வலை மேன்தொகுப்புகள்(Web Application) பற்றி நிறைய பதிவுகள் வந்துவிட்டது. நமக்கே தெரியாமல், நாமும் நிறைய வலை மேன்தொகுப்புகளை உபயோகிக்கிறோம்.
ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால் இணைய இணைப்பு இல்லாத போது உங்கள் கணினியில் அவற்றை உபயோகிக்க முடியாது.
இதை சரிக்கட்ட கூகிள் கொண்டு வந்த மேன்தொகுப்பு தான் Google Gears. இதன் மூலம், வலை மேன்தொகுப்புக்ளை இணையம் இல்லாத போதும், உங்கள் உலவியின் மூலம் உபயோகிக்க முடியும்.
உதாரணத்திற்கு, இங்கு நான் எடுத்துக் கொள்வது, Gmail, ஆமாம், உங்கள் மின்னஞ்சலையே இணைய உதவி இல்லாமல் அணுக முடியும். ( புதிதாக வந்த மின்னஞ்சல்களைப் பெற இணைய இணைப்பு அவசியம்.)
நீங்கள் Chrome உலவி உபயோகிப்பவராக இருந்தால், உள்ளிருப்பாக Google Gears நிறுவப் பட்டிருக்கும்.
மற்ற உலாவிகளுக்கு பின்வரும் சுட்டிக்கு சென்று நிறுவவும். ஒவ்வொரு உலவிகளுக்கும் தனித்தனியாக நிறுவ வேண்டும்.
http://gears.google.com/
உங்கள் Gmail பக்கத்திற்கு சென்று அதன் Settings-->Offline-->Offline Mail சென்று
Enable Offline Mail for this computer - Synchronize your mail to this computer so you can access it without an internet connection.
என்றதெரிவை தேர்ந்து எடுக்கவும்.
இப்போது உங்கள் மின்னஞ்சல் எல்லாம் பதிவிறக்கம் செய்து கொள்ள சில நேரம் ஆகலாம்.
அவை முடிந்தவுடன், எல்லா மின்னஞ்சல்களையும் இணைய உதவி இல்லாமல் உங்கள் கணினியை எங்கு கொண்டு சென்றாலும் அணுக முடியும்.
இந்த Gears மூலம் ஜிமெயில் மட்டுமல்லாமல் நிறைய வலை மேன்தொகுப்புகளை இணைய உதவி இல்லாமல் உபயோகிக்க முடியும், பிறகு இணைய இணைப்பு கிடைத்தவுடன் வழங்கியுடன் (Server) Synchronize செய்து கொள்ளவும் முடியும்.
Google Reader
Google Docs.
Zoho
Remember the Milk
Picasa Web Albums
MySpace
Wordpress.com
ஆகியவை அந்த வலை மேன்தொகுப்புகளில் சில.
நன்றி:- திரு.கிர்ஷ்ணா...
No comments:
Post a Comment