May 31, 2009

துபாய் - வெளிநாட்டு வேலை!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையம் பக்கம் ஒருவர், கையில்பெட்டியுடன் சென்று கொண்டு இருந்தார்.


அந்த பெட்டியில், "வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்' என்று எழுதி, "இதுதொடர்பாக என்னிடம் போனில் விவரம் கேட்டுக்கொள்ளுங்கள்...' என்றும் எழுதியிருந்தது.


அதன்படி சேகரித்த விவரம் இது...


திட்டக்குடியைச் சேர்ந்தவர் சேரன்; திறமையான தையல் தொழிலாளி. வெளிநாட்டு வேலை மோகத்தில் சிக்கிய பலரில் இவரும் ஒருவர்.


"இப்படியே எத்தனைநாள் இருப்பாய், கையில் நறுக்குனு நாலுகாசுசம்பாதிக்க வேண்டாமா...உன்னமாதிரி டெய்லர் களுக்கு எல்லாம்அரபு நாட்டில கடுமையான கிராக்கி. மாதம் குறைந்தது 25 ஆயிரம்ரூபாய் சம்பாதிக்கலாம், ஜாலியா இருக்கலாம்...' என்று ஒரு உள்ளூர்அன்பர் ஒருவர் கூறியதுடன், "அரபு நாட்டிற்கு டெய்லர்கள் தேவை' என்று வந்திருந்த பத்திரிகை விளம்பரத்தையும் காட்டியுள்ளார்.


சேரனுக்கும் வெளிநாட்டு வேலை ஆசை வந்தது. "மத்தவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம். உனக்குகம்மிதாம்பா...' என்று சொல்லி 65 ஆயிரம் ரூபாய் என்று கேட்க, பல இடங்களில் கடன் வாங்கி, பணத்தை கொடுத்து, சிலநாள் கழித்து நிறைய கனவு களுடன் சவுதி அரேபியா போய் இறங்கியிருக்கிறார்.


விமானநிலையத்தில் ஒரு ஏஜண்ட், வந்திறங் கிய சேரன் மற்றும் அவருடன் சென்ற சிலரை அழைத்துக்கொண்டு, அங்குஇருந்து பாஹா என்ற நீண்ட தொலைவில் உள்ள கிராமத்திற்கு கூட்டிப் போய் இருக்கிறார்.


அதற்கு பிறகு ஒரே சோகம்தான்.


தமிழ் பேச ஆள் கிடையாது. டெய்லர் வேலை எல்லாம் கிடையாது. அங்கு உள்ள ஆடுகளைத்தான் மேய்க்க வேண்டும். மாதம் ஐந்து ஆயிரம் ரூபாய் சம்பளம். அதுவும் ஆறு மாதத்திற்கு பிறகுதான். தினமும் காலை 6 மணிக்கு ஆடுகளைஒட்டிக்கொண்டு போய் மேய்த்துவிட்டு, மாலை 6 மணிக்கு திரும்ப வேண்டும். மேய்க்கும் ஆடுகளுக்கு, அடி பட்டுவிட்டாலோ அல்லது வேலையில் அசட்டையாக இருந்தாலோ சவுக்கு போன்ற சாட்டையால் அடி தான். கஞ்சி, ரொட்டிதான் சாப்பாடு. ஆட்டுக்கிடையில் தான் தங்கல், தூங்கல் எல்லாம்.


உண்ணவும், உறங்கவும் மறந்து; உறவுகளை துறந்து இரண்டு வருடம் படாதபாடுபட்டு, ஒரு வழியாக அங்கு இருந்துதப்பிப் பிழைத்து இந்தியா திரும்பியிருக்கிறார்.

இப்போது தான்விட்டு சென்ற தையல் தொழிலை தொடர் வதுடன், வேலை இல்லாதவர் களுக்கு தையல் தொழிலைஇலவசமாக கற்றும் தருகிறார்.

வெளிநாட்டு வேலை என்ற வுடன் படிக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துவிடக்கூடாதே என்ற ஆதங்கத் தில் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக, வெளியே எங்கே போனாலும் இந்த பெட்டியைஎடுத்துப் போகிறார். விசாரிப்ப வர்களிடம் எப்படியெல்லாம் உஷாராக இருக்கவேண்டும் என்பதை தன் அனுபவத்துடன்கூறுகிறார்.

தான் பட்ட அனுபவத்தை மட்டுமல்ல, அவமானத்தை கூட பகிர்ந்து கொண்டு, சமூகத் தில் விழிப்புணர்வு ஏற்படுத்தபெட்டியுடன் வலம்வரும் சேரன் நிச்சயமாக ஒரு வித் தியாசமான மனிதர்தான்.