Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts
Showing posts with label கம்ப்யூட்டர். Show all posts

Apr 19, 2010

டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்

நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம்.
நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.

Mar 15, 2010

மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க.

வலை மேன்தொகுப்புகள்(Web Application) பற்றி நிறைய பதிவுகள் வந்துவிட்டது. நமக்கே தெரியாமல், நாமும் நிறைய வலை மேன்தொகுப்புகளை உபயோகிக்கிறோம்.

ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால் இணைய இணைப்பு இல்லாத போது உங்கள் கணினியில் அவற்றை உபயோகிக்க முடியாது.

இதை சரிக்கட்ட கூகிள் கொண்டு வந்த மேன்தொகுப்பு தான் Google Gears. இதன் மூலம், வலை மேன்தொகுப்புக்ளை இணையம் இல்லாத போதும், உங்கள் உலவியின் மூலம் உபயோகிக்க முடியும்.
 

Jul 16, 2009

கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்

கோப்புகளை பகிர கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல் . உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், கோப்புகள், பாடல்கள் வைத்து உள்ளீர்கள். அவற்றை உங்கள் உறவினர் / நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். கோப்பு பகிரும் தளங்கள் (File Sharing Sites) , பிகாஸா போன்ற புகைப்படம் பகிரும் தளங்கள் மூலம் இணையத்தில் ஏற்றி அவற்றை பகிர விருப்பமில்லை.

உங்கள் முக்கிய கோப்புகளை இல்ல கணினியில் (Home PC) வைத்து உள்ளீர்கள். இல்லத்தில் உள்ள கணினியின் கோப்புகளை உங்கள் அலுவலகத்தில் இருந்து அணுக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ஒரு இணைய தளம் உருவாக்கி அதனை HTML கோப்புகளாக உங்கள் கணினியில் வைத்து உள்ளீர்கள். அவற்றை இணையத்தில் ஏற்றி இணையதளமாக அனைவரும் பார்க்கும் வண்ணம் அமைக்க வேண்டும் எனில் Web Hosting சேவை காசு கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். அல்லது இலவச சேவைகளை தேடி அலைய வேண்டி வரலாம்.

இது போன்ற தருணங்களில் மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் உங்கள் கணினியையே இணைய வழங்கியாக (Web Server) மாற்றி செய்ய இயலும். இணைய உலாவிகளில் சிறப்பிடம் பிடித்த ஒபேரா (Opera) இதற்கான வசதியை Unite என்ற பெயரில் வழங்குகிறது. இத்தனை உபயோகிக்க ஆழ்ந்த இணையம் சார்ந்த அறிவு தேவை இல்லை.

இதனை இங்கு சென்று தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

எப்படி உபயோகிப்பது? என்பதனை இந்த வீடியோ எளிய முறையில் விளக்குகிறது.


மெனு பட்டைக்கு கீழே Panels என்பதனை கிளிக் செய்து மூன்றாவதாக உள்ள Unite கிளிக் செய்து கொள்ளுங்கள். File Sharing, Photo Sharing உள்ளிட்ட சேவைகளை நீங்கள் ஸ்டார்ட் செய்து கொள்ளவும். புதிய உறுப்பினர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள்.


எந்த Folder ஐ பகிர வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு ஒரு URL , Password கிடைக்கும். அதனை நீங்கள் பகிர வேண்டியவரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் அந்த URL ஐ அணுகுவதன் மூலம் Password அளித்து உங்கள் கோப்புகளை பார்க்க / தரவிறக்கி கொள்ள முடியும். மேலே கொடுத்துள்ள வீடியோவை பாருங்கள் எளிய முறையில் புரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக கோப்புகள் / புகைப்படங்களை பகிரும் போது உங்கள் கணினி இயக்கத்தில், இணைய இணைப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கோப்புகள் வேறெங்கும் ஏற்ற (Upload) படுவதில்லை. உங்கள் கணினியில் இருந்தே நேரடியாக உபயோகப்படுத்த படுகிறது. எனவே உங்கள் கணினி இயக்கத்தில் (ON) இருப்பது முக்கியம்.

Jul 12, 2009

வயர்லெஸ் தொழில் நுட்பம்

இன்று மனித வாழ்க்கையில் வயர்லெஸ் தொழில் நுட்பம் இல்லாத இடமே இல்லை எனலாம். நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் போன், ரேடியோ, ரிமோட் என எத்தனையோ சாதனங்களைப் பட்டியலிடலாம்.

முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் அது எதனைக் குறிக்கிறது? சாதாரண மனிதனின் நோக்கில் இதனைக் கூற வேண்டும் என்றால் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தொலைவின் இடையே தகவல்களை எந்தவித வயர் இணைப்பு மின்றி கடத்துவதே ஆகும்.

வயர்லெஸ் தொழில் நுட்பத்தின் இன்றைய நிலை அதன் 125 ஆண்டுகால வளர்ச்சியின் முதிர்ச்சி ஆகும். இன்னும் தொடர்ந்து பல முனைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இதன் வளர்ச்சியை அதன் தொடக்கம் முதல் காணலாம்.

1887: முதன் முதலில் வயர்லெஸ் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பது குறித்து ஜெர்மானிய நாட்டு விஞ்ஞானி ஹெர்ஸ் என்பவர் எடுத்துரைத்தார். அவர் எவ்வாறு மின் காந்த அலைகளை வயர் எதுவுமின்றி ஒரு வெளியில் அனுப்பலாம் என்று காட்டினார். இது மைக்கேல் பாரடே அறிவித்த ஒளி குறித்த கோட்பாட்டின் விரிவாக்கம் ஆக இருந்தது. ஆனால் ஹெர்ட்ஸ் அதற்கு மேல் எதுவும் செய்திடவில்லை.

1893: நிக்கோலா டெல்ஸா என்பவர் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டினார்.

1897: மார்கோனி ரேடியோ அலைகளை அனுப்ப முடியும் என்று வரையறை செய்து அதற்கான கண்டுபிடிப்பு உரிமையினைப் பெற்றார்.

1898: டெல்ஸா ஒரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் படகு ஒன்றை இயக்க முடியும் என்பதைக் காட்டினார். இந்த சோதனை ஓட்டத்தைப் பார்த்தவர்கள் டெல்ஸா தன் மனதின் சக்தியால் தான் படகை இயக்குவதாக எண்ணினார்கள்.

1906: இன்று ஏ.எம். ரேடியோ என்று (Amplitude Modulation) அழைக்கப்படும் அலைவரிசை ஒலி பரப்பினை ரெஜினால்ட் என்பவர் காட்டினார்.

1915: வெர்ஜினியாவிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு ஏ.டி. அண்ட் டி நிறுவனம் ரேடியோ அலைகளை அனுப்பிக் காட்டியது.

1919: ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ரேடியோ கார்ப்பரேஷன் ஆப் அமெரிக்காவினை நிறுவியது.

1921: Shortwave (SW) radio இயக்கிக் காட்டப்பட்டது.

1931: மிகத் தெளிவாக ரேடியோ அலைகளை அனுப்ப எப்.எம். (Frequency Modulation)தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

1982: செல்லுலார் சிஸ்டத்திற்கான டிஜிட்டல் சிஸ்டத்தை அமைக்க GSM (Groupe Special Mobile) உருவாக்கப்பட்டது.

1987: ஜி.எஸ்.எம். தொழில் நுட்ப விபரங்கள் வரையறை செய்யப்பட்டன.

1990: டிஜிட்டல் ரேடியோ (எல் பேண்ட் ரேடியோ) முதன் முதலாக இயக்கிக் காட்டப்பட்டது.

1991: பின்லாந்தில் முதன் முதலாக ஜி.எஸ்.எம். வகை தொழில் நுட்பத்தில் முதல் போன் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

1992: ஐரோப்பாவிற்கு வெளியே முதல் முதலாக ஆஸ்திரேலியாவில் ஜி.எஸ்.எம். நெட்வொர்க் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 53% ஆஸ்திரேலியர்கள் ஜி.எஸ்.எம். தொலை தொடர்பு சேவையினைப் பெற்றார்கள்.

1997: வை–பி (WiFi) தொலை நுட்பம் உருவாக்கப்பட்டது.

1998: புளுடூத் தொழில் நுட்ப குழு உருவாக்கப்பட்டது.

1999: புளுடூத் 1.0 தொழில் நுட்பம் வெளியிடப்பட்டது.

2000: வர்த்தக ரீதியாக முதல் புளுடூத் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2002: யு.எம்.டி.எஸ். (UMTS) அமைக்கப்பட்டு மொபைல் டிவி மற்றும் வீடியோ காலிங் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2003: EDGE தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது.

2004: வைமாக்ஸ் தரம் உயர்த்தப்பட்டது. புளுடூத் பதிப்பு 2.0 வெளியிடப்பட்டது.

2009: வை–பி தொழில் நுட்பத்தில் புதிய தரக்கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டன.

May 26, 2009

ஸகலத் தொடர்நிலைப் பாட்டையும் (USB) நெருப்புக்கம்பியும் (Firewire)

கணினித் தொழிலில் புதிது புதிதாக சொற்கள் தோன்றுகின்றன. புதிதாக நெறிகளும் வளர்கின்றன. கணினி வரலாற்றில் பரிணமித்து வரும் பகுதிதான் தொடர்நிலைத் துறை (Serial Port). முதலில் வந்த கணினிகளில் RS-232 என்ற தொடர்நிலைத் துறை மட்டும் தான் இருந்தது. பிறகு PS/2 என்ற நெறி உருவாகியது. இவ்விரு துறைகளும் மந்தமான தரவு பரிமாற்றுத்திறன் கொண்டிருந்தன. 1.5Mbps (நொடிக்கு 1.5 மெகாபிட்) வேகத்தில் எலி (mouse) அல்லது கோளச்சுட்டி (trackball) உபயோகங்களில் மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. இரண்டு நெறிமுறைகள் - சகல தொடர்நிலைப் பாட்டை (USB) மற்றும் நெருப்புக்கம்பி (Firewire) உருவாக்கபட்டன. இவ்விரு நெறிமுறைகளுக்கிடையே ஒற்றுமைகள் உண்டு. USB மற்றும் நெருப்புக்கம்பியின் இணைப்பிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தாலும், நிஜத்தில் ஏற்பற்றது(incompatible) ஆகும்.

Firewire ஆப்பிள் நிருமத்தால் 1980களில் படைக்கப்பட்டது. இது நிலைவட்டுகளிடமிருந்து (hard disk) தரவுப்பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ஆரம்பத்தில் உபயோகிக்கபட்டது. பிறகு புறக்கருவிகளுக்கு (peripherals) நீட்டிக்கப்பட்டது. இதன் வெற்றியைக் கண்ட ஆப்பீள் நிறுமம் இந்த நெறிமுறையை IEEE அமைப்பு மூலம் டிஸம்பர் 1995யில் தரப்படுத்தியது. ஆனால் Firewireயின் தரமாக்கத்திற்கு முன்பே ஸோனி நிறுமம் மூலம் நிகழ்பதிவி கருவி (camcorder) தொழிலகத்தில் கடைப்பிடித்து சந்தையில் வெளிவந்தது. ஸோனி நிறுமம் நெறுப்புக்கம்பிக்கு I.Link என்ற பெயரிட்டு அதன் நிகழ்பதிவிகளைச் சந்தையிட்டது. Firewireயின் செயல்முறைப்படுத்தல்களில் வேறுபாடுகள் உண்டு. Firewire இன்று ஸோனி மற்றும் ஆப்பிள் கணினிகளில் ப்ரபலமாக காணப்படுகிறது. இது தவிர நிகழ்பதிவிகள், புற நிலைவட்டுகள் (external hard drives), ஒளிவட்டு இயக்கிகள், வருடிகள் (scanners), இணைய படக்கருவிகள் (webcams) போன்ற சாதங்களில் பயன்படுகிறது. Firewireயின் தரவுபரிமாற்றம் தொடக்கத்திலேயே 400Mbps வரை ஆதரித்தது.

ஸகல தொடர்நிலை பாட்டை பல நிறுமங்கள்- காம்ப்பேக், இலக்கக் கருவி (Digital Equipment), மைக்ரொஸாஃப்ட், ஆகியவற்றின் கூட்டுழைப்பால் கருத்தமையப்பட்டு 1998இல் தரமாக்கப்பட்டது. மைக்ரொஸாஃப்ட் நிறுமம் விண்டோஸ் 98 இயங்குதளத்தோடு USBவிற்கான இயக்க மென்பொருள்களை (driver) விடுவித்தது. USB1.1 12Mbps மற்றும் 400Mbps வேகங்களில் தரவுகளை பரிமாற்றும். USB2.0 நெறிமுறை 2002இல் தான் வெளியிடப்பட்டது. USB2.0 வெளியீட்டில் தரவு பரிமாற்றம் 480Mbps வரை நீட்டிக்கப்பட்டது.

Firewire என்பது ஒரு சம உரிமை பாட்டை முறைமை (peer-to-peer bus system). Firewire சாதனங்கள் அனைத்தும் முழு செயல்கூற்றுக்கள் (functionalities)- ஆண்டான் (master) மற்றும் அடிமை (slave) ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். ஆகையால் Firewire சாதனங்கள் USB சாதனங்களைவிட விலை அதிகமானவை. இக்கட்டமைப்பின் பலன் என்னவென்றால் ஒரு கணினி போன்ற விருந்தோம்பி சாதனம் (host device) ஒரு Firewire அமைப்பில் தேவையில்லை. உதாரணத்திற்கு - ஒரு நிகழ்பதிவி ஒரு இலக்க ஒளித்தோற்ற வட்டு படிப்பியிடம் (DVD player) கணினியின்றி நேரடியாக தொடர்புகொள்ள முடியும்.

USB என்பது ஒரு விருந்தோம்பிசார் முறைமை (host-based system). ஒரு USB அமைப்பில் ஒரு கணினி விருந்தோம்பி சாதனமாக தேவைப்படுகிறது. இவ்விருந்தோம்பிக்கு இணைந்திருக்கும் அனைத்துச் சாதனங்களும் அடிமைகளாக திகழ்கின்றன. கணினி/விருந்தோம்பி தவிற்று USB பொருள்களின் தருக்கங்களில் அடிமை செயல்கூறு மற்றும்தான் அடங்கியுள்ளன. ஆகையால் USB சாதனங்கள் Firewire சாதனங்களைவிட மலிவு விலைகளில் கிடைக்கின்றன.

ஒரு USB அமைப்பில் மூன்று வகையான சாதங்கள் இணைக்கப்படலாம். முதலாவது விருந்தோம்பி (host). இப்விருந்தோம்பி தான் USB முறைமைக்கு கட்டுப்படுத்தி. ஒரு USB அமைப்பை படத்தில் காணலாம்.

USB சாதனங்களில் குறைதிறன் மற்றும் அதிதிறன் சாதனங்கள் என வகைக்கப்படுகின்றன. இந்த வகைபாடு உபயோகமாகும் மின்னோட்டத்திற்குக் தகுந்ததாகும். குறைதிறன் சாதனங்கள் 100mAக்குக் குறைவான மின்னோட்டத்தில் இயங்குகின்றன. அதிதிறன சாதனங்கள் 100mAயிலிருந்து 500mA வரை இயங்குகின்றன. ஒரு பாட்டைதிறன் குவியம் (bus powered hub) குறைதிறன் சாதனங்களுக்கு மட்டும் மின்திறனை வினியோகப்படுத்தும். ஒரு பாட்டை திறன் குவியத்தில் மொத்த மின்னோட்ட உபயோகம் 500mAக்குள் இருத்தல் வேண்டும். பாட்டை திறன் குவியம் ஒரு அதிதிறன் சாதனம் ஆகும். ஆகையால் இது மேற்புறம் விருந்தோம்பி அல்லது சுயதிறன் குவியத்திற்கு இணைக்கப்படுகிறது. ஒரு சாதனம் 500mAத்திற்கு மேல் தேவைப்பட்டால் அது சுயதிறனாக இருக்கவேண்டும். ஒரு சுயதிறன் குவியம் பாட்டை திறன் குவியத்துடன் இணைக்கப்படலாம். ஒரு பாட்டை திறன் குவியம் இன்னொரு பாட்டை திறன் குவியத்துடன் அல்லது நான்குக்கு மேற்பட்ட கீழ்ப்புற சாதனங்களுடன் இணைக்கப்படக்கூடாது.

USB தரவு பரிமாற்றங்கள் நான்கு வகையானவை: குறுக்கீடு (interrupt), கட்டுப்பாடு (control), மொத்தம் (bulk) மற்றும் நேரமொன்றியம் (isochronous).

USB இயக்கமென்பொருள் சாதனங்களின் இருப்பு மற்றும் இணைதல், பரித்தல் நிகழ்வுகளை உணர்கிறது. விண்டோஸ் 98, NT5.0, XP ஆகிய இயங்குதளங்கள் இந்த USB இயக்கமென்பொருளுடன் வினியோகிக்கப்படுகிறது. இந்த மென்பொருள் செருகு இயக்க நெறிமுறையை (plug & play) கடைப்பிடிக்கிறது.

USB என்படு "பேசப்பட்டால் பேசு" நெறிமுறையாகும். புறக்கருவிகள் விருந்தோம்பியுடன் தன்னிச்சையாக தொடர்புகொள்ள முடியாது; விரும்புதோம்பி இத்தொடர்பைத் தயவிட்டால் மட்டும் தான் இவர்கள் தொடர்புகொள்ளும். ஒரு Firewire கணு தன்னிச்சையாக எந்நேரமும் மற்றக் கணுவுடன் தொடர்புகொள்ளலாம்.

USB 5V மின்வழங்கலில் இயங்குகிறது. Firewire 30V வரை வழங்கக்கூடியது.

அம்சம் Firewire USB
1.1 2.1 400 800
தரவுப் பரிமாற்ற வீதம் 12 Mbps 480 Mbps 400 Mbps 800 Mbps
சாதனங்களின் எண்ணிக்கை 127 127 63 63
செருகியக்கம் ஆம் ஆம் ஆம் ஆம்
வென்செருகல் ஆம் ஆம் ஆம் ஆம்
பாட்டைத்திறன் ஆம் ஆம் ஆம் ஆம்
பாட்டை முடிப்பின் தேவை இல்லை இல்லை இல்லை இல்லை
பாட்டை வகை தொடர்நிலை தொடர்நிலை தொடர்நிலை தொடர்நிலை
கம்பிவட வகை முறுக்கிரட்டை (4 மின்கம்பிகள், 2 திறன், 1 முறுக்கிரட்டைத் தொகுப்பு) முறுக்கிரட்டை (4 மின்கம்பிகள், 2 திறன், 1 முறுக்கிரட்டைத் தொகுப்பு) முறுக்கிரட்டை (6 மின்கம்பிகள், 2 திறன், 2 முறுக்கிரட்டைத் தொகுப்புகள்) முறுக்கிரட்டை (8 மின்கம்பிகள், 2 திறன், 2 முறுக்கிரட்டைத் தொகுப்புகள், 2 நிலம்)
பிணையத்தகுமை விருந்தோம்பி சார்ந்த விருந்தோம்பி சார்ந்த ஒப்பி-ஒப்பி பரிமாற்றம் ஒப்பி-ஒப்பி பரிமாற்றம்
பிணைய இடவியல் குவிப்பு குவிப்பு தொடர்ச்சங்கிலி தொடர்ச்சங்கிலி


May 19, 2009

uʍop ǝpıs dn

குப்புறப்படுத்து குறட்டை விடும் எழுத்துக்களை நீங்ககூட உருவாக்கலாம்.

இந்த வெப்சைட் போங்க.

ஆங்கிலத்தில் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை தலைகீழாக மாற்றி கொடுக்கும்.

Cut and Paste பண்ணிக்குங்க. அவ்வளவுதேன்.

May 4, 2009

இலவசம் இருக்கையில் ஏன் திருட்டு சாப்ட்வேர்?

அதிக எண்ணிக்கையில் திருட்டுத் தனமாக காப்பி எடுத்து பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்பு எது எனக் கேட்டால் சற்றும் சிந்திக்காமல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு எனக் கூறிவிடலாம். உலக அளவில் பல நாடுகளில் இந்த தொகுப்பு தான் நகலெடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இது சட்ட ரீதியாகப் பல பிரச்னைகளைத் தரும் என்றாலும் சில அலுவலகங்களில் கூட திருட்டுத் தனமாக இதனைப் பயன்படுத்தும் பழக்கம் பரவி வருகிறது. சட்டப் பிரச்னைகளைக் காட்டிலும் நாம் நகல் தொகுப்புகளைப் பயன்படுத்தினால் மைக்ரோசாப்ட் இதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்காது. இலவச அப்டேட் தொகுப்புகள் கிடைக்காது.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து பயன்களையும் தரும் இலவச ஆபீஸ் தொகுப்புகள் பல இருக்கும் போது ஏன் நாம் இது போல திருட்டு தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். ஒன்றல்ல பல ஆபீஸ் தொகுப்புகள் நாம் பயன்படுத்த இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.


1. லோட்டஸ் சிம்பனி:


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தொடக்க காலத்திலேயே தன் தடம் பதித்த ஐ.பி.எம். நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இடத்தினைக் காலி செய்திட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சிகளில் ஒன்றுதான் லோட்டஸ் சிம்பனி என்ற சாப்ட்வேர் தொகுப்பாகும். இதில் ஒரு வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட் மற்றும் பிரசன்டேஷன் சாப்ட்வேர் ஆகியன இணைந்து தரப்பட்டுள்ளன. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை இலவசமாய் இறக்கிக் கொள்ள http://symphony.lotus.com/software/lotus/symphony/home.jspa என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

இந்த இலவச சாப்ட்வேர் தொகுப்பு எந்தவித பிரச்சினையும் இன்றி சிறப்பாக இயங்குகிறது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து தொகுப்புகளுடன் இணைந்து இயங்குகிறது. அதாவது ஆபீஸ் தொகுப்பில் உருவான அனைத்து பைல்களையும் இதில் திறந்து பயன்படுத்தலாம். இதில் பயன்படுத்தி மீண்டும் எம்.எஸ். ஆபீஸ் பார்மட்டில் சேவ் செய்து அந்த பைலை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் மீண்டும் பயன்படுத்தலாம்.


இந்த லோட்டஸ் சிம்பனி தொகுப்பில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. அது இதன் டவுண்லோடிங் நேரம் தான். பொதுவாக எந்த ஆபீஸ் தொகுப்பும் சற்று ஹெவியாகத் தான் இருக்கும். அதே போல இந்த தொகுப்பும் உள்ளது.


இந்தியாவில் பொதுவாக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பயன்படும் விதத்தை வைத்துப் பார்க்கையில் இதனை டவுண்லோட் செய்திட மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். ஆனால் நம் மக்கள் திரைப்படங்களையே மணிக் கணக்கில் டவுண்லோட் செய்வதால் இது போன்ற சாப்ட்வேர் தொகுப்பு களையும் டவுண்லோட் செய்திடலாம். எந்தவிதச் சட்ட சிக்கல் இன்றி சுதந்திரமாக ஒரு தொகுப்பினைப் பயன்படுத்த இன்டர்நெட் கட்டணம் செலுத்துவதில் தவறில்லை.


ஒருமுறை டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டால் இது ஒரு அதிகப் பயனுள்ள புரோகிராம் என்பதனை உணரலாம். மேலும் இதன் பைல்கள் ஓப்பன் டாகுமெண்ட் பார்மட்டில் இருப்பதால் இந்த பைல்களை எந்த வரையறையும் கட்டுப்படுத்தாது. எனவே அனைத்து வகைகளிலும் சுதந்திரமாய் இயங்க இந்த சாப்ட்வேர் தொகுப்பு வழி வகுக்கிறது.


2. ஓப்பன் ஆபீஸ்:


எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள வழி வகுக்கும் இன்னொரு தொகுப்பு ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு. இதுவும் இலவசமே. www.openoffice.org என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனை இலவசமாய் டவுண்லோட் செய்திடலாம். இதே தொகுப்பினை சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் வெப்சைட்டிலும் பெற்றுக் கொள்ளலாம்.



இதன் முகவரி: www.sun.com/software/star/openoffice/index.xml. இந்த தொகுப்பும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் முழுமையாக இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு தொகுப்புகளிலும் மாற்றி மாற்றி பைல்களை செயல்படுத்தலாம். அது மட்டுமின்றி ஓப்பன் ஆபீஸ் தொகுப்பு அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ், லினக்ஸ், சோலாரிஸ், மேக் ஓ.எஸ். எக்ஸ், ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இது இயங்குகிறது. ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட மொழிகளில் இது கிடைக்கிறது.



நீங்கள் சாப்ட்வேர் புரோகிராமராக இருந்தால் இந்த தொகுப்பின் சோர்ஸ் கோட் பெற்று நீங்களும் இதனை மேம்படுத்த கோடிங் வழங்கலாம். இந்த தொகுப்பின் பெரும்பான்மையான வடிவமைப்பு சி ப்ளஸ் ப்ளஸ் மொழியில் அமைக்கப்பட்டுள்ளது.


3. ஸ்டார் ஆபீஸ்:


இந்த தொகுப்பு இலவசமல்ல. ஆனால் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் விலையுடன் ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவுதான். ரூ.5,000க்கும் குறைவான விலையில் இது சன் மைக்ரோ சிஸ்டத்தால் விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் இது முற்றிலும் இலவசமாக சிடிக்களில் பதிந்து வழங்கப்பட்டது. அந்த பழைய தொகுப்புகள் இருந்தால் இப்போதும் அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தொகுப்பு +2 மாணவர்களுக்கான கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.


கட்டணம் செலுத்தி இதனைப் பெற விரும்புபவர்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.sun.com/software/star/staroffice/index.jsp. இங்கு சென்றபின் 69.95 டாலர் பணம் செலுத்தினால் இந்த தொகுப்பினை டவுண்லோட் செய்து கொள்ளலாம். வேர்ட் ப்ராசசர், ஸ்ப்ரெட் ஷீட், பிரசன்டேஷன், டிராயிங், டேட்டா பேஸ் பயன்பாடு ஆகியவற்றில் பெரிய அளவில் வசதிகளைக் கொண்டு இந்த தொகுப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் இணைந்து செயல்படுகிறது.

4. கூகுள் டாக்ஸ்:


வேர்ட் ப்ராசசிங் அல்லது ஸ்ப்ரெட் ஷீட் புரோகிராம்களில் இயங்க இப்போதெல்லாம் பெரிய அளவிலான ஆபீஸ் தொகுப்புகளைப் பதிந்து இயக்க வேண்டியதில்லை. இணைய வெளியில் இந்த ஆபீஸ் தொகுப்புகளை கூகுள் டாக்ஸ் என கூகுள் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. இதுவும் கூட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்பிற்கு போட்டியானது என்று கூறலாம். ஒருமுறை இதனைப் பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட் ஷீட்கள் அல்லது பிரசன்டேஷன் பைல்களை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பிலும் பயன்படுத்தலாம். மேலும் கூகுள் டாக்ஸ் மூலம் உருவாக்கப்படும் பைல்கள் பாதுகாப்பாக சர்வரிலும் சேவ் செய்து வைக்கலாம். இதனால் எந்த வித வைரஸ் தாக்குதலும் இருக்காது. மேலும் ஆன்லைனில் சேவ் செய்து வைப்பதால் குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் தான் பைல் உள்ளது. அங்கு சென்று பைலை எடுக்க வேண்டும் என்ப தெல்லாம் இல்லை. எந்த ஊரி லும் சென்று இணைய இணைப் பின் மூலம் கூகுள் சர்வர் இணைப்பு பெற்று உங்கள் பைல்களை நீங் கள் கையாளலாம். தொடர்ந்து இணைய பயன்பாடு அதிகரித்து வருவதாலும், அதற்கான கட்டணம் குறைந்து வருவ தாலும் இனிமேல் கூகுள் டாக்ஸ் போன்ற ஆபீஸ் தொகுப் புகளின் பயன்பாடுதான் அனை வராலும் விரும்பப்படும் என்றுரைக் கலாம்.


5. திங்க் ப்ரீ:


இலவசமாய்க் கிடைக்கும் ஒன்னொரு ஆபீஸ் புரோகிராம் திங்க் ப்ரீ (ThinkFree) இதனைப் பெற http://thinkfree.com/common/main.tfo. என்ற முகவரியில்உள்ள தளத்தை அணுகவும். இந்த தொகுப்பு உங்கள் பைல்களை ஸ்டோர் செய்து வைக்க 1 ஜிபி இலவச இடம் வழங்குகிறது.

இந்த தொகுப்பைப் பயன்படுத்த இதன் வெப்சைட் சென்று பதிந்து கொள்ள வேண்டும். அதன்பின் கூகுள் டாக்ஸ் தளம் தருவது போல ஆன்லைனில் இந்த ஆபீஸ் தொகுப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். இதன் ஒரு சிறப்பு இதன் இன்டர்பேஸ் அனைத்தும் (ஐகான், மெனு, செயல்பாடு) எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ளது போலவே உள்ளன.


6. ஸோஹோ – ஒர்க் ஆன்லைன்:


ஆன்லைனில் கிடைக்கும் இலவச ஆபீஸ் சாப்ட்வேர் தொகுப்புகளில் மிகச் சிறந்தது இதுதான் என்று இதனைப் பயன்படுத்துபவர்கள் சத்தியம் செய்து கூறுவார்கள். அதிகம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது இந்த தொகுப்பு. எந்த பார்மட்டிலும் ஆபீஸ் டாகுமெண்ட் பைல்களை இதில் கொண்டு வந்து இயக்கலாம்.


இதிலும் உருவாக்கலாம். கூகுள் டாக்ஸ் போலவே இதில் பதிந்து இயங்க வேண்டும். இந்த தளத்தின் முகவரி : http://www.zoho.com. இன்னும் இது போல பல ஆபீஸ் தொகுப்புகள் இணைய வெளியில் கிடைக் கின்றன. பல சாப்ட்வேர் வல்லுநர்கள் ஆபீஸ் தொகுப்பு உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இடத்தைத் தகர்க்கும் எண்ணத்துடனும், மக்களுக்கு இலவசமாய் இந்த சமாச்சாரங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உழைக்கின்றனர் என்பது தெளிவாகிறது. Abi Word, Jarte Word Processor, Yeah Write for Windows, Gnome Office, NeoOffice, neoOffice/J மற்றும் Koffice ஆகியவை இந்த வகையில் வெளியாகி இணைய வெளியில் கிடைக்கின்றன. இவை அனைத்தும் விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில்லை. மேக், லினக்ஸ் இயக்கத்தில் இயங்குபவையும் இந்த பட்டியலில் உள்ளன. இவற்றை சர்ச் இஞ்சினில் தேடி அதன் தளம் சென்று பார்த்து இவற்றையும் டவுண்லோட் செய்து இயக்கித்தான் பாருங்களேன்.


Apr 24, 2009

பிரவுசருக்குத் துணையாக....

பிரவுசருக்குக் கூடுதல் பயன்பாட்டினைத் தரும் வகையில் இப்போதெல்லாம் பல ஆட்–ஆன் தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. சின்னஞ்சிறு புரோகிராம்களாக வடிவமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில வசதிகளை வஞ்சகமின்றி இவை தருகின்றன. எடுத்துக் காட்டாக ஒரு டிக்ஷனரியை இதன் மூலம் பயன்படுத்த முடியும். உங்களின் பிற இணையப் பக்கங்களில் உள்ள அக்கவுண்ட்களை அங்கு செல்லாமலே பெற்றுக் காண முடியும். இவற்றில் சிலவற்றைச் சோதனை செய்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் சிலவற்றைப் பயனுள்ளதாகப் பார்த்தோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஆட் ஆன் தொகுப்புகளுக்கு www.ieaddons.com என ஒரு தனித் தளமே இயங்குகிறது. இனி இந்த வசதிகளையும் அவற்றைத் தரும் ஆட் ஆன் தொகுப்பு கிடைக்கும் தள முகவரிகளையும் காணலாம்.

1. தேவையான தகவல்கள், விளக்கங்கள் பெற: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கிடைக்கும் தளம் ஒன்றில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுங்கள். இந்த புரோகிராம் www.answers.com தளத்தை அணுகி அந்த சொல் சார்ந்த விளக்கங்களையும் கூடுதல் தகவல்களையும் பெற்றுத் தரும். (www.snipurl.com/3so5s)



2. விளம்பரங்களைத் தடுக்க: திடீர் திடீரென எழும் விளம்பரங்கள் நம் இன்டர்நெட் பிரவுசிங் வேகத்தைக் கெடுக்கும். மிக அக்கறையுடன் ஒரு தளத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம்; அப்போது திடீரென ஒரு பேனர் விளம்பரம் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் தகவல்களை மறைக்கும். இந்த குறிப்பிட்ட ஆட் ஆன் தொகுப்பு பயர்பாக்ஸ் பிரவுசரில் இவற் றைத் தடுக்கும் பணியை மேற்கொள்கிறது. கிடைக்கும் முகவரி: www.snipurl.com/3so6d



3. இன்டர்நெட்டுக்கான காலர் ஐ.டி.: தொலைபேசிகளில் நம்மை யார் அழைக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் வசதி காலர் ஐ.டி. வசதியாகும். இதே போல இன்டர்நெட் சைட்டுக்கு உண்டா? நாம் பார்க்கும் தளங்கள் என்ன என்று நமக்குத் தெரியாதா? என்கிறீர்களா? ஒரு சில தளங்கள் நம்மை அந்த தளத்தில் பதியச் சொல்லி நம் பெயர், பிறந்த நாள், முகவரி, பிடித்தது மற்றும் பிடிக்காதது போன்ற தகவல்களை எல்லாம் தரச் சொல்கின்றன. இவற்றைப் பெறும் இந்த தளங்களை இயக்குபவர்கள் யார்? அவர்களின் முகவரி என்ன? என்று நாம் அறிந்து கொள்ள ஒரு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 க்கான ஆட் ஆன் புரோகிராம் உதவுகிறது. இதில் பிஷிங் பில்டரும் உள்ளது. இது கிடைக்கும் முகவரி : www.snipurl.com/3so83



4. பல டவுண்லோட் பைல்கள்: ஒரே நேரத்தில் பல பைல்களை டவுண்லோட் செய்திடுகையில் இந்த ஆட் ஆன் புரோகிராம் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு உதவுகிறது. டவுண்லோட் ஆகும் பைல்களை தொகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கிறது. இதன் மூலம் பைல்கள் வேகமாக டவுண்லோட் செய்யப்படுகின்றன. மேலும் இதில் வெப் பேஜ் ஒன்றில் லிங்க் செய்யப்பட்டுள்ள அனைத்து பைல்களையும் டவுண்லோட் செய்திடும் வசதியும் கூடுதலாகக் கிடைக்கிறது. இதன் முகவரி : www.snipurl.com/3soal

5. எந்த வகையில் காப்பி: ஒரு பைலை இணையப் பக்கத்திலிருந்து சேவ் செய்கையில் அதனை எச்.டி.எம்.எல். ஆகக் காப்பி செய்திட வேண்டுமா அல்லது டெக்ஸ்ட்டாக காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷனைக் கொடுத்து காப்பி செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு வசதியைத் தருகிறது. குறிப்பாக சில தளங்களில் உள்ள எச்.டி.எம்.எல். பைலை அந்த பார்மட்டிங் சங்கதிகள் எல்லாம் இல்லாமல் டெக்ஸ்ட் பைலாக வேர்ட் டாகுமெண்ட்டில் பதிந்திட இது உதவுகிறது. இது கிடைக்கும் தள முகவரி : www.snipurl.com/3soby

6. பிரவுசரில் வாய்ஸ் கமாண்ட் : இணையத்தில் பல பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென முன் பார்த்த பக்கங்களுக்கோ அல்லது பின்னர் பார்த்த பக்கங்களுக்கோ செல்ல வேண்டியுள்ளது. மவுஸைப் பிடித்து கிளிக் செய்யாமல் கம்ப்யூட்டருடன் இணைந்த மைக் மூலம் Back, Forward, Refresh எனச் சொல்லி அதன் மூலம் நாம் விரும்பும் பக்கங்களுக்குச் சென்றால் எவ்வளவு எளிது. இந்த வாய்ஸ் மூவிங் வசதியை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இதன் முகவரி: www.snipurl.com/3sodw

7. பிரவுசரிலேயே மியூசிக் பிளேயர்: ஐ–ட்யூன்ஸ் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற ஆடியோ மற்றும் வீடியோ இயக்கும் மீடியா பிளேயர்களை பயர்பாக்ஸ் பிரவுசரில் இருந்தவாறே இயக்கினால் எவ்வளவு எளிது. தனியே வேறொரு விண்டோ சென்று இந்த பிளேயர்களை இயக்குவது சுற்று வழிதானே. இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசருக்கென ஒரு ஆட் ஆன் புரோகிராம் தருகிறது. இதன் முகவரி: www.snipurl.com/3soes

8. பார்மட் கன்வெர்டர்: இணையத்தில் பைல்கள் பலவிதமான பார்மட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றை நம் பெர்சனல் கம்ப்யூட்டர் அடையாளம் கண்டு இயக்கும் வகையில் பல வேளைகளில் மாற்ற வேண்டியுள்ளது. பல வீடியோ, படம் மற்றும் டாகுமெண்ட் பார்மட்டுகள் இதில் கிடைக்கின்றன. இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி : www.zamzar.com/tools

9.தேடுதல் தளங்கள் படங்களாக: கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்கள் வழி தேடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறீர்கள். உங்களுக்கான விடைகள் கொண்ட தளங்களின் முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். இவற்றிற்குப் பதிலாக அந்த தளங்களின் முகப்புகள் சிறிய தம்ப்நெயில் படங்களாக இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? இந்த உதவியை ஒரு ஆட் ஆன் தொகுப்பு கூகுள் மற்றும் யாஹூ தேடுதல் தளங்களுக்கு மட்டும் தருகிறது. இந்த புரோகிராம் கிடைக்கும் முகவரி: www.snipurl.com/3soew



10. பார்த்தது பார்த்தபடி மூடித் திரும்பத் தர: இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல தளங்களைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென பிரவுசரை மூட வேண்டியுள்ளது. இன்னும் சில தளங்களை முழுமையாகப் பார்க்கவில்லை. ஒவ்வொன் றாக மூடிவிட்டால் பின் மீண்டும் வெப் சைட்டின் அந்த பக்கம் எப்படிப் போவது? என்று கலங்குகிறீர்களா? ஒவ்வொன்றாக மூடுவதும் சிரமமாக உள்ளதா? இந்த ஆட் ஆன் தொகுப்பு இணைத்துக் கொண்டால் அனைத்து தளங்களையும் மூடும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் மீண்டும் பிரவுசர் திறக்கப்படுகையில் அதே பக்கத்தில் அனைத்து தளங்களையும் திறந்து தருகிறது. இந்த உதவிக்கான ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் முகவரி: www.snipurl.com/3sog0



ஆட் ஆன் தொகுப்புகளை எப்படி கையாள்வது?



1. பொதுவாக ஆட் ஆன் தொகுப்பு ஒன்றை இணைத்தால் அதன் விளைவைப் பெற அந்த பிரவுசரை மீண்டும் இயக்க வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் திரையின் வலது பக்கம் மேலாக உள்ள tools மெனுவில் இடது பக்கம் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Manage Add ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Enable Add ons / Disable Add ons என்பதில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கலாம்.

2. இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளின் பட்டியல் கிடைக்கும். எந்த ஆட் ஆன் தொகுப்பில் செயல்பட விரும்புகிறீர்களோ அதன் மீது சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Able / Disable ரேடியோ பட்டனை உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும்.

3. பயர்பாக்ஸ் பதிப்பு 3ல், Tools மெனுவில் Add on என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பட்டியலில் உள்ள ஆட் ஆன் தொகுப்புகளை தற்காலிகமாகச் செயல்படாத வகையில் நிறுத்தி வைக்க முடியும்.அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்திடலாம். இதில் உள்ள ஆப்ஷன்ஸ் பட்டன் கிரே கலரில் இருந்தால் அந்த வசதி அதில் இல்லை என்று பொருளாகிறது.


Apr 13, 2009

இமெயில் சில எண்ணங்கள்


இமெயில் எனப்படும் மின்னஞ்சல் வசதியினைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இல்ல முகவரிகளைக் காட்டில்ம் இமெயில் முகவரிகள் தான் ஒருவருக்கு மிக முக்கியமானவையாக மாறியுள்ள காலம் இது.

இந்தக் காரணங்களினாலேயே ஒருவரின் பெர்சனாலிட்டியை அவர் அனுப்பும் மெயில்கள் தீர்மானிக்கின்றன. எனவே நாம் கையாளும் மெயில்களில் சில வரையறைகளையும் ஒழுங்கு முறைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது. வாழ்க்கை ஆனந்தமாகவும் நிறைவானதாகவும் மாறுகிறது.


ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் இமெயிலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும். நட்பும், உறவும் முறியவும் செய்யலாம்; வியாபாரம் கை கூடாமல் போகலாம்; வேலை கிடைக்காமல் போகலாம்.


பிறருக்கு அனுப்புகிற மின்னஞ்சல் கடிதங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய நல்வழிகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.


* முதலில் இமெயில் கடிதங்களைப் பொறுத்தவரை அவற்றை அனுப்பி விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அவசரத்தில் அனுப்பினேன். அதனால் அவ்வாறு எழுதினேன் என்ற நொண்டிச் சாக்குகளுக்கெல்லாம் இங்கே இடம் இல்லை. எனவே அனுப்புமும் கவனமாக அதனைக் கவனித்த பின்னரே அனுப்ப வேண்டும்.


* பொதுவாக இமெயில்களில் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை. அதுவும் நீங்கள் ஆன் லைனில் இருந்து மெயில்களைத் தயாரிக்கும்பொழுது இண்டர்நெட் நேரத்தை குறைப்பதில்தான் உங்கள் கவனம் செல்லும். அது நியாயமானதே. பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்தால் நேரமாகும். எனவே பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை என துரிதமாக மெயில்களை அனுப்ப வேண்டும். ஆனால் தெரிந்தவர்களுக்கு மெயில்களை அனுப்பும் போதுதான் பிழைகளைக் கண்டு கொள்ளக் கூடாது. முன்பின் தெரியாதவர்களுக்கு மெயில்களை அனுப்பும் பொழுது எந்தப் பிழைகளுமின்றி அனுப்புங்கள். இதற்காகவே இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வேர்டின் ஸ்பெல் செக்கர்கள் போன்று நமக்கு உதவும் வகையில் தங்கள் கிளையண்ட் புரோகிராம்களை அமைத்துள்ளன. எனவே அவற்றை நம் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அனுப்ப பயன்படுத்தலாம்.


*மெயிலைத் தயாரித்து முடித்தவுடன் அதைத் திரும்பவும் படியுங்கள். சொல்ல வந்த கருத்துக்கு மாறான கருத்து கொண்ட கடிதம் உங்களிடம் இருந்து சென்று விடக் கூடாது. புரியாத கருத்து கொண்ட கடிதமும் சென்று விடக் கூடாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பிழை இருக்காது. ஆனால் அது வேறொரு பொருள் தருவதாக, அல்லது நேர் மாறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். நீங்கள் ஒரு மூன்றாவது நபர் குறித்து எழுதி இருப்பீர்கள். ஆனால் படிப்பவர் தன்னைப் பற்றி எழுதியதாக எண்ணம் கொள்ளும்படி இருக்கக் கூடாது. எனவேதான் அனுப்புவதற்கு முன்பு கடிதத்தை மீண்டும் படிக்க வேண்டும்.


* யாருக்குப் பதில் போய் சேர வேண்டுமோ அவருக்கு மட்டும் பதிலை அனுப்பி வையுங்கள். தேவையில்லாமல் Reply All பட்டனை அழுத்தி உங்கள் பதிலை எல்லாருக்கும் அனுப்பி வைக்காதீர்கள். குறிப்பாக நியூஸ்குரூப், மெயிலிங் லிஸ்ட் போன்றவற்றில் Reply All பட்டனைப் பயன்படுத்தாதீர்கள். மின்னஞ்சல் சேவையில் மட்டும் மிக மிக தேவைப்பட்டால் மட்டுமே Reply All பட்டனை அழுத்துங்கள்.

* கடிதம் பெறுபவரைத்தான் நாம் பார்க்கப் போவதில்லையே என்ற எண்ணத்தில் அநாகரிகமாக மெயிலின் உள்ளே எதையும் குறிப்பிடாதீர்கள். கடிதம் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறதோ அவர் உங்கள் முன்பு தோன்றினால் அவரிடம் எவ்வளவு கண்ணியமாகப் பேசுவீர்களோ அதே கண்ணியத்தை அவருக்கு அனுப்புகிற மெயிலிலும் காட்டுங்கள்.


* கோபத்தில் இமெயிலைத் தயாரிக்காதீர்கள். அப்படியே தயாரித்தாலும் உடனே அதை அனுப்பாதீர்கள். ஓரிரு நாட்கள் ஆறப்போட்டு, பின்பு மெயிலைப் படித்துப் பாருங்கள். புண்படும்படியாக எழுதியவற்றை நீக்கி பின்பு மெயிலை அனுப்புங்கள்.


* நேரில் ஒருவரிடம் பேசும்பொழுது உங்கள் முக பாவனை பேச்சின் ஏற்ற இறக்கம், அங்க சேஷ்டைகள் வைத்து நீங்கள் கோபத்திலா அல்லது கேலியாகவா அல்லது மகிழ்ச்சியுடனா பேசுகிறீர்கள் என்பதை எடை போட முடியும். ஆனால் இமெயில் என்பது வெறும் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே நீங்கள் சாதரணமாக அனுப்புகிற மெயிலை ஒருவர் தவறுதலாக புரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர்க்க Smileys எனப்படுகிற அடையாளங்களை இமெயிலில் சேர்க்க வேண்டும்.

* உரியவருக்குதான் இமெயிலை அனுப்புகிறீர்களா என்பதை கவனியுங்கள். ஏதோ நினைவில் இமெயிலைத் தயாரித்து ஏதோ நினைவில் தொடர் பில்லாத ஒருவருக்கு இமெயிலை அனுப்புவது மிகவும் தவறாகும். ரகசிய மெயில்கள், தனிப்பட்ட விஷயங்களை கொண்ட மெயில்கள் போன்றவற்றை அனுப்பும் போது மெயிலின் பெறுநருடைய முகவரியைச் சரி பாருங்கள்.


* ஒரே மெயிலை உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். உங்களுடைய நண்பர் ஒருவருக்கு, உங்களுடைய மற்றொரு நண்பர், நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே அவர் மற்றவருடைய இமெயில் முகவரியை தெரிந்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. ஆகவே நீங்கள் BCC பீல்டைப் பயன்படுத்தி அதில் எல்லாருடைய முகவரிகளையும் தெரிவிக்க வேண்டும். வேண்டுமானால் உங்களுடைய முகவரியை To பீல்டில் நிரப்புங்கள்.

தினமலர் பத்திரிக்கையில் படித்தது.மிக அவசியமான கட்டுரை.அனைவருக்கும் பயன்படும்வகையில் எழுதப்பட்டுள்ளது.படியுங்கள் பயன்பெறுங்கள்.

Apr 7, 2009

PENDRIVEவை RAM ஆக மாற்றலாம் !!!

நம்முடைய கணணியில் எவ்வளவு நினைவகம் இருந்தாலும் நமக்கு இப்பொழுது வருகிற அப்ளிகேசன்களை இயக்க போதாது. இப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் பென் ட்ரைவையே நினைவகமாக மாறினால் எப்படி இருக்கும் அது எப்படி அதை நீங்கள் உங்கள் யுஎஸ்பி போர்ட்டில் செருகி விட்டு இந்த அப்ளிகேசனை இயக்கினால் போதும்.

இதனுடைய சிறப்பம்சங்கள் :

1. யுஎஸ்பி மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்பேசியின் மெமரி கார்டையும் உங்களுடைய மெமரி ஆக பயன்படுத்தலாம்.

2. உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டம் 32பிட் ஆக இருந்தால் 4ஜிபி வரையும் என்டிஎப்எஸ் ஆக இருந்தால் எவ்வளவு மெமரி வேண்டும் ஆனாலும் உபயோகப்படுத்த இயலும்.

3. இது டெஸ்க்டாப் மற்றும் லாப்டாபிலும் செயல்படும்

For Download

Mar 18, 2009

நெருப்பு நரி : FireFox

நெருப்பு நரி என்று செல்லமாக அழைக்கப்படும் ForeFox உலவியையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். அதன் வேகமும், tabbed browsing ம் அனைவரையும் கவர்ந்தவை.

அதன் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த கீழ்க்கண்ட குறுக்குவழிச் சாவிகளைப் பயன்படுத்தலாம்.

---> Ctrl + Tab or Ctrl + PageDown: Cycle through tabs.
---> Ctrl + Shift + Tab or Ctrl + PageUp: Cycle through tabs in reverse.
---> Ctrl + (1-9): Switch to tab corresponding to number.
ஒரு tabக்கும் வேறு tabக்கும் மாறிமாறிச் செல்வதற்கு.




---> Ctrl + N: New window.
---> Ctrl + T: New tab.

---> Ctrl + L or Alt + D or F6: Switch focus to location bar.
---> Ctrl + Enter: Open location in new tab.
---> Shift + Enter: Open location in new window.

---> Ctrl + K or Ctrl + E: Switch focus to search bar.
---> Ctrl + O: Open a local file.

---> Ctrl + W: Close tab, or window if there's only one tab open.
---> Ctrl + Shift + W: Close window.

---> Ctrl + S: Save page as a local file.
---> Ctrl + P: Print page.
---> Ctrl + F or F3: Open find toolbar.

---> Ctrl + G or F3: Find next...
---> Ctrl + Shift + G or Shift + F3: Find previous...
---> Ctrl + B or Ctrl + I: Open Bookmarks sidebar.

---> Ctrl + H: Open History sidebar.
---> Escape: Stop loading page.

---> Ctrl + R or F5: Reload current page.
---> Ctrl + Shift + R or Ctrl + F5: Reload current page; bypass cache.
---> Ctrl + U: View page source.

---> Ctrl + D: Bookmark current page.
---> Ctrl + NumpadPlus or Ctrl + Equals (+/=): Increase text size.

---> Ctrl + NumpadMinus or Ctrl + Minus: Decrease text size.
---> Ctrl + Numpad[0] or Ctrl + 0: Set text size to default.
---> Alt + Left or Backspace: Back.

---> Alt + Right or Shift + Backspace: Forward.
---> Alt + Home: Open home page.

---> Ctrl + M: Open new message in integrated mail client.
---> Ctrl + J: Open Downloads dialog.

---> F6: Switch to next frame. You must have selected something on the page already, e.g. by use of Tab.
---> Shift + F6: Switch to previous frame.

---> Apostrophe ('): Find link as you type.
---> Slash (/): Find text as you type.


தொடர்புடைய சுட்டிகள் :


1. விண்டோஸ் எக்ஸ்ப்பி இயங்குதளத்துக்கான குறுக்குவழிச் சாவிகள்

2. மைக்ரோசாப்ட் வேர்ட் 2007க்கான குறுக்குவழிச் சாவிகள்

3. விண்டோஸ் 7 பீட்டாவின் குறுக்குவழிச் சாவிகள்

4. எக்ஸல் தொகுப்புக்கான குறுக்குவழிகள்

Printer Share Anywhere

பக்கத்து வீட்டிலோ, அடுத்த ஊரிலோ, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலோ இருக்கும் நண்பருடன் உரையாடுவதற்கு, அரட்டை அடிப்பதற்கு இன்ஸ்டண்ட் மெசெஞ்சர் (Instant Messenger) எனப்படும் மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

அடுத்தவரின் கணினியை இங்கிருந்து இயக்கவோ, வெகுதொலைவில் இருப்பவருக்கு அவரது கணினியில் ஒரு மென்பொருளை சோதனை ஓட்டிக் காண்பிக்கவோ ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) மென்பொருட்களைப் பயன்படுத்துகிறோம்.

நம் கணினியில் இருக்கும் கோப்புகளை வேறு ஒரு தொலைதூரக் கணினி (Remote PC) வாயிலாக அச்செடுக்க ஒரு புதிய தொழில்நுட்பம் உள்ளது. இதற்கு பிரிண்ட் எனிவேர் (Printer Share Anywhere) என்று பெயர்.

கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அடுத்தவரது கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டர் (printer) மூலம் அச்செடுக்கலாம்.

இந்த முனையில் இருப்பவரும், அடுத்த முனையில் இருப்பவரும் இணையம் (internet) மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதே போல உங்களது கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டரை அடுத்தவர் பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கலாம்.

பிரிண்ட் எனிவேர் என்கிற இந்த மென்பொருளை நிறுவியவுடன் இது தானியங்கித்தனமாகவே உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்ட பிரிண்டரையும், வேறு ஏதேனும் உங்கள் வலைப்பின்னலுக்குள் (network) இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர்களையும் அடையாளம் கண்டு கொள்ளும்.


சிறப்பம்சங்கள் :
1) எந்த ஒரு மென்பொருள் பயன்பாட்டின் வாயிலாகவும் பிரிண்ட் எடுக்கலாம்.
2) உங்கள் பிரிண்டரை வேறு ஒருவருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
3) பிரிண்டவுட் எடுக்கவேண்டிய கோப்புகளை மின்னஞ்சல் அனுப்பவோ அட்டாச்மெண்ட் (attachment) செய்யவோ தேவையில்லை
4) வேகமான இயக்கம் கொண்டது
5) பாதுகாப்பானது (secured)
6) மிக எளிய முறையில் நிறுவிக்கொள்ளலாம்.
7) அகலப்பட்டை வசதி இருத்தல் நலம்

இணையிறக்கச் சுட்டி :
http://www.softpedia.com/get/Network-Tools/Misc-Networking-Tools/PrinterAnywhere.shtml

Google-Talk பயன்படுத்தும் ரசிகர்களுக்காக


கூகிள் நிறுவனம் இலவசமாக வழங்கும் சேவைகளில் கூகிள்டாக் எனப்படும் மின்னரட்டையும் ஒன்று. இந்த Google-Talk பயன்படுத்தும் ரசிகர்களுக்காக இந்தப் பதிவு.
இந்தக் குறுக்கு வழிகளைப் பின்பற்றி g-talk ல் வேகமாக இயங்கலாம்.



Ctrl + E - It centralizes the selected text, or the current line.
Ctrl + R - It justifies to the right the selected text, or the current line.
Ctrl + L - It justifies to the left the selected text, or the current line.
Ctrl + I - The same thing does that Tab.

Tab - It is giving the area to each of the windows opened by Google Talk.
Ctrl + Tab - The same thing does that Shift + Tab .
Shift + Tab - The same thing does that Tab but in reverse.
Ctrl + Shift + L -Switch between points, numbers, letters, capital letters, roman numbers and capital roman numbers

Ctrl + 1 (KeyPad) - It does a simple space between the lines.
Ctrl + 2 (KeyPad) - It does a double space between the lines.
Ctrl + 5 (KeyPad) - A space does 1.5 between the lines
.Ctrl + 1 (NumPad) - It goes at the end of the last line.
Ctrl + 7 (NumPad) - It goes at the begin of the last line.
Ctrl + F4 - It closes the current window.

Alt + F4 - It closes the current window.
Alt + Esc - It Minimize all the windows.
Windows + ESC - Open Google Talk (if it's minimized, or in the tray)
F9 - Open Gmail to send an email to the current contact.

F11 - It initiates a telephonic call with your friend.
F12 - It cancels a telephonic call.
Esc - It closes the current window.

Mar 17, 2009

உங்கள் கனினியை எங்கிருந்தாலும் பார்க்கலாம்.


உங்கள் கனினியை உங்கள் நண்பர்கள் எங்கிருந்தாலும் பார்க்கலாம்.
இது பலபேருக்கு தெரிந்தகதைதான் இருந்தாலும் என்னைப்போல சிலபேருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அதன் பெயரோ டீம் வீய்வர் அந்த மென்பொருளை இறக்கி ரன் செய்தவுடன் அது ஒரு பாஸ்வேர்ட் மற்றும் யூசர்நேம் தருகிறது.

அந்த பாஸ்வேர்டையும் யூசர்நேமயும் உங்களாது நண்பருக்கு கொடுக்கவேண்டும்.அவ்வளவுதான் உங்களது நண்பர் உங்களது கனினியில் புகுந்து ஆராய்ந்து கொண்டிருப்பார்.

இருந்தாலும் உங்களது அனுமதியில்லாமல் எந்த ஒரு கோப்புகளையும் அவ்வளவு சுலபமாக எடுத்துவிடமுடியாது.

ஆனால் எப்போது உங்கள் பாச்வேர்ட் மற்றும் யூசர்நேமை கொடுத்துவிடுகிறீர்களோ அடுத்த நிமிடம் உங்களது டெக்ஸ்டாப் உங்கள் கனினிதிரை நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் அனைத்தயும் உங்கள் நண்பரால் கானமுடியும்.

நீங்கள் உங்கள் நண்பரின் கனினியை பார்க்கவேன்டுமானால் உங்க‌ள் ந‌ண்ப‌ரும் அந்த‌ மென்பொருளை நிறுவியிருக்க‌வேண்டும் அவ‌ரிட‌ம் கேட்டு பெற்று கொள்ளுங்க‌ள் அவ‌ருடைய‌ பாஸ்வேர்ட் ம‌ற்றும் யூச‌ர்நேமை.

teamviewer dirrect download clik here and run

இது ஒரு பிர‌ச்ச‌னைக்குறிய‌ விச‌ய‌ம் என்றாலும் சில‌வ‌கையில் ந‌ன்மைத‌ர‌கூடியதாக‌வும் இருக்கிறது இந்த‌ டீம்வீய்வ‌ர்.

சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு உங்க‌ள் ஆலோச‌னைக‌ளை பார்த்துகொண்டே சொல்ல‌லாம்.முய‌ற்சி ப‌ண்ணிபாருங்க‌ உங்க‌ள் நெருங்கிய‌ ந‌ன்ப‌ர்க‌ளிட‌ம் மட்டும்.

Mar 13, 2009

நல்லதோர் வீணை செய்தே...

இன்று.... .டி. வீழ்ந்து விட்டது, கம்ப்யூட்டர் சயின்ஸ் பழசாகி விட்டது.

இனி இதைப் போலவற்றிற் கெல்லாம் எதிர்காலம் இல்லை என பலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். டிவிக்களும் பத்திரிகைகளும் பயங்கரமான முறையில் கண்டவாறு செய்திகளை போட்டுக் கொண்டிருக்கின்றன. சிலரோ இதெல்லாம் தற்காலிகமானது, மீண்டும் .டி. தலை தூக்கப்போகிறது. பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் போன்று இல்லாமல் எதிர்காலம் இல்லை என ஒரு பக்கம் சொல்வோரும் நிறைய நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதனால் பெற்றோர் சமுதாயம், யார் எப்படிப் போகிறார்கள், எந்தப் படிப்பினை மேற்கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற ஒரு பெரும் குழப்பத்தில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ அல்லது எங்கோ படித்தால் சரி, ஏதாவது ஒரு உத்தியோகம் நம் பிள்ளைக்கு கிடைத்தால் சரி என்ற போக்கிலே இலட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கை நோக்கி சரியாக காய் நகர்த்துகிறவர்கள் 2 சதவிகிதத்தினர் மட்டுமே.
இப்படி எந்தவித பிடிப்பும் அல்லது இலக்கும் இல்லாமல் எவ்வளவு நாட்கள்தான் காலத்தை ஓட்ட முடியும்? இன்றைய இளைஞர்கள் 4 வருட படிப்பு முடிந்ததும் குறைந்தது 15 முதல் 25 ஆயிரம் வரை சுலபமாக ஈட்டுகிறார்கள். பலர் அதே வேகத்தில் தங்கள் பணிகளையும் இழந்து வருகிறார்கள். இந்த வேகமான இழப்பை இந்த இளைய சமுதாயத்தினர் மிக சுலபமான ஜீரணிக்க முடியவில்லை. வேகமாக மனமொடிந்தும் போகிறார்கள். சிலர் தவறான பாதைக்கும் சென்று உயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள். இது முன்னேறிவரும் நாட்டுக்கு சரியல்ல. ஒரு நிறுவனத்தில் 20 ஆயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களை அந்த நிர்வாகம் அழைத்து இனி கொஞ்ச காலம் அவ்வளவு சம்பளத்தை தர முடியாது. அதில் பாதியைத்தான் தர முடியும், ஒப்புக்கொள்ள யார் தயார் என கேட்டனர். முக்கால்வாசி பேர் ஒப்புக் கொண்டு அதே கம்பெனியில் தொடர்ந்தார்கள். வெளியேறி விட்டால் இதை விட மோசமான நிலைமை இருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்கள் மனதில். இது அந்த இளைஞர்களின் ஒரு நல்ல மனோ நிலைமையை காட்டுகிறது.
என்றைக்கு நமக்கு வேலை போய்விடுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் நம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. தேவையே இல்லாமல், திறமைசாலிகள் கூட பயப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இன்ஜினீயரின் என எடுத்துக் கொண்டால் Civil, Electrical, Mechanical என மூன்று மட்டுமே இருந்தது. இன்று 100க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் படிப்புகள் இருக்கின்றன. பல பகுதிகள், பல பிரிவுகள். இதில் ஏமாற்று பொறியியல் கல்லூரிகள் ஆயிரம்! ஏமாறும் மக்கள் கூட்டம் இலட்சங்கள்!

ரா.வெங்கட்ராமன்.
மு.சூரக்குடி.