Showing posts with label டீன் ஏஜ். Show all posts
Showing posts with label டீன் ஏஜ். Show all posts

Aug 16, 2011

கணினியில் வேவு பார்க்கப் பயன்படும் மென்பொருட்கள்.



நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. 



இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமாகத் தெரியும் செய்திகளுக்கானப் புகைப்பட பதிவுகள், சிலருக்கு மனச்சிதைவைக்கூட ஏற்படுத்தலாம்.  பெரியவர்களுக்கே சவால் விடும் சக்திமிக்க ஊடகமான இணையத்தினை இன்றையக் குழந்தைகள் கையாளும் போது, இணையம் குறித்துத் தெரிந்த பெற்றோர்களுக்கு பதட்டமாக இருக்கும். அந்த பதட்டத்தின் காரணமாக மகனோ, மகளோ கணினி முன் அமர்ந்தால் வேறு வழியின்றி இவர்களும் கன்னத்தில் கைவைத்து திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பார்கள். இணையம் குறித்தான விவரங்கள அறியாத பெற்றோர்கள் தன் பிள்ளை சந்திரனுக்கு ராக்கெட் குறித்தான ஆராய்ச்சியில் இருப்பது போல மாயைத் தோன்றும், அதன் காரணத்தால் தனியறை ஒன்று ஏற்பாடு செய்து கணினியும், பிள்ளையும் சூடாகி விடக்கூடாதென்பதற்காக குளிர்வசதி செய்து கொடுத்து தூரத்தில் நின்று ரசிப்பார்கள். 

Jun 7, 2009

பருவம் என்பது 13 வயதிலிருந்து 19 வயது வரை


கொடி அசைந்ததும் காற்று வந்ததா - காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

பழைய திரைப்படப் பாடல் என்றாலும் இன்றும் அது ஏற்றுக் கொள்ளலாம் போலத் தான் இருக்கிறது.
பருவம் என்பது எது? ஏன் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது?

பருவ நிலை மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் இருக்கிறது. பருவத்தில் பெய்யும் மழை தான் பயிரையே வாழ வைக்கிறது. ஆக பருவம் என்பது மனித வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தப் பருவம் என்பது 13 வயதிலிருந்து 19 வயது வரை என்கிறார்கள்.

இந்தப் பருவத்தில் உடலில் மட்டுமல்ல மனதிலும் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. அது வரைக்கும் குழந்தைகளாய் இருந்தவர்கள் டீனேஜ் நிலை வந்ததும் சட்டென தங்களைப் பெரியவர்களாய் நினைத்துக் கொண்டு குழந்தைத் தன்மையை இழக்கிறார்கள்.

அது வரை இருந்த ஆசைகளும் விருப்பங்களும் வித்தியாசமான கோணத்தில் செல்கின்றன. டீன் ஏஜ் எனும் பருவ வயது பதிமூன்று வயதில் ஆரம்பமாகிறது. இது ஒரு ஆணை விட பெண்ணை அதிகம் பாதிக்கிறது காரணம் அவளது உடல் நிலை மாற்றங்கள். மார்பக வளர்ச்சியும், மென்சஸ் எனப்படும் மாதவிடாய் நிகழ்வும் அவளிடம் பெரும் மாற்றத்தை உண்டாக்குகிறது.

இந்த வயதில் எதிர்பாலரிடம் கவர்ச்சி வருவது இயல்பு. டீனேஜ் பெண்ணுக்கு

சிரித்துப் பேசும் பையனிடம் மனம் செல்வதும் அழகாய் வெட்கப்படும் இளம் பெண்ணிடம் ஒரு ஆணுக்கு ஆசை ஏற்படுவதும் இயற்கை. இந்த வயதில் அறிவை விட மனம் தான் அதிகம் வேலை செய்யும். ஆசைப்பட்டதை அடைய வேகம் வரும்.. ஆனாலும் டீன் எஜ் பருவத்தினர் சற்று யோசிக்க வேண்டும்.

இதனை ஆங்கிலத்தில் affection என்று கூறுவார்கள். டீன் ஏஜ் பொழுது வரும் இந்த கவர்தல், பிடித்தல் எல்லாவற்றையும் உடனடியாக positive ஆக எடுத்துக் கொள்ளாமல், இது உண்மையான காதலா அல்லது வெறும் affection என்று இக்கால பருவத்தினர் நன்றாக உணர்ந்தே இருக்கிறார்கள்.

ஆனால் இரண்டிலும் எது வரம்பு மீறியது, எது வரம்புக்கு உட்பட்டது என்று

புரிந்து கொள்வதில் தான் சற்றே குழம்பி விடுகிறார்கள் எனலாம்...காதல் வேறு காமம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காதலிப்பது தவறல்ல - ஆனால் உணவில் உடுக்கும் உடையில் தரம் பார்த்து செயல்படும் போது எதிர்கால வாழ்க்கைத் துணையை தனக்கு ஏற்ற தரத்திலுள்ளதா என ஆராயவும் சிலர் தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் தனது பெற்றொரிடமோ ஆத்ம தோழமையிடமோ மனம் விட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.

இசை கேட்பது, புத்தகம் படிப்பது, உறவினரிடம் மனம் விட்டு பேசுவது என்பது போன்ற செயல்களினால் மனத்தில் ஒரு தெளிவையும் உண்டாக்கி கொள்கிறார்கள்.

பருவ வயதில் உடல் பிரக்ஞை, பெருசுகளால் வரும் சில விஷமங்களை '
எதிர்கொள்வது, படிப்பு, எதிர்காலம் என்று நிறைய பிரச்சினைகள், சவால்களை டீன் ஏஜ் பருவத்தினர் சந்திக்கிறார்கள். நவீன விஞ்ஞான யுகத்தில் செல்போன், கம்ப்பூட்டர் என்று அவர்களை திசை திருப்ப ஆயிரம் வழிகள்.

அனைத்தையும் மீறி டீன் ஏஜ் பருவத்தினர் சாதிக்க வேண்டுமானால் பருவ வயதில் சினேகமாய் பழகி, பழகும் காலத்திலேயே புரிந்து கொண்டு விட்டால் எதிர்காலம் ஒரு சுவாரசியமுடனும் உணர்ச்சிப் பெருக்கோடு புத்திசாலித்தனமும் கலந்து நம் டீன் ஏஜினரை வரவேற்க தயாராக உள்ளது!!