Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts
Showing posts with label சுய முன்னேற்றம். Show all posts

Nov 20, 2013

சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..!

      ஒவ்வொரு இண்டர்வியூவிலும் இதை நான் தவறாது கேட்கிறேன்: “இந்த பையன் ரொம்ப இன்ட்ராவர்ட்டா இருக்கான். உம்மணாமூஞ்சி மாதிரி இருக்கற இவன் தேறமாட்டான். வாயைத் திறந்து கூட பேசாதவனை வச்சு எப்படி வேலை செய்யறது?” 



இன்ட்ராவர்ட்:
“Introvert” : இன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஆளுமைப் பண்பு. கார்ல் யூங் எனும் உளவியல் அறிஞர் ஆளுமைகளை வகைப்படுத்தினார். தன் இருப்பிற்குத் தேவையான சக்தியையும் உந்துதலையும் உள்ளிருந்து பெறுபவனை இன்ட்ராவர்ட் என்றார். இவற்றை வெளியிலிருந்து பெறுபவனை எக்ஸ்ட்ராவர்ட் என்றார்.
ஒரு இன்ட்ராவர்ட் தன் உலகில் திளைத்து இருப்பவன். யாரும் இல்லாமல் தன்னை நிறைவாக வைத்து கொள்ளத் தெரிந்தவன். இவர்கள் தனியாக செய்யும் வேலைகளை விரும்பி செய்வார்கள். உணர்வுகளை தாமாக முன் வந்து பகிராதவர்கள். பேசுவதை விட கேட்பதில் கவனம் செலுத்துவார்கள்.
எக்ஸ்ட்ராவர்ட்
எக்ஸ்ட்ராவர்ட் ஆசாமிக்கு சுற்றிலும் ஆட்கள் வேண்டும். ரயிலில் அன்னியர்களிடம் கூட இவர்கள் கேட்காமலேயே கருத்து சொல்வார்கள். அரட்டை பிரியர்களான இவர்களுக்கு சீக்கிரம் எல்லாம் போரடித்துவிடும். ஒரு நிமிடம் தனியே இருந்தாலும் உடனே செல்போனிலாவது யாரிடமாவது பேசினால் தான் உயிர் வரும். இவர்கள் பிறர் சொல்வதை கேட்பதை விட தாம் பேசுவதில் குறியாக இருப்பார்கள்.

Jun 1, 2009

பொருளாதார கட்டுபாட்டு கருவி


நமக்கு ஒரு கருவி தேவை படுகிறது. கருவியா அது என்ன ?
எடுத்துக்காட்டு ;

ஒரு அறையில் குளிர் கட்டுபாட்டு(Air condition) கருவி உள்ளது.அதன் வெட்ப நிலை 72 டிகிரி யாக உள்ளது

1. இப்போது அறையின் வெளிப்புறத்தில் காற்று குளிர் அளவு 65 டிகிரியாக மாறுகிறது என்றால். குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் அளவை 65 ==> 72 அதிகமாகும்.
65 ==> 72

2. இப்போது அறையின் வெளிப்புறத்தில் காற்று குளிர் அளவு 80 டிகிரியாக மாறுகிறது என்றால். குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் அளவை 80 ==> 72 சீராக்கும்.
80 ==> 72

பாடம் என்னவென்றால் 65 ஆக இருந்தாலும் சரி அல்லது 80 ஆக இருந்தாலும் சரி
குளிரரூட்டும் கருவியான (Thermostat) அதன் 72 டிகிரி அளவை அரையின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

"நமக்கு இதுபோன்று கட்டுபாட்டு கருவி தேவை படுகிறது.
பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat)"

இந்த பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat) நமது பொருளாதார சீரமைப்புக்கு உதவும்.நம்முடைய கஷ்ட காலத்திலும் செழுமை காலத்திலும்.
சீரான பொருளாதார வசதியை தர இந்த பொருளாதார கட்டுபாட்டு கருவி (Financial Thermostat) நமக்கு தேவை படுகிறது.

விரிவாக சில விளகத்துடன்

சிந்தனை --> உணர்வு --> செயல் = பயன்
Thoughts -->Feelings-->Action = RESULTS
சிந்தனை = நீங்கள் சிந்திங்கும் விதம்
உணர்வு = உங்களது அனுபவங்கள்
செயல் = நீங்கள் செய்யும் முயற்சிகள் அல்லது செயல்
இத்தணையும் சேர்ந்துதான் அமைகிறது
"பொருளாதார வரைபடம் (FINANCIAL BLUEPRINT)"

வெற்றியாளர்களுக்கும் , வெற்றியடையதவர்களுகும் (நன்றாக படியுங்கள் வெற்றியடையதவர்கள் தோல்வியாளர்கள் அல்ல ) உள்ள வித்தியாசங்கள் அவர்களின் பொருளாதார வரைபடம் (FINANCIAL BLUEPRINT) பொறுத்தே அமையும்.

வெற்றியாளர்கள் => "நான் என் வாழ்கையை உருவாக்குகிறேன்! "
வெற்றியடையதவர்கள் ==> " என் வழக்கை அமைந்த விதத்தில் நான் வாழ்கிறேன்!"
எவ்வளவு வித்தியாசங்கள்

பொதுவாக வெற்றியடயாதவர்களை பாதிக்கப்பட்டவர்(VICTIM) என்று சொல்லலாம்.

இப்படி பாதிக்கப்பட்டவர்(VICTIM) மூன்று விஷயங்களை கூறுவார்கள்.

1.குறை (Blame)
2.மதிபிடுதல் (Justify)
3.புலம்பல் (Complain)

குறை :-
மட்டறவர்களை குறை கூறுவது
பெற்றோர் , வேலை, அலுவலகம் ,அரசாங்கம், உடன் பணிபுரிவோர்,பொருளாதாரம்,
இப்படி பலவற்றை குறை கூறுவது.

மதிபிடுதல்:-
"எனக்கு நான் சம்பாதிக்கும் பணம் போதுமானது , எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்".
பொதுவாக குடும்பத்தையும் செறிவு (Richness) இதையும் ஒப்பிடும் பழக்கம் தவறானது. நமக்கு குடும்பமும் அதனுடன் சேர்ந்த செறிவு (RICH) வேண்டும்.

புலம்பல்:-
தன்னை தாழ்மையாக எண்ணி புலம்பல் அல்லது உடல்நிலை சரிஇல்லை என்று புலம்புவது

இப்படி மூன்று விஷயத்தால் பாதிக்கபடுவர்.

அதனால் இந்த பொருளாதார வரைபடத்தை (Financial BluePrint) மாற்றவேண்டும்.

"முதல் ஒரு 7 நாட்களுக்கு குறை சொல்வது , தவறான மதிபிடு, புலம்புதல் ஆகியவற்றை தவிருங்கள் "


அந்த 7 நாட்களும் (எதோ படத்தின் பெயர் போல உள்ளதா <{;o) ) உங்களக்கு நல்ல சிந்தனைகள் , உணர்வுகள் , செயல்கள் நடக்கும். இந்த 7 நாட்கள் பயன்கள் உங்களுக்கு பிடித்துவிடும் அதையே தொடர்ந்து செய்வீர்கள்.

May 16, 2009

மேலாண்மை

இராமாயணக் கதையில், இராமன் சீதையைப் பிரிந்து காட்டில் பல கஷ்டங்களை அனுபவித்து, சீதை போன இடமே தெரியாமல் தவித்திருந்த காலகட்டம். அப்போது எதிர்பாராத விதமாய் கிஷ்கிந்தையில் அனுமனைச் சந்திப்பதுதான் இராமரின் பிரச்சினைகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அனுமன் இராமனுக்குச் சுக்ரீவனை அறிமுகம் செய்து வைத்து, வானர சேனையின் துணையைப் பெற்றுத் தந்து, கடல் தாண்டிப் போய் சீதையைச் சந்தித்தது முதல் கடைசி வரை இராமனின் குறை தீர்ப்பதில் அனுமனின் பங்கு அதிகம். இராமன் பட்டாபிஷேகம் நடக்கும் போது, இதற்குத் தான்தான் காரணம் என்ற கர்வம் கொஞ்சமும் இல்லாமல், இராமனின் காலடியில், கரம் கூப்பி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அனுமனின் அந்தப் பணிவு மிகப் பெரிய தலைமைப் பண்பு.

ஒரு சின்ன தேர்தலில் கூட, தலைவர் வெற்றிக்காகப் பாடுபட்ட, பாடுபட்டதாகக் காட்டிக் கொண்ட பல குட்டித் தலைவர்கள், வெற்றி விழா மேடையில் ஃபோட்டோவுக்காக போஸ் கொடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு தங்கள் தலைகளை நுழைத்துக் கொள்வதில் சாமர்த்தியம் காட்டுகிறார்கள் என்பதை இன்று பார்க்கிறோம்.

ஒருமுறை வெளிநாடு போய்விட்டு வந்தாலே நம்மில் பலருக்கு நடை, உடை, பாவனை மாறி விடுகிறது. அவர்கள் அணிந்து கொள்ளும் உடையும், அணியும் விதமும், வார்த்தைகளும், ஏதோ வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்ததைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்கப் படாதபாடு படுகிறார்கள் என்பதை உணர்த்தும் பலர் நம் நாட்டைப் பற்றியே பல மட்டமான கருத்துக்களைச் சொல்வதையும் கேட்கிறோம்.

ஆனால் வெளிநாடு சென்று, படித்து, பட்டம் பெற்று, வெளிநாட்டில் பல ஆண்டுகள் சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றி, இந்தியா திரும்பிய காந்தி என்ன செய்தார்? மதுரை அருகே ஒரு ஏழைக் குடியானவன் சட்டை இல்லாமல் இருப்பதைப் பார்த்து, தானும் ஒரு அரை நிர்வாணப் பக்கிரியாக மாறிவிட்டார்! அவரது நடை, உடை, பாவனை எல்லாம் மேலும் மேலும் ஒரு சாதாரண இந்தியனை ஒத்து இருக்கும் படி மாற்றிக் கொண்டார். நாட்டுப் பற்று நாளுக்கு நாள் அதிகமானதே தவிர கொஞ்சமும் குறையவில்லை. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தும், தாய்மொழியை விடவில்லை. மேலும் பல இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்தார். ‘விரும்பி ஏற்றுக் கொண்ட வறுமை’ அவர் வாழ்க்கை முறை ஆனது.

ரிஷிகேஷ் வழியாக சுவாமி விவேகானந்தர் சென்று கொண்டிருந்த நேரம். கங்கைக் கரையில் ஒரு பெரிய மகான் அமர்ந்து, தியானம் செய்து கொண்டு இருப்பதைக் கண்டார். அவர் முகத்தைப் பார்த்தாலே அவர் மிகப் பெரிய ஞானி என்பது விவேகானந்தருக்குப் புலனாயிற்று. அவரிடம் சென்று பேச ஆரம்பித்தார். தன்னுடைய அனுபவங்கள், சென்ற இடங்கள், பார்த்துப் பழகிய மகான்கள் என்று விவேகானந்தர் வரிசையாகச் சொல்லிக் கொண்டே போனார். விவேகானந்தர் தான் பவஹாரி பாபாவைச் சந்தித்ததாகச் சொன்ன போது ஞானியின் முகம் பிரகாசம் அடைந்தது. “அப்படியா! பாபாவைத் தெரியுமா?” என்று கேட்டார். பின்னர், “அந்த பாபா ஆஸ்ரமத்தில் ஒரு திருட்டு நடந்ததே தெரியுமா?” என்றார். “தெரியுமே” என்ற சுவாமி விவேகானந்தர் அந்தக் கதையைச் சொன்னார்.

ஒருமுறை பாபாவின் ஆஸ்ரமத்தில் ஒரு திருடன் நுழைந்து விட்டான். சில பொருட்களை எடுத்து ஒரு மூட்டையில் போட்டுக் கொண்டு இருக்கும் வேளையில் பாபா எழுந்துவிட்டார். உடனே திருடன் பயந்து போய், அந்த மூட்டையைக் கீழே போட்டு விட்டு, ஓட்டம் எடுத்தான். ஆனால் பாபாவோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு அந்தத் திருடன் பின்னால் ஓடி, துரத்திப் பிடித்து, அந்த மூட்டையை அவனிடமே கொடுத்துவிட்டார். “அப்பா, இது உன் சொத்து, எடுத்துக் கொள்” என்று கூறினார்.

இந்தக் கதையை சுவாமி விவேகானந்தர் சொல்லி முடித்தவுடன், அந்த ஞானி கண்ணீருடன் கூறினார். “அந்தத் திருடன் நான்தான். பாபாவின் அந்தச் செயல், அந்த மனித நேயம், அந்தப் பணிவு என்னை மாற்றி விட்டது. என் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, நானும் பாபாவைப் போல ஆத்ம ஞானத் தேடலில் இறங்கிவிட்டேன்” என்றார்.

நாம் மற்றவர்களை நடத்தும் விதத்தில், யாரையும் மாற்றி நம் வழிக்குக் கொண்டுவந்துவிட முடியும். அதிகாரத்தை விடப் பணிவு வலியது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு டீம் இணைந்து வேலை செய்யும் போது, தலைவனுக்கு டீமில் இருப்பவர் ஒவ்வொருவர் மீதும் நம்பிக்கை இருக்க வேண்டும். செய்யும் செயலுக்கு வேண்டிய திறமை இருக்கிறதா என்று சோதித்து, இல்லாத திறமையை வளர்த்துக் கொள்ள என்ன வழி என்பதை டீம் லீடர் யோசிக்க வேண்டும். “மேலாண்மை என்பது இதைச் செய், அதைச் செய் என்று சொல்லிக் கொண்டு இருப்பது அல்ல. எதைச் செய்ய வேண்டுமோ அதற்குண்டான திறமைகளை வளர்த்து விடுவது ஆகும்

திறமைகளை வளர்த்துக் கொள்ள வழி காட்டி, பிறகு அந்தத் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கொடுப்பவனே தலைவன் ஆகிறான். அனைத்து வேலைகளையும் ஒரு குழு செய்து முடிக்க முடியும் என்ற நிலை வரும் போது, தலைவன் அடிக்கடி தலையிட தேவை இல்லாமல் போகிறது. எனவே அந்தக் குழுவே முடிவுகளை எடுத்து வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இந்த நிலைக்கு வந்துவிட்ட குழுவைத்தான் “Empowered Team” என்று கூறுகிறோம். இது ஏற்பட வேண்டும் எனில் முதலில் தலைவன், தன் குழுவில் உள்ள அனைவரையும் மதித்து, தான் பணிவாக நடந்து கொண்டு வழிகாட்டினால், வழி விட்டால்தான் இயலும். மாறாக ஒவ்வொரு விஷயத்திலும் தலைவன் தலையிட்டுக் கொண்டு இருந்தால், குழுவில் இருப்பவர்கள் முழுவதும் தலைவனைச் சார்ந்தவர்களாகவே உருவாகுவார்கள். தானாகவே எந்த முடிவும் எடுக்கும் திறமை அற்றவர்களாக, எல்லா செயல்களும் தாமதம் அடையக் காரணம் ஆகிறார்கள்.

தலைவன் பணிவுள்ளவனாக இருந்தால் மட்டுமே, புதிய தலைவர்கள் உருவாக வழிவிடுகிறான். ‘யாவரையும் மதித்து வாழும்’ தலைவனே ஒரு ஆரோக்கியமான சமுதாயம் உருவாகக் காரணமாக இருக்கிறான்.

Apr 9, 2009

முழு விழிப்புணர்வு ...

நம் கண்ணில் ஒரு தூசு விழுந்தால், இமை தானே மூடிக்கொள்ளும். கையில் சூடு பட்டுவிட்டால் சடாரென வாய்க்குள் நுழைத்துக்கொண்டு சூடாற்றிக் கொள்கிறோம். இது போன்ற உடல் சார்ந்த விஷயங்கள் தானே அனிச்சையாய் நடைபெறும்.

அதுபோல தானே அனிச்சையாய் நடக்கக்கூடிய விஷயங்கள் பல உண்டு.

சைக்கிள் சாவியை தினமும் வைக்கவேண்டிய இடத்தில் சரியாய் வைப்போம். புதுப்பேனா வாங்கினால் நம் பெயரை எழுதிப்பார்ப்போம். வேறு எதையும் பெரும்பாலும் எழுதுவதில்லை. சன் மியுசிக் சேனல் வைக்கத் தானே கை ரிமோட்டில் ஒரு நம்பரின் மேல் வைக்கும்.

தினமும், ஒரே பாதையில் எட்டு வருடமாகக் காலை எட்டு மணிக்குப் போய்க்கொண்டிருந்தால், செல்லும் பாதையின்மீது நம் கவனம் இருக்கவேண்டிய அவசியமில்லை. பொதுவாக எல்லோருக்குமே எங்கேயாவது சென்று கொண்டிருக்கும்போது முந்தினநாள் விஷயங்களையோ, அல்லது இன்று அலுவலகத்தில் செய்யப்போகின்றவையோ, ஏதோ ஒன்றை மனம் போட்டுத் தாளித்துக் கொண்டிருக்கும். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக சாலையில் யாரிடமும் மோதிக்கொள்ளாமல், திரும்ப வேண்டிய சந்துபொந்துகளில் சரியாய்த் திரும்பி போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு சரியாய்ச் சென்று சேர்ந்திருப்போம்.

ஒரு வேலையை அல்லது செயலை (Activity) நாம் செய்யும்போது, நாம் செய்வது நம் மனதில் பதிகிறதா? அல்லது மனது சொல்கிறபடி நாம் செய்கிறோமா?

இரண்டும் ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். முதன்முதலில் நாம் செய்வதுதான் நம் மனதில் பதிகிறது. ஒருமுறை பதிந்துவிட்டால் அதன்பின் மனது சொல்கிறபடி நாம் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம்.

சிகரெட் பிடிக்க நினைப்பதும், சூடா டீ சாப்பிடணும்போலத் தோணுது என்பதும், அழகான பெண்ணைப் பார்த்தவுடன் 'லுக்கு' விடத் தூண்டுவதும் இந்த மனதினால்தான். உணர்வு மனதுடன் (Conscious mind) முதன்முதலில் நாம் செய்யும் ஒரு செயல், ஆழ்மனதில் (Subconscious mind)பதிந்து விடுகிறது. நமது உணர்வு மனதில் பதிந்த எந்த விஷயத்தையும் எளிதாக நாம் அழிக்க முடியும். ஆனால் ஆழ் மனதில் பதிந்தவற்றை அகற்றுவதென்பது அவ்வளவு எளிதல்ல.

சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களைக் கவனித்திருப்போமே. அவர்களாகவே அதை விட்டுவிடவேண்டும் என ஆசைப்பட்டாலும் அது முடிவதில்லை, அவ்வளவு எளிதில். நல்லதோ கெட்டதோ முதன்முதலில் பதிந்த விஷயம், பதிந்ததுதான். திடமான நம்பிக்கை (Will power) வேண்டும் அதை மாற்றுவதற்கு.

இப்படி பற்பல விஷயங்களைப் பழக்கத்தினால் நாம் அறியாமலேயே சரியாகச் செய்துகொண்டிருப்போம்.
அதையே அறிந்து செய்தால் என்ன?


இதிலென்ன 'அறிய' வேண்டிக் கிடக்கிறது?

ஐய்யோ..சாமி.. 'அறிந்து' செய்துதான் பார்ப்போமே!

சரி.. எப்படி செய்வது? எதற்காக செய்கிறோம்?

நாம் ஒன்றும் புதிதாகச் சொல்லப் போவதில்லை. புதிய மொந்தையில் பழைய கள்! தற்போது உலகத்தில் சொல்லப்படும் தத்துவங்கள் எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள்தான். சொல்லப்பட்ட விஷயங்களை தங்கள் மொழி நடைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சுவாரசியமாகச் சொல்கிறார்கள், அல்லது சொல்ல நினைக்கிறார்கள்!

புத்தர் காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவம் படித்திருப்போம். புத்தரும் அவரது சீடர்களும் யாசகம் பெற்றுசாப்பிடுவதுதான் வழக்கம். ஒரு நாள், ஒரு இளம் சீடர் தனது மனம் அதிகம் சலனமடைவதாக புத்தரிடம் சொன்னார்.

விளக்கிக் கூறுமாறு புத்தர் கேட்க, இளம் சீடரும் தாம் ஒரு வீட்டுக்கு பிக்ஷை வாங்கப்போகும்போதேல்லாம் அந்த இல்லத்தம்மணியின் அழகு தம் மனதைச் சலனமடையச் செய்வதாகவும், பிக்ஷை வாங்கும்போது குற்ற உணர்ச்சியினால் கைகள் நடுக்கமடைவதாகவும் கூறினார். மேலும் அந்த வீட்டுக்கு இனிமேல் தன்னால் செல்ல இயலாதெனவும் தனது எண்ணங்கள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் சற்று நடுக்கமுடன் கூறினார்.

புத்தர் வாஞ்சையுடன் பதிலளித்தார், "உனது எண்ணங்களைக் உற்றுக் கவனி. நீ யார் என்பதையும் மனதில் நிறுத்து. பிட்சை கேட்க மட்டுமே நீ சென்றிருக்கிறாய் என்பதை உணர்வில் வைத்திரு"

அந்த வீட்டிற்குச் சென்ற சீடருக்கு மீண்டும் மனம் தடுமாற, அப்பெண்மணி கேட்டார், "எம்மை அடைய வேண்டுமென்று உமக்குத் தோன்றுகிறதா?"

அரண்டு போய்க் கேட்டார் சீடர். "எனது எண்ணங்கள் உன்னை எட்டுகின்றனவா?"

பெண்மணி சொன்னார், "ஆம். தியானம் செய்து செய்து மனம் சூன்யமாகி விட்டது"

சீடர் திரும்பி வந்து நடந்ததைக் கூற, புன்னகை புரிந்த புத்தர் "இனிதான் நீ அங்கே அடிக்கடி செல்ல வேண்டும். உனது எண்ணங்களை மீண்டும் மீண்டும் உற்றுக் கவனி. நீ யார் என்பதையும் மனதில் நிறுத்து. நீ யார் என்ற தெளிந்த எண்ணத்துடன் அந்த அம்மணியைக் காண்பாயானால் உன் மனம் சலனமடையாது" என்றார்.

தொடர்ந்து அந்த வீட்டிற்குச் சென்ற சீடர், மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக தனது எண்ண அலைகளை உற்று கவனித்து, அது தடுமாறும் போதெல்லாம் தான் ஒரு துறவி என்றும், தான் வந்திருப்பது யாசகம் கேட்க மட்டுமே என்றும், அப்பெண்மணியின் முகத்தைக் காணும்போதெல்லாம் மனதில் விழிப்புணர்வோடு யாசகம் கேட்கலானார்.

நாளடைவில் எந்தச் செயலைச் செய்தாலும் முழு விழிப்புணர்வுடன் தனக்கு தேவை எது, தேவையில்லாதது எது என்று தெளிந்த அறிவுடன் செய்வது பழக்கமாகவே ஆகிவிட்டது சீடருக்கு.

அவ்வளவுதான் விஷயம்.

தன் மனதைக் கவனிக்கும் இந்த சுயவிழிப்புணர்வு நிலையினால் கிடைக்கும் பயன்கள் :

ஒரு செயலில் நிலைத்த மனம் (Concentration)
நல்ல/கெட்ட பழக்கங்களைப் பகுத்தறியும் தெளிந்த அறிவு
மன அழுத்தத்திற்கு ஆட்படாமை
விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறன்

மிக மிக முக்கியமான இன்னொரு பயன், நாம் மட்டும் தெளிவடைவது மட்டுமன்றி, நமது நேர்மறையான எண்ண அலைகள் நம்மைச் சுற்றியுள்ளோர்களையும் அரவணைத்து அவர்களுக்கும் தெளிவை உண்டாக்கும்.

இதைப் படித்ததோடல்லாமல் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். முதலில் மூன்று மணிநேரம் செய்து பார்ப்போம் என ஆரம்பியுங்கள். தினமும் வேலை நேரங்களில் மூன்று மணி நேரம் போதும். சிறிது நாட்களுக்குப் பின் மூன்றை ஆறு ஆக்குங்கள்.

தினமும் காலையில் மனதில் இன்றைய பொழுதை என் முழு மன விழிப்புணர்வுடன் கழிப்பேன். எந்தக் காரியமானாலும் சரி, நான் செய்வதை நானே கவனிப்பேன், ஒரு மூன்றாம் நபரைப்போல.

படிப்படியாகச் செய்யுங்கள், அவசரம் வேண்டாம். இரண்டு வாரங்களிலேயே குறிப்பிடத்தக்க மாற்றம் தெரியும். இரண்டே மாதங்களில் அது பழக்கமாகவே ஆகிவிடும்.

அலுவலகத்தில் முக்கிய வேலையில் இருக்கும்போது தேவையில்லாமல் முதல்நாள் பார்த்த சினிமாவின் தாக்கம் மனதில் நெருடுகிறதா, எண்ணங்களை தன் போக்கில் இழுத்துச்செல்கிறதா?

வேலையை நிறுத்துவோம் - மனதைக் கவனிப்போம் - தற்போது என்ன செய்கிறோம் என்ற தெளிவு பெறுவோம் - வெற்றிப் புன்னகையுடன் வேலையைத் தெடர்வோம்.

Apr 2, 2009

விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது?

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம்.

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி"

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

நன்றி:-maximum இந்தியா.

Mar 14, 2009

வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா உண்மைகளையும் போட்டு உடைத்துவிட முடியாது.

நம் பொருளாதாரக் கஷ்டங்களைச் சொன்னால் அவை குறித்து இரக்கப்படுகிறவர்கள், உதவ முன்வருபவர்கள் மட்டுமல்ல உள்ளூர மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் நாம் ஏன் புலம்ப வேண்டும்? விழுங்க வேண்டியதுதான்.

ஊரறியப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காகத் தங்களது வசதி வாய்ப்புகளை, வளங்களைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். இதில் மகிழ்பவர்கள் சில சதவிகிதமே. பொறாமைப்பட்டுச் சாகிறவர்களும்; அப்படியா சேதி? உன்னை இனியும் வளர விடுவேனா பார் என்று கெடுதல் வேலையிலும் அவதூறு பிரசாரத்திலும் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் கண்டு, இவர்கள் குடையும்போது வார்த்தைகளை விழுங்க வேண்டியதுதான், நாம் பிறரைப் பற்றி எத்துணையோ இரகசியங்களை அறிந்து வைத்திருக்கிறோம். அவை வெளிப்பட்டால் அவர்களுக்குச் சிறுசிறு பாதிப்பிலிருந்து தலைதூக்க முடியாத பாதிப்புகள் வரை ஏற்படலாம் என்பதையும் உணர்ந்திருக்கிறோம். ”சும்மா சொல்லுங்க; இருக்கிறதைத்தானே சொல்லப் போறீங்க? கூட்டிக் குறைச்சுப் பேசுகிறவர் இல்லையே நீங்க” என்று தாஜா செய்கிற பாணியில் பேசி விஷயத்தைக் கறக்க நினைப்பவர்களிடமும் வார்த்தைகளை விழுங்க வேண்டியதுதான்.

பிறரைப் பற்றிய புகார்ப் பட்டியலை வேறு வழியின்றி நாமே முன்வந்து வாசிக்க நேரும்போது, அதனால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளின் வீரியத்தை மனத்தில் கொண்டு வார்த்தைகளைச் சற்று விழுங்கலாம். நம் நோக்கம் பழிவாங்குவது அல்ல. இனி அத் தவறு மறுபடி நிகழக்கூடாது என்பது. அதற்கு ஏற்றவாறு அடக்கி வாசிக்கலாம். அதுமட்டுமல்ல, கண்டிச்சு வையுங்க. தண்டிச்சிராதீங்க என்றும் நான்கு வார்த்தை சேர்த்துச் சொல்லலாம்.

நன்றி;அனுபவத்திற்கு...