Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts
Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts

Nov 20, 2013

சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..!

      ஒவ்வொரு இண்டர்வியூவிலும் இதை நான் தவறாது கேட்கிறேன்: “இந்த பையன் ரொம்ப இன்ட்ராவர்ட்டா இருக்கான். உம்மணாமூஞ்சி மாதிரி இருக்கற இவன் தேறமாட்டான். வாயைத் திறந்து கூட பேசாதவனை வச்சு எப்படி வேலை செய்யறது?” 



இன்ட்ராவர்ட்:
“Introvert” : இன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஆளுமைப் பண்பு. கார்ல் யூங் எனும் உளவியல் அறிஞர் ஆளுமைகளை வகைப்படுத்தினார். தன் இருப்பிற்குத் தேவையான சக்தியையும் உந்துதலையும் உள்ளிருந்து பெறுபவனை இன்ட்ராவர்ட் என்றார். இவற்றை வெளியிலிருந்து பெறுபவனை எக்ஸ்ட்ராவர்ட் என்றார்.
ஒரு இன்ட்ராவர்ட் தன் உலகில் திளைத்து இருப்பவன். யாரும் இல்லாமல் தன்னை நிறைவாக வைத்து கொள்ளத் தெரிந்தவன். இவர்கள் தனியாக செய்யும் வேலைகளை விரும்பி செய்வார்கள். உணர்வுகளை தாமாக முன் வந்து பகிராதவர்கள். பேசுவதை விட கேட்பதில் கவனம் செலுத்துவார்கள்.
எக்ஸ்ட்ராவர்ட்
எக்ஸ்ட்ராவர்ட் ஆசாமிக்கு சுற்றிலும் ஆட்கள் வேண்டும். ரயிலில் அன்னியர்களிடம் கூட இவர்கள் கேட்காமலேயே கருத்து சொல்வார்கள். அரட்டை பிரியர்களான இவர்களுக்கு சீக்கிரம் எல்லாம் போரடித்துவிடும். ஒரு நிமிடம் தனியே இருந்தாலும் உடனே செல்போனிலாவது யாரிடமாவது பேசினால் தான் உயிர் வரும். இவர்கள் பிறர் சொல்வதை கேட்பதை விட தாம் பேசுவதில் குறியாக இருப்பார்கள்.

Nov 16, 2013

குழந்தைகள் மற்றவர்களிடம் பழகும் விதம் ?.!...

என்னை சந்திக்க தங்கள் ஆறு வயது குழந்தையுடன் பெற்றோர் இருவர் வந்தனர். பேசிக் கொண்டிருந்தவர்கள் குழந்தையைப் பற்றிய குறைகளை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். படித்தல், திறமைகள் என ஒவ்வொன்றாக
குழந்தையைப் பற்றிய தங்கள் எதிர்பார்ப்புகளையும், குழந்தையின் உண்மையான நடத்தைகளையும் விவரித்துக் கொண்டே வந்தனர். அதுவரை அறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பையன் அப்போது உள்ளே நுழைந்தான். உடனே பையனின் அம்மா ‘சாருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்’ என
பையனிடம் கூறினார். பையனோ மிகவும் வெட்கத்துடன் மறுத்தான். ஆனால் பெற்றோர்கள் விடவில்லை. திரும்பத் திரும்பத் அதட்டி அப்பையன் என் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்துச் சொல்லும் வரை கட்டாயப்படுத்தினர். கடும் நிராகரிப்புக்குப் பின்னும் கைகுலுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை உணர்ந்த அவர்களின் மகன்

Aug 16, 2011

கணினியில் வேவு பார்க்கப் பயன்படும் மென்பொருட்கள்.



நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. 



இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமாகத் தெரியும் செய்திகளுக்கானப் புகைப்பட பதிவுகள், சிலருக்கு மனச்சிதைவைக்கூட ஏற்படுத்தலாம்.  பெரியவர்களுக்கே சவால் விடும் சக்திமிக்க ஊடகமான இணையத்தினை இன்றையக் குழந்தைகள் கையாளும் போது, இணையம் குறித்துத் தெரிந்த பெற்றோர்களுக்கு பதட்டமாக இருக்கும். அந்த பதட்டத்தின் காரணமாக மகனோ, மகளோ கணினி முன் அமர்ந்தால் வேறு வழியின்றி இவர்களும் கன்னத்தில் கைவைத்து திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள். இணையம் குறித்தான விவரங்கள அறியாத பெற்றோர்கள் தன் பிள்ளை சந்திரனுக்கு ராக்கெட் குறித்தான ஆராய்ச்சியில் இருப்பது போல மாயைத் தோன்றும், அதன் காரணத்தால் தனியறை ஒன்று ஏற்பாடு செய்து கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள். 

Jul 20, 2011

குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?

     குழந்தைகளின் படிக்கும் திறமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்துள்ள நுண்ணறிவையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியையும் பொறுத்து அமையும். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் தொடக்க காலத்தில் பெற்றோர் குழந்தையின் கல்வியில் அதிகம் ஆர்வம் காண்பிப்பர். குறிபாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பது முறையாக நடந்து கொண்டிருக்கும்.
           தொடக்ககால ஆர்வமும், குழந்தைகளின் பாடங்கள் பெற்றோரல் கற்பிக்கக் கூடிய வகையில் மிக எளிமையானதாகவும் இருப்பது ஆகியவை அவ்வாறு முறையாக வீட்டில் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கு காரணங்கள் எனலாம். குழந்தை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது பாடங்கள் பெற்றோரால் புரிந்து கற்பிக்க முடியாத வகையில் கடினமாகி விடுவதாலும், குழந்தையின் கல்வி மீது இருந்த தொடக்க கால ஆர்வம் குறைந்து போவதாலும்

Mar 23, 2011

குழந்தைகளை கண்டிப்பது எவ்வாறு?

‘அடியாத பிள்ளை படியாது’ ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பத அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஓர் குழந்தை நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் எதிர்பார்க்கின்ற வகையில் நடந்து கொள்ளாத போதும் குழந்தையின் நடத்தை நமக்கு மகிழ்ச்சியை தராத போதும் அந்நடத்தைகளை வெளிக்காண்பிக்கக்கூடாது என குழந்தைகளை கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து துண்புறுத்துவதும் பொதுவாக காணப்படும் விஷயங்கள் இவையணைத்தும் சரிதானா? குழந்தைகளை இப்படியெல்லாம் கண்டித்து வளர்ப்பது அவசியம்தானா? என்ற கேள்வி மனதில் எழலாம்.

Aug 7, 2010

பாசமும் நட்பும் - நிதர்சனமான உண்மை.

        நம்முடைய கல்வித் திட்டங்கள் குழந்தைகளுக்குக் கல்வியைப் புகட்டும் (புகட்டுவது என்பதன் நேரடியான பொருள் உங்களுக்குத் தெரியும்) வேலை ஒன்றை மட்டுமே செய்து வருகின்றன.  அக்குழந்தைகளின் நுண்மாண் நுழைபுலத்தை வலுப்படுத்தும் எந்தக் காரியத்தையும் மறந்து கூடச் செய்வதற்கு இப்பள்ளிகளும் நம் கல்வித் திட்டமும் வழிவகுக்கவில்லை. 


 பள்ளிகளின் கடமைகள் ஒருபுறம் இருக்க பெற்றோரின் கடமையும் இங்கே இருக்கிறது.  தங்கள் குழந்தைகளின் ஆர்வத்தையும் தனிப்பட்ட திறமைகளையும் கண்டெடுத்து அவர்களை அந்தத் திசையில் வெற்றிகரமாகப் பயணிக்கச் செய்வது பெற்றோர்களின் தலையாய கடமையாகிறது.  பள்ளிகள் பாடங்களைப் "புகட்டினால்'' வீட்டில் பெற்றேர்கள் அந்தப் பிள்ளைகளை வெறும் மதிப்பெண்களைப் பெறும் இயந்திரமாக மாற்றத்தான் அதிகமாக முயற்சிக்கிறார்கள். 

Jun 6, 2010

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது

தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள்.
ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான

Mar 27, 2010

ஆணென்ன....பெண்ணென்ன......

ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள்.

Mar 7, 2010

குழந்தைகளை அடிக்கலாமா? பகுதி 2

குழந்தைகளை அடிக்க கூடாது..

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.


கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின்

Feb 24, 2010

குழந்தைகளை அடிக்கலாமா? பகுதி 1

படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எதுசரி” “எதுதவறுஎன்று சொல்லிக் கொடுக்கவேண்டும். சேட்டைஎன்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தைசும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட சனியனே, “சனியனே” “பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்குஎன்று திட்டுவோம். ஆக சேட்டைஎன்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.

Jan 27, 2010

பரீட்சைக்கு நேரமாச்சு.....




இது அம்மாப்பாவுக்கு...........

  1. சும்மா சும்மா படி...படின்னு சொல்லாதீங்க.
  2. பரீட்சை என்பது ஒரு பயப்படும் விஷயம் என மனதில் பதிய வைக்காதீர்கள்.
  3. பரீட்சைக்காக படிப்பது என்றில்லாமல்.....விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புரிந்து கொள்வதற்காகப் படிக்கத் தூண்டுங்கள்
  4. .அவனை மாதிரி படி...இவளைப் போல் படி என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.
  5. முதல் ராங்கை விட்டுடாதே என்று பயமுறுத்தாதீர்கள்.
  6. 10 நாளில் பரீட்சை வருது .....நீ இப்படி விளையாடறேன்னு பரீட்சை பற்றி அச்சம் உண்டாக்காதீர்கள்.
  7. பரீட்சைக்கு முந்திய நாள் ரொம்ப நேரம் படிக்க வைப்பதும் அதிகாலையில் எழுப்பி விடுவதும் கண்டிப்பாக கூடாது.
  8. பரீட்சைக்குக் கிளம்பும் போது போருக்குக் கிளம்புவது போல ஆர்ப்பாட்டம் பண்ணாதீர்கள்.

Dec 29, 2009

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?


சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது.

ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு “அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை” என எண்ண வைத்துவிடும்.

இதையே ஜான் ஹோல்ட் என்பவர் “ பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்” என்கிறார். குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

பதில் தெரியாத இடத்தில் “தெரியாது” என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.

முறை.1.
“அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்” என்று கூறலாம்.

பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.

முறை. 2.
“இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்” என்று சொல்லலாம்.

பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.
பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.

முறை.3.
குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், “நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்” எனலாம்.

பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.

முறை.4.
மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து “இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது” எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தயாராகியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம். மேலும் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்களோ அதிலிருந்து “இப்படி செய்யலாமா, இல்லை வேறு விதமாக செய்யலாமா” என தொடர்ந்து விவாதம் செய்து சிந்திக்கத் தூண்டுங்கள்.

Oct 24, 2009

குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை நாகரீகங்கள்.


முன்பெல்லாம் பள்ளியில் மாரல் ஸ்டடி என்று ஒரு
வகுப்பு உண்டு. நல்லது கெட்டது கதைகளாக
சொல்லப்படும்.

value education என்று பிறகு மாற்றினார்கள்.

இப்போது இரண்டு வகையும் இல்லை. அதனால்
பிள்ளைகள் மெத்த படித்திருந்தும் அடிப்படை
நாகரீகம் கூடத் தெரியாமல் வளர்கிறார்கள்.

இது அவர்களின் வளர்ச்சியில் ஒரு குறைபாடாகிறது.
ஏட்டிக்குபோட்டியான வாழ்க்கைக்கு கொண்டு
செல்கிறது.


குழ்ந்தைகள் நாம் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும்
பொழுதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைகள் நல்லவிதமாக நடந்து கொண்டால்
உடன் பாராட்டு பத்திரம் வாசித்து தவறு செய்தால்
அடித்து திட்டி செய்வோம்.

தவற்றை சுட்டிக்காட்டுவதற்கு பதில், எப்படி
நல்ல விதமாக செய்திருக்கலாம் என்று எடுத்துச்
சொல்லலாம்.

10 முக்கியமான அடிப்படை நாகரீங்கள்
என்னவென்று பார்ப்போம்.

************************************

1. பெரியவர்களோ சின்னவர்களோ பேசிக்கொண்டிருக்கும்பொழுது
கவனத்தை திசை திருப்ப பிள்ளைகள் குறுக்கே புகுந்து பேசுவார்கள்.
இப்படி பிள்ளை செய்யும் முதல் முறையே,”நாங்கள் பேசி
முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்று தெளிவாக
சொல்ல வேண்டும்.Waiting their turn என்று ஆங்கிலத்தில்
சொல்வோம். அப்படி பேசிக்கொண்டிருக்கும்பொழுது அருகில்
இருக்கும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டிருத்தல்/
தோள்மீது கைபோட்டுக்கொண்டிருத்தலால் பிள்ளையின் மீது
கவனம் இருக்கிறது என்று புரிய வைக்கிறோம்.

2.பேரைச் சொல்லவா? அது நியாயமாகுமா? நியாமே இல்லை.
பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்ககூடாது என்று சொல்வதோடு
மட்டுமல்லாமல் அவ்வாறு அழைத்தலால் அவர்கள் மனது என்ன
வேதனைப்படும் என்றும் புரிய வைக்க வேண்டும்.

(நண்பர்களை கூட வாடி,போடி, அடா,புடா என்று பேசுவதை
தவிர்த்து பெயர் சொல்லி மென்மையாக அழைக்கப்பழக்குவது
நலம்)

3. வீட்டுக்கு யாராவது வந்தால் பிள்ளைகள் கதவை
திறந்து விட்டு ஓடியே போய்விடுவார்கள். வந்தவர்கள்
வாயிலில் தேமே என்று நிற்க வேண்டும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்க பழக்க வேண்டும்.
கை குலுக்கி ஹாயோ, வணக்கமோ சொல்ல வேண்டும்.
இதனால் விருந்தினர்களுக்கும் மனது மகிழ்ச்சி.

4. sorry, please, thank you போன்ற வார்த்தைகளைச்
சொல்ல பழக்க வேண்டும். நம்மிடம் நன்றி சொல்லும்பொழுது
"You're welcome" சொல்ல மறக்காதீங்க.

5. சில வீடுகளில் பிள்ளைகள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை.
பால் டம்பளர், சாப்பிட்ட தட்டு எல்லாம் டேபிளிலேயே இருக்கும்.
அதே போல் தான் விளையாடி முடித்த பிறகு அதை அப்படியே
போட்டுவிட்டு வேறு ஏதேனும் செய்யப்போய்விடுவார்கள்.
இது தவறு. முதலில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கச் சொல்லுங்கள்.

6.விளையாட்டில் கூட தோல்வியை சில குழந்தைகள்
ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எஜமான் பட நெப்போலியன்
போல,”கல்யாண வீட்டுல நான் தான் மாப்பிள்ளை, செத்த
வீட்டுல நா தான் பொணம், மாலையும் மரியாதையும்
எனக்குத்தான்” எனும் அந்த வசனம் சினிமாவில் சரி
நிஜத்தில் வெற்றி/தோல்வி இரண்டையும் ஏற்கும் பக்குவத்தை
வளர்க்க வேண்டும். அதுதான்Good sportsmanship.

7. யாராவது குழந்தைகளை பாராட்டினால் நன்றி சொல்லப்
பழக்க வேண்டும். தவிர்த்து மற்றவர்களின் குற்றங்களை
சொல்லத்துவங்கக்கூடாது.

8. வயதானவர்களுக்குத்தான் முதலிடம். இதை குழந்தைகளின்
மனதில் பதிய வைக்க வேண்டும். அதே போல் வீட்டுக்கு
வந்திருந்த விருந்தினர்கள் கிளம்பியதும் கதவை டமால்
என்று அடித்துச் சாத்தக்கூடாது என்பதையும் புரிய வைக்க
வேண்டும்.

9. லிஃப்ட் கதவு திறந்ததும் முண்டியடித்து உள்ளே
நுழையாமல் உள்ளே இருப்பவர்கள் வெளியே
வந்ததும், நாம் உள்ளே செல்ல வேண்டும் என
பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
ஒரு அறை அல்லது கட்டிடத்தில் உள்ளே/வெளியே
செல்லும் பாதை ஒரே கதவாக இருந்தால் வெளி
வருபவரை முதலில் அனுமதிக்க வேண்டும்.பிறகுதான்
நாம் உள் செல்ல வேண்டும்.

10.வேற்றுமையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
மொழி,கலாசாரம்,மதம், பழக்க வழக்கங்கள் இது
மனிதருக்கு மனிதர், குடும்பத்துக்கு குடும்பம் மாறு
படும். இதை கேலி செய்வதை விடுத்து அவர்களின்
பழக்கத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ப்ர்த்யேக பழக்க
வழக்கங்கல்,கலாசாரங்கள் இருக்கின்றன. அவை
அந்தக் குடும்பத்துக்கு முக்கியமானது என்பதை
பிள்ளைகள் உணரவேண்டு.

Aug 13, 2009

வளரும் குழந்தைகளுக்காக...

என் மகள் மட்டும் விளையாடும் வகையில் பெண் குழந்தைகளுக்கான இணையதளம் எதுவும் உள்ளதா என்று தேடியபோது கிடைத்தவை...
www.everythinggirl.com என்ற தளம். வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதார-ணமாகப் பயன்படுத்-தி-னாலே அவர்களின் சிந்திக்-கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும்.

இதில் மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல வழிகளைத் தேர்ந்-தெடுத்-துத்தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம்.
உங்கள் குழந்தைகளுக்கு இணையத்தை அறிமுகப்படுத்தி இருகிறீர்களா ? குழந்தைகளுக்கு எப்படி புரியும் ? எந்த இணையதளம் குழந்தைகளுக்காக உள்ளது ? எப்படி குழந்தைகள் இணையத்தை அணுகுவார்கள் ? அதனால் என்ன பயன் ? இப்படி ஏராளமான கேள்விகள் பெற்றோர்களை குழந்தைகளின் இணைய அறிவை ஊட்ட விடாமல் தடுக்கிறது.
childread
பெண் குழந்தை ஒரு வயதை கடக்கும் போது என்னென்ன இணையதளத்தை அறிமுகபடுத்தினால் அவளுக்கு எளிதாகவும் அறிவை வளர்க்கவும் உதவும் என்று யோசித்தேன். என் தேடலில் ஏராளமான தளங்கள் கிடைத்தது. அதில் மிகவும் பொருக்கி எடுத்த சில இணைய தளங்களை இங்கே சொல்கிறேன்.
http://kidoz.net/ – இந்த இணையத்தளத்தில் kido’s என்ற குழந்தைகளுக்கான Search Engine -ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகள், வீடியோ , படங்கள் எல்லாம் இது கொடுக்கும். இதை குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் , நிறத்தில் அமைத்திருகிறார்கள். தேவை இல்லாத படங்கள் , வீடியோ எதுவும் இதில் லோட் ஆவதில்லை. பாதுகாப்பான தளம்.
http://nces.ed.gov/nceskids/ – National Centre for educational statistics என்ற அமெரிக்க அரசின் இணைத்தளம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் கீழ்க்கண்ட பக்கங்களுக்கு உங்கள் குழந்தைகளை கூட்டிசெல்லுங்கள்.
kidoshttp://nces.ed.gov/nceskids/createagraph/ – ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் சிறார்களுக்கு இந்த பக்கம் பயனுள்ளதாக இருக்கும்.
http://nces.ed.gov/nceskids/eyk/index.asp?flash=false ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இது மிகவும் உதவும் பக்கம். சுருக்கமாக சொன்னால் இது ஒரு Quiz Master.
இந்த இணையத்தளத்தின் மற்ற பக்கங்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பயனுள்ளது.
http://www.kidthing.com/ – இந்த இணையத்திற்கு செல்லுங்கள் , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுக்கள், அறிவை வளர்க்கும் கேள்வி பதில், கற்பனை திறனை வளர்க்கும் போட்டிகள் எல்லாம் உண்டு. இதை நீங்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

கணினி வாங்கிய புதிதில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களையும் தேடித்தேடி படித்து என் மகளுக்கு சொல்லித்தருவது என்வேலையாக இருந்தது. நண்பர்களுக்கும்,என் வாசகர்களுக்கும், உறவினர்களுக்கும் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களுக்கு அந்த உரல் களை தந்து நேரம் கிடைக்கும் போது பார்க்கச் சொல்வேன்.அவற்றில் சில இங்கே,

http://www.tamilvu.org
இதில் தமிழ்நாட்டினை விட்டு
வெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.
அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.
http://wwww.pbskids.com --/ -- விதவிதமான தொலைக்காட்சி காரெக்டர்களுடன் விளையாட்டும் கற்றுக்கொள்வதற்குமான தளம்.உதாரணத்திற்கு
Between the lions இதில் word play, alphabet soup ,A.B.Cow
போன்றவற்றால் விளையாட்டாய் ஆங்கிலம் கற்கலாம். www.little-g.com -- little fingers software இதை நம் கணினியில்
தரவிறக்கம் செய்து கொண்டு விளையாடலாம். இதிலும் ஆங்கிலத்தின் ஆரம்ப நிலைகளை படிக்கலாம். http://www.sanford-artedventures.com/ -- வரைய சொல்லிக் கொடுப்பதுடன் விளையாட்டும் வரைபடங்களின் தியரியும் உள்ளது.

http://www.dreezle.com/ - இது எல்லா கணினியிலும் கிடைக்கும் பெயிண்ட் ப்ரஷ் போலத்தான் ஆனால் சில மாற்றங்களுடனான இத்திரையில் வரைவது இன்னும் எளிது , இது மவுஸ் கண்ட்ரோல் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவும். மற்றும் கற்பனைத் திறனை வளர்க்க .

http://www.suzyque.us/index.htm -- இந்தத்தளத்தில் worksheets பகுதி நன்றாக இருக்கிறது. வீட்டிலேயே தாய் சொல்லிக்கொடுப்பதற்காக அழகான விளக்கங்களுடன் இன்னும் சில arts and crafts என்று ஒரு வெர்ச்சுவல் பள்ளிக்கூடம்.

( குழந்தைகள் அதிகநேரம் கணினி முன் இருக்கக்கூடாது, மவுஸ் பிடிப்பது விரல்களில் வலி ஏற்படுத்தும்,இருப்பினும் எப்போதாவது சில நேரங்களில் இது போன்ற தளங்களில் சென்று கற்றுக்கொள்வது
தவறாகாது. விளையாட்டாய் கற்றுக்கொள்வதற்கு தான் இவைகள். )

Mar 13, 2009

கற்கத்தவறிய பாடம்..!!!!!!!!!!!!

என் மகன் ஜனாவை அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது என்று கேட்டேன். ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் முட்டாள் என்று சொன்னான்.

இந்தச் சொல் இன்று நேற்றல்ல பள்ளி துவங்கிய காலத்திலிருந்து கூடவே வளர்ந்து கொண்டிருக்கிறது .

சிறுவர்களின் மிக முக்கியமான பிரச்சனை தான் முட்டாளா? அறிவாளியா ? என்பதே. அதை ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நிகழ்விலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.


நீயொரு முட்டாள் என்ற வசையைச் சந்திக்காத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். இந்தச் சொல்லை குழந்தைகள் வெகுவாக வெறுக்கிறார்கள். பல நேரங்களில் சகமாணவனை முட்டாள் என்று திட்டுவதையே உயர்ந்த வசையாக நினைக்கிறார்கள்.

ஏன் ஒரு மாணவன் முட்டாளாகக் கருதப்படுகிறான். அல்லது எது முட்டாள் தனம். இந்தக் கேள்வி எளிமையானது. ஆனால் இதற்கான பதில் இன்றுவரை தெளிவானதாகயில்லை.

முட்டாள்தனம் என்பதை கவனக்குறைபாடு, புரிந்து கொள்வதில், வெளிப்படுத்துவதில் உள்ள சிரமம் என்று புரிந்து கொள்வதற்கு பதிலாக அதை தீர்க்கமுடியாத ஒரு ஊனம் என்றே பலநேரங்களில் ஆசிரியர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். அது போலவே மாணவர்களும் தான் ஒரு முட்டாள் என்று சுயசந்தேகம் கொள்வதற்கு அவனைப் பற்றிய ஆசிரியர் பெற்றோரின் மதிப்பீடுகளே காரணமாக இருக்கின்றன.

காரைகுடியில் முப்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. ஆனால் அவற்றின் கற்றுத்தரும் முறை மற்றும் மாணவர்களை மதிப்பிடுதல், பொதுதிறன், சிறப்புத்திறன்களை கண்டறிதல் தொடர்பான பொது அறிக்கை அல்லது அனுபவ பகிர்வுகள் சார்ந்த புத்தகங்கள் கையேடுகள் எதுவும் கண்ணில் படவேயில்லை.

இவ்வளவு ஆசிரியர்களும் தங்களது பணி அனுபவத்தை என்ன தான் செய்கிறார்கள். வகுப்பிற்கு வெளியே ஆசிரியர்களின் பணி என்ன? வகுப்பிற்குள் அவர்கள் என்ன கண்டறிகிறார்கள். எதை உருவாக்கினார்கள். எதை புரிந்து கொண்டார்கள்.

கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகள் மிகவும் பழமையானவை. ஆங்கில கல்வியை பெரிதும் நகல் எடுப்பவை. நவீன உளவியல் காரணிகளோ, உபகரணங்களோ, குழந்தைகளின் இயல்புணர்வுகளையே அவை கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

ஆசிரியர்களைப் போலவே வீட்டில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை அமுக்கி வைத்து கற்றுத்தருவதும் மனப்பாட இயந்திரங்களாக அவர்களை மாற்றுவது மட்டுமே.அப்படியானால் வீட்டில் பிள்ளைகள் படிக்க கூடாதா? வீட்டுபாடங்களை என்ன செய்வது? எப்படி பிள்ளைகள் மேம்படுவார்கள்?

பள்ளியில் மாணவர்கள் புரிந்து கொள்ளத் தவறும் போது தான் வீட்டிலும் வெளியிலும் சிறப்பு கவனம் கொடுக்க நேரிடுகிறது. கற்றுதருதலில் உள்ள கோளாறு தான் வீட்டுபாடம் எழுதுதல் என்ற பெரும்சுமையை உருவாக்கியிருக்கிறது.

மாணவர்களை நாம் நினைப்பது போல எளிதில் மாற்றிவிட முடியாது. அதற்கு தனிப்பட்ட கவனமும் நீண்ட உழைப்பும் தேவை என்றும் உணர்த்துகிறார். மாணவர்களின் உளவியலை புரிந்து கொள்வது கற்றுதருவதில் முக்கியமானது.குழந்தைகள் வெறும் பள்ளி செல்லும் ரோபோக்கள் அல்ல.

கல்வி குறித்த எண்ணங்களில் முக்கியமானவை இவை

  • புரியாதவற்றை தனக்கு புரியவில்லை என்று குழந்தைகள் பயமின்றி சொல்ல வைக்க வேண்டும். அவர்களுக்கு புரியும்வரை விளக்க வேண்டும். புரியாமல் போவதற்கான முக்கிய காரணம் கவனம் சிதறிவிடுவது. பொதுவில் மாணவர்கள் படிக்கும்போதோ, படிக்க முயற்சிக்கும் போதோ சிறிது நேரத்திலே தங்களது கவனத்தை இழந்துவிடுகிறார்கள்.

  • தங்கள் கவனம் பாடத்தின் மீது இல்லை என்று கூட தெரியாத சுயஉணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. மாணவர்கள் இதிலிருந்து விடுபட தனக்குப் புரியவில்லை என்றால் உடனே குரல் எழுப்பவேண்டும். அது அவனது புரிந்து கொள்ளும் முயற்சியை மேம்படுத்தும். மோசமான மாணவன் தனக்கு எது புரிந்தது எது புரியவில்லை என்றே தெரிந்திருக்க மாட்டான். அது தவறானது. புரியவில்லை என்பதை உணர வைக்க வேண்டும். கவனம் எடுத்து அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

  • பலநேரம் கரும்பலகையை பார்த்து எழுதும் மாணவர்கள் தான் என்ன சொல்லை எழுதிக் கொண்டிருக்கும் என்பதை கவனிப்பதில்லை. ஒன்றிரண்டு எழுத்துகளாக மட்டுமே பார்த்து பார்த்து எழுதுகிறார்கள். அதனால் பாதியில் தான் என்ன எழுதினோம் என்பது மறந்து போகிறது. அது போலவே ஒரு சொல்லை எழுத ஆரம்பிக்கும் போது அது எவ்வளவு பெரிய சொல் அதை எழுத எவ்வளவு இடம் பிடிக்கும் என்று அவன் யோசிப்பதில்லை. அதனால் தான் பலநேரம் காகிதத்திற்கு வெளியிலும் மாணவர்கள் எழுதுகிறார்கள்.

  • மாணவர்கள் பரிட்சையில் ஒரு பதிலை எழுதி முடித்தவுடன் திரும்பி பார்க்க பயப்படுகிறார்கள். இரவு நேரத்தில் சுடுகாட்டினை கடந்து போகின்றவன் திரும்பி பார்க்காமலே ஒடுவது போன்று தான் பரிட்சை எழுதுகிறார்கள். தனக்கு தெரிகிறதோ இல்லையோ ஒரு பதிலை எழுதிவிட்டோம். இத்தோடு தன் வேலை முடிந்துவிட்டது. இனி அதை திருப்பிப் பார்க்க கூடாது என்ற மனோபாவம் பெரும்பான்மை மாணவர்களிடம் இருக்கிறது.

  • சில நேரம் குழந்தைகள் தனக்கு பதில் தெரிகிறதோ இல்லையோ கைகளை தூக்கி விடை சொல்ல துடிப்பது போல காட்டிக் கொள்வார்கள். அது ஒரு தந்திரம். வேறு யாராவது பதில் சொல்லிவிட்டால் தலையை ஆட்டி ஆமோதிப்பது போல நடிப்பது அல்லது அதை பற்றி முணுமுணுப்பது போன்றவை மாணவர்களின் ஏமாற்றும் முறைகள். ஆசிரியர் தன்னிடம் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்ற பயத்தின் விளைவு. அதையும் மீறி கேள்வி கேட்டுவிட்டால் பதிலை மிக மெதுவான குரலில் சொல்வார்கள். அது சரி என்று ஆசிரியர் சொன்னால் மட்டுமே உரக்கச் சொல்வார்கள். இல்லாவிட்டால் மிக மெதுவாகவே சொல்வார்கள். சரிதானா என்று ஆசிரியர் திரும்பக் கேட்டுவிட்டால் உடனே மாற்றிவிடுவார்கள். அது தனக்கு பதில் முழுமையாக தெரியவில்லை என்று மறைக்கும் எளிய தந்திரமே.

  • ஆசிரியர்கள் கேள்விகேட்கும் போது கூடுமானவரை அவர்களிடமிருந்தே பதிலை வரவழைப்பதில் குழந்தைகள் கில்லாடிகள். புரியாதது போல நடித்து நடித்து கிட்டதட்ட பதிலை அவரிடமிருந்தே வாங்கிவிடுவார்கள். குழந்தைகள் பொதுவாக கைகொள்ளும் உத்தி ஆசிரியரின் முகத்தை உன்னிப்பாக கவனிப்பது. தான் சொல்லும் பதில் தவறு என்று ஆசிரியர் முகத்தில் சிறிய மாறுதல் தெரிந்தால் உடனே மாற்றிவிடுவார்கள். சலனமில்லாத முகம் கொண்ட ஆசிரியரை மாணவர்களுக்கு பிடிக்காமல் போய்விடுவது இதனால் தான்.

  • சில ஆசிரியர்கள் வகுப்பறையில் மாணவர்களிடம் சரியா சரியா என்று அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். அது தவறான அணுகுமுறை. தான் மிக சிறப்பாக கற்றுதருகிறேன் என்று மாணவர்களை பாராட்ட சொல்ல வைப்பதே இது. இதில் மாணவர்கள் பெரும்பாலும் ஆசிரியர் சொல்வது அத்தனையும் சரி என்று சொல்லியே பழகிவிடுவார்கள்.

  • பொதுவில் சிந்திக்கும் திறன் உள்ள குழந்தைகள் எவரும் பெரியவர்களை திருப்தி செய்வது தங்களது முக்கியமான வேலையில்லை என்று உணர்ந்தவர்கள். பெற்றோர் ஆசிரியரை திருப்தி படுத்த வேண்டும் என்று நினைக்கும் குழந்தையே அதிகம் குறுக்குவழிகளை நோக்கி செல்கிறது.

  • ஆசிரியரின் கவனம் தன்மீது இருப்பதை பலநேரம் குழந்தைகள் விரும்புவதில்லை. அது அவர்கள் கற்றுக்கொள்வதை ஆழமாக பாதிக்கிறது. தன் இயல்பிற்கு மாறாக ஆசிரியருக்காக அது நடந்து பாவனை செய்யத் துவங்குகிறது. ஆகவே கண்காணிப்பது போல இன்றி குழந்தைகளின் இயல்பைக் கெடுக்காமலே அவர்களுக்கு பாடத்தை புரிய வைப்பது மிக முக்கியமான பயிற்சி. இது கல்வி பயிற்சி நிறுவனங்களில் கற்றுதரப்படுவதில்லை. மாறாக குழந்தைகளை எப்படி அடக்கி வைக்க வேண்டும் என்றே பயிற்சிகள் அதிகம் தரப்படுகின்றன.

  • ஆசிரியர்களின் அடிப்படை தவறு என்ன தெரியுமா? அவர்களுக்கு பாடத்தின் மீது இருக்கும் அதே ஆர்வம் குழந்தைகளுக்கும் இருக்கும் என்று தப்பு கணக்கு போடுவது தான். கல்வி பெரிய செல்வம். அது வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் உன்னத சாளரம் என்பதெல்லாம் மாணவர்களை பொறுத்தவரை பேத்தல்கள். பள்ளிக்கு சென்றுவருவதை தனக்கு அளிக்கபட்ட தினசரி வேலையாக தான் குழந்தைகள் நினைக்கின்றன.

  • பள்ளியில் தனது வேலை கற்றுக்கொள்வது என்று மாணவர்கள் நினைக்கவில்லை. மாறாக முடிந்த அளவு சுலபமாக, கஷ்டப்படாமல் தினப்படி கொடுக்கபடும் வேலையை முடித்து தருவது தான் கல்வி என்று நினைக்கிறார்கள். இது முடியாவிட்டால் தன் மீது பழிவிழாமல் தன் வேலையை எப்படி தள்ளிவிடுவது என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதாவது அடுத்தவர்கள் உணராத வண்ணம் அவர்களை வேலை வாங்குவதில் குழந்தைகளே கில்லாடிகள்.

  • தோல்வி பயம் தான் மாணவனின் மிக முக்கிய பிரச்சனை. அவன் தனது கற்றுகொள்ளும் திறனை இந்த பயத்தால் மூடிக் கொள்கிறான்.

  • ஆசிரியர் கேள்விகேட்கும் போது பதில் தெரியாவிட்டால் உங்களுக்கு என்ன மனநிலை ஏற்படுகிறது என்று மாணவர்களிடம் கேட்டால் பெரும்பான்மையினர் சொன்னது முதலில் எச்சிலை விழுங்குவோம். உடம்பெல்லாம் பயம் கவ்விக் கொள்ளும். சில நேரங்களில் மூத்திரம் போக வேண்டும் போலிருக்கும்.

  • அளவுக்கு அதிகமான வீட்டுபாடங்கள் மாணவர்களின் இயல்பான கற்கும்திறனை குறைத்துவிடும். பத்துவயதிற்கு குழந்தை தன்னை பற்றிய தாழ்வுமனப்பான்மை கொள்வதற்கு இதுவே முதன்மையான காரணம்.

  • குழந்தைகளை திட்டுவதை போலவே பாராட்டுவதையும் அறிந்து செய்ய வேண்டும். மிக உயர்வாக குழந்தையை பாராட்டிவிட்டால் அடுத்த முறை அது மதிப்பெண் குறையும் போது தனக்கு பாராட்டு கிடைக்காது என்பதால் குற்றவுணர்ச்சி கொள்ள துவங்கிவிடும்.

  • பள்ளிகளில் நிலவும் பயம் விநோதமானது. ஆசிரியர்கள் பயமுறுத்துகிறார்கள். வகுப்பறைகள் பயமுறுத்துகின்றன. பாடப்புத்தகம், எழுதுதல் போன்றவை பயமுறுத்தி படிக்க வைக்கபடுகின்றன. விளையாட்டு மைதனாம் பயமுறுத்துகிறது. சகமாணவர்கள் கூட சில நேரம் பயமுறுத்துகிறார்கள். இந்த பயம் தான் கற்றுக் கொள்வதன் ஆதார தவறு. இதனால் மனஅழுத்தம் பெரும்பான்மை குழந்தைகளை பற்றிக் கொள்கிறது.

கல்வி பெரிதும் வணிகமாகியுள்து.நம் குழந்தைகள் எந்த வகுப்பு படிக்கிறார்கள் என்று நமக்கு தெரிகிறது. என்ன படிக்கிறார்கள் எப்படி படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வம் கொள்வதில்லை. ஆனால் அது தான் குழந்தைகள் மீது நாம் காட்டும் உண்மையான அக்கறை. அதை மறந்து படி படி என்று குழந்தையை அடித்து மிரட்டுவது மட்டுமே அவர்களை படிக்க வைத்துவிடாது என்பதே உண்மை.

குழந்தைகளின் பாடப்புத்தகங்களை நீங்கள் வாங்கி படித்து பாருங்கள். அந்த பாடங்கள், நோட்டுகள், பயிற்சிகள் போன்றவற்றை அக்கறை கொண்டு கவனியுங்கள். அதிலிருந்து தான் குழந்தைகளின் கற்றுத்தருதல் வளரக்கூடும்.

ரா.வெங்கட்ராமன்..

மு.சூரக்குடி.