Showing posts with label Computer Job. Show all posts
Showing posts with label Computer Job. Show all posts

Jan 11, 2011

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?”

“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?” –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்.”

“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.

“இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.

“சரி”

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants….”.

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.

“இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?

“MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?” –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.