Showing posts with label தமிழ் வரலாறு. Show all posts
Showing posts with label தமிழ் வரலாறு. Show all posts

Oct 21, 2013

நோய் தீர்க்கும் சதுரகிரி மலை




        சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்
* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*
ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
*
சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.
* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
 
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131
மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

May 19, 2009

பழந்தமிழிலக்கியங்களில் மகளிர் விளையாட்டு


பழந்தமிழிலக்கியங்களில் அம்மாணை, பந்து, சாழல், ஈசல் போன்ற விளையாட்டுகளைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இவை மகளிர்கே உரிய விளையாட்டுகள். பண்டையத் தமிழர்கள் ஆடவர்க் கென்றும் மகளிர்க்கென்றும், சிறுவர்களுக்கென்றும் முதியோர்களுக்கென்றும் இருபாலருக்கும் உரியதென்றும் பல்வகை விளையாடல்களைப் பகுத்து வைத்திருந்தனர். பெரும்பான்மையான விளையாட்டுகள் பெண்களுக்குரியவனவாகவே காணப்பெறுகின்றன. அவை இயற்கையோடு இயைந்தவனவாயும் அமைந்துள்ளன.

ஆடிப்பாடிக் கொண்டே குறி சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒரு கலை. இதனை வெறியாட்டு என்பர். இந்த வெறியாட்டு மகளிரை அணங்குறு மகளிர்(குறிஞ்சி:175).கானவர் வியப்ப... நடுவூர் மன்றத்தடி பெயர்த்தாடி’ (சிலம்பு:வேட்டுவரி) என்பர்.

செம்மூதாயாட்டு என்பது ஒரு வகை விளையாட்டு. செம்மூதாய் என்பது தம்பலப்பூச்சி ஆகும். மழைபெய்து ஓய்ந்த பின் தரையில் ஓடித்திரிவது இது. இன்று இதனைப் பட்டுப்பூச்சி என்று அழைக்கின்றனர். இப்பூச்சிகளின் பின்னால் சென்று அவற்றின் அழகினையும் போக்கினையும் கவனித்து அவற்றைத் தேடிப்பிடித்து குவித்து வைத்து விளையாடும் மகளிர் விளையாட்டு இது.




வண்டு ஓட்டுதல் இன்னொரு விளையாட்டு. வண்டுகள் பின் ஓடி எந்தப் பூவில் அதிகமாய் அவை மொய்க்கின்றன என அறிந்து, அந்தப் பூவில் தேன் மிகுந்திருக்கும் என்பதை அறிவர். அந்த வண்டுகளை விரட்டிவிட்டுப் பூந்தேனைச் சுவைப்பது இவ்விளையாட்டு. தொண்ணூற்றொன்பது வகையான வண்ண மலர்களைத் தேடிக் கொய்து தலைவியும் தோழியரும் அவற்றைச் சூடி ஆடி மகிழும் விளையாட்டைப்பற்றி புலவர் கபிலர் தம் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகின்றார். இதனைப் போதாட்டு என்பர்.



‘இந்திரையோ, இவள் சுந்தரியோ,
தெய்வரம்பையோ, மோகினியோ
மனமுந்தியதோ, வழி முந்தியதோ, கரம் முந்தியதோ
எனவே, உயர் சந்திர சுடர் குறும்பல வீசுரர் சங்கணி வீதியிலே மணிப்
பைந்தொடி நாரி வசந்தடுவாய் யாரி பொற்
பந்து கொண்டாடினனே


(குற்றாலக்குறவஞ்சி)

இவற்றோடு அலவனாட்டு(நீர்க்கரையில் நீண்டினை விரட்டிப் பிடித்தாடும் ஆட்டம்) களி கொய்யு(மாலைப்பொழுதில் மொட்டுகளைக் கொய்து பல வடிவங்களில் கோத்து ஆடுதல்- அத்தியம் போது ஆடும் களிக்கொய்யு’
(அடியார்க்கு நல்லார் உரை)




வருதிரை உதைத்தல்(கடற்கரையில் எழும் அலைகளை எதிர்த்து காலால் உதைத்து விளையாடல்) வண்டலயர்தல் ( மணலைக் குவித்து, பாவை செய்து விளையாடல்)கிலிகிலி (கிளர்ப்பூட்புதல்வரோடு கிலிகிலியாடுதல்- சிறுபாணாற்றுப்படை) இவற்றோடு துணங்கைக் கூத்து( ஆடவர் கைகொடுக்க ஆடுதல்) குரவைக் கூத்து, புனல் ஆடுதல் போன்றவை எல்லாம் தமிழ்ப்பெண்கள் ஆடும் ஆட்டங்களாகும். கோலமிடுதல், கும்மியடித்தல், பூப்பந்தாடல், கோலாட்டம் முதலானவை இன்றும் பெருவழக்கிலுள்ள மகளிர் ஆட்டக் கலைகளாகும்.


May 15, 2009

கண்டஙகள் சுழற்சியால் கடல்கொண்டாலும் பழந்தமிழகத்தை கண்டறிய வேண்டாமா ?

180 மில்லியன் ஆண்டுகள் முன்பு அண்டார்டிகாவை மையமாகக் கொண்ட பெருநிலப்பரப்பு ஒன்றிருந்தது என "பிரிட்டிசு அண்டார்டிகா சர்வே"யின் இணையதளம் தெரிவிக்கிறது. தென்னமரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆசுதிரேலியா, நியுசிலாந்து ஆகிய ஒருங்கிணைந்த பெருநிலப்பரப்பின் மையத்தில் அண்டார்டிகா இருந்தது. அந்த பெருநிலப்பரப்பை கோணடுவானா என்று பெயரிட்டு அழைத்தார்கள். கோண்டுவானாப் பெருநிலத்தின் அடியில் ஓரிடத்தில் வெந்தணல் கனன்று கொண்டிருந்தது. அது உண்டாக்கிய எரிமலைப் பிரதேசம் ஒன்றிருந்தது. அந்த எரிமலைப் பிரதேசத்தின் எச்சங்களை தென்னாப்பிரிக்காவிலும் படகோனியாவிலும் அண்டார்டிகாவிலும் தாசுமேனியாவிலும் இன்றும் காணலாம் என்கின்றனர் அறிவியல் வல்லுனர்கள். கோண்டுவானா உடைந்து பிரிந்தது மூன்று கட்டங்களாக நிகழ்ந்தது. தென்னமரிக்காவும் ஆப்பிரிகாவும் மேற்குப் பகுதிகளாக பிரிந்தன. அண்டார்டிகாவும் ஆசுதிரேலியாவும் இந்தியாவும் நியுசிலாந்தும் கிழக்காகவும் பிரிந்தன. 150 மில்லியன் ஆண்டு முன்பு நிகழ்ந்த அந்தப் பிரிவினால் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையே கடல்பாதை தோன்றிற்று.

இரண்டாவது கட்டமாக 130 மில்லியன் ஆண்டு முன்பு ஆப்பிரிக்க-இந்தியத்தட்டில் இடம் பெற்றிருந்த தென்னமரிக்கா அதிலிருந்து கழன்று கொண்டது. தென்அட்லாண்டிக் கடல் திறந்து கொண்டதால் இது நிகழ்ந்தது. இந்துமாக்கடலின் தரை விரிவாவதால் அண்டார்டிகாவிலிருந்து ஆப்ரிக்க-இந்திய தட்டு பிரிந்தது. கடைசியாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும் நியுசிலாந்தும் பிரிந்தன. கோண்டுவானாப் பெருங்கண்டத்தின் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு எதுவெனில் தென்அட்லாண்டிக் பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட குறுந்தட்டுகளாக அது உடைந்து பிரிந்து சிதறியதைக் குறிப்பிட்டாகல் வேண்டும்.

650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆசுதிரேலியாவும், இந்தியாவும், தென்னமரிக்காவும், ஆப்பிரிக்காவும் அண்டார்டிகாவும் ஒரே கண்டமாக விளங்கின. அங்கிருந்து தான் தமிழர் வரலாற்றை நாம் தொடங்க வேண்டும். வடவேங்கடம் தென்குமரி இடையிலான தமிழ்கூறும் நல்லுலகம் நம் வரலாற்றின் இறுதிக்கட்டம். முதற்கட்டம் கோண்டுவானாப் பெருங்கண்டத்தில் துவங்குகிறது. அந்தக் கண்டத்தை இலெமூரியாக் கண்டம் எனவும் அழைப்பர். குமரிக்கண்டம் என்றும் கூறுவர். கோண்டுவானா பெருங்கண்டத்தின் நிலம்வளர் தாவரங்கள் பற்றியும் நீர்வாழ் மீனினம் பற்றியும் அங்கு திரிந்த விலங்கினங்கள் பற்றியும் கலிபோர்னியப் பல்கலைக்கழகம் பல அரிய உண்மைகளை கண்டெத்துச் சொல்லியுள்ளது.

கடினப்பாறைகள் பல அடங்கிய பெருந்தொகுதி ஒரு கூட்டமாக நகருவதை 1960 ல் அறிஞர்கள் தட்டு என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். ஒரு தட்டின் மீதமர்ந்ததிருந்த கண்டங்களும் கடல்களின் தரையும் அந்தத் தட்டு நகரும்போது நகர்வதனை Plate - tectonics என்று பெயரிட்டனர். 1912ல் தொடங்கிய ஆய்வு 1960 ல் பெயரிடுவதில் முடிந்தது. 1912 ல் ஆல்பிரட் வெக்கனர் அவர்களும் பிராங்க் டெய்லர் அவர்களும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உலகம் ஒரேயொரு பெருங்கண்டமாக விளங்கியது என்றும் அதிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசைகளில் நகர்ந்து சிதறியவையே இன்றுள்ள கண்டங்கள் எனவும் கண்டறிந்தனர்.

ஆல்பிரட்டு வெக்னர் (1880-1930) செருமானிய வானவியல், நிலவியல் அறிஞராவார். கண்டங்களின் சுழற்சிக் கோட்பாட்டின் தந்தையாக அவர் போற்றப்படுகிறார். அவரது "ORIGIN OF CONTINENTS AND OCEANS" என்ற நூல் உலகமே ஒரே கண்டமாக விளங்கிய உண்மையை உரைத்தது. அந்தக் கண்டத்திற்கு பங்கேயா என அவர் பெயரிட்டார். பங்கேயா என்றால் எல்லா நிலமும் All Earth என்ற பொருள் தரும் சொல்லாகும். நாம் அந்தப் பெருங்கண்டத்தைப் பற்றி அறிந்தாக வேண்டும். கல்தோன்றி, கற்களின் பெருந்திரள் தொகுதிகள் நகர்வதே கண்டங்களின் சுழற்சி எனில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் பற்றி நுண்மாண் நுழை புலமொடு சொல்லிய தமிழ்க் கவிஞனையும் நாம் நினைவு கூர்ந்தாகல் வேண்டும்.

உலகத்தின் வரைபடத்தில் - இன்றுள்ள கண்டங்களை தனித்தனியே வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு அவை ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்று பார்த்தவர் ஆல்பிரட் வெக்னர். ஒரு புதிரை விடுவிப்பது போல அவர் தேடினார். படங்களை பொருத்தி வெற்றி கண்டார். எல்லாக் கண்டங்களின் படங்களும் பொருந்தின. ஒன்றாக இருந்த பெருங்கண்டமே உடைந்தது என நிறுவ இது அவருக்கு கிட்டிய முதல் சான்றாக அமைந்தது. தெனன்மரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டெக்கப்பட்ட விலங்கினங்களின் மற்றும் தாவரங்களின் புதை வடிவம் பொருந்துவதைக் கண்டறிந்தார். இரு கண்டங்களின் பாறைகளும் பொருந்துவதை அறிந்தார். பனிப்பாறைகளின் உறைநிலைப் படிவங்கள் தென்னமரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஆசுதிரேலியாவிலும் 300 மில்லியன் ஆண்டுகள் முன்பு படர்ந்திருந்தன. தெற்கு பகுதிக் கண்டங்கள் மீது பனிப்பாறைகள் படர்ந்திருந்தது போல வடக்கிலுள்ள கண்டங்கள் மீது ஏனில்லை? வட கண்டங்கள் நிலநடுக்கோட்டருகில் அப்போது இருந்திருக்கக் கூடும்.

ஆல்பிரட் வெக்கனரின் கருத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. HAROLD JEFERY ஒரு கேள்வி எழுப்பினார். கடினப்பாறைகள் நிறைந்த பெருநிலப்பரப்பு எவ்வாறு கடலின் தரையை உழுதவண்ணம் நகர்ந்திருக்க முடியும்? கடலின் தரை அதனால் உடைந்திருக்காதா? விரிசல் விட்டிருக்காதா? என்று வினா எழுப்பினார். வினாக்கள் எழுப்பாமல் விடைகள் கிடைப்பதில்லை. விஞ்ஞானம் புதிர்களை விடுவிக்கக் கேள்விகளே காரணமாக அமைந்தன. அறிவாளர்கள் என தனிக் கூட்டத்துக்கு முத்திரை குத்தி ஆய்வு நம் பணி அல்ல எனத் தமிழர்களாகிய நாம் நினைக்கிறோம். மேனாடுகளில் மக்களும் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அதனால் தான் அந்நாடுகள் அறிவியலில் முன்னேறுகின்றன. நாம் பின்தங்கியுள்ளோம். JUERGEN HENRICHS என்பவர் அப்படி ஆய்வு செய்பவர். தமது வினாக்களை இணையத்தில் பதிவு செய்து அதனைப் படிப்பவர்களிடம் பதில் கிடைக்குமா என எதிர்பார்ப்பவர். அவர் செருமானியர். Scientific American என்ற ஏட்டை ஆங்கிலத்தில் அவர் படிக்கவில்லை. செருமானிய மொழிப் பதிப்பு வழியாகப் படித்தார். தாய்மொழி வழியில் அவர் படித்ததால் அவரால் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானியர் பன்னெடுங் காலமாகச் சூரியனின் Photospere நடுநிலைக் கோட்டருகே (Equator) வேகமாகக் சுழல்வதை அறிந்துள்ளனர். துருவங்கள் அருகே அவ்வாறு வேகமாகச் சுழல்வதில்லை. அதில் Photospere என்றால் என்ன? ஞாயிறு - விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஔ¤க்கோசம் என பேராசிரியர் அ.சிதம்பரநாதர் செட்டியார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1965ல் வௌ¤யிட்டு 1988 ல் மறுமதிப்பு செய்யப்பட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழக வௌ¤யீடு கூறுகிறது. மொழிபெயர்ப்புச்சிக்கல் காரணமாகவே ஆங்கிலங்கலந்த தமிழ் என்னும் புதிய மணிப்பிரவாளம் வழக்காற்றில் உள்ள உண்மையை உணர வேண்டும். உணர்ந்து நாணுற வேண்டும்.

"When rotating objects contract, the core, becoming more compact, rotates faster than surface a difference that is necessarily most marked at the equator and least at the poles". இது அந்த தன்னார்வ ஆய்வாளரின் விளக்கமாகும். அவ்வாறு விளக்கமளிக்கும் அவர் "Continents are being carried along by an eastward equatorial stream in the earth's mantle, driven by the earth's core rotaing faster than surface" எல்லா நிலநடுக்கமும் மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார். குடிமகன் ஒருவனுக்கும் குவலயத்தில் நிகழும் நிகழ்வுகளுக்குரிய காரணங்களை கண்டறியும் துடிப்புள்ளது கண்டு தமிழ்க்குடிமகன்கள் நாணிட வேண்டாமா? ஈட்டிய பொருளை குடிக்கக் செலவிட்டு குடும்பத்தையே மறந்துவிடும் குடிமகன்கள் உலகின் பிறநாட்டு குடிமகன்கள் போல நேரத்தையும் நினைப்பையும் உலகின் நிலைபற்றி ஆராயச் செலவிடும் நாள் வந்தால் அந்நாளே தமிழர் வரலாற்றில் பொற்காலமாகப் போற்றப்படும். அண்ணா பேசிய பேச்சு நிலையும் நினைப்பும் உங்கள் நினைவில் நிழலாடவில்லையா! நினைப்பு உயர்ந்தால் தான் நாட்டின் நிலை உயரும் என்றாரே நம் உயிரினில் கலந்து உணர்வினில் வாழும் ஒப்பிலாப் பேராசான் அறிஞர் அண்ணா. உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் என்ற வள்ளுவமும் அண்ணன் கருத்தை ஒத்ததே!

64,186,000 சதுர மைல் பரப்புள்ள பசிபிக் பெருங்கடல் சராசரியாக 15,215 அடி ஆழமுடையது.

மரியானா பகுதியில் போட்ட குழி 36,200 அடி ஆழமுடையதாக இருந்தது. அட்லாண்டிக் பெருங்கடலின் பரப்பளவு 33,420,000 சதுர மைல்களாகும்.

சராசரியாக 12,881 மைல் ஆழமும் போர்ட்டோரீகா அருகில் 28,231 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் 28,350,000 சதுர மைல் பரப்புள்ளது.

சராசரியாக 13,002 மைல் ஆழமும் சாவா அருகில் 25,344 அடி ஆழமும் கொண்டது. ஆர்டிக்கடல் 5106 சதுர மைல் பரப்பும் சராசரியாக 3953 அடி ஆழமும் கொண்டது. ஈராசியா அருகில் 17,881 அடி ஆழமுடையது. நிலவுலகின் 70 சதவீத பரப்பை கடல்களே நிறைந்துள்ளன.

ஞால நிலப்பாகம் இன்றுள்ளவாறு 5 கண்டங்களாகவும் ஆயிரக்கணக்கான தீவுகளாகவும் தொனறு தொட்டு இருந்ததில்லை. ஒரு காலத்தில் அது காண்டவனம் (Gondwana) பாலதிக்கம் (Baltica) அமசோனியம் (Amazonia) அங்காரம் (Angara) என்ற நாற்பெரு நிலங்களாகவும் ஒரு சில தீவுகளாகவும் பகுத்திருந்தது என்ற தேவநேயப் பாவாணர் தம் தமிழர் வரலாறு நூலில் வி.ஆர். ராமச்சந்திர தீட்சதர் எழுதிய வரலாற்று முன்னைத் தென்னிந்தியா எனும் நூல் கருத்தை பதித்துள்ளார்.

நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழுபெரும் தீவும் ஏழ்பொழி லெனப்படும்

என்பது திவாகர நிகண்டு ஏழு கண்டங்களாக ஞாலம் இருந்ததை திவாகர நிகண்டு வழி அறியலாம்.

உயிரினங்களின் இடம்பெயர்வும் பாதீடும் பற்றிய அதிகாரத்தில் ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும் போது எக்கெல் இந்து மாவாரி ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாய் ஆப்ரிக்காவின் கீழ்கரை வரைக்கும் பரவி இருந்த ஒரு கண்டமாயிருந்தது என்பார்.

கிளேற்றர் இப்பழங்காலப் பெருங்கண்டத்திற்கு அதில் வதிந்த குரங்கொத்த உயிரி பற்றி இலெமூரியா என்று பெயரிட்டுள்ளார் எனவும் பாவாணர் "தமிழர் வரலாறு" எழுதுகையில் பதிந்துள்ளார். இலக்கியச் சான்றுகள் ஏற்புடையன அல்ல என்று தமிழிலக்கியச் சான்றுகளை ஒதுக்கித் தள்ளுவோர் உள்ளனர். இலமூரியா பற்றித் தமிழர் கூறினால் நீங்கள் ஏற்கத் தயங்குவீர்கள். ஆங்கிலேயர் கூறினால் ஆகா! ஆகா! என நீங்கள் மெச்சக்கூடும். இங்கு கூறுபவர் ஆங்கிலேயரல்ல. பிரெஞ்சுக்காரர்.

James Churchward 5 நூல்கள் எழுதினார். அவை 1. The Lost continent of Mu 2. The Children of Mu 3. The Sacred Symbols of Mu 4. The Cosmic Forces of Mu 5. The Second Book of the Cosmic Forces of Mu சேம்சு சர்ச்வார்டின் நண்பர் அகத்தும் அவர் மனைவி அலிசுலெ பிளங்கோனும் மாயன் நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காக மத்திய அமெரிக்க காடுகளில் திரிந்தவர்கள். பல பழைய இலக்கிய சுவடிகளை கண்டெடுத்தார்கள். அதனை மொழி பெயர்த்தார்கள். மாயன் நாகரிகத்தில் அரசி மூ கோலோச்சினாள். அதைக் கொண்டு அவர்கள் இலமூரியாக்கண்டத்தை மூ என்று அழைத்தார்கள். மூ என்னும் கண்டம் 5000 மைல் நீண்டது. 3000 மைல் அகண்டது என சேம்சு சர்ச்வார்டு கூறுகிறார். அந்தப் பிரெஞ்சு தம்பதிகள் கண்டெடுத்த மாயன் நாகரிக இலக்கிய ஏடுகளில் இருந்து தானறிந்தவற்றை சேம்சு சர்ச்வார்டு மேற்சொன்ன 5 நூல்களில் பதிவு செய்தார். மறைந்த மூ கண்டம் 60000 ஆண்டு முன்பு ஒரு கொடி நிலநடுக்கத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலில் மூழ்கியதாக அவர் கூறுகிறார். அவாய் தீவுகளும் பசிபிக் தீவுகளும் மறைந்த அந்தக் கண்டத்தில் மலைகளாக இருந்த உயர்ந்த சிகரங்களாக விளங்கியமையால் கடலுள் மூழ்காமல் மிச்ச முள்ளவை என்கிறார் அவர். மறைந்த கண்டம் பற்றி கல்வெட்டெழுத்துகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் மறைந்த கண்டத்தின் வரைபடம் செதுக்கப்பட்டிருந்தது. டாக்டர் சேவியர் காப்ரெழா அக்கல்வெட்டை கண்டெடுத்தார். இராபர்ட் சாரௌக்க அதனைப் புகைப்படம் பிடித்தார். ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆதம் மாலிக்கின் செயலரான பரீதா இசுகோவியத் 1972 ல் Mauiக்கு வந்தார். அங்கிருந்த அழிவுகளையும் வரலாற்றையும் ஆய்ந்து அவை உண்மை எனும் முடிவுக்கு வந்தார். 50000 ஆண்டு முன்பு இலமூரியா(அ)மூ கண்டம் மறைந்த போது 2000த்துக்கு மேல் தமிழர்களாகிய எங்களுக்கு எண்ணிக்கை தெரியாதே? மேடைதோறும் ஈராயிரமாண்டு நாகரிகம் எமதென்று கிளிப்பிள்ளைகள் போல் சொல்லும் புலவர் கூட்டம் எங்களுடையது என்கிறீர்களா? மாயன் நாகரிகமாவது 50000 ஆண்டு சென்னையை ஒட்டியுள்ள பூண்டியில் 100000 ஆண்டு முன்பு தமிழன் வாழ்ந்தான். நம்ப மறுக்கிறீர்களா? New India Express செப்டம்பர் 6-2004 இதழின் முதல்பக்கத்தைப் பாருங்கள். நாங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கமில்லாதவர்கள் என்று தப்பிக்க பார்க்காதீர்கள்.

One Lakh Years ago People Lived in Poondi முதல் பக்கத்தில் எல்லாப் பதிப்புகளிலும் வெளியான செய்தி. தமிழக அரசின் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு பற்றிய செய்தி. கண்டெடுத்த அறிஞர்களை போற்றுவோம். கடல்கொண்ட குமரிக் கண்டத்தை கடலடியில் தேடுவோம்.



Mar 14, 2009

வளரி

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

அமைப்பு;

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்;வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன்;

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.


என்றோ எதிலோ படித்தது...
ரா.வெங்கட்ராமன்.
மு.சூரக்குடி.


பிராமி எழுத்துக்கள்



தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில்எழுதப்பெற்றவைகளாகும்.இந்தியாவில் கி்டைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகாலில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.