Mar 13, 2009

நல்லதோர் வீணை செய்தே...

இன்று.... .டி. வீழ்ந்து விட்டது, கம்ப்யூட்டர் சயின்ஸ் பழசாகி விட்டது.

இனி இதைப் போலவற்றிற் கெல்லாம் எதிர்காலம் இல்லை என பலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். டிவிக்களும் பத்திரிகைகளும் பயங்கரமான முறையில் கண்டவாறு செய்திகளை போட்டுக் கொண்டிருக்கின்றன. சிலரோ இதெல்லாம் தற்காலிகமானது, மீண்டும் .டி. தலை தூக்கப்போகிறது. பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் போன்று இல்லாமல் எதிர்காலம் இல்லை என ஒரு பக்கம் சொல்வோரும் நிறைய நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதனால் பெற்றோர் சமுதாயம், யார் எப்படிப் போகிறார்கள், எந்தப் படிப்பினை மேற்கொண்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற ஒரு பெரும் குழப்பத்தில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ அல்லது எங்கோ படித்தால் சரி, ஏதாவது ஒரு உத்தியோகம் நம் பிள்ளைக்கு கிடைத்தால் சரி என்ற போக்கிலே இலட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கை நோக்கி சரியாக காய் நகர்த்துகிறவர்கள் 2 சதவிகிதத்தினர் மட்டுமே.
இப்படி எந்தவித பிடிப்பும் அல்லது இலக்கும் இல்லாமல் எவ்வளவு நாட்கள்தான் காலத்தை ஓட்ட முடியும்? இன்றைய இளைஞர்கள் 4 வருட படிப்பு முடிந்ததும் குறைந்தது 15 முதல் 25 ஆயிரம் வரை சுலபமாக ஈட்டுகிறார்கள். பலர் அதே வேகத்தில் தங்கள் பணிகளையும் இழந்து வருகிறார்கள். இந்த வேகமான இழப்பை இந்த இளைய சமுதாயத்தினர் மிக சுலபமான ஜீரணிக்க முடியவில்லை. வேகமாக மனமொடிந்தும் போகிறார்கள். சிலர் தவறான பாதைக்கும் சென்று உயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள். இது முன்னேறிவரும் நாட்டுக்கு சரியல்ல. ஒரு நிறுவனத்தில் 20 ஆயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களை அந்த நிர்வாகம் அழைத்து இனி கொஞ்ச காலம் அவ்வளவு சம்பளத்தை தர முடியாது. அதில் பாதியைத்தான் தர முடியும், ஒப்புக்கொள்ள யார் தயார் என கேட்டனர். முக்கால்வாசி பேர் ஒப்புக் கொண்டு அதே கம்பெனியில் தொடர்ந்தார்கள். வெளியேறி விட்டால் இதை விட மோசமான நிலைமை இருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்கள் மனதில். இது அந்த இளைஞர்களின் ஒரு நல்ல மனோ நிலைமையை காட்டுகிறது.
என்றைக்கு நமக்கு வேலை போய்விடுமோ என்ற அச்சம் நாளுக்கு நாள் நம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. தேவையே இல்லாமல், திறமைசாலிகள் கூட பயப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் இன்ஜினீயரின் என எடுத்துக் கொண்டால் Civil, Electrical, Mechanical என மூன்று மட்டுமே இருந்தது. இன்று 100க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் படிப்புகள் இருக்கின்றன. பல பகுதிகள், பல பிரிவுகள். இதில் ஏமாற்று பொறியியல் கல்லூரிகள் ஆயிரம்! ஏமாறும் மக்கள் கூட்டம் இலட்சங்கள்!

ரா.வெங்கட்ராமன்.
மு.சூரக்குடி.

No comments: