Aug 26, 2009
எப்போதுமே நல்லவர்களாக இருப்பது கூட மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.
ஏமாந்த அவன் நண்பர்களுக்கு பணம் போனதை விட இவன் “அப்போதே நான் சொன்னேன், யாருமே கேட்கவில்லை” என்று கூறும் தோரணையில் முகத்தை வைத்து கொண்டதுதான் தாங்கவில்லை. இம்மாதிரியே ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் ஒன்றரைக்கண்ணனுக்கு தனி வழி என்றுதான் இவன் இருந்தான். ஒவ்வொரு முறையும் இவன் சொன்னதுதான் நடந்தது.
அவன் நண்பன் சாம்பமூர்த்திக்கு அது தாங்கவில்லை. “என்னடா இது, ஒவ்வோர் முறையும் நீ சொல்லறபடி நடக்குது? ஒரு முறை கூட நீ தப்பா யோசிச்சதே இல்லையா”? என ஆதங்கத்துடன் கேட்டான் அவன். “ஏன் இல்லை? ஒரு முறை நான் யோசித்தது தப்பா போயிருக்கே” என்றான் மார்க்கபந்து. “அது என்ன சமாச்சாரம்”? என ஆவலுடன் சாம்பமூர்த்தி கேட்டான்.
“அதாகப்பட்டது, போன வருடம் குபேரா கம்பெனி ஷேர்கள் விலை திடீரென விழும்னு நான் சொன்னேனே, ஞாபகமிருக்கா”? என்று அவன் கேட்க, “ஏன் இல்லை? ஆனால் நீ சொன்னபடித்தானே நடந்தது? எனக்குக்கூட அதில் ஒரு லட்சம் பணால் ஆயிற்றே. அதுக்கென்ன இப்போ?” என சாம்பமூர்த்தி வயிற்றெரிச்சலுடன் சொன்னான். “அதுல என்ன விஷயம்னா, நான் கூட ஒரு கட்டத்துலே நான் இந்த ஷேர்கள் பற்றி சொன்னது தவறாக இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அவற்றின் விலை திடீரென விழுந்து அவ்வாறு நான் முதல்லே நினைத்தது தப்புன்னு நினைத்ததுதான் தப்புன்னு நிருப்பிச்சதைத்தான் இப்போ சொன்னேன்” என்றான் மார்க்கபந்து.
ஏனோ தெரியவில்லை, மார்க்கபந்துவை அவன் நண்பர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.
வேறு சில மார்க்கபந்துகள் எப்போதுமே நல்லவர்களாக இருப்பது கூட மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். மகாபாரதத்திலேயே பார்க்கலாம். துரியன் மிகக்கொடியவன். யுதிஷ்டிரன் நல்லவன், தர்மவான். ஆனாலும் பலருக்கு துரியனைத்தான் பிடிக்கும். மனிதர்களின் இயல்பான பலவீனங்கள் அவன் குணத்தில் உண்டு. ஆகவே அவனுள் தங்களைக் காண்பார்கள். ஆனால் யுதிஷ்டிரனை போல இருப்பது மிகக் கடினம். ஆகவே அவ்வாறு இருப்பவர்கள் மீது டீஃபால்டாக ஒரு பொறாமை கலந்த எரிச்சல் ஏற்படுகிறது. எப்படா அவன் சருக்குவான், கைகொட்டி சிரிக்கலாம் என எல்லோரும் காத்திருக்கின்றனர்.
யுதிஷ்டிரனின் உதாரணத்தையே இங்கு பார்ப்போம்.
மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள்.
முதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. கிருஷ்ணரின் திட்டப்படி பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்துவிட யோசித்து கொண்டிருக்கிறார்.
இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.
பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'என்னும் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். ஆனால் இது இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.
இப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.
அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.
அதே போல எப்போதும் தியாகம் செய்து வருபவர்களும் ரொம்பவுமே போர். உதாரணத்துக்கு குடும்பத்துக்கு மூத்த மகன் தன் தம்பி தங்கைகளுக்காக தியாகம் செய்து எல்லோரையும் முன்னேற்றி தான் மட்டும் சந்தியில் நிற்பது பல தமிழ், இந்தி ஆகிய மொழிப்படங்களில் காட்டப்பட்டுள்ளன. படிக்காதவன், ஆறிலிருந்து இருபது வரை, குலவிளக்கு ஆகிய பல படங்கள் வந்து பார்வையாளர்களின் கண்களை குளமாக்கிச் சென்றுள்ளன.
ஆனால் எனக்கு மட்டும் இம்மாதிரி தியாகம் செய்பவர்களைக் கண்டாலே பற்றிக் கொண்டு வரும். அது என்ன இவங்க மட்டும் பெரிய புடுங்கிகள் மாதிரி வளைய வராங்கன்னு என்ணுவேன். சரி, எனக்குத்தான் பிடிக்கவில்லை சம்பந்தப்பட்ட கதைகளில் கூட மற்ற பாத்திரங்கள் அவர்களை விரும்புவதில்லை, ஏன்? இத்தனைக்கும் அவர்கள் இந்த தியாகங்களின் பலன்களை பெற்றவர்களே.
இதில்தான் மனித மனத்தின் ஒரு சூட்சுமம் புலன்படும். தாங்கள் ஒரு முயற்சியும் செய்யாது மற்றவர்கள் செய்யும் தியாகத்தின் பலனை மட்டும் அனுபவிப்பவர்கள் மிகுந்த தாழ்வுணர்ச்சியை அடைகின்றனர். அவர்களது நன்றிக்கடன் அளவுக்கு மீறி போகிறது, ஒரு நிலைக்கு அப்புறம் அவர்களது மனது கடுமையாகிறது. என்ன பெரிசா செஞ்சு கிழிச்சான் இவன். செய்ய வேண்டிய கடமை அதனால்தானே செஞ்சான் என்றெல்லாம் விட்டேற்றியாக யோசித்து பிறகு ஒரு புள்ளியில் வெளிப்படையாக சொல்லவும் சொல்கின்றனர்.
தேவையான அளவுக்கு மட்டுமே உதவி, பிறகு அவரவர் தத்தம் பலத்தால் தங்களை பார்த்து கொள்ள செய்வதுதான் மிகச்சரியான அணுகுமுறை. அதை விடுத்து, “அவனுக்கு என்ன தெரியும் அவன் குழந்தைதானே” என்று சம்பந்தப்பட்ட குழந்தையே 30 வயது தாண்டிய பிறகும் தியாகம் செய்யும் அண்ணாவோ அக்காவோ கூறினால் குழந்தைக்கு என்ன போச்சு? எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு தியாகம் செய்பவரை அம்போ என விடுவதுதான் நடக்கிறது.
இங்கு அளவுக்கு மீறி தியாகம் செய்பவர்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். அவர்களை மன நோயாளிகளாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு பதிவில் கூட பார்த்தேன், “கோலங்கள் சீரியலில் அபி மனநோயாளியா, தொல்காப்பியன் மன நோயாளியா” என்று கேட்டிருந்தார்கள். இருவருக்குமே இதில் சம அளவு போட்டிதான். இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசி அரை எபிசோடில் ஆதி திருந்தி, “அக்கா என்னை மன்னிச்சுடுன்னு” சொல்ல அபியும் மன்னிச்சு தொலைப்பாள். நேயர்கள் வாயில் விரலை வச்சுண்டு பாத்திண்டிருப்பாங்க.
நன்றி ..திரு.ராகவன்.
டோண்டுராகவன்...............
Aug 23, 2009
இரவலராய் மாறிய மன்னன்

இன்றைய உலகில் தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவர் நற்செயல் செய்யும்போது அவர்களைப் பாராட்டுவது என்பதோ, அவர்தம் செயல்களுக்கு ஆதரவு தருவது என்பதோ கிடையாது. ஆனால் மனச்சான்று சிறிதும் இன்றி அவரை இகழ்வர். இத்தகைய மனிதப் பண்பற்ற இழிகுணங்கள் மனிதனிடம் இருத்தல் கூடாது. தன்னைவிடத் தாழ்நிலையில் ஒருவர் நற்செயல்களைச் செய்தால், அவரைப் பாராட்டுவதுடன் அவர்தம் செயல்களுக்கும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். இத்தகைய மனிதப் பண்பினை புறநானூற்றில் இடம்பெறும் பாடல் ஒன்று தெளிவுற எடுத்துரைப்பது நினைத்தற்குரியதாகும். வள்ளல்களைப் புலவர்களும், பரிசிலர்களும் வாழ்த்திப் பாடுவர். இது இயற்கை.
ஆனால் வள்ளல் ஒருவனை அவனினும் ஆற்றலால் உயர்ந்திருந்த மன்னன் போற்றிப் பாடுவது அரிது.
சிறுகுடி என்ற சிற்றூருக்குத் தலைவனாக பண்ணன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனைக் கிழான் என்றும் பண்ணன் என்றும் கூறுவர். அவனது நெல்லித்தோட்டமும் தீஞ்சுவை நீர் அளிக்கும் கிணறும் இலக்கியத்தில் இடம்பெற்று இறவாத் தன்மையடைந்துள்ளன.
இப் பண்ணனைப் பற்றி மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்ற புலவர்,
""இடுக்கண் இரியல் போக உடைய கொடுத்தோன்! கொடைமேந் தோன்றல்'' (புறம்-388)
என்று அவனது வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டிப் புகழ்கிறார். இப்பண்ணன் ஆட்சியாலும் அரசாலும் மிகப் பெரியன் என்று கொள்ளுதற்கில்லை. இவன் குறுநில மன்னரிலும் சிறு நிலப்பரப்பினை உடையவன். எனினும் முடியுடை மூவேந்தரிலும் கொடைத்திறம் மிக்கவன். இதனால் இவன் பெற்ற சிறப்புப் பெயர், "பசிப்பிணி மருத்துவன்' என்பதாகும். பசியாகிய நோயைப் போக்கும் மருந்தினை அளித்து மகிழும் வள்ளல் என்பது இதன் பொருளாகும். இவனது இப்பெரும் புகழைப் புலவரேயன்றி இவனினும் மிக்க ஆற்றலும் அறிவும் உடைய சோழ மன்னனும் போற்றி இருக்கின்றான். சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் என்பது அச்சோழ மன்னனது பெயராகும். இம்மன்னன் பேராற்றலும் பெருவளமும் உடையவனாகத் திகழ்ந்தான். எனினும் பண்ணனது பண்பைக் கண்டு, இரவலனாக மாறி அவனைப் பாராட்டிப் புகழ்கிறான்.
இதன்மூலம் இரண்டு பெரிய உண்மைகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ஒன்று, அவன் கவிதை வளம் உடையவன் என்பது. மற்றொன்று, அவன் பண்பில் சிறந்து விளங்குபவன் என்பது. சோழனின் மனிதநேயப் பண்பையும் வாழ்வியல் உண்மைகளையும்,
""யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந்தன்ன ஊண்ஒலி அரவம் தானும் கேட்கும் பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும் மற்றும் மற்றும் வினவுவதும் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே!''(புறம்-173)
என்ற பாடல் தெளிவுற எடுத்துத்துரைக்கிறது. பண்ணனின் சிறப்பறிந்த மன்னர் மன்னனின் உணர்ச்சி பொங்குகிறது; ஊற்றெனச் சுரக்கிறது; கவிதை பிறக்கிறது. முதலிலே தோன்றுவது பண்ணன் நெடுங்காலம் வாழ வேண்டுமே என்ற உணர்வுதான். எவ்வாறு நெடுங்காலம் வாழ்வான்? அவனும் மனிதன்தானே! கூற்றுவனுக்கு இலக்காக ஒருநாள் மடிய வேண்டியவன் தானே! கூற்றுவனை வேண்டுகிறான் மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
தனது ஆயுளையும் எடுத்துக் கொடுத்துப் பண்ணனை நெடுநாள் வாழவைக்குமாறு வேண்டுகிறான். எவ்வளவு பெரிய நல்லுள்ளம்!
அடுத்த வேளை உணவுக்கு என் செய்வேன் என ஏங்கும் ஏழை ஒருவன் இதைக் கூறவில்லை. வாழ்வை வெறுத்தொதுக்கும் வளமிலான் கூற்றும் அன்று. செல்வ வாழ்வில் புரளும் மன்னர் மன்னன் இதைக் கூறுகிறான். பண்ணனின் பண்புக்கேற்ற வண்ணம் பாராட்டும் சோழ மன்னனின் புலமையை இதில் காணலாம். தன்னையும் ஓர் இரவலனாக வைத்து மதித்தால்தான் வள்ளல், பண்ணனது பெருமையை உணர்த்த முடியும் என எண்ணிய மன்னன் தன்னிலை மறந்து தன்னை எளியவனாகத் தாழ்ந்த நிலையில் வைத்து நோக்குகிறான். அந்த நோக்கிற்குப் பண்ணன் வெறும் பண்ணனாகவோ வள்ளலாகவோ தோன்றவில்லை. "பசிப்பிணி மருத்துவ'னாகக் காட்சியளிக்கிறான். "பசிப்பிணி மருத்துவன்' என்ற சொற்றொடர் ஆழம் வாய்ந்ததாக அமைந்து, எளிதாகப் பொருள் உணர்த்துகிறது.
மேலும், ஆட்சியாளர்கள் பிறர் செய்யும் நல்லனவற்றைப் பாராட்டுதல் வேண்டும். மாறாக அவர்களைத் தூற்றக் கூடாது. மக்களுக்குப் பயன் நல்கும் செயல்களைச் செய்வோருக்கு உறுதுணையாக இருப்பது ஆள்வோரின் கடமையாகும் என்ற இக்காலத்துக்குப் பொருந்தும் அரிய வாழ்வியல் கருத்துகளையும் சோழமன்னன், இப்பாடல் வழி எடுத்துரைப்பது நோக்கத்தக்கதாகும்.
Aug 21, 2009
கதை
முதல் கதை:
பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது.
"காலை முதல் கடவுள் காப்பாற்றுவார் எனச் சொல்லி சும்மாவே இருந்தாயே? அந்நேரத்திற்கு பள்ளத்தில் இறங்கி வண்டிச் சக்கரத்தைக் கொஞ்சமாவது நகட்ட முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் நான் உனக்கு உதவி இருப்பேன்... முதலில் உன்னை நீ நம்பி முயற்சி செய்.. வாழ்வில் தன்னம்பிக்கை தான் முக்கியம்.."
குயவன் புரிந்து கொண்டவனாக சந்தைக்கு கிளம்பினான்.
இரண்டாவது கதை:
"தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"
"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."
"கழுதையைப் பின்னால் தட்டினால்?"
"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"முன்னால் பாய்ந்து செல்லும்.."
"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்.."
சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.
Aug 18, 2009
செயற்கை உணவு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை,உப்பு, சாக்லேட்ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பதுபற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாகஅதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில்ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக்காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லாஉணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம்சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.
பதப்படுத்தபட்ட சர்க்கரை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை விரைவில்ஏற்றுவதால், உணவு தயாரிப்பாளர்கள் இப்படி விரைவில் குளுக்கோஸின்அளவை ஏற்றாத செயற்கை இனிப்புகளைத் தயாரித்துள்ளார்கள். இந்த மாற்றுஇனிப்புப் பொருட்களால் உடல் நலத்திற்கு கெடுதல் வர வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக நாம் சின்னமன், வனிலா, மிண்ட் ஆகியவற்றைசாப்பிடலாம். இவைகளில் இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் அதே சமயத்தில்இவை நம் உடம்பில் சர்க்கரையையோ, அல்லது கூடுதல் கலோரிகளையோசேர்க்காது.
உப்பு:
உப்பு என்று நாம் அழைக்கும் சோடியம் குளோரைடு என்பது நம் உடம்பிற்குமிகவும் அவசியமான ஒரு கெமிக்கல் ஆகும். நம்முடைய தற்போதைய உணவுப்பழக்க வழக்கங்கள் தேவைக்கதிகமாக நம்மை உப்பை சாப்பிட வைக்கின்றன. அதே சமயத்தில் தேவையான பொட்டாஸியம் போன்ற கெமிக்கல்களைஉட்கொள்ளுவதை யும் குறைக்கின்றன. நாம் உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும். நம் உடம்பில் ஒருமுறையான உப்பு மற்றும் பொட்டாசியம் விகிதம் இருக்க வேண்டும். விகிதம்அதிகமாக இருந்தால் செல்லுக்குள் உப்பு அதிகமாகத் தங்கிவிடும். அப்படித்தங்கும் பொழுது தண்ணீரும் அதிகமாக செல்லுக்குள் வந்து விடும். இதனால்செல் வீக்கமடைந்து வெடிக்க நேரிடும். கடலில் தயாராகும் உப்பு, இந்த உப்புமற்றும் பொட்டாசியத்திற்கிடையே உள்ள விகிதத்தை சரியாகக்கொடுக்கின்றது. ஆகவே, நாம் கடல் உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேசமயத்தில் நாம் கேனில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் சூப் வகையறாக்களைஉட்கொள்ளுவதைக் குறைப்பது நல்லது.
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாகசாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இதுநாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளைசாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம்கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி ஆக்ஸைடண்ட் திறன்கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட்சாப்பிடுவது நல்லது.
காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும்இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுதுநம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்புவருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிடசிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபிமிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதேசமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்துதயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்துதயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட்கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிறடீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீநல்லது.
உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும்நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம்பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும்நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால்அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம்இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவுவகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப்பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல்இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளைபார்ப்பது நல்லது.
காய்கறிகளை அதிக வெப்பத்தில் வேக வைக்கும் பொழுது அவற்றில் இருக்கும்விட்டமின் சி மற்றும் பிகாம்ளக்ஸ் விட்டமின்கள் 30 % அளவிற்கு வீணாகின்றன. கொதிக்க வைத்தால் 75 % அளவிற்கு விட்டமின்கள் பறிபோகின்றன. இதைத்தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கிவிடாத அளவிற்குமட்டத்தைக் குறைத்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நிறம்மாறி வலுவிழந்து குழம்புபோல் மாறியிருந்தால் அவை வீணாகிவிட்டன என்றுஅர்த்தம். பாத்திரத்திலிருந்து எடுக்கும் பொழுது அவற்றின் இயற்கையானநிறத்துடன் நொறுங்காமல் இருந்தால்தான் அவை முறையாகசமைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். கறி மற்றும் மீன் வகைகள் அதிக சூடுவைத்து வறுக்கும் பொழுது அவை நம் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களாகமாறுகின்றன. அளவுக்கு மீறிய சூடு வைக்கும் பொழுது கறி மற்றும் மீன்வகைகளிலுள்ள புரதச்சத்தும்,கொழுப்புச் சத்தும் அவற்றின் இயற்கைதன்மையை இழந்து சர்க்கரை நோயாளிகளுடைய ரத்தக் குழாய்களை பாதிக்கும்தன்மை பெறுகின்றன. இத்தகைய பாதிப்பு வரக் கூடாது என்றால் மெலிந்தகறித்துண்டுகளைக் குறைந்த வெப்பத்தில் அதிக நேரத்திற்கு நாம் சமைத்துக்கொள்வது நல்லது. மேலும் கறியை வறுத்து எடுக்கும் பொழுது ஞூணூதூடிணஞ்ணீச்ணஇல் ஆலிவ் ஆயிலை நாம் தடவி விட்டோம் என்றால் வறுத்த கறிணீச்ணஉடன் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கலாம்.
எண்ணெயை போட்டு சமைக்கும் பொழுது, எண்ணை மிகவும் சூடு ஏறினாலும்சமையலை அது பாதிக்கும். வேகவைத்த காய்கறிகளின் மேல் பச்சைஎண்ணெயை விட்டுக் கொள்வது நல்லது. சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவது எப்பொழுதும் நல்லது. அதே எண்ணெயை மீண்டும் மீண்டும்சமையலுக்குப் பயன்படுத்தி சூடு ஏற்றிக் கொண்டு இருந்தால், அந்தஎண்ணெயின் தன்மையே மாறி புற்று நோயை உண்டாக்கக்கூடிய வேண்டாதஎண்ணெயாக மாறிவிடுகின்றது. ஆகவே எண்ணெயில் சமைக்கும் பொழுதுசூட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. சோயாபீன் எண்ணெய் சூடேறினால்கெட்டுப் போகும் தன்மைக் கொண்டது. ஆகவே அதற்குப் பதிலாக சூட்டைத்தாங்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.
மைக்ரோவேவ் ணிதிஞுண-ஐ குளிர்ந்து போன பண்டங்களை சூடேற்றுவதற்காகமட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமையலுக்கு அதை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் அந்த மைக்ரோவேவ் கதிர்கள் முக்கியமானஎன்சைம்களை அழித்துவிடக் கூடியவை.
பழச்சாறு: தினமும் 6 முதல் 9 கப் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாகசாப்பிடு வது பிடிக்கவில்லை என்றால் பழச்சாறாக மாற்றி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாற்றைவிட காய்கறிகள் சாற்றை அதிகம்சாப்பிடுவது நல்லது. பழச்சாறுகள் நம் உடம்பில் காரத்தன்மையை சேர்க்கக்கூடியவை. இப்படி உடம்பில் காரத்தன்மை சேரும் பொழுது அமிலத்தன்மைசேருவது குறைக்கப்படுகின்றது. பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில்நம்முடைய சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்றஉதவுகின்றது. ஊட்டச்சத்து பொடிகளை மாத்திரைகளாக உட்கொள்ளாமல் நாம்காய்கறிச் சாற்றோடு கலந்து உட்கொள்ளும் பொழுது அவை வேகமாகஜீரணிக்கப்படுகின்றன.
பழச்சாறுகளில் ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் நிறைய உள்ளன. இதன் பலனாக, பழச்சாறுகளை நம் உடம்பு சிரமமில்லாமல் ஜீரணித்துக்கொள்கின்றது. மேலும் பழச்சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். உதாரணமாக நாம் இரண்டு கப் கேரட் ஜீஸ் சாப்பிடும் பொழுது அது ஒரு பவுண்ட்பச்சை கேரட் சாப்பிடுவதற்குச் சமமாகின்றது.
பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்றமருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்குஉதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக்கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்துபெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்தஅழுத்தம் மற்றும் அசிடிடியை குறைக்கும் தன்மை கொண்டவை.
உணவின் தரம்:
இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு: பூச்சி மருந்து அடிக்காமலும், கெமிக்கல் உரங்களை பயன்படுத்தாமலும் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்துபெறப்படும் உணவு இயற்கை உணவாகக் கருதப்படும். பூச்சி மருந்து மற்றும்கெமிக்கல் உரங்களுடைய உதவியுடன் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்துகிடைக்கும் உணவைவிட, இயற்கையாக தயாரிக்கப்படும் உணவில்தான் அதிகவிட்டமின்களும், தாதுக்களும் உள்ளன என்று நிரூபணமாகி உள்ளது. இயற்கைஉணவை வாங்குவது செலவு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒத்துவராதுஎன்றால் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழம், காய்கறிகளை வாங்குபவர்கள்அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிடுவது நல்லதாகும்.
கேன்களில் விற்கப்படும் பழங்கள் அதிக சர்க்கரை கொண்டிருக்கும் என்பதால்அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இம்மாதிரி கேன்களில் விற்கப்படும் காய்கறிகள்மற்றும் சூப் வகைகள் ஆகியவற்றில் சோடியம் அதிகமாக இருக்குமென்பதால்இவற்றையும் தவிர்ப்பது நல்லதாகும்.
Aug 14, 2009
பீமா மூங்கில்

ஓசூர் 'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.
இவர் கண்டுபிடித்துள்ள பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம். ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.
இப்போது உலகம் வெப்பமடைவதற்குக் காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.
அனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய். அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய். நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக் கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும். மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.
பெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச் செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை.
Aug 13, 2009
வளரும் குழந்தைகளுக்காக...
பெண் குழந்தை ஒரு வயதை கடக்கும் போது என்னென்ன இணையதளத்தை அறிமுகபடுத்தினால் அவளுக்கு எளிதாகவும் அறிவை வளர்க்கவும் உதவும் என்று யோசித்தேன். என் தேடலில் ஏராளமான தளங்கள் கிடைத்தது. அதில் மிகவும் பொருக்கி எடுத்த சில இணைய தளங்களை இங்கே சொல்கிறேன்.
http://nces.ed.gov/nceskids/eyk/index.asp?flash=false ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இது மிகவும் உதவும் பக்கம். சுருக்கமாக சொன்னால் இது ஒரு Quiz Master.
இந்த இணையத்தளத்தின் மற்ற பக்கங்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பயனுள்ளது.
http://www.kidthing.com/ – இந்த இணையத்திற்கு செல்லுங்கள் , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுக்கள், அறிவை வளர்க்கும் கேள்வி பதில், கற்பனை திறனை வளர்க்கும் போட்டிகள் எல்லாம் உண்டு. இதை நீங்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
http://www.tamilvu.org இதில் தமிழ்நாட்டினை விட்டு
வெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.
அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.

Between the lions இதில் word play, alphabet soup ,A.B.Cow
போன்றவற்றால் விளையாட்டாய் ஆங்கிலம் கற்கலாம். www.little-g.com -- little fingers software இதை நம் கணினியில்
தரவிறக்கம் செய்து கொண்டு விளையாடலாம். இதிலும் ஆங்கிலத்தின் ஆரம்ப நிலைகளை படிக்கலாம். http://www.sanford-artedventures.com/ -- வரைய சொல்லிக் கொடுப்பதுடன் விளையாட்டும் வரைபடங்களின் தியரியும் உள்ளது.
http://www.dreezle.com/ - இது எல்லா கணினியிலும் கிடைக்கும் பெயிண்ட் ப்ரஷ் போலத்தான் ஆனால் சில மாற்றங்களுடனான இத்திரையில் வரைவது இன்னும் எளிது , இது மவுஸ் கண்ட்ரோல் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவும். மற்றும் கற்பனைத் திறனை வளர்க்க .
http://www.suzyque.us/index.htm -- இந்தத்தளத்தில் worksheets பகுதி நன்றாக இருக்கிறது. வீட்டிலேயே தாய் சொல்லிக்கொடுப்பதற்காக அழகான விளக்கங்களுடன் இன்னும் சில arts and crafts என்று ஒரு வெர்ச்சுவல் பள்ளிக்கூடம்.

( குழந்தைகள் அதிகநேரம் கணினி முன் இருக்கக்கூடாது, மவுஸ் பிடிப்பது விரல்களில் வலி ஏற்படுத்தும்,இருப்பினும் எப்போதாவது சில நேரங்களில் இது போன்ற தளங்களில் சென்று கற்றுக்கொள்வது
தவறாகாது. விளையாட்டாய் கற்றுக்கொள்வதற்கு தான் இவைகள். )
Aug 10, 2009
உடலினை உறுதி செய்.!!!

விளையாட்டு மைதானங்களிலும், கடற் கரைகளிலும், சாலை ஓரங்களிலும், பூங்காக் களிலும் பலர் நடப்பதை பார்த்திருப்பீர்கள். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். சிலர் மருத்துவர் களின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது வேறு விஷயம்.
நோய் வராமல் தடுக்கவும், வந்த நோயைக் குணப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் நன்மைகளைப் பார்ப்போம்.
1. நல்ல உடல் தோற்றம்
இரண்டு விதமான மனிதர்களைத் தவிர அனைவருமே நல்ல தோற்றத்துடன் இருக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் யார் என்று அறிய முடிகிறதா? ஒருவகையினர் மனநல மருத்துவமனையில் காணப்படும் உள் நோயாளிகள். இன்னொரு வகையினர் கல்லறைக்குள் இருப்பவர்கள்! நல்ல உடல் தோற்றத்திற்குப் பல்வேறு முயற்சிகளை மேற் கொள்கிறோம். 60 வயதை தாண்டிய முதியவர்கள் கூட - பெண்கள் உட்பட தலை முடிக்கு ‘டை’ அடித்து வெள்ளையை கருப்பாக்கி மிகவும் இளமையாக தோற்றமளிக்க முயல் கிறார்கள். இதனால் வெளிநாட்டு ‘டை’ கம்பெனி கள் போட்டாபோட்டி போட்டுக் கொண்டு கடுமையான லாபத்தை ஈட்டுகின்றனர். சரி, இவர்கள் ஏன் டை அடித்து இளமையாக காட்சி அளிக்க வேண்டும்? இளமையானவர்கள் என்று இவர்களை யார் தெரிந்துகொள்ள வேண்டும்?
இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. ஆனால், சில உண்மைகள் வெட்ட வெளிச்சமாகின்றன. இளமைத் தோற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கு டை வாங்கவும் தயார், பொய் முடி வைக்கவும் தயார். தலைமுடியை வயலில் நாற்று நடுவது போல தலையில் அறுவை சிகிச்சை மூலம் நடவும் தயார். கருமையான முகத்தை சிவப்பு நிறமாக்கும் (உண்மையில் அப்படி ஆகாது!) பலதரப்பட்ட பூச்சுக்கள் வாங்கி பூசவும் தயார். இன்னும் சிலர் அமெரிக்காவுக்குச் சென்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்கின்றனர்.
மேலே சொன்ன எந்த அழகு சாதனப் பொருட்களாலும் முதுமையை ஒருபோதும் மறைத்துவிட முடியாது. இந்த ‘டை’களும், முக கிரீம்களும் மிகவும் தற்காலிகமானவை. மேலும் இவை நம் உடலுக்கு ஊறு விளைவிப்பவை ஆகும். இவை அனைத்துக்கும் பக்க விளைவு மற்றும் ஒவ்வாமை உண்டு. பக்க விளைவுகளின் நீண்ட பட்டியல் கூட அழகு சாதன புட்டிகளிலேயே இணைத்திருப்பார்கள். ஆனால், அவற்றை எவரும் படிப்பதாகத் தெரிய வில்லை. எந்த செலவும் இல்லாமல் முதுமையை வெல்லும் இயற்கை மருந்து தான் உடற்பயிற்சி.
சீரான உடற்பயிற்சி உடலின் தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் பழைய செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கு கிறது. இடுப்புப் பகுதியையும் வயிற்றுப் பகுதியையும் குறைத்து இயற்கையிலேயே இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டு மல்லாமல் தோலில் உள்ள இரத்த நாளங்களுக்கு ஆக்ஸிஜன் அதிகம் கிடைப்ப தாலும் இளம் செல்கள் தொடர்ந்து தயாராவதாலும் தோல் சுருங்காமல் இளமையாக இருக்கிறது.
நல்ல தோற்றத்திற்கு ஒரே வழி உடற்பயிற்சியே அன்றி வேறில்லை. இதற்குச் செல வில்லை. பக்க விளைவு இல்லை. ஒவ்வாமை இல்லை. எனவே தான் கூறுகிறேன். இன்றிலிருந்து உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். நல்ல உடல் தோற்றத்துடன் இளமை யாகவே இருக்கலாம். முதுமையைத் தள்ளிப் போட லாம்.
நல்ல உடல் தோற்றம் நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது.
உடல் எடை குறைப்பு
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன் (Obesity) என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோம். உடல் பருமன் என்பது ஒரு நோய் என்று சொல்லுகிறது மருத்துவ அறிவியல்.
நாம் செய்யும் உடற்பயிற்சியின் தன்மை மற்றும் நேரத்திற்கு ஏற்ப உடலில் ஆற்றல் (கலோரி) செலவிடப்படுகிறது.
வேலை கடந்த தூரம் (கி.மீ) நேரம் (மணி) செலவிடப்பட்ட
(கலோரிகள்)
மெதுவாக நடத்தல் 3.2 1 240
மிதமாக நடத்தல் 4.8 1 320
வேகமாக நடத்தல் 7.2 1 500
வேகமாக நடப்பதைப் போலவே ஓடுதலும் சிறந்த உடற்பயிற்சியாகும். மணிக்கு 7.2 கி.மீ முதல் 12 கி.மீ. வேகம் வரை ஓடினால் அது மிதமான ஓட்டம். மணிக்கு 12 கி. மீட்டருக்கு மேல் வேகமாக ஓடினால் அது அதிவேக ஓட்டம் ஆகும். இதுவே ஏரோபிக் ரக உடற்பயிற்சி எனப்படுகிறது. ஏரோபிக் ரக உடற்பயிற்சி மூலமாகத்தான் இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்தைக் காக்க முடியும்.
ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேகமாக நடந்தால் 500 கலோரிகள் செலவிடப் படுகிறது. எனவே அவர் தனக்குத் தேவையான தினசரி உணவை விட 500 கலோரிகள் உணவு அதிகம் உட்கொண்டால் கூட அது உடல் பருமனை ஏற்படுத்தாது. மாறாக ஒருவர் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், அவர் தினமும் கூடுதலாக உண்ணும் 500 கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் பல பகுதிகளில் தேக்கப்பட்டு, அவர் ஒரு உடல்பருமன் உள்ளவராக மாறி விடுகிறார். உடற்பயிற்சி உடல் எடையையும், உடலில் உள்ள கொழுப்பின் எடையையும் குறைக்கிறது.
நோய் தடுப்புத் திறன்
ஒரு நோய் வந்தபின் அதற்கு மருந்து சாப்பிட்டு அதைக் குணப்படுத்துவதைவிட நோய் வருவதற்கு முன்னதாகத் தடுப்பதே சிறந்தது. ‘வருமுன் காப்போம்’ என்பது நம்நாட்டு பழமொழி.
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். - திருவள்ளுவர்
நோய்கள் வருவதற்கு முன்னதாக அவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு வழி உள்ளது என்றால் அதுதான் உடற்பயிற்சி.
உடற்பயிற்சி மூலம் தடுத்து நிறுத்தப்படும் நோய்கள்
1. சர்க்கரை நோய் (Diabetes) 2. இதய நோய் (Heart Disease) 3. இரத்த அழுத்தம் (Hypertension) 4. புற்று நோய் (Cancer) 5. மலட்டுத் தன்மை (Impotence)
உலகளாவிய மருத்துவ முறை அலோபதி மருத்துவம். அதாவது MBBS படித்த டாக்டர்கள் செய்யும் மருத்துவ முறை. மருந்து மூலமாகவும் அறுவை சிகிச்சை மூலமாகவும் நோயைக் குணப்படுத்தும் இம்முறை மருந்தை அடிப்படை யாகக் கொண்டது. ஆனால், தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கைரோ பிராக்டிக் (Chiropractic) என்ற மருத்துவ முறை பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த மருத்துவ முறை மருந்துகளை தவிர்த்து, நோய்கள் வரும் முன்னே காப்பதை அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் சொல்வது எல்லாமே நோய் வந்த பின் அதற்கு மருந்து மூலம் சிகிச்சை செய்வதை விட, நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முன்கூட்டியே ஈடுபடுவது தான்.
குழந்தைப் பருவத்திலிருந்தே திட்டமிட்டு செயல்பட்டால் பெரும்பாலான நோய்கள் வராமலேயே தடுத்துவிடலாம். உடற்பயிற்சி என்பது இம்முறையின் மிக முக்கியமான சிகிச்சை முறை. வழக்கமான பயிற்சியின் மூலம் முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருந் தாலே நோய் நம்மை அண்டுவதில்லை என்கிறார் இம்மருத்துவ முறையின் தூதுவரான டாக்டர் கெப்ளான் என்பவர். இவர் எழுதியுள்ள ‘The life style of the fit & famous’ என்னும் புத்தகத்தை நீங்களும் படித்துப் பயனடையுங்கள்.
நோய்கள் வராமல் தடுப்பதால் பணச் செலவு குறைகிறது. மருத்துவமனையில் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நோயால் நாம் இறந்துவிடுவோமா என்ற பய உணர்வுடன் வாழ வேண்டியதில்லை.
எனக்கு இரண்டு டாக்டர்கள் உள்ளார்கள். ஒன்று எனது வலது கால்; மற்றொன்று எனது இடது கால் என்றார் ஜி.எம். ட்ரிவிலியன் என்ற அறிஞர்.
4. உடற்பயிற்சி ஒரு சுகமே
Exercise is a pleasure. வழக்கமாக உடற் பயிற்சி செய்பவர்களுக்கும், விளையாடுபவர் களுக்கம் இது நன்கு தெரியும். காலையிலோ அல்லது மாலையிலோ தாங்கள் விளையாடும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் விளையாட்டு என்பது போதைப் பொருள் போன்றது. அதற்கு எளிதில் அடிமையாகிவிட முடியும். இந்த அடிமைத்தனம் ஆக்கபூர்வமானது, வரவேற்கத் தக்கது. நான் கூட வாரம் மூன்று நாள் காலையில் ஓடுவேன். என்னைப் பொறுத்தவரை காலையில் 1 மணி நேரம் ஓடுவதை விட ஒரு சிறந்த சுகம் எதுவும் இல்லை.
இந்த சுகத்தை தருவதும் நமது உடலே. யாராவது ஒருவர் என்னிடத்தில் வந்து 1 லட்ச ரூபாய் தருகிறேன் இன்று மட்டும் ஓடாமல் இருந்துவிடு என்றால் சத்தியமாக நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
5. மனநலம் பெருகும்
மனநலமும் உடல்நலமும் ஒன்றோ டொன்று தொடர்புடையது. இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். மனநலம் நன்றாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்க முடியும். உடல்நலம் நன்றாக இருந்தால் தான் மனநலம் நன்றாக இருக்கும்.
உடல்நலம் கெடுவதால் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப் பட்டவர்கள்கூட, குறித்த நேரத்தில் உணவு உண்ணமாட்டார்கள். தொடர்ந்து சோகமாக இருப்பதால் உடலில் வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு நோய் வருகிறது. இந்தவிதமான நோய்களை Phycho-Somatic Disorder என்று அழைக்கின்றனர்.
மனநோய் எதனால் ஏற்படுகிறது? நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே இருப்பது. வேறு எதையும் நினைக் காமல் இருப்பது. இன்னும் சொல்லப் போனால் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. சிலர் காலப்போக்கில் தற்கொலை செய்து கொள் கிறார்கள். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் கவலை. நாம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் கவலை ஏற்படுகின்றது.
தினமும் கல்லூரியிலிருந்து வந்தவுடன் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் மாணவனுக்கும், அலுவலகத்திலிருந்து விளை யாட்டு அரங்கத்திற்குச் செல்லும் ஊழியருக்கும் கவலைப்பட நேரம் இல்லை. வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மனநலம் கெட்டுப் போக வாய்ப்பே இல்லை என்பதுதான் எனது முடிவான கருத்து.
‘Stop Worrying and Start Living’ என்ற புத்தகத்தில் டேல் கார்னிஜி என்பவர் இந்த நிலைக்குத் தரும் தீர்வு ‘Day Tight Compartment’ அதாவது, நாள் முழுவதும் வேலைகளில் ஈடுபடுதல் என்பதாகும். பிஸியாக இருப்பவர் களுக்கு கவலைப்பட நேரம் எங்கே இருக்கிறது?
வாழ்க்கையே வெறுத்துப்போய் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தாரம். அதற்கு நேரமும் குறித்தாராம். அவரது டாக்டரிடம் உறுதியாக தனது முடிவையும் சொன்னார். டாக்டர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக அதை ஆதரித்த டாக்டர், அவர் சொல்லும் முறையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அந்த மனிதரை கேட்டுக் கொண்டார். அதாவது 20 கி.மீ. தூரம் தொடர்ந்து ஓடி முடிக்க வேண்டும். அப்படி ஓடி முடிக்கும் போது தானாகவே விழுந்து இறந்துவிடுவார் என்பதுதான் அந்த மருத்துவரின் அறிவுரை. இந்த நபர் ஓடிப்பார்த்தார். முதல்நாள் 5 கிலோ மீட்டர் தூரம் ஓட முடிந்தது. வீடு திரும்பினார். மறுநாள் 6 கிலோ மீட்டர். இப்படி நாலு வாரங்கள் கழித்து 20 கி.மீ. தூரத்தை கடந்த அந்நபர் டாக்டர் சொன்னதைப் போல் சாகவில்லை. மாறாக அவருக்கு மீண்டும் ஓடவேண்டும் என்றஆசை ஏற்பட்டது. ஓட வேண்டும் என்றால் உயிர் வாழ வேண்டும். அன்றிலிருந்து வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாம் இவருக்கு. இவர் பிற்காலத்தில் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராகி பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
மன நோயாளிகளை தினமும் ஒருமணி நேரம் ஓடவிட்டால் பலர் குணமடைவார்கள் போலிருக்கிறது.
6. தலைமைப் பண்புகள்
இன்று கம்ப்யூட்டர் மென்பொருள் கம்பெனிகள் கூட, தலைமைப் பண்புகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடித்த பின்னரே பட்டதாரிகளை பணி நியமனம் செய்கிறார்கள். தெரிவு செய்த பொறியியல் வல்லுநர் தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மற்றவர்களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி நடத்திச் செல்லக் கூடிய வல்லமை உள்ளவரா என்பதைச் சோதிக்கிறார்கள்.
கீழ்க்கண்ட தலைமைப் பண்புகள் சோதிக்கப் படுகின்றன
அ) மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன், (Ability to Motive)
ஆ) மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன். (Communication Skills)
இ) தோல்விகளைத் தாங்கி, வெற்றியை நோக்கி முன்னேறும் திறன். (Perseverence)
ஈ) தன்னம்பிக்கை (Self Confidence)
உ) சரியானவர்களுக்குப் பரிசளித்து தவறு செய்தவர்களுக்குத் தண்டனையளிக்கும் திறன். (Ability to administer rewards and Punishments)
ஊ) சட்டதிட்டங்களைப் புரிந்து அதன்படி நடந்து கொள்ளும் திறன் (Ability to understand and obey rules.)
கம்ப்யூட்டர் கம்பெனிகள் என்றில்லாமல், எல்லா பணிகளிலும் தலைமைப் பண்புகள் உள்ளவர்களே வெற்றியடைய முடியும். இதைத் தான் சமூகநலன் என்று உலகநல நிறுவனம் குறிப்பிடுகிறது. ஒரு கல்லூரி முதல்வர், வகுப்பு ஆசிரியர், மருத்துவர், விஞ்ஞானி, விமான ஓட்டுநர், போலீஸ் அதிகாரி என்று அனைவருக் குமே தலைமைப் பண்புகள் அவசியமாகிறது. ஏன் ஒரு குடும்பத் தலைவன் கூட, தனது வீட்டினை நடத்திச் செல்ல தலைமைப் பண்புகள் பெற்றிருக்க வேண்டும்.
Aug 7, 2009
எறும்புகள் ஒரு அதிசயம்

2. உலகில் சுமார் 10,000 வகையான எறும்புகள் உள்ளன
3. இவை பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும்.
4. இதன் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும், இவை மிக வேகமாக ஓடும் திறனுடையது அதாவது உருவத்துடன் ஒப்பிடும்பொழுது மனிதர்களுக்கு இணையாக ஓடும் ஆற்றலுடையது.

5. இவை பொதுவாக ஆறு நிறங்களில் காணப்படும் (green, red, brown, yellow, blue or purple)

6. தனது எடையை போன்று 20 மடங்கு அதிகமான சுமையை தூக்கி செல்லும் திறனுடையது.

7. எறும்புகளால் திட உணவுகளை உண்ண இயலாது அதில் இருந்து juice-ஆக பிரித்து எடுத்தான் உண்ணும்.
8. எறும்புகளின் தலையில் காணப்படும் நீட்ச்சிகளின் மூலமாகதான் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும்.

9. எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 mm வரை வளரும், ஆனால் carpenter எறும்புகள் சுமார் 1 inch வரை வளரும்.

10. எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளுக்காகவும் எடுத்து செல்லும்.

11. பூச்சி இனங்களில் எறும்புகளுக்கு தான் அதிக மூளை உள்ளது, அதாவது இதன் processing power ஆனது Macintosh II computer விட திறனுடையது.


12. சில எறும்புகள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கும்.


14. Black ants and Wood ants க்கு கொடுக்குகள் கிடையாது, ஆனால் formic acid -யை பீச்சியடிக்கும் திறனுடையது.



17. வேலைகார எறும்புகள் ஏதேனும் உணவை கண்டுகொண்டால் அதன் அருகில் வாசனையை ஏற்படுத்தும், அதனை வைத்து் மற்ற எறும்புகள் உணவினை எடுத்து கூட்டிற்கு கொண்டு வரும்.

18. The Slave-Maker (Polyergus Rufescens) எறும்புகள் கூட்டினை சுற்றி பாதுகாவல் செய்யும், மற்ற எதிரி எறும்புகள் வந்து கூட்டில் உள்ள எறும்பு குஞ்சுகளை திருடி செல்லாமல் பார்த்து கொள்ளும். பின்னர் வளர்ந்த எறும்புகளை அடிமையாக்கும் வேலையை இவைதான் செய்யும்.

19. ஒரு எறும்பு கூட்டத்தில் சுமார் 700,000 Army ants இருக்கும்.

Aug 6, 2009
நாதுராம் கோட்சே!...

Aug 4, 2009
மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!

இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.
அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர்,
இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.
பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.

இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.