Apr 19, 2010

டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்

நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம்.
நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.

Apr 17, 2010

சிந்தனை செய் ...

90/ 10 – இது நம் வாழ்க்கையை மாற்றப் போகும் தாரக மந்திரம். எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது நமது வாழ்க்கையின் 10% நடவடிக்கைகள் மட்டுமே நமது கட்டுப்பாட்டில் இல்லை. மீஹதமுள்ள 90% நடவடிக்கைகள் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

இதற்கு ஒரு உதாரணம் எடுத்துக் கொள்வோம்.

சுரேஷ் தனது குடும்பத்துடன் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருக்கிறார். அவருடைய பத்து வயது மகள், காபி கோப்பையைத் தட்டி விட்டுவிடுகிறாள். காபி, சுரேஷ் அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டையில் விழுந்து விடுகிறது.
காபி, சட்டையில் விழுந்த சம்பவம், சுரேஷின் கட்டுப்பாட்டில் அடங்காதது. இது நம்முடைய கட்டுப்பாட்டில் அடங்காத 10% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது. இதற்கு அடுத்து ஏற்படும் நிகழ்வுகள், சுரேஷ் எப்படி நடந்து கொள்கிறார் என்பதில் இருக்கிறது. இது நம்முடைய 90% நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகிறது.