Sep 29, 2009

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை



இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.



ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!
நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.



முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.



ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.



மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.



இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.



அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.



பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.



அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.



மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!

நன்றி : தினமலர்......



Sep 23, 2009

வ.உ.சிதம்பரம் பிள்ளை.



வ.உ.சி இன ஈகமும் காங்கிரசின் இரண்டகமும்.

கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் விடுதலைப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில் ஈடுபட்ட நேரு, இராசாசி போன்ற தலைவர்கள் அதற்கு விலையாக இந்த நாட்டையே பெற்றார்கள். இதுவா தியாகம்? தியாகம் என்பது முற்றிலுமாக தன்னை இழப்பது.
கட்டபொம்மன், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், பகத்சிங் என்று பலபேர் வெள்ளையரை எதிர்த்து, தன் நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தார்கள். அந்த தியாகிகளின் வரிசையில் அர்பணிப்போடு பிரிட்டிசு அரசை எதிர்த்து போராடிய கடைசி தமிழன் வ.உ.சி. மற்ற எந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நேராத அவலம் வ.உ.சிக்கு மட்டுமே நேர்ந்தது. அவர் ஒருவர்தான் பிரித்தானிய அரசின் ஒடுக்குமுறைககும் உள்ளானர். தான் சார்ந்திருந்த காங்கிரசு கட்சியின் துரோகத்திற்கும், சதிக்கும் ஆளானார்.
வ.உ.சி. வாழ்க்கையின் முற்பகுதி பிரித்தானிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி சீரழிந்தது. அவரின் பிற்பகுதி அவர் சார்ந்த காங்கிரசு கட்சி செய்த துரோகத்தில் சிக்கி பாழானது.
வாழும் காலத்திலேயே, தான் கொண்ட கொள்கையின் இரண்டு நேர் எதிர் நிலைகளையும் சந்தித்த தியாகி, அநேகமாக வ.உ.சிதம்பரமாக மட்டுமாகத்தான் இருப்பார். 5-9-2009 அன்று அவரின் பிறந்த நாள்.
பார்சி குமுகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் “பேரரசி ஆலை‘ என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரித்தானிய இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு வழங்கல் செய்து அந்த “சிற்றுண்டி ஒப்பந்தம் ‘ மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி “பேரரசி ஆலை‘ என்று வாலை ஆட்டியது.
இப்படிப் போதைப் பொருள் கடத்திய டாடாவைத்தான் தொழில் தந்தை என்று பெருமையுடன் குறிப்பிடுகிறது “சுதந்திர‘ இந்தியா.

அதேபோல, தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், ஆங்கில அரசின் ஆசியோடு பர்மா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் வட்டித் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர். இந்தியாவின் சுதேசி வணிகர்கள் இப்படியாகத் திரைகடல் ஓடித் திரவியம் தேடிக் கொண்டிருந்தபோது வெள்ளையனை விரட்ட வேண்டும் என்றால் அவனை எதிர்த்துப் போட்டி வர்த்தகம் நடத்த வேண்டும் என்று ஒரு குரல் தூத்துக்குடியிலிருந்து உரத்துக் கூவியது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் வணிகரல்ல. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம். ஒரு பரிதாபத்துக்குரிய சுதந்திரப் போராட்டத் தியாகி. ஏதோ ஒரு உந்துதலில் வெள்ளையனுக்கு எதிராகப் போராடிச் சிறை சென்றவர்” என்பது போன்ற தோற்றம் வ.உ.சி.யைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் அவர் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு விடுதலை வீரர். பிரித்தானியருக்கு எதிரான நெருப்பாகவே வாழ்ந்தவர். “வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீண்டும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்” என்று சுதேசிக் கப்பலுக்கான “விதை‘ பற்றிக் குறிப்பிடுகிறார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் என்பது வணிகம் அல்ல, அது பிரித்தானிய வல்லாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் வீரியமிக்க வடிவம் என்ற புரிதல் வ.உ.சி.க்கு இருந்தது. எனவே தன்னுடைய குழுமத்திற்கு மிகச் சாதாரண மக்களிடமெல்லாம் பங்கு தண்டல் செய்தார் வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி‘ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. 1907 மே மாதம் “காலியோ, லாவோ‘ என்ற இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.
கிலி பிடித்த வெள்ளையர்களின் பிரித்தானிய இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியும் (பி.ஐ.எஸ்.என்) பிரித்தானிய அரசும் இணைந்த கைகளோடு சுதேசிக் கப்பலுக்கு எதிராகச் சதிகள் செய்ய தொடங்கின . தூத்துக்குடிக்கும் கொழும் புக்கும் இடையில் 5 ரூபாயாக இருந்த மூன்றாம் வகுப்புக் கட்டணத்தை 75 பைசாவாகக் குறைத்தது பி.ஐ.எஸ்.என் நிறுவனம். அடுத்த சதியாக, இந்திய இலங்கை ரயில்வே நிர்வாகம், பி.ஐ.எஸ்.என் நிறுவனக் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கும் பயணிகளுக்கும் ரயிலில் கட்டணச் சலுகை என்று அறிவித்தது. ஆனாலும் தேசப்பற்று மிக்க மக்கள் இந்த சதி நிறைந்த சலுகைகளைப் புறம் தள்ளி, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்களையே ஆதரித்தனர். அதனால் வெள்ளையன் கப்பல் நிறுவனத்திற்கு மாதம் 40,000 வரை நட்டம் ஏற்பட்டது. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல் படுத்தியது. பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்ட உணர்வை மக்கள் மனதில் விதைத்தது. சுதேசிக் கப்பல் பதிவு செய்து சரியாக மூன்று மாதம் கழித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ‘வெள்ளையர் எதிர்ப்புணர்வு இங்கு நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் அதிகம் நிலவுகிறது’ என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினான்.
ஆம். நெஞ்சில் நெருப்போடு வெள்ளையர் களுக்கு எதிரான கலவரத்தை நடத்தக் காத்திருந்தது திருநெல்வேலிச் சீமை. திருநெல்வேலியே திகுதிகுவென்று தீப்பற்றி எரிகிறது கப்பலோட்டியது மட்டும்தான் வ.உ.சியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்ற சித்திரம் தவறானது. பிரித்தானிய ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோன்மையையும் எதிர்த்த மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வை வ.உ.சி.க்கு இருந்திருக்கிறது. வெள்ளை முதலாளிகளால் நடத்தப் பட்ட தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் இதற்குச் சான்றாக இருக்கிறது.

கோரல் ஆலையில் 10 வயதுச் சிறுவர்களும் தொழிலாளர்களாக வேலை வாங்கப்பட்டனர். வார விடுமுறை என்பதே கிடையாது. கூலி மிகக் குறைவு. வேலையில் தவறு நேர்ந்தால் பிரம்படி. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதற்காக வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைகோர்த்தனர். ”முதலாளிகளை முடமாக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று இயந்திரங்களுக்கு ஊறு விளைவிப்பது, இன்னொன்று வேலை நிறுத்தம். இரண்டாவது வழியே சிறந்தது” என்று தொழிலாளர்களிடம் உரையாற்றினார் சிவா. பின்னர் பேசிய வ.உ.சி, இரண்டு வழிகளையும் கையாளுமாறு தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டார். தொழிலாளர்கள் வ.உ.சியின் “கோரிக்கையை‘ உடனே நிறைவேற்றினர். மறுநாளே ஆலையின் மீது கற்களை வீசினார்கள். ஆலையின் தண்ணீர்க் குழாயை உடைத்தெறிந்தார்கள். தொழிலாளர் சிக்கலை மக்களிடம் பேசி அதனை வெள்ளையருக்கு எதிரான போராட்டமாக மாற்றினார் வ.உ.சி. மக்கள் வீதியில் சென்ற வெள்ளையர்களைக் கல்லால் அடித்தனர். வணிகர்கள் வெள்ளையருக்கு உணவுப் பொருட்களை விற்க மறுத்தனர். தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் உயிருக்குப் பயந்து தங்கள் இரவுகளைக் கப்பல் கம்பெனி அலுவலகத்தில் கழித்தனர். ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அதனால் வெள்ளையனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாவிதர்களோ வெள்ளையரை ஆதரித்தவர்களுக்குச் சவரம் செய்யவும் மறுத்தனர். நிலைமை எல்லை மீறியது. நிருவாகம் பணிந்தது. வார விடுமுறை, ஊதிய உயர்வு, வேலை நேரக்குறைப்பு ஆகியவற்றுக்கு உடன்பட்டது. தொழிலாளர் சிக்கலை வல்லாதிக்க எதிர்ப்புப் போராட்டமாக மாற்றியமைத்த வ.உ.சி.யின் இந்த உத்தி வியக்க வைக்கிறது. இந்தப் போராட்ட முறை இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டிருந்தால் பிரித்தானிய அரசு அப்போதே கப்பல் ஏறியிருக்கும். வெறுமனே கூலி உயர்வுக்குக் குரல் கொடுக்கிற அமைப்பாகத் தொழிற் சங்கத்தை வ.உ.சி பார்க்கவில்லை. ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே அவர் தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். கோரல் ஆலைப் போராட்டம் முடிந்தவுடனேயே அடுத்த அரசியல் போராட்டத்தைத் துவக்குகிறார் வ.உ.சி. அன்றைய காங்கிரசு கட்சியின் திலகர் அணியைச் சேர்ந்த விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளை சுயராச்சிய நாளாகக் கொண்டாட முடிவு செய்யப்படுகிறது. தடை விதிக்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 மார்ச் 10ம் நாள் வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் தலைமையில் தடை உத்தரவை மீறுகிறார்கள் மக்கள். வெறி கொண்ட விஞ்ச் மூவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறான். உடனே திருநெல்வேலியின் கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. வ.உ.சி யின் தீவிர பற்றாளரான ஏட்டு குருநாத அய்யர், திறந்திருக்கும் கடைகளையெல்லாம் மூடுமாறு மிரட்டுகிறார். இதனால் தன் வேலையையும் இழந்து சிறைக்கும் செல்கிறார். சுமார் 4000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டு கல்லூரியை இழுத்து மூடுகிறது. கல்லூரி முதல்வர் எர்ஃபர்டு தப்பி ஓடி அருகில் இருந்த பாரி கம்பெனிக்குள் ஒளிந்து கொள்கிறார். பிறகு அந்த மக்கள் கூட்டம் நகரமன்ற அலுவலகம், அஞ்சலகம், காவல் நிலையம், மண்ணெண்ணெய்க் கிடங்கு ஆகிய அனைத்துக்கும் தீ வைத்துக் கொளுத்துகிறது. திருநெல்வேலியே திகு திகுவெனத் தீப்பற்றி எரிகிறது. எழுச்சி கொண்ட கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த போலீசு ஆயத்தமானபோது “எங்களோடு சேர்ந்து கொண்டு வெள்ளையரைச் சுடுங்கள்” என்று போலீசைக் கோருகிறார்கள் மக்கள். தூத்துக்குடியிலும் கடையடைப்பு. வீடுகளின் மாடிகளிலிருந்து போலீசார் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்படுகின்றன. தமது முக்கிய வாடிக்கையாளர்களான வெள்ளையர்களை எதிர்த்தும் கசாப்புக் கடைக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். வேலைநிறுத்தம் முடிந்து 3 நாட்கள் முன்புதான் பணிக்குத் திரும்பியிருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக மீண்டும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். வ.உ.சி, சிவா இருவர் மீதும் அரசு நிந்தனை வழக்கு தொடர்கிறான் கலெக்டர் விஞ்ச். 1908 சூன் 7ஆம் நாளன்று ”வ.உ.சிக்கு ஆயுள் மற்றும் நாடு கடத்தல் தண்டனை” விதிக்கிறான் நீதிபதி பின்ஹே. அந்தமான் சிறையில் இடப்பற்றாக்குறை காரணமாக நாடு கடத்தல் தவிர்க்கப்படுகிறது. ஆனாலும் கடும் குற்றவாளிகளுக்கு அணிவிக்கின்ற இரும்பு வளையத்தை வ.உ.சி யின் காலில் அணிவிக்கிறது பாளை சிறை நிர்வாகம். கோவை, கண்ணனூர் என அவருடைய சிறைவாசம் தொடர்கிறது. அங்கே கைதிகளின் மீதான சிறைக் கொடுமைகளுக்கு எதிராக வ.உ.சி.யின் போராட்டமும் தொடர்கிறது. மேல் முறையீட்டில் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 1912 டிசம்பர் 24 அன்று கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலையான வ.உ.சி.க்குக் கிடைத்த வரவேற்பு, காங்கிரஸ் இயக்கத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது. சுப்பிரமணிய சிவா, கணபதிப் பிள்ளை என்ற இருவரைத் தவிர வ.உ.சியை வரவேற்கக்கூட யாரும் வரவில்லை. சிறைத்தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடரும் உரிமை வ.உ.சி.யிடமிருந்து பறிக்கப் பட்டு விட்டது. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் மளிகைக் கடை நடத்தினார், மண்ணெண்ணெய் விற்றார், அரிசி, நெய் வியாபாரங்கள் செய்து பார்த்தார். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் கம்பெனியே நடத்திய வ.உ.சி.க்கு கடை நடத்தத் தெரியவில்லை. அரசியல் தெரிந்த அளவுக்கு அவருக்கு வியாபாரம் தெரியவில்லை.

எனினும் வறுமை அவருடைய அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துவிடவுமில்லை. சென்னை, பெரம்பூரில் மளிகைக் கடை வைத்திருந்தபோதுதான் தபால் ஊழியர் சங்கத்தை உருவாக்கினார். அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்களிலும் காங்கிரஸ் தலைவர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அன்னிபெசன்டை எதிர்த்தார். “மக்கள் எழுச்சி வெள்ளையருக்கு எதிராக வெகுண்டு எழுவதைத் தடுக்கவே அன்னிபெசன்ட் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்” என்று தொழிலாளர்களிடம் பேசினார். அன்னிபெசன்டோடு சேர்ந்து செயல்படுவதற்காக, தான் தலைவராகக் கருதிய திலகரையும் கண்டித்தார் வ.உ.சி. காந்தியின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதபோதிலும் வேறு வழியின்றி அவர் காந்தியின் தலைமையை ஆதரித்தே பேசியிருக்கிறார். காந்தியுடன் கசப்பான தனிப்பட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. சிறையிலிருந்து திரும்பிய வ.உ.சியின் குடும்ப வறுமை போக்க, 5000 ரூபாய் நிதி திரட்டி வ.உ.சியிடம் ஒப்படைக்கு மாறு காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்த தமிழர்கள். கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் காந்தி அந்தப் பணத்தை வ.உ.சியிடம் தரவேயில்லை. எனினும் வ.உ.சி. அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியின் அகிம்சைக் கொள்கைதான் அவரைப் பெரிதும் இம்சை செய்திருக்கிறது. சிறுவயல் என்ற கிராமத்தில் ப.ஜீவா நடத்திவந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக் கிறார் வ.உ.சி. அங்கிருந்த ராட்டை களைப் பார்த்துவிட்டு, “இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?” என்று ஜீவாவைக் கேட்கிறார். “ஆம்” என்று அவர் சொன்னவுடன், “முட்டாள் தனமான நிறுவனம். வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே” என்று கோபப்பட்டிருக் கிறார்.
இந்த உணர்வோடுதான் காங்கிரசில் இருந்திருக்கிறார் வ.உ.சி. அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி க்கு உரிய மரியாதையை காங்கிரசு தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரசு உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரசு கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு. வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது. 19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். “எனது தலைவர்‘ என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27) பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரசு மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார். 1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று சிறை அதிகாரியிடம் போராடிய வ.உ.சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரசு கைவிடவில்லை. திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் நீதி கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரசு மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி. பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரசு “சிறப்பிக்க ‘ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய மேல் ஆளுநராக இருந்த இராசாசி : “கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார். இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார். அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி. எந்த எதிரிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது `சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

நன்றி -வே. மதிமாறன்.
மலேசியா (தமிழ்நாடு )........

Sep 21, 2009

சுய இன்பம்

நண்பர்களே இது எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு மனோவியல் சம்பந்தமான கேள்வி பதில்.பாலியல் சம்பந்தப்பட்டது.வயது வந்தோர்க்கு மட்டும்.
சுயமாய் விந்து வெளியேற்றல் என்றால் என்ன?
தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தனிப்பதுதான்.
அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன?

பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.

இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது)

ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல

சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.

இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விரக்தியை வெளிப்படுத்தும் ஓர் அம்சமே. இது பாலியல் பிரச்சினை என்று கொள்ள இயலாது. விருப்பம் இல்லாத ஆசிரியர் ஒருவரோடு பழகுகின்ற நிலையே. விரைவில் பிள்ளைகள் சுயமாக விந்தை வெளியேற்றுவது நல்லதோர் உணர்வைத் தருகிறது என்றும் சலிப்பு ஏற்படுவதை நீக்கும் நிவாரணி ஒன்று என்றும் கருதுகிறார்கள். பலமாதங்களுக்கு இதனைத் தொடராதே இருப்பர்.

ஏன் பெற்றோர் சுயமாக விந்தை வெளியேற்றுவதைத் தவறு என்கிறார்கள்?
பிள்ளை ஓமோன்களால் வழி நடத்திச் செல்லும் போது பெற்றோர்களால் தம்பிள்ளைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை. பிள்ளைகளில் பெரியமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளை மாற்றம் காரணமாக பருவமாகின்றபோது பாலியல் உந்தல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடாதே என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை அடக்கி ஆள முயலுகிறார்கள். எல்லாப் பெற்றோர்களுக்குமே இப்படிப்பட்ட போக்கு இருப்பதில்லை. பிள்ளைகளின் விந்து வெளியேற்றும் போக்கு பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை.

மற்றது பெற்றோரின் பாலியல் வேட்கை தணிந்து வரும்பொழுது பிள்ளைகள் பருவமாகியவர்கள் விந்து வெளியேற்ற ஆரம்பிக்கின்றார்கள். பருவம் ஆனவர்களுக்கு பாலியல் தாகம் தம்மைப் போலக் குறைவாக இல்லையே என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.

வருத்தமான சம்பவம் அல்லது விஷயம் என்னவென்றால், பாலியல் உந்தல்கள் வெட்கப்படத்தக்கவை என்றும் தூய்மையற்ற செயல் என்றும் கருத்து புகுத்தப்பட்டுள்ளதால் பருவம் ஆனவர்களின் பாலியல் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது.

சுயமாக விந்தை வெளியேற்றுவது பையன்களை பலமற்றவர்களாக்கிவிடும் என்று கூறுகிறார்களே!

விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது. ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்.

பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது.

விந்து வெளியேறியதும் ஓய்வு கொண்டால் தான் மறுபடியும் ஆண் உறுப்பு புடைத்தெழும் என்பதில்லை. அடுத்த புடைத்தெழும் நிகழ்வு சில நிமிட நேரங்களுக்குள் அல்லது சில மணி நேரங்களுக்குள் ஏற்பட்டு விடும். இது பாலுணர்வு அற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதும் இல்லை. முழுநாளும் எந்திரங்களைப்போல இதைத்தான் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு வேறு பல வேலைகளும் உண்டு.

அநேக விளையாட்டு வீரர்கள் பெரிய விளையாட்டுப் போட்டிக்குமுன் பாலியல் உறவில் ஈடுபடக் கூடாது என்று நினைப்பதேன்?

அவர்கள் பாலியல் உறவுகொள்வதையோ சுயமாகவோ விந்து வெளியேறுவதையோ விரும்புவதில்லை. இதனால் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடவில்லையே என்ற ஆத்திரத்தில் ஆவேசமாக விளையாட இடமுண்டு. இன்பம் துய்த்த சந்தோசத்தோடு விளையாடச் சென்றால் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

சுய வெளியேற்றத்தின் பயனால் விந்தின் தொகை குறைந்துவிடுமா?

ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை வெளியேறினால் தொகை குறையக் கூடும். சில தினங்களுக்கு தடிப்பாக இருக்கும். வெளியேற்றப்படாதிருந்தால் இது எல்லா வெளியேற்றங்களுக்கும் பொருந்தும். சுயமாக வெளியேற்றும் போது நீங்கள் விந்துவின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். அதேவேளை பாலியல் உறவு கொள்ளும் போது வெளியேறுவது கண்ணுக்குப் புலப்படாது. நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுவதில்லை. ஏனெனில் விந்தை மீதப்படுத்தவிரும்புகிறீர்கள். விந்தை ஆண்தன்மையே அற்ற கணவன்மார்களின் மனைவியருக்கு செயற்கை சினைப்படுத்தல் செய்ய தானம் செய்ய விரும்புகிறீர்கள். நீங்கள் சுயமாக விந்தை வெளியேற்றுகிறீர்கள் அவ்விதம் செய்ய விரும்புவதால் கவலைப்பட வேண்டாம். சில மணி நேரங்களில் சகஜமான தொகையை மீண்டும் பெற்றுவிடுவீர்கள். உங்கள் விந்து எண்ணிக்கைக்கு ஏற்ப சுயமாக விந்தை வெளியேற்றுவதால் பாலியலில் ஈடுபடத் தகுதியற்றவர்கள் ஆகிவிடமாட்டீர்கள். குழந்தைகளை உருவாக்கும் ஆசையும் முயற்சியும் அற்றுப் போகாது.

ஒன்றை மற்றதாக்குவது என்றால் என்ன?

பாலியல் உறவுமூலமோ அல்லது சுயவெளியேற்றுதல் முறைமூலமோ விந்தை வெளிவர விடாது பாலியல் உறவைத் திசை திருப்பும் நோக்கில் விளையாட்டிலோ சங்கீதத்திலோ இலக்கிய முயற்சியிலோ திசை திருப்பி விடலாகும். விரக்தி முயற்சிக்கு உத்வேகம் ஊட்டுகிறது.

திசை திருப்பிவிடுவது பாலியல் உறவாலோ சுயமாகவோ விந்து வெளியேற்றுவதைத் தவறான செயல் என்ற கருத்தினைக் கொண்டதாலோ அல்ல. திசை திருப்பி விடுவது இரண்டாம் வகைச் செயலாகவே கருதுகிறார்கள்.

இது பிரம்மச்சரியத்தைப் போன்ற செயல்தானா?

அப்படி ஒன்றும் இல்லை. ஆரம்ப கட்டங்களில் பிரம்மச்சரிய பயிற்சி பெறும் இளம் வயதினர் விரக்தி நிலை அடைவர்.

பிரம்மசாரியாவது பற்றிய இந்து சமயக் கொள்கை என்னவென்றால் இதில் ஈடுபடுவோர் பாலியல் உணர்வுகளை ஒதுக்கிவிட வேண்டும் என்பதாகும். சிற்றின்பம் மிருகங்களுக்கே உரியது. இதை விட உயர்வான பேரின்பம் பிரமச்சரியத்தால் கிடைக்கின்றது எனப்படும்.

ஒரு துளி விந்து நூறு துளி இரத்தத்திற்குச் சமம் என்கின்ற கருத்து உணர்த்துவது என்ன?

இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான். முன்னொரு காலத்தில் பூமி தட்டையானது என்று ஒரு கருத்து நிலவியது. புதிய தகவல்களின் அடிப்படையில் இக்கருத்துகள் தவறானது என்று அறிந்து கொண்டனர்.

உண்மையில் உங்கள் உடல் விந்தைத் தயாரித்தபடி இருக்கும். நீங்கள் சுயமாகவோ பாலியல் உறவு மூலமாகவோ விந்தை வெளியேற்றாவிட்டால் தேக்கம் ஏற்பட்டு தொகை பெருகி இரவில் கனவில் பாலியல் சிந்தனை ஓங்கி படுக்கையை ஈரமாக்குகின்றனர். இதனை ஈரமாக்கிய கனவு என்பர். இத்தகைய வீணடிப்புக்களைப்பற்றி இயற்கை பதட்டப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புடைத்nழுந்து விந்து வெளியாகும் போது நூற்றுக்கணக்கான மில்லியன் விந்துக்கள் வெளியாகின்றன. இவற்றில் ஒன்றோ இரண்டோ மட்டுமே தேவைப்படுகிறது. அநேக சந்தர்ப்பங்களில் ஒன்றுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் குழந்தை ஒன்றுக்கு உரியவராக விரும்பவில்லை.

சுய விந்து வெளியேற்றுவது நிரந்தரப் பழக்கமாகப் போய்விடும் என்கிறார்களே?

உண்மையில் நடப்பது இதுதான். சுய விந்து வெளியேற்றம் சதா காலமும் செய்துவந்து ஓமோனின் செயல்பாடு ஓய்ந்து விட பல நாட்களுக்கோ வாரங்களுக்கோ சுய விந்து வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது. ஓமோன் செயல்பாடு நிலையாக இருப்பின் சுய விந்து வெளியேற்றம் தொடர்ந்தபடி இருக்கும்.

இதனைப் பழக்கமான செயல் என்று கொள்ள முடியாது. மனவுறுதி அற்றவர் என்று கூறவும் முடியாது. பாலியல் உந்தல்கள் குறைவாகவுள்ளவர்குறைவாகவே சுயமாக விந்து வெளியேற்றத்தில் ஈடுபடுவார்கள். கூடுதலான அளவு பாலியல் உந்தல்கள் உடையோர் அதிகமாக சுயவிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே விதமானதே.

ஒரு பருவமானவர் சுயமாக விந்து வெளியேற்றுவதற்கு எப்பொழுதும் வெறுப்புற்று இருப்பதற்குக் காரணம் தீர்க்க முடியாத மன உளைச்சலே. இப்படிப்பட்ட நிலையில் ஆலோசகர் ஒருவரை அணுகி உதவி பெறுவது நல்லது.

சுயமாக விந்து வெளியேற்றுவது பருக்கள் தோன்றவும் பார்வை குன்றவும் காரணமாகுமா?

பருவமாகின்ற போது பொதுவாக பிள்ளைகளுக்கு பருக்கள் தோன்றுவதும், கண்பார்வை பாதிக்கப்படுவதும் சாதாரண சம்பவங்களே. பருவமானவர்கள் சுயமாக விந்து வெளியேற்றத் தொடங்குகிறார்கள்.

இந்த மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே வேளையில் நடக்கின்றதால் சுயமாக விந்து வெளியேற்றுவதுதான் மற்ற இரண்டுக்கும் காரணமென்று கொள்ள முடியாது. அல்லது பார்வைக் குறைபாடுதான் பருக்கள் தோன்றக் காரணம் என்று கொள்ள முடியாது. இவை மூன்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்டது காரணம் ஆகாதல்லவா?

சுயமாக விந்தை வெளிப்படுத்தினால் சித்தசுவாதீனம் ஏற்படும் என்று கூறக் காரணம் என்ன?
சித்த சுவாதீனம் உற்றவர்கள் புத்தி பேதலித்து இருக்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்ற சிந்தனை இன்றி வெளிப்படையாவே சுயமாக விந்தை வெளியேற்றுகிறார்கள். இச்செயலுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தியே காரணம்.

இத்தகைய சித்த சுவாதீனம் பாரம்பரியமானதே. உங்களிடம் பரம்பரை அலகு இல்லாவிட்டால் இது ஏற்படும். பரம்பரை அலகு இருப்பின் இந்நிலை ஏற்படாது. சுயமாக விந்தை வெளியேற்றுவதால் இத்தகைய கோளாறுகள் ஏற்படாது. ஆனால் இவை அனைத்தும் பருவம் ஆன பிறகே ஏற்படுகிறது.

சுயவிந்து வெளியேற்றம் இடைவிடாது செய்து வருவதற்கு குழம்பிய மனநிலையே காரணமாகிறது. வேறு காரணங்களாகவும் இருக்கக் கூடும். நன்கு பயிற்றப்பட்ட மனநோய் வைத்தியரை அணுகி இத்தகையோர் ஆலோசனை பெறுவது நல்லது. மனவேதனைக்குரிய காரணத்தை அறிந்து கொண்டால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள இயலும். இதனை அறிந்து நிவர்த்தி செய்த பிறகு அடிக்கடி சுயமாக விந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் அவசியம் ஏற்படாது.

சுயமாக விந்து வெளியேற்றிவருபவர் வெறொரு பெண்ணோடு பாலுறவு கொள்வது கடினமானதா?
இல்லை. உங்கள் உடலைப் பற்றி நன்கு அறிந்த பிறகு வேறொருவரோடு பாலுறவு கொள்வது சுலபமாகிவிடும்.

Sep 18, 2009

வாசனை மட்டும் இல்லை


இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் உள்ளங்கைகளில் தவழ்ந்து விளையாடும் கியூட் லிட்டில் செல்ல டாய்கள் தான் ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா N95 முதலான ஸ்மார்ட் போன்கள்.

இந்த ஸ்மார்ட்போன்களின் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலா அளவு இத்துணூண்டு சதுர அங்குலத்துக்குள் எத்தனை கோடி சமாசாரங்களை வைத்து வைத்திருக்கிறான் மனிதன் என்று. அதெப்படிடா நம்ம போன் சும்மா அதிருது...கால் வந்தா சும்மா வைப்ரேட் ஆகுதே அதெப்படிடானு கேட்டுத் தொலைத்தான் என் நண்பன்.
கப்பாசிட்டர், ரெசிஸ்டர், டயோடு, டிரான்சிஸ்டர் மாதிரி இதற்கும் எதாவது வைப்ரேட்டர் சிப் கண்டுபிடித்து விட்டார்களோவென்பது அவன் யூகம். கொஞ்சம் குறைய அவன் சொன்னது சரிதான். சிப் எதுவுமில்லை. மைக்ரோசைசில் ஒரு எந்திர மோட்டார் உங்கள் போனில் இருக்குமாம். வாசிங்மெசின் வேகமாக சுத்தும்போது அது ”ஒரு மாதிரியா” அதிரும் பாருங்கள் அதே நுட்பம்தான் இங்கேயும். வேறே சிப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

போனை நீங்கள் குறுக்காக பிடித்தால் திரையை உங்களுக்கு குறுக்காகக் காட்டவும் நெடுக்காக போனை பிடித்தால் திரையை உங்களுக்கு நெடுக்காகக் காட்டவும் Accelerometer என்ற ஒரு சிலிக்கான் சில்லுவை பயன்படுத்துகின்றார்கள். சத்தியமா அது புவியீர்ப்புவிசையை வைத்து பொசிசனை கண்டுபிடிப்பதில்லையாம். பின்னே எப்படி கண்டுபிடிக்குதாம்?
தலைசுற்றுகின்றது.

எல்லா ஸ்மார்ட் போன்களிலும் நம் குரல்கள் அனலாக் தொழில்நுட்பத்தில் கடத்தப்படுவதால் ஒரு Baseband Processor-ம் பிற டிஜிட்டல் மென்பொருள் பயன்பாடுகளை ஓட்ட ஒரு Application Processor-ம் என இரு புராசசர்கள் இருக்கும். நோக்கியா போன்களில் பொதுவாக Texas Instruments புராசசர்களையும், பிளாக்பெர்ரிகளில் Qualcomm புராசசர்களையும், ஐபோன்களில் Samsung மற்றும் Infineon புராசசர்களை காணலாம்.

நமது கோப்புகளை சேமித்துவைக்க ஸ்மார்ட்போன்களின் உள்ளே ஹார்ட் டிஸ்கெல்லாம் கிடையாது. எல்லாம் Gig கணக்கில் NAND Flash DRAM-கள் தான். ஐபோனுக்கு Toshiba-வும்,பிளாக்பெர்ரிக்கும் நோக்கியாவுக்கும் Samsung-கும் இந்த DRAM-களை வழங்குகின்றார்கள். எல்லாம் சிலிக்கான் சில்லுகள் தாம்.

இது தவிர
புவியில் நாம் இருக்கும் இடம் தெரிய GPS,
திசைமாறிப்போனவனுக்கு திசை காட்ட Compus,
வீட்டு அல்லது அலுவலக இணையத்தோடு இணைய Wi-Fi,
பக்கத்து போனோடு இணைந்து MP3க்களை கடத்த Bluetooth மற்றும் Infrared
வேகமாய் திரையில் படம் ஓட, வீடியோ கேம் விளையாட Graphics Processor,
நம்மை நாமே படம் பிடித்துக்கொள்ள Camera ,
எக்ஸ்ரா ஸ்டோரேஜ்க்கு MicroSD Interface,
எப்.எம் பாட்டு கேட்க FM Radio Tuner,
நாம பேசுவதை Dual-band அல்லது Quad-band ஆக கடத்த RF Transceiver.

இப்படி இந்த ஐம்புலண்களில் மெய்(Touch Screen), வாய்(Speaker), கண்(Camera), செவி(Microphone) எல்லாம் சிலிக்கான் சிப் வடிவில் உள்ளே அந்த சிறிய பொட்டிக்குள்.
சிலிக்கான் என்றால் மண் என்று உங்களுக்கேத் தெரியும். எல்லாம் மண். ஆனால் உள்ளே தான் எத்தனை இண்டலிஜென்ஸ் நடக்கின்றது.
மனிதனும் மண் தான். அதே இண்டலிஜென்ஸ்.
இந்த வரிசையில் ஒரே வித்தியாசம் ஸ்மார்ட்போனில் மிஸ்ஸாகுவது மூக்கு.

Sep 8, 2009

எழுத்தறிவு தினம்.


நண்பர்களே இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்.
படிக்கத் தெரிந்தவர்கள் தெரியதாவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்களுக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.
1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும். அனைவருக்கும் எழுத்தறிவு தின வாழ்த்துக்கள்.

Sep 1, 2009

பறவையின் காதல் பாட்டு.

அடர்ந்த காடுகளில் அதிர்வெண்குறைந்த ஒலி எளிதாக பரவும். பறவைகளின் சுற்றுப்புறத்தில் மரங்கள் அடர்த்தியாக வளரும்போது அவை காதல் கீதத்தின் அதிர்வெண்ணையும் மாற்றிக்கொள்வது விந்தையானது. வரைமுறை இல்லாது மரங்களை வெட்டும்போது வனங்கள் அழிந்துபோகின்றன. புவிவெப்பமடைவதும்கூட காடுகளின் அழிவிற்கு ஒரு காரணம்தான். அழிந்துபோன காடுகளுக்கு புத்துயிர் அளிக்கும்போது அங்கே பசுமை மலரத் தொடங்குகிறது. உயிரினங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றன.

Bird பச்சைப்பசேலென்று மரங்கள் நெருக்கமாக செழிக்கத் தொடங்கும்போது பறவைகளின் குரலோசை அடர்த்தியான வனத்தில் தொலைதூரத்திற்கு கேட்கவேண்டிய அவசியமில்லை. ஆண்பறவையின் குரல் அருகில் வாழும் எதிர்பாலினத்தை ஈர்க்கத்தானே? தாழ்ந்த அதிர்வெண்ணில் அந்தக் காதல் பாட்டு இருந்தால் போதாதா? வீட்டிற்குள்ளேயே பாட்டுக் கேட்பவர் வானொலிப்பெட்டியின் ஒலிஅளவை குறைத்துக் கொள்வதைபோலத்தான் இதுவும். சுரம்தாழ்ந்த காதல் பாடல்கள் மட்டுமே அடர்த்தியான வனங்களில் தெளிவாக எதிரொலிக்கும் என்பதால் பறவைகளின் குரலில் இந்த தகவமைப்பு ஏற்படுகிறது. வாழும் வனத்தின் அடர்த்திக்கேற்ப பறவைகள் தங்கள் குரலை மாற்றிக் கொள்கின்றன.

எலிசபத் டெர்ரிபெர்ரி என்னும் உயிரியல் ஆய்வாளர் இதுபற்றிய தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை டியூக் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளார். கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் ஆகிய இடங்களில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மொட்டையடிக்கப்பட்ட மரங்கள் இப்போது மீண்டும் செழிக்கத் தொடங்கியிருக்கின்றன. மரங்களின் அடர்த்தி அதிகரிப்பதால் அங்கு வாழும் வெள்ளைக்கொண்டை குருவிகள் தங்களுடைய காதல் பாடலின் சுரத்தை தாழ்த்தி அடக்கமாக பாடத் தொடங்கியிருக்கின்றன.

இந்த ஆய்வாளர் 15 இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். 1970களில் இந்த இடங்களில் வாழ்ந்த பறவைகளின் குரலோசை கலிபோர்னியா அறிவியலாளர் அகாடமியைச் சேர்ந்த ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதே இடங்களில் 2003ல் வாழ்ந்துகொண்டிருக்கும் பறவைகளின் குரலோசையுடன் நிலப்பகுதிகளின் பழைய, புதிய படங்களை ஒப்பிட்டு நோக்கும்போது மேற்காணும் ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன.

Bird's love tune graph மரங்களின் அடர்த்தியில் எங்கெல்லாம் மாற்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் பறவைகளின் குரலோசையின் அதிர்வெண்ணில் மாற்றம் தெரிந்தது. மரங்களின் அடர்த்தி மாறுபடாத இடங்களில் பறவைகளின் குரலோசையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆய்வகச் சோதனைகளில் புதிய காதல் கீதம் முடிவதற்கு முன்பாகவே பெண்பறவை வாலை உயர்த்தி இனச்சேர்க்கை நடனத்தை தொடங்கிவிட்டனவாம். ஒரு தலைமுறையில் பிடித்துப்போன காதல்பாடல் அடுத்த தலைமுறைக்கு பிடிக்காமல் போனதன் காரணம் என்ன? பறவைகளின் குரலோசையில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டும் பதிவைப்பாருங்கள்......

பறவைகள் தங்களின் குரல் அதிகதூரத்திற்கு போகவேண்டிய அவசியம் இல்லை என்பதால் குரலை தாழ்த்தி காதல் கீதம் இசைக்கின்றன. ஆனால் மனிதனிடம் இந்த பண்பு இல்லை. எட்டடிக்குச்சுக்குள் வாழ்க்கையை நடத்தும் இந்த மனிதன் டிவி பெட்டியின் ஒலிஅளவை தெருமுழுவதும் கேட்குமாறு வைக்கிறான் இல்லையா?

இந்த ஆய்வுகள் இன்னும் முடிவுபெறவில்லை. பறவைகளின் குரலோசையில் ஏற்படும் மாற்றங்கள் இரு பாலினத்திற்கும் பொதுவானதா என்பதையும், பறவைகளின் குடியிருப்புகளை தேர்ந்தெடுப்பதில் இந்த குரலோசை உதவி செய்கிறதா என்பதையும் இன்னும் ஆராயவேண்டியிருக்கிறது. மரங்களை வெட்டுவதாலும், புவிவெப்பமடைவதால் வனப்பிரதேசங்களின் அடர்த்தி மாறுபட்டுவரும் தென் அமெரிக்காவில் இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.