இதில் மென்பொருள் தரவிறக்கம் இல்லை.மாறாக புகை படம் எடுக்கும் பொழுது red eye வராமல் தடுக்கும் வழிமுறைகள் இதில் தரப்பட்டுள்ளன.
தங்கள் அன்பான மனைவி, கணவன் ஏன் குழந்தைகள் பேரப்பிள்ளைகளை டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுக்கிறீர்கள். போட்டோ எடுத்த பின்னர் அதனை மானிட்டரில் பார்க்கையில் அவர்கள் சிகப்பு கண் பேய்களாகத் தோற்றமளிக்கலாம். (சும்மா கிண்டலுக்காக!) படத்தில் உள்ளவர்களின் கண்கள் சிகப்பான சிறிய உருண்டையாக இருப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.
இதனைப் பொதுவாக ரெட் ஐ என்று கூறுகின்றனர். பல கேமரா நிறுவனங்கள் தங்கள் கேமராக்களில் ரெட் ஐ நீக்கம் இருப்பதாக விளம்பரப்படுத்துவதும் இதனையே குறிக்கிறது.
முதலில் இது என்ன என்று பார்ப்போம். ரெட் ஐ என்பது அடிப்படையில் கண்களின் பின்புறத் தோற்றத்தின் ஒளி பிரதிபலிப்பு. கண்களில் உள்ள ரெட்டினாவின் ஸ்நாப் ஷாட் என்று கூடச் சொல்லலாம். எனவே எவ்வளவுக்கு எவ்வளவு கண்களை விரித்த நிலையில் வைத்து போட்டோ எடுக்கிறோமோ அந்த அளவிற்கு ரெட் ஐ யும் தோன்றும். போட்டோ எடுக்கையில் அறை விளக்குகளை எரிய விடுகையில் கண்கள் தாமாகவே சுருங்குகின்றன.
ரெட் ஐ காட்சி தோன்றுவதில்லை. பல டிஜிட்டல் கேமராக்கள் ரெட் ஐ நீக்கும் வசதியைக் கொண்டுள்ளன. இது வேறு ஒன்றும் இல்லை. உங்கள் கண்களைச் சிறிதாகத் திறக்க வைக்கும் ஏற்பாடுதான். இதிலும் போட்டோ எடுக்கப்படுபவர் கேமராவினை நோக்கியவாறு இருக்க வேண்டும். இல்லை என்றால் கேமராவின் ரெட் ஐ நீக்கும் வசதி எடுபடாது.
சிலவேளைகளில் மிதமான வெளிச்சம் ரெட் ஐ ஏற்படுவதனைத் தடுக்கும். புதிய பயன்படுத்தப்படாத டிஷ்யூ பேப்பர் ஒன்றை பிளாஷ் மேலாகப் பயன்படுத்தலாம். ஆனால் இப்படி செய்திடுகையில் உங்கள் பிளாஷ் வெளிச்சம் செல்லும் தூரம் குறையும். எனவே போட்டோ எடுக்கப்படுபவர் மிகவும் நெருக்கமாக இருக்கும்போது மட்டும் இந்த முறையைப் பயன்படுத்தவும். ஸூம் அமைக்கையில் அதன் இறுதி வரை பயன்படுத்தினால் ரெட் ஐ வர வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் கேமராவுடன் தனியாகவும் துணைச் சாதனமாகவும் பிளாஷ் லைட் பயன்படுத்தினால் கீழ்க்காணும் தகவல்கள் உபயோகமாக இருக்கும். உங்கள் பிளாஷ் லைட்டில் "பவுன்ஸ்' வசதி இருந்தால் லைட்டை அறையின் கூரை நோக்கி திருப்பவும். ஒளி மேலே சென்று அப்படியே போட்டோ எடுப்பவர் மீது பவுன்ஸ் ஆகும். இதில் இன்னொரு பிரச்சினை ஏற்படலாம்.
இது போல ஒளி பவுன்ஸ் ஆகும் போது போட்டோ எடுக்கப்படுபவர் தாடையில் சிறிய தாடி ஒன்று உள்ளது போல நிழல் விழலாம். எனவே அடுத்த டிப்ஸ் பயனுள்ளதா என்று பார்க்கவும். தொழில் முறை போட்டோ கிராபர்கள் அவர்களுடைய பிளாஷ் லைட்டை ஒரு பிராக்கெட்டில் வைத்து இயக்குவதனைப் பார்க்கலாம். இந்த முறையும் ரெட் ஐ விளைவினை ஏற்படுத்தாமல் தடுக்கும்.
பொதுவாக இந்த ரெட் ஐ கேமரா ஒரு சில கோணத்தில் வைக்கும்போது மட்டுமே ஏற்படுவதனைப் பார்க்கலாம். எனவே பிளாஷ் மாறி வெளிச்சத்தினைத் தரும் வகையில் கேமராவின் கோணத்தை மாற்றினால் இந்த ரெட் ஐ ஏற்படாத வண்ணம் போட்டோ எடுக்கலாம். சித்திரமும் கைப் பழக்கம் என்ற பழமொழி நினைவில் உள்ளதா!
No comments:
Post a Comment