Mar 18, 2009

Printer Share Anywhere

பக்கத்து வீட்டிலோ, அடுத்த ஊரிலோ, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலோ இருக்கும் நண்பருடன் உரையாடுவதற்கு, அரட்டை அடிப்பதற்கு இன்ஸ்டண்ட் மெசெஞ்சர் (Instant Messenger) எனப்படும் மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

அடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்கவோ, வெகுதொலைவில் இருப்பவருக்கு அவரது கணினியில் ஒரு மென்பொருளை சோதனை ஓட்டிக் காண்பிக்கவோ ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

நம் கணினியில் இருக்கும் கோப்புகளை வேறு ஒரு தொலைதூரக் கணினி (Remote PC) வாயிலாக அச்செடுக்க ஒரு புதிய தொழில்நுட்பம் உள்ளது. இதற்கு பிரிண்ட் எனிவேர் (Printer Share Anywhere) என்று பெயர்.

கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அடுத்தவரது கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டர் (printer) மூலம் அச்செடுக்கலாம்.

இந்த முனையில் இருப்பவரும், அடுத்த முனையில் இருப்பவரும் இணையம் (internet) மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதே போல உங்களது கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டரை அடுத்தவர் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கலாம்.

பிரிண்ட் எனிவேர் என்கிற இந்த மென்பொருளை நிறுவியவுடன் இது தானியங்கித்தனமாகவே உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டரையும், வேறு ஏதேனும் உங்கள் வலைப்பின்னலுக்குள் (network) இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர்களையும் அடையாளம் கண்டு கொள்ளும்.


சிறப்பம்சங்கள் :
1) எந்த ஒரு மென்பொருள் பயன்பாட்டின் வாயிலாகவும் பிரிண்ட் எடுக்கலாம்.
2) உங்கள் பிரிண்டரை வேறு ஒருவருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
3) பிரிண்டவுட் எடுக்கவேண்டிய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அட்டாச்மெண்ட் (attachment) செய்யவோ தேவையில்லை
4) வேகமான இயக்கம் கொண்டது
5) பாதுகாப்பானது (secured)
6) மிக எளிய முறையில் நிறுவிக்கொள்ளலாம்.
7) அகலப்பட்டை வசதி இருத்தல் நலம்

இணையிறக்கச் சுட்டி :
http://www.softpedia.com/get/Network-Tools/Misc-Networking-Tools/PrinterAnywhere.shtml

No comments: