நம்முடைய கல்வித் திட்டங்கள் குழந்தைகளுக்குக் கல்வியைப் புகட்டும் (புகட்டுவது என்பதன் நேரடியான பொருள் உங்களுக்குத் தெரியும்) வேலை ஒன்றை மட்டுமே செய்து வருகின்றன. அக்குழந்தைகளின் நுண்மாண் நுழைபுலத்தை வலுப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மறந்து கூடச் செய்வதற்கு இப்பள்ளிகளும் நம் கல்வித் திட்டமும் வழிவகுக்கவில்லை.
பள்ளிகளின் கடமைகள் ஒருபுறம் இருக்க பெற்றோரின் கடமையும் இங்கே இருக்கிறது. தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் தனிப்பட்ட திறமைகளையும் கண்டெடுத்து அவர்களை அந்தத் திசையில் வெற்றிகரமாகப் பயணிக்கச் செய்வது பெற்றோர்களின் தலையாய கடமையாகிறது. பள்ளிகள் பாடங்களைப் "புகட்டினால்'' வீட்டில் பெற்றேர்கள் அந்தப் பிள்ளைகளை வெறும் மதிப்பெண்களைப் பெறும் இயந்திரமாக மாற்றத்தான் அதிகமாக முயற்சிக்கிறார்கள்.
Aug 7, 2010
Aug 3, 2010
நமது பூமிக்கு நாம் செய்யவேண்டியவை...
TIME பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது.
1) லைட் பல்ப்ஸ்...
நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.

Subscribe to:
Posts (Atom)