Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Dec 2, 2013

குழந்தையின்மை குறைதீர்க்க பெண்களுக்கு உதவும் ஹோமியோபதி

குழந்தையின்மை என்ற குறை இன்று பரவலாகக் காணப்படுகிறது. இது கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் குறை இருக்கலாம். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் எந்தவித கட்டுபாட்டுடன் இல்லாமல் இருந்தும் குழந்தைபேறு இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் சில பிறவிக் குறைபாடுகள் தவிர ஆண்களுக்கான இதரப் பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் பக்க விளைவு இல்லாத ஹோமியோ மருந்துகளும் தீர்வுகளும் உள்ளன.

பெண்களுக்கான குறைகள்

குழந்தையின்மையில், பெண்களுக்கான குறைகள் என பார்த்தோமானால், உளவியல் ரீதியாக,
1. இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு.
2. மன உளைச்சல், மன இறுக்கம்,மனவேதனை.
3. இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள்.
4. வேகமும், பரபரப்பும், மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை.
5. மிகை உணர்ச்சி நிலை

உறுப்புகளில் குறைபாடு

1. கன்னிதிரை துளையிடபடாமல் இருத்தல். (Hymen unholed)
2. கடிதடம் குறுகி இறுத்தல்.
- பிறப்பிலேயே

- சிக்கலான பிரசவத்திற்கு பின்


Nov 3, 2013

பயமுறுத்தும் மருத்துவர்கள் ...

     என் அம்மாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை மிக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தார். அம்மா இருந்த இந்த இரண்டு மாதங்களில் டாக்டர் இரண்டு முறை "இன்னும் ஒரு நாள் கூட தாங்காது; அனைவருக்கும் சொல்லி அனுப்பி விடுங்கள்" என சொல்லி, வெவ்வேறு இடத்திலிருக்கும் உறவினர்கள் மற்றும் அம்மாவுடன் கூட பிறந்த அண்ணன், அக்கா என பலரும் ஓடி வந்தோம். இரு முறையும் அம்மாவுக்கு டாக்டர்கள் சொன்ன மாதிரி எதுவும் நடக்க வில்லை என்பது மகிழ்வான விஷயம் தான். இந்த இரு முறையும் ஐ.சி.யூ வெளியே சில நாட்கள் அட்டெண்டர் ஆக அமர்ந்திருந்தபோது சில விஷயங்கள் கவனிக்க முடிந்தது.

     ஐ.சி.யூ.க்கு மிக அதிகமாக வருவது ஹார்ட் அட்டாக் நோயாளிகள் தான். ஐ.சி.யூ.க்கு அழைத்து வருவோரிடம் எந்த வித நம்பிக்கையும் மருத்துவர்கள் தருவதில்லை. "பிழைக்கிறது கஷ்டம் தான். பார்க்கலாம்." என்று தான் சொல்கிறார்கள். இது பற்றி விசாரித்தபோது மருத்துவர்கள் பொதுவாய் பாசிடிவ் ஆக சொல்லவே மாட்டார்கள் என தெரிய வந்தது. பாசிடிவ் ஆக சொல்லி, பின்னர் வேறு ஏதாவது ஆகி, நோயாளி இறந்து விட்டால், உறவினர்கள் பிரச்சனை செய்து சண்டை போடும் நிகழ்வுகள் நடக்கிறதாம்!
அதுவே "பிழைக்கிறது கஷ்டம்" என்று கூறி விட்டு, பின் நோயாளி பிழைத்தால், "பிழைக்க முடியாத ஆளையும் பிழைக்க வச்சிட்டார் மகராசன்" என வாழ்த்தி விட்டு மகிழ்வோடு பில் கட்டி விட்டு போகிறார்களாம்!
மருத்துவர்களின் லாஜிக் இருக்கட்டும். அவர்கள் இப்படி நம்பிக்கை தராமல் பேசுவதால் என்ன நடக்கிறது தெரியுமா?

Feb 20, 2010

ஆண்களுக்கான எளிய கருத்தடை முறை ?!!..

No Scalpel Vasectomy

கேள்வி: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை எவ்வாறு சிறப்பு வாய்ந்தது?
பதில்: பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து
கொடுக்க வேண்டியுள்ளது. கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். வலி ஏற்படும், தழும்பு தெரியும். மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே
பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel Vasectomy கருத்தடை எளிமையானது.
கேள்வி: ஆண்களுக்கான ‘No Scalpel Vasectomy (NSV)’ முறை என்றால் என்ன?
பதில்: ஆண்களுக்கான புதிய கருத்தடை

Aug 10, 2009

உடலினை உறுதி செய்.!!!


விளையாட்டு மைதானங்களிலும், கடற் கரைகளிலும், சாலை ஓரங்களிலும், பூங்காக் களிலும் பலர் நடப்பதை பார்த்திருப்பீர்கள். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். சிலர் மருத்துவர் களின் அறிவுறுத்தலின் பெயரில் உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பது வேறு விஷயம்.

நோய் வராமல் தடுக்கவும், வந்த நோயைக் குணப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் நன்மைகளைப் பார்ப்போம்.

1. நல்ல உடல் தோற்றம்

இரண்டு விதமான மனிதர்களைத் தவிர அனைவருமே நல்ல தோற்றத்துடன் இருக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் யார் என்று அறிய முடிகிறதா? ஒருவகையினர் மனநல மருத்துவமனையில் காணப்படும் உள் நோயாளிகள். இன்னொரு வகையினர் கல்லறைக்குள் இருப்பவர்கள்! நல்ல உடல் தோற்றத்திற்குப் பல்வேறு முயற்சிகளை மேற் கொள்கிறோம். 60 வயதை தாண்டிய முதியவர்கள் கூட - பெண்கள் உட்பட தலை முடிக்கு ‘டை’ அடித்து வெள்ளையை கருப்பாக்கி மிகவும் இளமையாக தோற்றமளிக்க முயல் கிறார்கள். இதனால் வெளிநாட்டு ‘டை’ கம்பெனி கள் போட்டாபோட்டி போட்டுக் கொண்டு கடுமையான லாபத்தை ஈட்டுகின்றனர். சரி, இவர்கள் ஏன் டை அடித்து இளமையாக காட்சி அளிக்க வேண்டும்? இளமையானவர்கள் என்று இவர்களை யார் தெரிந்துகொள்ள வேண்டும்?

இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. ஆனால், சில உண்மைகள் வெட்ட வெளிச்சமாகின்றன. இளமைத் தோற்றத்தை அனைவரும் விரும்புகிறார்கள். அதற்கு டை வாங்கவும் தயார், பொய் முடி வைக்கவும் தயார். தலைமுடியை வயலில் நாற்று நடுவது போல தலையில் அறுவை சிகிச்சை மூலம் நடவும் தயார். கருமையான முகத்தை சிவப்பு நிறமாக்கும் (உண்மையில் அப்படி ஆகாது!) பலதரப்பட்ட பூச்சுக்கள் வாங்கி பூசவும் தயார். இன்னும் சிலர் அமெரிக்காவுக்குச் சென்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்கின்றனர்.

மேலே சொன்ன எந்த அழகு சாதனப் பொருட்களாலும் முதுமையை ஒருபோதும் மறைத்துவிட முடியாது. இந்த ‘டை’களும், முக கிரீம்களும் மிகவும் தற்காலிகமானவை. மேலும் இவை நம் உடலுக்கு ஊறு விளைவிப்பவை ஆகும். இவை அனைத்துக்கும் பக்க விளைவு மற்றும் ஒவ்வாமை உண்டு. பக்க விளைவுகளின் நீண்ட பட்டியல் கூட அழகு சாதன புட்டிகளிலேயே இணைத்திருப்பார்கள். ஆனால், அவற்றை எவரும் படிப்பதாகத் தெரிய வில்லை. எந்த செலவும் இல்லாமல் முதுமையை வெல்லும் இயற்கை மருந்து தான் உடற்பயிற்சி.

சீரான உடற்பயிற்சி உடலின் தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் பழைய செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கு கிறது. இடுப்புப் பகுதியையும் வயிற்றுப் பகுதியையும் குறைத்து இயற்கையிலேயே இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டு மல்லாமல் தோலில் உள்ள இரத்த நாளங்களுக்கு ஆக்ஸிஜன் அதிகம் கிடைப்ப தாலும் இளம் செல்கள் தொடர்ந்து தயாராவதாலும் தோல் சுருங்காமல் இளமையாக இருக்கிறது.

நல்ல தோற்றத்திற்கு ஒரே வழி உடற்பயிற்சியே அன்றி வேறில்லை. இதற்குச் செல வில்லை. பக்க விளைவு இல்லை. ஒவ்வாமை இல்லை. எனவே தான் கூறுகிறேன். இன்றிலிருந்து உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள். நல்ல உடல் தோற்றத்துடன் இளமை யாகவே இருக்கலாம். முதுமையைத் தள்ளிப் போட லாம்.

நல்ல உடல் தோற்றம் நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது.

உடல் எடை குறைப்பு

உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன் (Obesity) என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோம். உடல் பருமன் என்பது ஒரு நோய் என்று சொல்லுகிறது மருத்துவ அறிவியல்.

நாம் செய்யும் உடற்பயிற்சியின் தன்மை மற்றும் நேரத்திற்கு ஏற்ப உடலில் ஆற்றல் (கலோரி) செலவிடப்படுகிறது.

வேலை கடந்த தூரம் (கி.மீ) நேரம் (மணி) செலவிடப்பட்ட

(கலோரிகள்)

மெதுவாக நடத்தல் 3.2 1 240

மிதமாக நடத்தல் 4.8 1 320
வேகமாக நடத்தல் 7.2 1 500

வேகமாக நடப்பதைப் போலவே ஓடுதலும் சிறந்த உடற்பயிற்சியாகும். மணிக்கு 7.2 கி.மீ முதல் 12 கி.மீ. வேகம் வரை ஓடினால் அது மிதமான ஓட்டம். மணிக்கு 12 கி. மீட்டருக்கு மேல் வேகமாக ஓடினால் அது அதிவேக ஓட்டம் ஆகும். இதுவே ஏரோபிக் ரக உடற்பயிற்சி எனப்படுகிறது. ஏரோபிக் ரக உடற்பயிற்சி மூலமாகத்தான் இதயம் மற்றும் நுரையீரலின் ஆரோக்கியத்தைக் காக்க முடியும்.

ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேகமாக நடந்தால் 500 கலோரிகள் செலவிடப் படுகிறது. எனவே அவர் தனக்குத் தேவையான தினசரி உணவை விட 500 கலோரிகள் உணவு அதிகம் உட்கொண்டால் கூட அது உடல் பருமனை ஏற்படுத்தாது. மாறாக ஒருவர் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், அவர் தினமும் கூடுதலாக உண்ணும் 500 கலோரிகள் கொழுப்பாக மாறி உடலில் பல பகுதிகளில் தேக்கப்பட்டு, அவர் ஒரு உடல்பருமன் உள்ளவராக மாறி விடுகிறார். உடற்பயிற்சி உடல் எடையையும், உடலில் உள்ள கொழுப்பின் எடையையும் குறைக்கிறது.

நோய் தடுப்புத் திறன்

ஒரு நோய் வந்தபின் அதற்கு மருந்து சாப்பிட்டு அதைக் குணப்படுத்துவதைவிட நோய் வருவதற்கு முன்னதாகத் தடுப்பதே சிறந்தது. ‘வருமுன் காப்போம்’ என்பது நம்நாட்டு பழமொழி.

வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். - திருவள்ளுவர்

நோய்கள் வருவதற்கு முன்னதாக அவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு வழி உள்ளது என்றால் அதுதான் உடற்பயிற்சி.

உடற்பயிற்சி மூலம் தடுத்து நிறுத்தப்படும் நோய்கள்

1. சர்க்கரை நோய் (Diabetes) 2. இதய நோய் (Heart Disease) 3. இரத்த அழுத்தம் (Hypertension) 4. புற்று நோய் (Cancer) 5. மலட்டுத் தன்மை (Impotence)

உலகளாவிய மருத்துவ முறை அலோபதி மருத்துவம். அதாவது MBBS படித்த டாக்டர்கள் செய்யும் மருத்துவ முறை. மருந்து மூலமாகவும் அறுவை சிகிச்சை மூலமாகவும் நோயைக் குணப்படுத்தும் இம்முறை மருந்தை அடிப்படை யாகக் கொண்டது. ஆனால், தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கைரோ பிராக்டிக் (Chiropractic) என்ற மருத்துவ முறை பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த மருத்துவ முறை மருந்துகளை தவிர்த்து, நோய்கள் வரும் முன்னே காப்பதை அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் சொல்வது எல்லாமே நோய் வந்த பின் அதற்கு மருந்து மூலம் சிகிச்சை செய்வதை விட, நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் முன்கூட்டியே ஈடுபடுவது தான்.

குழந்தைப் பருவத்திலிருந்தே திட்டமிட்டு செயல்பட்டால் பெரும்பாலான நோய்கள் வராமலேயே தடுத்துவிடலாம். உடற்பயிற்சி என்பது இம்முறையின் மிக முக்கியமான சிகிச்சை முறை. வழக்கமான பயிற்சியின் மூலம் முதுகெலும்பை ஆரோக்கியமாக வைத்திருந் தாலே நோய் நம்மை அண்டுவதில்லை என்கிறார் இம்மருத்துவ முறையின் தூதுவரான டாக்டர் கெப்ளான் என்பவர். இவர் எழுதியுள்ள ‘The life style of the fit & famous’ என்னும் புத்தகத்தை நீங்களும் படித்துப் பயனடையுங்கள்.

நோய்கள் வராமல் தடுப்பதால் பணச் செலவு குறைகிறது. மருத்துவமனையில் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நோயால் நாம் இறந்துவிடுவோமா என்ற பய உணர்வுடன் வாழ வேண்டியதில்லை.

எனக்கு இரண்டு டாக்டர்கள் உள்ளார்கள். ஒன்று எனது வலது கால்; மற்றொன்று எனது இடது கால் என்றார் ஜி.எம். ட்ரிவிலியன் என்ற அறிஞர்.

4. உடற்பயிற்சி ஒரு சுகமே

Exercise is a pleasure. வழக்கமாக உடற் பயிற்சி செய்பவர்களுக்கும், விளையாடுபவர் களுக்கம் இது நன்கு தெரியும். காலையிலோ அல்லது மாலையிலோ தாங்கள் விளையாடும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் விளையாட்டு என்பது போதைப் பொருள் போன்றது. அதற்கு எளிதில் அடிமையாகிவிட முடியும். இந்த அடிமைத்தனம் ஆக்கபூர்வமானது, வரவேற்கத் தக்கது. நான் கூட வாரம் மூன்று நாள் காலையில் ஓடுவேன். என்னைப் பொறுத்தவரை காலையில் 1 மணி நேரம் ஓடுவதை விட ஒரு சிறந்த சுகம் எதுவும் இல்லை.

இந்த சுகத்தை தருவதும் நமது உடலே. யாராவது ஒருவர் என்னிடத்தில் வந்து 1 லட்ச ரூபாய் தருகிறேன் இன்று மட்டும் ஓடாமல் இருந்துவிடு என்றால் சத்தியமாக நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

5. மனநலம் பெருகும்

மனநலமும் உடல்நலமும் ஒன்றோ டொன்று தொடர்புடையது. இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். மனநலம் நன்றாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்க முடியும். உடல்நலம் நன்றாக இருந்தால் தான் மனநலம் நன்றாக இருக்கும்.

உடல்நலம் கெடுவதால் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப் பட்டவர்கள்கூட, குறித்த நேரத்தில் உணவு உண்ணமாட்டார்கள். தொடர்ந்து சோகமாக இருப்பதால் உடலில் வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு நோய் வருகிறது. இந்தவிதமான நோய்களை Phycho-Somatic Disorder என்று அழைக்கின்றனர்.

மனநோய் எதனால் ஏற்படுகிறது? நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டே இருப்பது. வேறு எதையும் நினைக் காமல் இருப்பது. இன்னும் சொல்லப் போனால் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது. சிலர் காலப்போக்கில் தற்கொலை செய்து கொள் கிறார்கள். இந்த நிலைக்கு முக்கியக் காரணம் கவலை. நாம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதால்தான் கவலை ஏற்படுகின்றது.

தினமும் கல்லூரியிலிருந்து வந்தவுடன் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் மாணவனுக்கும், அலுவலகத்திலிருந்து விளை யாட்டு அரங்கத்திற்குச் செல்லும் ஊழியருக்கும் கவலைப்பட நேரம் இல்லை. வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்கள் மனநலம் கெட்டுப் போக வாய்ப்பே இல்லை என்பதுதான் எனது முடிவான கருத்து.

‘Stop Worrying and Start Living’ என்ற புத்தகத்தில் டேல் கார்னிஜி என்பவர் இந்த நிலைக்குத் தரும் தீர்வு ‘Day Tight Compartment’ அதாவது, நாள் முழுவதும் வேலைகளில் ஈடுபடுதல் என்பதாகும். பிஸியாக இருப்பவர் களுக்கு கவலைப்பட நேரம் எங்கே இருக்கிறது?

வாழ்க்கையே வெறுத்துப்போய் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தாரம். அதற்கு நேரமும் குறித்தாராம். அவரது டாக்டரிடம் உறுதியாக தனது முடிவையும் சொன்னார். டாக்டர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக அதை ஆதரித்த டாக்டர், அவர் சொல்லும் முறையில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அந்த மனிதரை கேட்டுக் கொண்டார். அதாவது 20 கி.மீ. தூரம் தொடர்ந்து ஓடி முடிக்க வேண்டும். அப்படி ஓடி முடிக்கும் போது தானாகவே விழுந்து இறந்துவிடுவார் என்பதுதான் அந்த மருத்துவரின் அறிவுரை. இந்த நபர் ஓடிப்பார்த்தார். முதல்நாள் 5 கிலோ மீட்டர் தூரம் ஓட முடிந்தது. வீடு திரும்பினார். மறுநாள் 6 கிலோ மீட்டர். இப்படி நாலு வாரங்கள் கழித்து 20 கி.மீ. தூரத்தை கடந்த அந்நபர் டாக்டர் சொன்னதைப் போல் சாகவில்லை. மாறாக அவருக்கு மீண்டும் ஓடவேண்டும் என்றஆசை ஏற்பட்டது. ஓட வேண்டும் என்றால் உயிர் வாழ வேண்டும். அன்றிலிருந்து வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதாம் இவருக்கு. இவர் பிற்காலத்தில் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராகி பல சாதனைகளையும் படைத்துள்ளார்.

மன நோயாளிகளை தினமும் ஒருமணி நேரம் ஓடவிட்டால் பலர் குணமடைவார்கள் போலிருக்கிறது.

6. தலைமைப் பண்புகள்

இன்று கம்ப்யூட்டர் மென்பொருள் கம்பெனிகள் கூட, தலைமைப் பண்புகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடித்த பின்னரே பட்டதாரிகளை பணி நியமனம் செய்கிறார்கள். தெரிவு செய்த பொறியியல் வல்லுநர் தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மற்றவர்களை ஒருங்கிணைத்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி நடத்திச் செல்லக் கூடிய வல்லமை உள்ளவரா என்பதைச் சோதிக்கிறார்கள்.

கீழ்க்கண்ட தலைமைப் பண்புகள் சோதிக்கப் படுகின்றன

அ) மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன், (Ability to Motive)

ஆ) மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன். (Communication Skills)

இ) தோல்விகளைத் தாங்கி, வெற்றியை நோக்கி முன்னேறும் திறன். (Perseverence)

ஈ) தன்னம்பிக்கை (Self Confidence)

உ) சரியானவர்களுக்குப் பரிசளித்து தவறு செய்தவர்களுக்குத் தண்டனையளிக்கும் திறன். (Ability to administer rewards and Punishments)

ஊ) சட்டதிட்டங்களைப் புரிந்து அதன்படி நடந்து கொள்ளும் திறன் (Ability to understand and obey rules.)

கம்ப்யூட்டர் கம்பெனிகள் என்றில்லாமல், எல்லா பணிகளிலும் தலைமைப் பண்புகள் உள்ளவர்களே வெற்றியடைய முடியும். இதைத் தான் சமூகநலன் என்று உலகநல நிறுவனம் குறிப்பிடுகிறது. ஒரு கல்லூரி முதல்வர், வகுப்பு ஆசிரியர், மருத்துவர், விஞ்ஞானி, விமான ஓட்டுநர், போலீஸ் அதிகாரி என்று அனைவருக் குமே தலைமைப் பண்புகள் அவசியமாகிறது. ஏன் ஒரு குடும்பத் தலைவன் கூட, தனது வீட்டினை நடத்திச் செல்ல தலைமைப் பண்புகள் பெற்றிருக்க வேண்டும்.


Jul 8, 2009

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை உள்ளது்?

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது.




அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

பானங்கள் (200 மி.லி அளவு):
* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.
* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..
* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..
* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி
.* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.
* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.உணவு வகைகள்உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.
* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.
* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.
* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..
* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.
* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.
* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.
எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம். 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம். 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

பழங்கள் (100 கிராம்)
* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..
* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி - 30 முதல் 40 மி.கி.
* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு - 40 முதல் 60 மி.கி..
* மா, பலா, வாழை - 100 முதல் 150 மி.கி.
* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா - 150 முதல் 250 மி.கி.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

Jul 7, 2009

உடல் பருமன்


நவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய், பூதாகரமான பிரச்சனையாய் எழுந்துள்ளது ‘உடல் பருமன்’. இது எந்த வயதிலும் எவருக்கும் வரலாம். பருவமடைந்த பின் ஆண்களை விடப் பெண்களிடம் பரவலாக அதிகளவு உடல் பருமன் ஏற்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்குப் பின் அல்லது கர்ப்பத்திற்குபின் அல்லது மாத சுழற்சி முற்றுப்பெற்றபின் உடல் பருமன் உண்டாகிறது.

மனிதரைத் தவிர பிற உயிரினங்களில்.... எலி, பூனை, நாய், ஆடு, மாடு, செடி, கொடி, மரம்... அனைத்திலும் அவற்றின் இயற்கையான உடல் அமைப்பு மற்றும் எடையைக் கடந்து மிதமிஞ்சி உடல் கொழுத்து நடக்க இயலாமல், மூச்சுவிட இயலாமல் அவதிப்படுவதைப் பார்க்கமுடியாது. மனிதர்கள் மட்டுமே தம் அளவுக்கு மீறி யானைகள் போல, மாமிசக் குன்றுகள் போல மாறுகின்றனர்.

அதிக எடையும் உடல் பருமனும்

‘அதிக எடை’ என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் ‘அதிக பருமன்’ என்று கூற முடியாது. உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீஜ்ர்கள் சராசரி எடையைவிடச் சற்று அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அதிகக் கொழுப்புச்சத்தி இருப்பதில்லை. அது சதை வளர்ச்சி. கொழுப்பின் அளவும் அதிகரித்து, உடலின் சராசரி எடையும் அதிகமிருந்தால் அது உடல் பருமனின்றி வேறில்லை.

மனித எடையை தோராயமாகக் கணக்கிடும் முறை


ஒருவரின் உயரம் சென்டிமீட்டர் கணக்கில் எவ்வளவோ அதில் 100ஐக் கழிக்க வேண்டும். பின் அதிலிருந்து 90 சதவீத அளவை அறியவேண்டும். ஒருவர் 170 சென்டி மீட்டர் உயரமிருந்தால் 100ஐக் கழிக்கும்போது 70 வருகிறது. அதில் 90 சதவீதம் கணக்கிட்டால் 63 வருகிறது. 170 செ.மீ. உயரமுள்ளவருக்கு 63 கிலோ எடைதான் ஏறத்தாழ சரியான எடையாக இருக்கும். இந்த எடையில் பத்து சதவீதம் அதிகரித்தால் கூட ‘உடல் பருமன்’ என்று கூற முடியாது. மாறாக, அதற்கும் மேல் தொடர்ந்து எடை அதிகரிக்குமானால் உடல் பருமன் ஏற்பட்டே தீரும்.

சராசரி எடையில் 10 முதல் 15 சதம் அதிகரித்தால் அதனைச் சிறிதளவு பருமன் எனக் கருதலாம்.. 15 முதல் 20 சதம் அதிகரித்தால் நடுத்தர பருமன் எனக் கருதலாம். 20 சதவீதத்திற்கும் மேல் எடை அதிகரித்தால் அதிக பருமன் என அறியலாம்.

சிறிதளவு பருமனாக இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல் தொந்தரவுகள் இல்லாமலிருக்கலாம். இருப்பினும் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற அழகுக் கோணத்திலிருந்து பார்ப்பவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

நடுத்தர பருமனாளிகளும் அதிக எடையுள்ள குண்டர்களும் உடல் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாலும், எடையைச் சுமக்க முடியாமலும், மூச்சு வாங்குவதாலும், இதர கடும் நோய்களாலும் அவதிக்கு ஆளாகின்றனர்.

உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன?

உடலில் அன்றாட இயக்கங்களுக்கு வேண்டிய சக்தியளிப்பதற்குத் தேவையான அளவைவிட அதிகளவு உணவு உண்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. தேவையைவிட ஒருவர் தினம் 50 கலோரி அதிகம் எடுத்தால் ஒரே ஆண்டுக்குள் 2 கிலோ எடை அதிகரித்துவிடும்.

கலோரி என்பது ஒன்றரை லிட்டர் நீரை 15 டிகிரி செண்டிகிரேடிலிருந்து 160 டிகிரி வரைச் சூடாக்கத் தேவையான உஷ்ணசக்தி. இக்கலோரியை (எரிசக்தியை) உணவுகள், காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் பெறுகிறோம். வெவ்வேறு உணவுப் பொருட்களில் வெவ்வேறு அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

வசதியாக, உட்கார்ந்தே பணிபுரியும் சொகுசுப் பேர்வழிகளுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 20 கலோரிகள் தேவைப்படலாம். ஓரளவு உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 25 கலோரிகள் தேவைப்படலாம். அதிகம் உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எடையில் ஒரு கிலோவிற்கு 30 கலோரிகள் தேவைப்படலாம்.

மேலும் உண்ணும் உணவின் அளவைவிட தரத்தையும் கலோரிகளையும் கொள்ளவேண்டும். 100 கிராம் வெள்ளரியில் 16 கலோரி சத்தும் 100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 600 கலோரி சத்தும், 1 கிராம் புரதத்தில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி சத்தும், 1 கிராம் கொழுப்பில் 9 கலோரி சத்தும், 1 சப்பாத்தியில் 100 கலோரிகளும், 1 பிஸ்கட்டில் 40 கலோரிகளும், 75 கிராம் சாதத்தில் 100 கலோரிகளும், 1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில் 500 கலோரிகளும், 1 அவுன்ஸ் மீனில் 360 கலோரிகளும் கிடைக்கின்றன. வயது வந்த ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 1400 முதல் 1900 வரை கலோரிகள் தேவைப்படக்கூடும். இதில் குறைவு ஏற்பட்டாலும், அதிகம் ஏற்பட்டாலும் உடலின் அமைப்பு, செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும், அதிகக் கொழுப்பு உணவுகள் உண்பதும் குறிப்பாக எண்ணெய் பண்டங்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள், சாக்லேட் இனிப்புகள், ஐஸ்கிரீம், மது, நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கிறது. வாயுப் பண்டங்களாலும் (பருப்பு, உருளைகிழங்கு) எடை கூடுகிறது. இருவேளை உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகள் மெல்லும் பழக்கமும், டிவி பார்த்தபடி அல்லது வேறு வேலையின்போது நொறுக்குத்தீனிகள் தின்னும் பழக்கமும் உடல்எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததால், பகலில் அதிகளவு சாப்பிட்டுவிட்டு அதிகம் நேரம் தூங்குவதால், பொதுவாக அதிக ஓய்வும் உறக்கமும் கொள்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பாரம்பரிய தன்மை காரணமாக பருமனான பெற்றோருக்கு பருமனான குழந்தைகள் பிறக்கின்றனர்.


ஹார்மோன் இயக்கக் கோளாறுகளாலும், அடிக்கடி பிரசவங்கள், கருச்சிதைவுகள், அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், NSAID போன்ற சில ஆங்கில மருந்துகள், உடலில் நீர் திரவத் தேக்கங்கள் உண்டாக்கும் ஸ்டீராய்டுகள், கருத்தடை மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது. மேலும், இவை உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியக் குற்றவாளிகளாகவும் உள்ளன.

உடல் பருமனால் பல பிரச்சனைகள் :

உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள், முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்த நாளப் புடைப்பு... போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன.

மந்த இயக்கம், சோர்வு, பலவீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதரபணியிடங்களில் நிற்பது, நடப்பது, பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச்சிரமம். உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பாதிக்கின்றன. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத் திற்கும், உலகத்திற்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன அழுத்தமும் மேலோங்கும்.

என்ன செய்யவேண்டும்?

ஓரளவு மட்டுமே எடை அதிகமிருப்பவர்கள் அதிக மாவுப் பொருள், கொழுப்பு பொருள் உண்பதைக் குறைக்கவேண்டும். ஓரளவு உடற் பயிற்சி அல்லது யோகா மேற்கொள்ளவேண்டும்.

அதிக எடை எனில், உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை. உபவாசம், பழவகைள், வாரம் 1 நாள் திரவ உணவுகள் மட்டும் அருந்துதல் எனப் பழக்கப்படுத்தினால் பசியின் அளவு குறையும். குறைந்தது மாதம் 1 கிலோ எடையேனும் குறையும். கொழுப்பு மற்றும் மாவு உணவுகளுக்குப் பதிலாக கணிசமான அளவு பழங்கள் உண்ண வேண்டும். திறந்த வெளிக் காற்றில் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா, சுறுசுறுப்பான நடை போன்றவற்றை அவரவர் எடை, வயது, உடற்தகுதிக்கேற்ப எதுவாகவும் மேற்கொள்ளலாம்.

நிலையில் எடை குறையலாம். அடுத்தடுத்து பயன்படுத்தும்போது அவை பயனற்றவை என்று உறுதியாகும். அடிப்படையாக வாழ்க்கை முறையை, உணவு முறையை மாற்ற வேண்டும். உடல் பருமனைக் கட்டுப்படுத்த விரும்பு வோர் மும்முனைப் போருக்குத் தயாராக வேண்டும். 1. உணவுப் பழக்கங்களை ஒழுங்குப் படுத்தவேண்டும் 2. வாழ்க்கை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் 3. பக்கவிளைவு இல்லாத உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Jun 7, 2009

நாம் நம் கண்களை நன்றாக பாதுகாக்க...






இன்றைய காலக்கட்டத்தில் கணினியின் அவசியம் மிகவும் இன்றியமையாதது. இன்று எல்லா துறைகளிலும் கணினி புகுந்து விட்டது. அதனால் இன்று வேலை செய்பவர்கள் காலையில் முதல் மாலை வரை கணினி முன் உட்கார்வது தவிர்க்க முடியாதது. அதனால் உடம்பில் மற்ற உறுப்புகளை விட நமது கண்கள் தான் அதிகமாக வேலை செய்கிறது. ஆனால் நாம் நமது கண்களை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் நாம் தெரிந்தே கண்களை கெடுத்து கொள்கிறோம்.

ஆனால் நமது வேலை செய்யும் நேரத்தில் சிறிது நேரத்தை பயன்படுத்தி சின்ன சின்ன கண்பயிர்ச்சிகள் செய்வதன் மூலம் நாம் கண்களை நன்றாக பாதுகாக்க முடியும். இந்தபயிர்சிக்கு பெயர் "20 - 20 - 20".

1. முதலில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை உங்கள் கவனத்தை கணினியிலேருந்து திசை திருப்பி 20 அடி தொலைவிலுள்ள பொருளை உற்று பார்கவேண்டும். இதனால் அசதியான உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெரும்.

2. அதேபோல் 20 முறை கண்களை தொடர்ச்சியாக சிமிட்டவேண்டும். இதனால் உங்கள் கண்களின் ஈரபசப்பு தன்மை குறையாமல் இருக்கும். மேலும் கணினியால் ஏற்படும் கண்ணெரிச்சல் குறையும்.

3. அதெபோல் 20 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரே இடத்தில் உட்காராமல் எழுந்து சிறிது தூரம் நடக்கவேண்டும். இதனால் உங்கள் உடம்பிற்கு சீரான இரத்த ஓட்டம் ஏற்படும்.


இவ்வாறு நீங்கள் "20 - 20 - 20" பயிற்சியை நடைமுறை படுத்தினால் நிச்சயமாக் கண்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
இவ்வகை பயிற்சி எளிதாக இருந்தாலும் பழகத்திற்கு கொண்டு வருவது சிரமம்தான் ஆனால் முயற்சி செய்தால் நன்மை நமக்குதான்.

பின்குறிப்பு:
இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைக்கலாம் . ஆனால் சம்பந்தம் இருக்கு , இந்தப்படம் உங்கள் கண்களுக்கு இரண்டு இரண்டாக தெரிந்தால் உங்க கண்ணு நல்ல கண்ணு. ஆனால் ஒழுங்காக தெரிந்தால் நல்ல கண்மருத்துவரை பாருங்கள்.

Jun 5, 2009

புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம்...

மார்க் ட்வெய்ன் ஒரு முறை சொன்னாராம், "புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம். நான் 1000 தடவைகள் அந்த மாதிரி நிறுத்தியிருக்கிறேன்" என்று.

புகைப்பதை நிறுத்துவதற்கு எளிதான வழியென்று Cold Turkey முறை என்று ஒன்று சொல்கிறார்கள். முதலில் புகைப்பதை நிறுத்துவதற்கான ஒரு நாளை தேர்ந்தெடுக்கவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தள்ளி ஒரு நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம் என்கிறார்கள். பிறகு அந்த நாளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக புகைக்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டே சென்று, குறிப்பிட்ட நாளில் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும். ஆனால் இது ஆகிற வேலையாக எனக்குப் படவில்லை.

ஒரு கணவனிடம் மனைவி ஒருத்தி முறையிட்டாளாம், "என்னங்க, என் தம்பி சந்நியாசம் வாங்கப் போகிறானாம். கொஞ்சம் கொஞ்சமா உலக ஆசைகளையெல்லாம் ஒன்னு ஒன்னா விட்டுகிட்டிருக்கான்."

அதற்கு கணவன் "கவலைப்படாதே! உன் தம்பி கண்டிப்பா சந்நியாசியா ஆக மாட்டான்" என்று ஆறுதல் சொன்னானாம்.

உடனே மனைவி, "அதெப்படி உறுதியா சொல்றீங்க?"

கணவன், "இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சந்நியாசி ஆக முடியாது. அதனால உன் தம்பி சந்நியாசி ஆக மாட்டான்" என்று சொன்னான்.

அதற்கு மனைவி "பின்னே கொஞ்சம் கொஞ்சமா ஆகாம, எப்படி சந்நியாசி ஆவாங்க?" என்று கேட்டாளாம்.

உடனே கணவன் "இப்படித்தான்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சந்நியாசியாகி போய் விட்டானாம்.

புகைப்பது, குடிப்பது போன்றவைகளையும் இப்படித்தான் டக்கென்று ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து ஒரேயடியாக விட்டு விட வேண்டும். ஆனால் இப்படி நிறுத்துவதற்கு, சந்நியாசம் வாங்க எவ்வளவு மனப்பக்குவம் தேவையோ அந்தளவுக்கு மனவலிமை தேவை.

சரி, "டக்"

நிறுத்தியாயிற்று. 10 நிமிஷம் ஆயிற்று. 30 நிமிஷம். ஒரு மணி நேரம் ஆயிற்று. அடுத்த தம் போட வேண்டிய நேரம். "தம் அடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாலும் அந்த தம் அடிக்க வேண்டும் போல் இருக்கும் உணர்வு வரும்பொழுது என்ன செய்வது?"

அந்த மாதிரி உணர்வு ஏற்படும் நேரத்தில், யாரிடமாவது பேசுங்கள், சிறிது காலாற நடை போடுங்கள்(அப்படியே நடந்து பெட்டிக்கடைக்கு போய் விடாதீர்கள்!), தண்ணீர் குடித்து பாருங்கள். செய்யும் வேலையில்/வேறு ஏதாவது பொழுதுபோக்கில் முழு கவனத்தையும் செலுத்த முயலுங்கள்.

"தினசரி சாப்பிட்டவுடன் ஒரு தம் அடித்து பழகியாயிற்று. இப்பொழுது திடீரென்று எப்படி அதை மாற்றுவது?"

டோட்டலாக தம் அடிப்பதுடன் சம்பந்தப்பட்ட அந்த பழக்க முறையையே மாற்றுங்கள். உதாரணத்திற்கு, சாப்பிட்டவுடன் தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமாக சாப்பிடும் இடத்தில் சாப்பிடாமல் வேறு இடத்தில் சாப்பிடுங்கள். காபி குடித்தவுடன் தம் அடிக்க வேண்டுமா? காபி குடிக்கும் நேரத்தில் டீ குடித்து பழகுங்கள். காலையில் ஆஃபீஸ் வரும் வழியில் நின்று ஒரு தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமான வழியை மாற்றி புது வழியில் வர முயலுங்கள். இது போல் தம் அடிக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட மற்ற பழக்க முறைகளில் இருக்கும் ஒழுங்கு முறைகளை உடைத்துப் போடுங்கள்.

"நான் இது போல் பல தடவைகள் தம்மை விட முயன்றிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் முடியவில்லையே. என்ன செய்ய?"

திரும்பவும் முயலுவோம். தவறில்லை. சென்ற தடவைகளில் தம்மை விட முயன்ற பொழுது என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஞாபகப்படுத்தி, அவற்றை தவிர்க்க முயலுங்கள்.

முக்கியமான தேவை மனவலிமை. முதல் மூன்று நாட்கள் தாண்டுவது மிகக் கடினம். அதற்குபின் கொஞ்சம் பழகிவிடும். தொடர்ந்து மூன்று மாதம் பிறகு மூன்று வருடம் இருந்து விட்டால், அப்புறம் சுத்தமாக நினைவையே விட்டு விடலாம்.
முயற்சி திருவினையாக்கும்.

May 31, 2009

ஊட்டச் சத்துக்கள் (Nutrients)

உணவு பொருள்களில் கீழ்க் கண்ட ஊட்டச்சத்துகள் உள்ளன.

1. கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)
2. புரதங்கள் (Proteins)
3. கொழுப்பு (Fat)
4. வைட்டமின்கள் (Vitamins)
5. தாதுப்பொருட்கள் (Minerals)
6. தண்ணீர் (Water)

1. கார்போஹைட்ரேட்கள்

கார்போஹைட்ரேட்கள் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள்.

1. அரிசி 2. கோதுமை 3. சோளம் 4. மக்காச் சோளம் 5. நவதானியங்கள் 6. உருளைக்கிழங்கு

7. மரவள்ளிக்கிழங்கு 8. கேரட் 9. சர்க்கரை வள்ளிக்கிழங்கு 10. இனிப்பு வகைகள்.

சர்க்கரை என்பதும் ஒருவகை கார்போ ஹைட்ரேட்தான். ஆனால், இதில் 100 சதவீதம் கார்போஹைட்ரேட் இருப்பதாலும், இது உடனடியாக இரத்தத்தில் கலப்பதாலும் ஆபத்தானது. எல்லா வகை இனிப்பு வகையிலும், குளிர்பானத்திலும், ஏன் நாம் உண்ணும் மருந்திலும் (மேல் பகுதியிலும்) கூட சர்க்கரை உள்ளதால், இது பல வழிகளில் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகிறது.

சர்க்கரையை முற்றிலும் புறக்கணித்து, பிற கார்போஹைட்ரேட்களை நாட வேண்டும். தீட்டப்படாத அரிசி, கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, மக்காச்சோளம், ராகி, கம்பு ஆகியவையும், கிழங்கு வகைகளும் ஆரோக்கிய மான கார்போஹைட்ரேட்கள் ஆகும். இவற்றில் 60-70 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டீன் மற்றும் மிகச்சிறிய அளவு கொழுப்பும் உள்ளது.

நமக்குத் தேவைப்படும் கலோரிகளில் 65 சதவீதம் கார்போஹைட்ரேட்களிலிருந்து வருதல் வேண்டும். 1 கிலோ கார்போஹைட்ரேட் 4 கலோரிகளைத் தருகின்றன.

2. புரதங்கள்

நமது உடலில் உள்ள செல்கள் புரதத்தால் ஆன கட்டமைப்பாகும். நம் உடலில் தினமும் முப்பதாயிரம் கோடி செல்கள் அழிந்து, அதற்குப் பதிலாகப் புதிய செல்கள் உருவாக்கப்படுகின்றன. இச்செயலுக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது புரதம். நமது உணவிலிருந்து பெறும் கலோரிகளில் 12 சதவீதம் புரதம் மூலம் பெறுவது நல்லது.

புரதச்சத்துள்ள உணவுப்பொருட்கள் : 1. இறைச்சி 2. மீன் 3. பருப்புவகைகள் 4. சோயாமொச்சை 5. பால் 6. முட்டை

இதில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றில் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு உள்ளது. இவற்றை உண்பதால் இரத்தக்குழாய் எளிதில் அடைபட்டுவிடும். எனவே இவற்றைத் தவிர்த்து மீன் மற்றும் கோழி இறைச்சி ஆகியவைகளை உண்ணலாம்.

சோயா மொச்சையில் 40 சதவீதம் புரதம் இருப்பதால் சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்து பெற இதை உண்ணலாம். ஜப்பான் நாட்டின் மிக முக்கியமான உணவு இந்த சோயா மொச்சையாகும். பருப்பு மற்றும் பயறு வகைகளும் புரதச்சத்து அடங்கிய உணவுப் பொருட்களாகும்.

3. கொழுப்பு

மனிதனுடைய பரிணாம வளர்ச்சிகளில் தோன்றியதுதான் கொழுப்பு. ஆதி மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு வரும் காலங்களில் உணவினைத் திறம்பட சேமித்து வைக்க ஓர் ஏற்பாடு தேவைப்பட்டது. அதன் விளைவுதான் கொழுப்பு. குறைந்த எடையுள்ள கொழுப்பில் அதிக கலோரிகளைச் சேமித்து வைக்க முடியும்.

சிலரது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (Basic Metabolic Rate) அதிகமாக இருப்பதால் உண்ட கொழுப்பு முழுவதுமே செலவிடப்படுகிறது. இவர்கள் இயல்பான எடை யுடன் இருப்பார்கள்.

ஆனால், சிலரது உடலில் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால் உண்ட கொழுப்பு செலவிடப்படாமல் உடலிலேயே சேமித்து வைக்கப்படுகிறது.

குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் உள்ளவர்கள் அதிகம் கொழுப்பு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் போதுமான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

நமது உடலுக்குத் தேவையான கலோரிகளில், 23 சதவீதம் கொழுப்பு உணவிலிருந்து வர வேண்டும். அதிக கொழுப்பு உண்டால் அது ஒரு சிலரின் உடல் வேதியியல் மாற்றத்திற்கு ஒத்து வருவதில்லை. எனவே அவை உடலில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஆண்களுக்கு முதலில் வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்புப் பகுதியிலும் சேமித்த பின்னர் கை, கால்களில் சேமிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்தும் உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தும் கொழுப்பைப் கரைக்கும் போது பின்னோக்கியே கரைக்கப்படுகிறது. அதாவது, கை, கால்களில் முதலிலும், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் இறுதியாகவும் கொழுப்பு கரைகிறது.

கொழுப்புச்சத்துள்ள உணவுகள் : 1. பால் 2. பாலாடைக்கட்டி 3. வெண்ணெய் 4. நெய் 5. எண்ணெய் 6. எண்ணெய் வித்துகள் 7. இறைச்சி 8. ஐஸ்கிரீம்.

இதில் சில கொழுப்புகள் Saturated Fatty Acid வகையைச் சார்ந்தவை. இவை எளிதில் உறையும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக, நெய், தேங்காய் எண்ணெய், டால்டா போன்றவை. இவை இதயத்தில் உள்ள இரத்தக்குழாயில் எளிதில் உறைந்து விடுவதால், இரத்தக் குழாய்கள் அடைபட்டு இதயநோய் வர ஏதுவாகிறது. எனவே இந்த Saturated Fatty Acid வகையிலான கொழுப்பு உணவைத் தவிர்க்க வேண்டும். மற்றவகை எண்ணெய்களைக் (கொழுப்பு) கூட மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.

கார்போஹைட்ரேட் அல்லது புரதம் அதிகம் உண்டால் அதனைக் கல்லீரல் (Liver) கொழுப்பாக மாற்றி உடலில் இருப்பு வைத்து விடும். அப்படிப் படியும் கொழுப்பு உடலில் தோலுக்கு அடியில் படிவமாகப் படிந்து விடுகிறது. எனவே, இவற்றையும் அளவுடன்தான் உண்ணவேண்டும்.

எல்லா ஊட்டச்சத்துகளும் நமக்கு அவசியமாகும். ஏதேனும் ஒன்று குறைபட்டால் நோய்கள் ஏற்பட்டுவிடும். கார்போஹைட்ரேட் குறைவென்றால் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி குன்றுதல் என்றநிலையும், புரதம் குறைவென்றால் குவாஷியர்கார் மற்றும் மாராஸ்மாஸ் என்னும் நோய்களும், கொழுப்புக் குறைவென்றால் பிரீனோடெர்மா (உலர்ந்த தோல்) என்றநோயும் ஏற்படுகிறது.

4. வைட்டமின்கள் (vitamins)

வைட்டமின்கள் இயற்கையில் காணப்படும் ஊட்டச்சத்துக்களாகும். இவை நமது உடல் வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் அவசியமானது. சில வைட்டமின்கள் ஹார்மோன்களில் காணப்படுகின்றன. மற்றவை என்சைம்களின் செயல்பாட்டிற்குத் தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் தாதுப் பொருட்களுடன் சேர்ந்து அதிக முக்கியம் வாய்ந்த உடல் இயக்கப் பணிகளை மேற்கொள்கின்றன.

வைட்டமின்களை நீரில் கரையும் வைட்டமின்கள், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்று பிரிக்கலாம். நீரில் கரையும் வைட்டமின்களாவது ‘ஆ’ வைட்டமின்களான ஆ1, ஆ2, ஆ3, ஆ5, ஆ6, ஆ12 மற்றும் வைட்டமின் ‘இ’ ஆகியவை ஆகும். வைட்டமின் ‘ஆ’ என்பது நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி, கோதுமை, கடலை வகைகள், மீன், இறைச்சி, பால், முட்டை, பச்சைக் காய்கறிகள் மற்றும் வாழைப்பழத்தில் காணப்படுகிறது. வைட்டமின் ‘இ’ என்பது பச்சைக் காய்கறிகள், இலைக் காய்கறிகள், கீரைகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் பழ வகைகளில் உள்ளது.

வைட்டமின் ‘ஆ’ நமது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், உடலில் நோய்த் தடுக்கும் எதிர்ப்பாற்றலை தருவதற்கும், சக்தியை உடலில் தயாரிப்பதற்கும், உடல் வளர்ச்சிக்கும் அவசியமாகிறது. வைட்டமின் ‘இ’ மன உளைச்சல் அடைபவர்களுக்கும், புகை பிடிப்பவர்களுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் இது செல்கள், தசைகள், இரத்தக்குழாய் மற்றும் பற்களைப் பழுது பார்க்க உதவி புரிகிறது.

தண்ணீரில் கரையும் இவ்விருவகை வைட்டமின்களை உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே, அவை உணவின் மூலமாக தினமும் உடலுக்குள் செல்ல வேண்டும்.

அதேவேளையில், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் அ, ஈ, உ மற்றும் ஓ’ போன்றவற்றை உடலில் சேமித்து வைக்க முடியும். இவை கிழங்கு, காய்கறிகள், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், மீன் எண்ணெய், கடலை, பச்சைக் காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் வட உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. நோய்த் தாக்குதலில் இருந்து உடலுக்குப் பாதுகாப்புத் தருகின்றன. இவைகளும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதவை ஆகும். வைட்டமின்கள், அவை காணப்படும் உணவுப்பொருள்கள், அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

இவ்வனைத்து ஊட்டச்சத்துகளும் நமது உடலுக்கு எவ்வளவு தேவை என்பது நமக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். அந்தத் தேவையின் அளவுக்கு குறையாமல் உண்ணவேண்டும். மேற்சொன்ன உணவு வகைகளை அன்றாடம் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே வைட்டமின்கள் தேவை பூர்த்தி ஆகிவிடுகிறது.

5. தாதுப் பொருட்கள் (Minerals)

உணவில் காணப்படும் தாது உப்புகள் உடலில் பல இன்றியமையாத பணிகளைச் செய்கின்றன. தாதுப் பொருட்களாவன :

அ. கால்சியம் ஆ. துத்தநாகம் இ. இரும்பு ஈ. பொட்டாசியம் உ. மெக்னீசியம் ஊ. சோடியம்

வைட்டமின்களைப் போலவே தாதுப் பொருட்களையும் உடல் உறுப்புகள் தயாரித்துவிட முடியாது. எனவே, இவற்றையும் உண்ணும் உணவு மூலமாகத்தான் உடல் பெறவேண்டும். இவை அடங்கிய உணவுகளாவன

: அ. பால் ஆ. பாலாடைக்கட்டி இ. மாமிசம் ஈ. முட்டை உ. கடலை ஊ. பீன்ஸ் எ. விதைகள் ஏ. எலுமிச்சை ஐ. ஆப்பிள் ஒ. வாழைப்பழம் ஓ. உருளைக்கிழங்கு

ஆரோக்கியமான உணவு :-

அதாவது முழு தானிய அரிசி மற்றும் கோதுமை, பழ வகைகள் மற்றும் காய்கறிகள் - உண்ணும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைத்து விடுகின்றன. வைட்டமின்கள் அல்லது மினரல்கள் தினமும் தேவைப்படுவதாலும் இதனை உடல் தானாக தயாரித்துக் கொள்ளாது என்பதாலும் இவை அடங்கிய உணவை தினமும் உண்ணுதல் அவசியமாகிறது. மேற்சொன்ன உணவு வகைகளை வழக்கமாக உண்ணாதவர்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு வைட்டமின் மாத்திரையைச் சாப்பிடுவது அவசியமாகிறது.


May 25, 2009

பார்ட்டி.. பார்ட்டி.. பார்ட்டி.



காலையில் தேநீர்க் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே, மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் நாடு இப்போது உள்ளது மிகவும் வேதனையான ஒன்றுதான். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே போவதும் யாவருமறிந்ததே.

அத்தி பூத்தாற்போல, எப்போதாவது நண்பர்களோடு சிறிதளவு மது அருந்தி வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் உண்டு; இப்போது குடித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தினமும் மட்டையாகும் அளவிற்கு குடித்தே அழிபவர்களும் உண்டு. இவர்களால்தான் குடும்பமே நிம்மதியிழந்து, பொருளாதாரத்தில் சீர்குலைந்து நடுத்தெருவிற்கே வந்துவிடும் நிலையும் ஏற்படுவதுண்டு.

ஏதோ ஒரு சில காரணங்களுக்காக குடிக்க ஆரம்பித்து, நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீளவேண்டும் என்ற எண்ணம் இருந்தும் மீளமுடியாமல் இருப்பவர்கள், குடிப்பழக்கத்தைக் கைவிடுவதெப்படி?
இவர்களின் குடிப்பழக்கத்தைப் போக்குவதற்காக தங்களுடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள் குடிப்பழக்கத்தை அறவே அகற்றிய "முன்னாள் குடிகாரர்கள்".

ஒருகாலத்தில் முழுநேரக் குடிகாரர்களாக இருந்து, இப்போது முழுமையாக குடிப்பழக்கத்திலிருந்து வெளிவந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் "ALCOHOLICS ANONYMOUS". இவர்களின் "Public Information Meeting" ஆனது வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
அமைப்பு தொடங்கிய மூன்றாவது ஆண்டில், மூன்றாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக இதன் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள " முனைவர் எம்.ரமணிசுகுமார் " அவர்களிடம் பேசுகையில், குடிப்பழக்கமுள்ளவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டாலே, நாமும் இப்பழக்கத்தைக் கைவிடவேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

இச்செய்தியை மக்களிடம் பரப்புவோம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட உதவுவோம்.

மதுவினால் அழிவோரைத் தடுப்போம்! போதையிலிருந்து நாட்டை மீட்போம்!!

May 23, 2009

Bariatrics என்றால் என்ன?


அதிகமான உடல் பருமன், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து ஆல்கஹால் உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI என்பது.

BMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.

இன்னும் படிக்க:

http://en.wikipedia.org/wiki/Bariatrics

May 21, 2009

முதுகுவலி பற்றி தெரியுமா?


முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உங்கள் தினசரி வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.

தரையிலிருந்து ஏதாவது பொருளை எடுக்க வேண்டுமாயின் அதனைக் குனிந்து எடுக்க வேண்டாம். பாரமான பொருட்களை என்றல்ல, பாரமற்ற பென்சில் போன்ற சிறிய பொருட்களாக இருந்தாலும் கூட முதலாவது படத்தில் காட்டியவாறு முதுகை வளைத்துக் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள்.

மாறாக இரண்டாவது படத்தில் காட்டியவாறு கால்களைச் சற்று அகட்டி வைத்து, பாதங்கள் தரையில் பொறுத்திருக்குமாறு நின்ற பின், முதுகு வளையாதவாறு, முழங்கால்களை மடித்து உட்கார்ந்து எடுங்கள்.

அவ்வாறு எடுக்கும்போது அல்லது தூக்கும்போது முதுகை வளைக்காது இருப்பதுடன் பொருளை நெஞ்சுக்கு அருகே வைத்துத் தூக்குங்கள். இவ்வாறு தூக்கும்போது முதுகை பக்கவாட்டிற்கு ஆட்டி அசைந்து திருப்பாமல் இருப்பதும் முக்கியமாகும்.

ஒரு பாரமான பொருளை, உதாரணத்திற்கு அலமாரியை நகர்த்த வேண்டிய அவசியம் நேர்ந்தால் அதனை கைகளால் இழுப்பதைத் தவிர்த்து முதுகுப் புறத்தால் தள்ளி நகர்த்த முயற்சியுங்கள்.







உட்காரும்போது உயரம் குறைந்த நாற்காலிகளில் உட்காருவதைத் தவிருங்கள். சாப்பாட்டு மேசை நாற்காலிகள் போன்றவை பொதுவாக சரியான உயரம் கொண்டவையாகும்.


உட்காரும்போது உங்கள் முதுகு எவ்வாறு இருக்க வேண்டும்?.

‘வளைந்து உட்காராதே முதுகை செங்குத்தாக நிமிர்த்தியபடி உட்காரு’ என்றே பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை ஆலோசனை கூறுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது
எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வு அதனை மறுதலிக்கிறது. மேசையை நோக்கி முன்பக்கமாக வளைந்து உட்கார்வதானது முழங்காலில் கீழ்ப்புறத்தில் தேய்மானத்தை ஏற்படுத்தும். ஆனால் நடுவில் உள்ள படத்தைப்போல நிமிர்ந்து உட்காருவது முழங்காலில் அதிக அழுத்தத்தை கொடுத்து அவற்றின் நேர் ஒழுங்கையே குறைத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

மாறாக மூன்றாவது படத்தில் காட்டியவாறு இடைப்பட்ட நிலையில் உட்காருவதே குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மனித உடலானது நீண்டநேரம் நிமிர்ந்து உட்காருவதற்காக அமைக்கப்பட்டது அல்ல. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை அதையே செய்ய வைக்கிறது. எனவே நாம் நீண்ட நேரம் உட்காருவதால் முதுகெலும்பு பாதிப்பை குறைக்க வேண்டுமாயின், சற்று சாய்ந்த நிலையில் அதாவது 135 பாகை பின்புறம் சாய்ந்து உட்காருவதே சிறந்தது.

வேலை செய்யும்போதோ அல்லது பிரயாணம் பண்ணும்போதோ நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்வது முதுகெலும்பிற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். அந்நேரங்களில் மணிக்கு ஒரு முறையாவது சற்று எழுந்து நின்று தசைகளை நீட்டி நிமிர்த்தி அவற்றிற்கு ஓய்வு கொடுங்கள்.

அதேபோல கார் ஓட்டும்போது உங்கள் ஓட்டுனர் ஆசனத்தின் முதுகு சாய்க்கும் பகுதியானது பதினைந்து பாகையளவு பிற்புறம் சாய்ந்திருக்கும் படி ஒழுங்கு படுத்த வேண்டும். கைகள் தளர்வாக இருப்பதுடன் ஸ்டியரிங்கை இறுகப் பற்றுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் டிரைவிங் சீட்டை சற்று முன்னுக்கு நகர்தினால் இது சாத்தியமாகும்.

முதுகை முன்புறம் வளைந்து, ஸ்டியரிங்கை நோக்கிக கூனிக் கொண்டிருப்பது போல அமர்ந்து கார் ஓட்டுவதைத் தவிருங்கள்.












மேசையருகே உட்கார்ந்து எழுதும்போது முதுகை முன்பக்கமாக வளைந்து சரிந்திருப்பது கூடாது. இருக்கையை மேசைக்கு அருகில் நகர்த்தி வைத்தால் முதுகு வளையாது. உட்காருவது பற்றிக் கூறியதற்கு இணங்க, நிமிர்ந்திருந்து அல்லது சற்று பின்புறம் சாய்ந்திருந்து எழுதுங்கள்.

பொதுவாக குதி உயர்ந்த காலணிகளை அணிவதைத் தவிருங்கள். ஒரு அங்குலத்திற்கு குறைவான உயரமுள்ள குதிப்பகுதியுள்ள காலணிகள் முதுகுவலியை தடுப்பதற்கு நல்லதென கூறுகிறார்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதும், எடையை அதிகரிக்காது பேணுவதும் முதுகுவலியை ஏற்படாது தடுக்கும்.

நீங்கள் காய்கறி நறுக்கும்போதோ அல்லது தேங்காய் துருவும்போதோ அல்லது துணிகளை தேய்க்கும்போதோ (Ironing) ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்க நேரிடும். இது முதுகுதண்டிக்கு அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும். இதைத் தடுப்பதற்கு ஒரு காலை அரை அடியுள்ள பலகையில் உயர்த்தி வையுங்கள். ஒரே காலை தொடர்ந்து உயர்த்தி வைக்க வேண்டாம். 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கால்களை மாற்றி உயர்த்தி வைக்கவும். இதனால் முள்ளதண்டிற்கான கூடிய வேலைப்பளு குறையும்.

சாதாரண நேரங்களில் நிற்கும் போது உங்கள் உடலானது நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது காது, தோள் மூட்டு, இடுப்பு மூட்டு ஆகியன ஒரு நேர்கோட்டில் அமைய வேண்டும். தொந்தியை முற்புறம் தொங்கவிட்டு, முதுகை வளைக்காது வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால் முதுகும் நிமிர்ந்து சரியான தோற்றத்தில் நிற்க உதவும்.





நாம் தினமும் தொடர்ந்து ஒரே இடத்தில், ஒரே நிலையில் தொடர்ந்திருப்பது தூங்கும் போதுதான். சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் படுக்கையில் செலவழிக்கிறோம். எனவே அந்தளவு நேரமும் எமது முதுகுதண்டானது அழுத்தம் இன்றி தளர்ச்சியாக இருப்பது அவசியம். அதாவது பகல் வேளையில் நிமிர்ந்து நிற்கும்போது எவ்வாறு முதுகுத்தண்டின் இயல்பான வளைவுகள் பேணப்படுகின்றனவோ அவ்வாறே படுக்கையிலும் பேணப்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் படுக்கையும் தலையணையும் அமைய வேண்டும்.

சரியான படுக்கையானது வெறும் தரையோ, வெறும் பலகையோ அல்ல. அதே போல தளர்ச்சியான ஸ்பிரிங் உள்ள கட்டில்களோ கயித்து கட்டில்கள் போன்றவையும் அல்ல. எமது உடலின் இயற்கையான வளைவுகளை பேணத்தக்களவு மிருதுவான படுக்கையே ஏற்றது. உதாரணமாக பலகை மேல் சற்று இறுக்கமான மெத்தை போட்ட படுக்கை பொருத்தமாக இருக்கும்

தலையானது உங்கள் தலைக்கும் படுக்கைக்கும் இடையிலான இடத்தை சரியான அளவில் நிரப்புதற்கு ஏற்ற பருமனுடையதாக இருக்க வேண்டும். முதற் படத்தில் முள்ளந் தண்டானது இடுப்பு முதல் தலை வரை ஒரே நேராக இருக்கின்றன. மெத்தையும் தலையணையும் அதற்கேற்ற பருமனும் அடர்த்தியும் கொண்டிருக்கின்றன. இரண்டாவது படத்திலுள்ள கட்டில் மிகவும் தளர்ச்சியானதாக இருப்பதால் உங்கள் உடற்பாரத்தால் முதுகுதண்டு வளைந்து கோணும்படி செய்துவிடுகின்றன. இது ஆரோக்கியமானதல்ல

மூன்றாவது படத்தில் உள்ளது போன்ற கடுமையான சற்றும் இசைந்து கொடுக்காத தரை அல்லது பலகை கட்டில் போன்ற படுக்கை ஏற்றதல்ல என்பது புரிந்திருக்கும். காரணம் இதுவும் உங்கள் முதுகுத்தண்டின் இயல்பான வளைவுகளை பேணுவதில்லை.

ஒரு பக்கம் சரிந்து, முழங்கால்களை சற்று மடித்துப் படுப்பதுதான் தூங்குவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிலையாகும். முழங்கால்களுக்கு இடையே ஒரு சிறிய தலையணையை வைப்பது மேலும் சொகுசாக அமையும். குப்புற முகம் புதைத்து வயிற்றில் அழுத்துமாறு ஒருபோதும் படுக்க வேண்டாம். மாறாக நிமிர்ந்து படுப்பதாயின் முழங்கால்களுக்கு கீழே ஒரு தலையணை வையுங்கள். இவ்வாறு தூங்கும்போது கணுக்களுக்கு கீழே ஒரு சிறிய தலையணை வைப்பதும் நல்லது.

பயிற்சி...

முதுகுத்தண்டை அண்டியுள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதனால் வலி குறைவதுடன் மீண்டும் மீண்டும் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இரண்டு முழங்கால்களையும் குத்தென மடித்துப் படுங்கள். இப்பொழுது உங்கள் இடது முழங்காலை மெதுவாக நெஞ்சைத் தொடுவது போல உயர்த்துங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் கட்டிலோடு அல்லது தரையோடு நன்கு அழுத்துப்பட வேண்டும். இவ்வாறு 5 செகண்ட் செய்த பின்னர் கால்களைப் பழைய நிலைக்கு கொண்டு சென்று தளரவிடுங்கள். இனி வலது காலுக்கும் இதே பயிற்சியைச் செய்யுங்கள். மாறி மாறி ஒவ்வொரு காலுக்கும் பத்துத் தடவை செய்யுங்கள்.

மேற் கூறியது முதுகுப்புற தசைகளுக்கான பயிற்சி. இதைத் தவிர நீந்துவது, வேக நடை போன்ற ஏனைய பயிற்சிகளையும் செய்து வாருங்கள்.