆகட்டும் கொடியாகட்டும், நீங்கள் ஆகட்டும் நான் ஆகட்டும் எல்லா பெண்களுக்குமே இப்படி பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஆண்கள் சலுகை எடுத்துக்கொண்டு அவர்களிடம் பேச முயல்கிறார்கள். தப்பித்தவறி அந்தப் பெண் சகஜமாக பேசிவிட்டால், அதுவும் சிரித்துப் பேசிவிட்டாள் என்றால் உடனே, ஓஹோ, பார்ட்டி சிக்னல் கொடுத்துடுச்சு போல என்று உடனே அப்ளிகேஷன் போட ஆயத்தமாகிறார்கள்.
என்னதான் `சீ, தூ' என்றெல்லாம் பெண்கள் ஆண்களின் இந்த குணத்தை ஆட்சேபித்தாலும், உண்மை என்ன தெரியுமா? உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஆண் இனம் இப்படிதான் இயங்குகிறது. பெண்பால் என்ற ஒன்று எதிரில் இருந்தாலே போதும், ஆண் அலர்ட் ஆகி, தன்னை பெரியவனாய் காட்டிக்கொள்ளும்.
பெண் இதை எல்லாம் கவனித்துக்கொண்டு, விலகாமல், சும்மா அப்படியே நின்றாலும்கூட அதையே தன்னை ஊக்கப்படுத்துவதாய் நினைத்துக்கொண்டு, நெருங்கி வரும். அப்போதும் அந்த பெண் விலகாமல் ஆதரவு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினால், உடனே ஒரு ஆணாய் தன் கடமையை ஆற்ற ஆயத்தமாகி விடும்.உலக ஜீவராசிகளின் நியதியே இதுதான்.
பெண் எப்போதும், அசையாமல் ஆணை ஆழம் பார்த்துக்கொண்டே இருக்கும், ஆணாகவே முன்வந்து அட்டெண்டென்ஸ் போட்டால், அவனை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும். முடிவு எப்போதுமே பெண்ணைப் பொருத்ததுதான்.
ஆனால் முயற்சி செய்வது ஆணின் கடமை.
உதாரணத்திற்கு ஏதாவது ஒரு பூவை எடுத்துக்கொள்ளுங்களேன். பூவின் நட்டநடுவில் ஆடாமல் அசையாமல் பெண் உருப்பான கைனீஷியம் அமைந்திருக்கும். அது இப்படி சும்மா இருந்தாலும், எங்கிருந்தோ பல மகரந்தத் தூள்கள் பறந்தோ, மிதந்தோ, பிற ஜீவராசிகளின் மேல் தொற்றிக்கொண்டோ வந்து இந்த கைனீஷியத்தின் வாசலை அடையும். கடைசியில் எந்த மகரந்தத்திற்கு வெற்றி என்பதை அந்த கைனிஷியம்தான் முடிவு செய்யும். சூல் கொள்ள கைனிஷியத்திற்கு ஒன்றோ, இரண்டோ மகரந்தம்தான் தேவைப்படும். அப்படி இருந்தும், எல்லா பூக்களுமே தங்கள் மகரந்தத்தை பரப்பத்தானே செய்கின்றன. எந்தப் பூவும், ``எப்படியும் சிலதுதானே தேர்வாகும்.
எதற்கு வேலைமெனைக்கெட்டு இத்தனை மகரந்தத்தை உற்பத்தி பண்ணிக்கிட்டு, ஒரு வேலை நமக்கு சான்ஸ் கிடைக்கலைனா?'' என்று பெசிமிஸ்டிக்காய் இருப்பதில்லையே!
``சான்ஸ் கிடைக்குதோ இல்லையோ, முன் ஏற்பாடாக போட்டிக்கு தயாராகிடணும், வெற்றி தோல்வி முக்கியம் இல்லை, விளையாட்டுல கலந்தே ஆகணும்'' என்ற ரீதியில்தான் எல்லா ஜீவராசி ஆண்களுமே களமிறங்குகின்றன.
இதே விதியை அனுசரித்துதான் மனித ஆணும், முன் ஏற்பாடாக எப்போதுமே, ``ரெடி ஸ்டெடி, ஸ்டார்ட், ஜூட்'' என்று தயாராகவே இருக்கிறான். எப்போது எங்கே தன்னை ஆதரிக்க ஒரு பெண் கிடைப்பாள் என்கிற இந்த வேட்கைதான் அவனுடைய இயல்பு. ஆண்கள் மட்டும் இப்படி இயங்கவில்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிர்வாழ முடியாது.
இது மற்ற ஜீவராசிகளை பொருத்தவரை எந்த சிக்கலையும் ஏற்படுத்தியிருப்பதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் மனித வர்க்கத்தை பொருத்தவரை, ஆணின் இந்த ``எந்தப் பெண் கிடைப்பாள்?'' வேட்கை, அநாகரீகமாய் கருதப்படுகிறது.
காரணம் மிருகம் மாதிரி, பெண்ணைப் பிடித்து புணர்ந்துவிட்டு, பிறகு அவளை மறந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப் போகும் போக்கு மனிதர்களுக்கு ஒத்து வராததே காரணம்.
மிருகக் குட்டிகளுக்கு அப்பா என்ற ஒரு கேரக்டரே தேவை இல்லை. அம்மா மட்டுமே போதும்.
ஆனால் மனிதக் குழந்தைகளுக்குத்தான் அப்பா அம்மா இரண்டு பேருமே வேண்டுமே. இரண்டு பேரும் இணைந்து செயல்பட்டால்தான் குழந்தையின் வாழ்வு நல்லபடியாய் அமையும் என்பதினால்தான் இன்றைய புத்திசாலி ஆண்கள் ஒரே ஒருத்தியோடு, காலம் முழுக்க உறவு கொள்கிறார்கள். இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏற்பாடுதான் குழந்தை வளர்ப்பிற்கு மிக சாதகமானது என்பதாலேயே முதிர்ச்சி அடைந்த கலாச்சாரங்கள் இதையே ஆதரிக்கின்றன. இந்த அளவு, புரிதலும், அறிவும் இருக்கும் ஆண்கள் இதனாலேயே, தன் துணை அல்லாத பிற பெண்களிடம் கண்ணியமாய், கட்டுப்பாடாய் பழகுகிறார்கள்.
இத்தனை புத்திசாலித்தனம் இல்லாத ஆண்கள்தான் இன்னும் தொடர்ந்து மிருகபாணியில் மானாவரி சாகுபடி செய்கிறார்கள். எப்போது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும், ஈஷிக்கொள்ள முயல்கிறார்கள். இவர்கள் இப்படி மானாவாரியாக பெண்களுக்கு ரூட் விடுவது அத்தனை புத்திசாலித்தனமான போக்கில்லை என்றாலும் என்ன செய்வது, இன்னும் பல ஆண்கள் மிருகங்களாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி:Dr.ஷாலினி.





