Dec 3, 2010

டீன் ஏஜ் பெண்ணின் அப்பாவா நீங்க ?

 
My Sweet and Sweetest Daddy
வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள் ?  கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். முழிக்காதீங்க…
தந்தையின்  நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத பதின் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை ! அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?   
ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதேஎல்லா வகையிலும் முன் மாதிரிகையான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது. 
சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால்,

Aug 7, 2010

பாசமும் நட்பும் - நிதர்சனமான உண்மை.

        நம்முடைய கல்வித் திட்டங்கள் குழந்தைகளுக்குக் கல்வியைப் புகட்டும் (புகட்டுவது என்பதன் நேரடியான பொருள் உங்களுக்குத் தெரியும்) வேலை ஒன்றை மட்டுமே செய்து வருகின்றன.  அக்குழந்தைகளின் நுண்மாண் நுழைபுலத்தை வலுப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மறந்து கூடச் செய்வதற்கு இப்பள்ளிகளும் நம் கல்வித் திட்டமும் வழிவகுக்கவில்லை. 


 பள்ளிகளின் கடமைகள் ஒருபுறம் இருக்க பெற்றோரின் கடமையும் இங்கே இருக்கிறது.  தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் தனிப்பட்ட திறமைகளையும் கண்டெடுத்து அவர்களை அந்தத் திசையில் வெற்றிகரமாகப் பயணிக்கச் செய்வது பெற்றோர்களின் தலையாய கடமையாகிறது.  பள்ளிகள் பாடங்களைப் "புகட்டினால்'' வீட்டில் பெற்றேர்கள் அந்தப் பிள்ளைகளை வெறும் மதிப்பெண்களைப் பெறும் இயந்திரமாக மாற்றத்தான் அதிகமாக முயற்சிக்கிறார்கள். 

Aug 3, 2010

நமது பூமிக்கு நாம் செய்யவேண்டியவை...

TIME பத்ரிகையில் க்லோபல் வார்மிங்கை(Global Warming) கட்டுபடுத்த நாம் ஒவ்வொருவரும் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி ஒரு ஐம்பத்தி ஒரு விஷயங்கள் எழுதியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் நம்மால் கடைபிடிக்க முடியாவிட்டாலும் சிலதை நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது.

1) லைட் பல்ப்ஸ்...
நாம் சாதரணமாக உபயோகிக்கும் பல்ப்பை (conventional incandescent bulbs) விடுத்து குழல் விளக்கை சுற்றி வைத்த மாறி இருக்கும் பல்பை உபயோகிப்பது -{compact fluorescent light bulb(CFL)} நல்லது. CFL சாதரண பல்பைவிட இரண்டிலிருந்து ஐந்து மடங்கு விலை அதிகமாக இருந்தாலும் இதன் நீடித்த உழைப்பு அதை சரிகட்டி விடுகிறது. ஒரு 7 வாட் CFL பல்ப் ஒரு 40 வாட் ரெகுலர் பல்புக்கு சமம். இது ஒரு சிறந்த
எனர்ஜி சேவராக செயல் படுகிரது. ஆனால் இந்த வகை பல்பில் 5 mg மெர்குரி இருப்பதால் இதை மற்ற எல்லாவகை கழிவு பொறுள்களுடன் எறிய முடியாது.

Jul 22, 2010

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு.....

இந்தியாவில் அதிக கேமிரா விற்கும் நிறுவனம் எது ?

நீங்கள் சோனி, கேனான், நிக்கான் என்று பதிலளித்தால், அது தவறு. இதில் யாருமே இல்லை. நோகியா தான் அதிக கேமிரா விற்கிறார்கள். ஆனால், அவர்கள் கேமிரா விற்பனையாளர்களாக தெரிவதில்லை. செல்போன் விற்பனை செய்பவர்களாக தெரிகிறார்கள்.

செல்போனோடு கேமிராவருவதால் கேமிரா விற்பனை குறைந்து போயிருக்கிறது. செல்போனிலே கேமிரா இருப்பதால் பலர் தனியாக கேமிராவை வாங்குவதில்லை.

Jul 16, 2010

இந்திய பணத்திற்கு புதிய குறியீடு...

புதுடில்லி : உலக அளவில் உள்ள நாட்டு பணத்தை குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் இருப்பது போல் இந்திய கரன்சிக்கும் புதிய குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்திய பணத்திற்கு இந்த குறியீடுதான் பயன்படுத்தப்படும். இந்த ரூபாய் அடையாள குறியீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விஷயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.


சர்வதேச கரன்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு (ப) , ஜப்பான் யென் ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட மத்திய அரசு முடிவு எடுத்தது. இதன்படி அடையாள குறியீடு போட்டி ஒன்றும் நாடு முழுவதும் நடந்தது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய கற்பனை திறத்தை வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கப்பட்டன. 5 மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உதயகுமார் என்பவரது படைப்பு ஏற்று கொள்ளப்பட்டன.


இனி இந்திய ரூபாய் மற்றும் காய்ன்களில் இந்த முத்திரை பதிக்கப்பட்டு வெளி வரும். உலக அளவில் இந்த முத்திரையே பயன்படுத்தப்படும். இனி ஆர். எஸ், ஆர்.இ., என்று போட வேண்டியிருக்காது. இந்த குறியீட்டை போட்டாலே போதுமானது. ஆங்கிலத்தில் ஆர் என்ற எழுத்தின் பாதியில் அதன் மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது. இந்தியில் “ ர “ என்பது போலவும் இருக்கிறது.


ரூ. 2. 5 லட்சம் பரிசு : தமிழில் ரூ. 100 என்றோ , 100 ரூபாய் என்றோ எழுத வேண்டியிருக்காது. ஆங்கிலத்தில் ஆர்.எஸ்., என்று போட வேண்டாம். இந்த குறியீட்டை போட்டாலே போதும். இந்த குறியீட்டை உருவாக்கிய ஐ.ஐ.டி., படித்த உதயகுமார் என்பவருக்கு அரசு 2. 5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கும். இந்த குறியீடு இந்திய கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
என்ன இனிமேல் தயாராகும் கம்ப்யூட்டர்களின் கீ போர்டில் இந்த பட்டன் வைக்க வேண்டியதுதான் அடுத்த வேலையாக இருக்கும்

நன்றி;- தினமலர் ...

Jul 4, 2010

ஆண் என்றால் யார்?,..

ஆண் என்றால் யார், அவன் எப்படி தோன்றுகிறான்?

ஆண் என்பவனுக்கும் பெண் என்பவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவனுக்கு டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அதிகம், பெண்ணுக்கு அது மிக சொர்பமே.

இந்த டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன், இரண்டு சமயங்களில் உற்பத்தி ஆகிறது. ஒன்று: கரு உருவாகிய ஆறு வாரத்தில் அதன் மரபணுக்களில் ஒரு Y குரோமோசோம் இருந்தால், அது டெஸ்டோஸ்டீரோனை சுரக்க வைக்கிறது. அதுவரை பெண்பாலை போலவே இருக்கும் இந்த வருங்கால ஆணின் உடலில் இந்த டெஸ்டோஸ்டிரோன் பாய்ந்த உடன் அந்த கருவின் உடலும், மூளையும் மனமும் ஆண்மை படுத்த பட்டுவிடுகிறது. இது தான் முதல் கட்டம்.

அதன் பிறகு குழந்தை பிராயத்தில் மேற்கொண்டு டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தி ஆவதில்லை. அதனால் தான் ஆண் குழந்தைகளின் உடல் தோற்றமும், குரலும், தோலும், பெண்ணை போலவே இருக்கின்றன. ஆனால் இந்த பையன் வயதிற்கு வரப்போகும் காலம் நெருங்க நெருங்க, அவன் விந்தகங்கள் மீண்டும் டெஸ்டோஸ்டீரானை மிக அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மீண்டும் ஒரு முறை, ஆண்மைபடுத்தும் படலம் அமலாகிறது. இன பெருக்க உருப்புக்களின் வளர்ச்சி, ரோம வளர்ச்சி, குரல் மாறூதல், எலும்புகள் நீளுதல், தசைகள் புடைத்தல் என்று இந்த டெஸ்டோஸ்டீரோன் கலந்த உடன் அந்த பையனின் உடலில் பல மாற்றங்கள் உருவாகுவதை நம்மால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.

Jun 20, 2010

அவளுக்கென்று ஒரு நல்ல கணவன்...

அந்த மாமியாருக்கு தெரியும் தான், அவள் மருமகள் பணக்காரி என்று, இருந்தாலும், அவளால் இப்படி எல்லாம் குத்தலாக பேசாமல் இருக்கவே முடியவில்லை. மருமகள் தன் கணவனுக்கு ஆசையாக எதையாவது சமைத்தால், ”இதை எல்லாம் மனிஷன் சாப்பிடுவானா,” என்று எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் கொட்டிவிட்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு வந்த பழைய சாம்பாரை எடுத்து தன் பையனுக்கு பரிமாறுவாள். மருமகள் தன் கணவனுக்கு கேக் என்றால் பிடிக்குமே என்று முட்டையை வாங்கி வந்தால், அதை ஒளித்து வைத்து விடுவாள் மாமியார். மருமகள் தன் கணவனின் சட்டைகளை தானே தன் கையால் இச்திரி செய்தால், “உனக்கு போட தெரியாது, நானே கடையில குடுத்து பண்ணிக்கிறேன், அது தான் அவனுக்கு பிடிக்கும்” என்பாள். இதை எல்லாம் விட பெரிய கூத்து, மகனும் மருமகளும் தனியாக இருந்தால் எங்கே மகன் மயங்கிவிடப்போகிறானோ என்று பயந்து வாரத்திற்கு நான்கு நாட்கள் பையன் வீட்டிலேயே டேரா போட்டுவிடுவாள், “என்னமோ தெரியலை, உடம்பே சரியில்லை…..” என்ற ஒரு வசனத்துடன்.

Jun 6, 2010

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது

தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள்.
ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான

May 18, 2010

மாபெரும் சபையினில் நீ நடந்தால்…

நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம்மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம்தான் அவையெல்லாம்!


இந்த அபிப்பிராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. நம்முடைய வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து நம்மீது சில அபிப்பிராயங்களைக் கட்டமைக்கிறது.

நாம் நல்ல மனநிலையில் இருப்பதைப் பார்ப்பவர்கள், இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்” என்று முடிவெடுக்கிறார்கள். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்பட்டதைப் பார்ப்பவர்கள் அய்யோ! சரியான சிடுமூஞ்சி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.

மொத்தத்தில், நம்மீதான சமூக அபிப்பிராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனிமனிதரையும், அவரைச் சுற்றியுள்ள சமூகம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

Apr 19, 2010

டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்

நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம்.
நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.

Apr 17, 2010

சிந்தனை செய் ...

90/ 10 – இது நம் வாழ்க்கையை மாற்றப் போகும் தாரக மந்திரம். எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது நமது வாழ்க்கையின் 10% நடவடிக்கைகள் மட்டுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை. மீஹதமுள்ள 90% நடவடிக்கைகள் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

இதற்கு ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம்.

சுரேஷ் தனது குடும்பத்துடன் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருக்கிறார். அவருடைய பத்து வயது மகள், காபி கோப்பையைத் தட்டி விட்டுவிடுகிறாள். காபி, சுரேஷ் அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டையில் விழுந்து விடுகிறது.
காபி, சட்டையில் விழுந்த சம்பவம், சுரேஷின் கட்டுப்பாட்டில் அடங்காதது. இது நம்முடைய கட்டுப்பாட்டில் அடங்காத 10% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது. இதற்கு அடுத்து ஏற்படும் நிகழ்வுகள், சுரேஷ் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில் இருக்கிறது. இது நம்முடைய 90% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது.

Mar 27, 2010

ஆணென்ன....பெண்ணென்ன......

ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள்.

Mar 20, 2010

இன்று உலக சிட்டுக்குருவி தினம் ?!?...

Front page news and headlines today 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...' என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது.
தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட மறக்கவில்லை.



உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால், 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்பட்டது.

Mar 15, 2010

மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க.

வலை மேன்தொகுப்புகள்(Web Application) பற்றி நிறைய பதிவுகள் வந்துவிட்டது. நமக்கே தெரியாமல், நாமும் நிறைய வலை மேன்தொகுப்புகளை உபயோகிக்கிறோம்.

ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால் இணைய இணைப்பு இல்லாத போது உங்கள் கணினியில் அவற்றை உபயோகிக்க முடியாது.

இதை சரிக்கட்ட கூகிள் கொண்டு வந்த மேன்தொகுப்பு தான் Google Gears. இதன் மூலம், வலை மேன்தொகுப்புக்ளை இணையம் இல்லாத போதும், உங்கள் உலவியின் மூலம் உபயோகிக்க முடியும்.
 

Mar 11, 2010

நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது !!!

திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்."கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது"என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Mar 7, 2010

குழந்தைகளை அடிக்கலாமா? பகுதி 2

குழந்தைகளை அடிக்க கூடாது..

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.


கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின்

Feb 24, 2010

குழந்தைகளை அடிக்கலாமா? பகுதி 1

படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எதுசரி” “எதுதவறுஎன்று சொல்லிக் கொடுக்கவேண்டும். சேட்டைஎன்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தைசும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்குஎன்று திட்டுவோம். ஆக சேட்டைஎன்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.

Feb 20, 2010

ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை ?!!..

No Scalpel Vasectomy

கேள்வி: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை எவ்வாறு சிறப்பு வாய்ந்தது?
பதில்: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து
கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே
பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.
கேள்வி: ஆண்களுக்கான ‘No Scalpel Vasectomy (NSV)’ முறை என்றால் என்ன?
பதில்: ஆண்களுக்கான புதிய கருத்தடை

Feb 15, 2010

அதனால் மனைவியை காதலியுங்கள்.!.!.

கள்ளக்காதல், காணாமல் போகும் காதலர்கள் என்று பல்வேறு வகை காதல்கள் இந்த சமுதாயத்தை மிரட்டிக் கொண்டிருக்கின்றன.அன்று, மாடத்தில் வீற்றிருந்த சீதையை நோக்கி ராமன் வசப்பட்டதும் காதல்தான்; இன்று இளசுகள் கூடும் இடங்களில் நின்று 'சைட்' அடித்து 'கரெக்ட்' ஆவதும் காதல்தான் என்று சொல்லும்போது, உண்மையான காதல் எது என்ற கேள்வி இப்போது வலுக் கட்டாயமாக எழுந்துள்ளது.
காதலில் தோற்ற தேவதாஸ், காதலை கல்லறையில் முடித்துக்கொண்ட லைலா-மஜ்னு, காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான்... என்று காதலால் பிர பலமானவர்கள் பலர் உள்ளனர்.

இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.
"அன்பே


நீ வெளியில் வராதே;
வண்ணத்து பூச்சிகளெல்லாம்
நீ தான் மலரென்று
தேனெடுக்க
முற்றுகையிட்டுவிடும்'' என்று, காதலிக்கும் போது காதலியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்த வர்கள்கூட, கடைசியில், 'அப்படியா நான் சொன்னேன்?' என்று அரசியல்வாதிகள் ஸ்டை லில் பல்டி அடிப்பதையு
ம் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.
அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் ராமையா அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.ஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந் திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.
படகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

Feb 3, 2010

கழுகு,அழகு,சிந்தனை...

பிள்ளைகளின் அன்பு
ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.

முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.

"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"

இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு. "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக

Jan 27, 2010

பரீட்சைக்கு நேரமாச்சு.....




இது அம்மாப்பாவுக்கு...........

  1. சும்மா சும்மா படி...படின்னு சொல்லாதீங்க.
  2. பரீட்சை என்பது ஒரு பயப்படும் விஷயம் என மனதில் பதிய வைக்காதீர்கள்.
  3. பரீட்சைக்காக படிப்பது என்றில்லாமல்.....விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புரிந்து கொள்வதற்காகப் படிக்கத் தூண்டுங்கள்
  4. .அவனை மாதிரி படி...இவளைப் போல் படி என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.
  5. முதல் ராங்கை விட்டுடாதே என்று பயமுறுத்தாதீர்கள்.
  6. 10 நாளில் பரீட்சை வருது .....நீ இப்படி விளையாடறேன்னு பரீட்சை பற்றி அச்சம் உண்டாக்காதீர்கள்.
  7. பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் படிக்க வைப்பதும் அதிகாலையில் எழுப்பி விடுவதும் கண்டிப்பாக கூடாது.
  8. பரீட்சைக்குக் கிளம்பும் போது போருக்குக் கிளம்புவது போல ஆர்ப்பாட்டம் பண்ணாதீர்கள்.

Jan 25, 2010

ஆட்டோ கிராப்

இந்தியாவின் சில முக்கியமான நபர்களின் கையெழுத்தின் தொகுப்பு.




A P J அப்துல் கலாம்
A P J AbdulKalam


அபுல் கலாம் ஆசாத் மவ்லானா
Abul Kalam Azad Maulana


அமர்த்யா சென்
Amartya Sen, Dr.


அம்பேத்கார்
Ambedkar B. R., Dr.


அமிர்தாப்பாச்சன்
Amitabh Bachchan


ஆஷா போஸ்லே
Asha Bhosle


பாபா அம்தே
Baba Amte


பால கங்காத திலகர்
Bala Gangadhar Tilak


பிபின் சந்திர பால்
Bipin Chandra Pal


பிஸ்மில்லா கான் உசாத்
Bismillah Khan Ustad


சி.கே.நாயுடு
C.K. Nayudu


சந்து பார்டே
Chandu Borde


சிரஞ்சீவி
Chiranjeevi


சித்தரஞ்சன் தாஸ்
Chittaranjan Das


தேவ் ஆனந்த்
Dev Anand


கோபால கிருஷ்ண கோகலே
Gopal Krishna Gokhle


ஹர் கோபிந் கொரானா
Har Gobind Khorana


ஹரிபிரசாத் சவுராசிய பண்டிட்
Hariprasad Chaurasia Pandit


இந்திரா காந்தி
Indira Gandhi


டாடா
J.R.D. Tata


ஜகஜீவன் ராம்
Jagjivan Ram


ஜவஹர்லால் நேரு
Jawaharlal Nehru


ஜெயபிரகாஷ் நாராயணன்
Jayprakash Narayan


கபில்தேவ்
Kapil Dev


கான் அப்துல் காபர் கான்
Khan Abdul Gafar Khan


கொனேரு ஹம்பி
Koneru Humpy


லால் பகதூர் சாஸ்திரி
Lal Bahadur Shastri


லாலா அமர்நாத்
Lala Amarnath


லதா மங்கேஸ்கர்
Lata Mangeshkar


ஹூசைன்
M.F. Husain


மகாத்மா காந்தி
Mahatma Gandhi


மங்கலபள்ளி பாலமுரளிகிருஷ்ணா
Mangalampalli Balamuralikrishna


மன்மோகன் சிங்
Manmohan Singh, Dr.


மொராஜி தேசாய்
Morarji Desai


அன்னை தெரசா
Mother Teresa


பி.சுசீலா
P. Susheela


சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
Sarvepalli Radhakrishna


ராகுல் பஜாஜ்
Rahul Bajaj


ராஜ் கபூர்
Raj Kapoor


ராஜேந்திர பிரசாத்
Rajendra Prasad, Dr.


ராஜிவ் காந்தி
Rajiv Gandhi


சி.வி.ராமன்
Raman C.V.


ரத்தன் டாடா
Rattan Tata


ரவி சங்கர் பண்டிட்
Ravi Shankar Pandit


ரவீந்திரநாத் தாகூர்
Ravindranath Tagore


எஸ்.பி.பாலசுப்ரமணியம்
S.P. Balasubrahmanyam


சச்சின் தெண்டுல்கர்
Sachin Tendulkar


சரத் சந்திர போஸ்
Sarath Chandra Bose


சர்தார் வல்லபாய் படேல்
Sardar Vallabbhai Patel


சரோஜினி நாயுடு
Sarojini Naidu


சத்யஜித்ரே
Satyajit Ray


எம்.எஸ்.சுப்பலஷ்மி
Subbulakshmi M.S.


சுபாஷ் சந்திர போஸ்
Subhash Chandra Bose


சுனில் கவாஸ்கர்
Sunil Gavaskar


சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams


தகுதுரி பிரகாசம் பந்துலு
Tanguturi Prakasam Panthulu


அடல் பிகாரி வாஜ்பாய்
Vajpayee Atal Bihari


விக்ரம் சாராபாய்
Vikram Sarabhai, Dr.


வினோபா பாவே
Vinoba Bhave


விஸ்வநாதன் ஆனந்த்
Vishwanathan Anand


விவேகானந்தர்
Vivekananda


ஜாகிர் உசேன்
Zakir Husain, Dr.