உண்மைச் சம்பவங்கள்
சம்பவம் 1 :
எனது நண்பரின் நண்பர் ஒருவர் திருப்பூரில் Textile Industry நடத்தி வருகிறார். நல்ல வருமானம், கார், பங்களா, வாழ்க்கை இப்படி இருந்தபொழுது சோதனை, தோல்வி, தோல்வி, தோல்வி.
கடைசியில் வெறும் ஆளாக நின்றார். பங்களா பறிபோனது, கார்கள் போய்விட்டன. கடைசியில் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர வேண்டிய நிலைமையாகிவிட்டது. உலகமே சிரித்தது. உலகம் மதிக்கவில்லை. ஆனால் இவர் கலங்கவில்லை. ‘இப்பொழுது என்னிடம் ஒன்றும் இல்லை. ஆனால், எதிர்காலத்திலும் ஒன்றுமில்லை என்று பொருளில்லை. நான் இப்போதைக்கு இந்த வேலையைச் சரியாகச் செய்வேன்” என்று தீவிரமாக அந்தக் கம்பெனியில் வேலை செய்துகொண்டிருந்தார்.
இருந்தாலும் “வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்கமாட்டேன். மீண்டும் வாழ்க்கையில் ஜெயிப்பேன்” என்றதீவிர எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார்.
இப்படியிருந்த போது Purchase Department-ல் பொருட்களை வாங்கும் பகுதியில் இவருடைய பொறுப்பு. இதில் பல இடங்களுக்குச் சென்று பல பொருட்களை வாங்க வேண்டும்.
இப்படி செய்து வந்த பொழுது ஒரு முக்கியமான அம்சத்தை இவர் கவனித்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் மிக அதிக விலைக்கு விற்பதை கண்டுள்ளார். அதற்கு அதிக போட்டியும் இல்லை. ஆனால் உண்மையில் அதன் உற்பத்திச் செலவு மிக மிகக் குறைவு. ஆனால் விற்பனை விலையோ மிக அதிகமாக இருந்தது. இவருடைய எண்ணத்தில் “ஏன் இந்தப் பொருளை நாம் தயாரிக்கக் கூடாது” இந்த எண்ணம் மனதிற்கு வர வர அதைப் பற்றிய விபரங்களை எல்லாம் சேகரித்து வைத்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து ஒரு வாடகைக் கட்டிடத்தில் தனது தொழிலை ஆரம்பித்தார். ஏற்கனவே வேலையில் இருந்த போது நிறையத் தொடர்புகள் இருந்தது. நிறைய order இவருக்குக் கிடைத்தது. படிப்படியாக வளர்ந்து மீண்டும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆனார்.
அவர் என்னுடைய பயிற்சியில் ஈரோட்டில் கலந்து கொண்டபோது சொன்னார். “என்னுடைய முதலாளியுடன் விலை உயர்ந்த காரில் கம்பெனி கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்தேன். இதேபோல் விலையுயர்ந்த காரை மீண்டும் வாங்குவேன் என்று முடிவெடுத்தேன். இன்று உங்கள் பயிற்சிக்கு அந்தப் புதிய காரில் தான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார். இது உண்மைச் சம்பவம்.
மீண்டும் உலகம் பாராட்டியது. நண்பர்களே! இவர் அடைந்தது தோல்வி; அடைந்தது வீழ்ச்சி. ஆனால், மனத்தை அத்துடன் நிறுத்திவிடவில்லை. மீண்டும் ஜெயிப்பேன் என்றஉணர்வு அவரை மீண்டும் ஜெயிக்க வைத்தது.
தொழிலில் எத்தகைய தடங்கல் வந்தாலும், சோதனை வந்தாலும் அதையும் வாய்ப்புகளாகப் பயன்படுத்தும் எண்ணம் இருந்தால் வெற்றி நிச்சயம். இதன் பெயர் Positive Thinking அதாவது உடன்பாட்டு எண்ணம் வேண்டும். அதேபோல என்ன சிக்கல், தடங்கல் வந்தாலும் அதிலும் ஏதேனும் செய்ய முடியும் என்றநேர்மறையான எண்ணம் வேண்டும். இந்த மனநிலை இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் வெல்வார்கள்.
சம்பவம் 2 :
ஒரு அமெரிக்க ஆசிரியப் பெண்மணி வாழ்க்கையில் நிகழ்ந்தது. தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று வைத்திருந்தார். பலர் அவரை கேலி செய்து கொண்டு இருந்தார்கள். ‘நீயோ ஆசிரியர், நீ எப்படி அவ்வளவுப் பணத்தை சம்பாதிக்க முடியும்’ என்று.
ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் தன்னுடைய இலட்சியத்தில் தெளிவாக இருந்தார்.
இப்படி வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஒருமுறை ஒரு விபத்து ஏற்பட்டு ‘வீல்சேரி’ல் அமர வேண்டிய நிலைமையாகி விட்டது. அதாவது வீல்சேரில்தான் போகமுடியும், வரமுடியும். முழுமையாக பாதிப்பு. எல்லோரும் சொன்னார்கள் ‘இனி வாழ்க்கை முடிந்து விட்டது’ என்று. ஆனால், அந்தப் பெண்மணி ‘என் உடல்தான் முடங்கிவிட்டது. உள்ளம் முடங்கவில்லை. நிச்சயம் இந்த வாழ்க்கையில் என்னுடைய இலட்சியத்தை அடைந்தே தீருவேன்’ என்று தீர்க்கமாக இருந்தார்கள்.
இப்படி இருந்து கொண்டிருந்தபோது, இவர்களுக்குள் ஒரு சிந்தனை இந்த ‘வீல்சேர்’ வசதியாக இல்லை. நல்ல வசதியான ஒரு வீல்சேரை நாம் ஏன் தயாரிக்கக் கூடாது என்றஎண்ணம் ஓடியது. இதையே ஒவ்வொரு நாளும் சிந்தனை செய்து அந்தச் சேரில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியுமோ செய்து கடைசியில் ஒரு அற்புதமான வீல்சேரை உருவாக்கினார். அந்த ‘வீல் சேரை’ இரண்டு மூன்று வகைகளில் தயாரித்து மக்களிடம் சோதனைக்கு அனுப்பும்போது, இது மிக அற்புதமாக இருக்கிறது என்று படிப்படியாக ஆர்டர் வந்தது. இதை அவர்கள் ஒரு ஒர்க்ஷாப்பில் தயாரிக்க கொடுக்க ஆரம்பித்து, படிப்படியாக வளர்ந்து அந்த ‘வீல்சேர்’ மூலமே ஒரு பெரிய கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.
இதுவரை வீல்சேர் தயாரித்தவர்கள் நல்ல நிலைமையில் இருந்தவர்கள். அவர்கள் தயாரித்த ‘வீல்சேர்’ அவ்வளவு வசதியாக இல்லை. ஆனால், அந்த வலியும், வேதனையும் உடைய இந்தப் பெண் தயாரித்ததால் அது மிகச் சிறந்ததாக – பொருத்தமானதாக இருந்தது.
சாதாரண மனிதர்கள் விபத்தானவுடன் முடங்கியிருப்பார்கள். ஆனால் விபத்தையே -பிரச்சனையையே ஓர் வாய்ப்பாகச் சாதனை யாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
“பாதைகளை வழிமுறைகளை மாற்றுவேன். ஆனால், இலட்சியத்தை மாற்றமாட்டேன். அடைந்தே தீருவேன்” என்றதீவிர எண்ணம், அசைக்க முடியாத ஸ்திரமான எண்ணம் கொண்டு விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயலாற்றினால் வெற்றி நிச்சயம்!
பயிற்சிகள்
1. அழிக்கும் பயிற்சி (Erasian Technique)
தோல்விகள் நிகழ்ந்த பின்பு மனம் டென்ஷன், கோபம், கவலை உணர்வுகளால் அழுத்தப்படலாம். அதை நீக்க, உள்ளிருக்கும் உணர்வுகளை உங்கள் மேல் அன்பு, அக்கறை கொண்ட மனிதரிடம் முழுமையாகச் சொல்லி, இறக்கி வையுங்கள்.
அப்படி இல்லாவிட்டால் ஒரு பேப்பரை எடுங்கள். மனத்தில் உள்ள அத்தனை விஷயங் களையும் எழுதுங்கள். எதையும் விடாமல் என்னென்ன தோன்றுகிறதோ எல்லாவற்றையும் எழுதுங்கள். பின் அந்தப் பேப்பரைக் கிழித்துப் போட்டுவிடுங்கள். சுமை குறையும். ஒரு முறையில் தீராவிட்டால் மீண்டும் செய்யுங்கள்.
2. தூண்டும் பயிற்சி (Triggering Technique)
பொதுவாக தோல்வி ஏற்பட்டதற்குப் பிறகும் அந்த நினைவுகள் மனதுக்கு வந்து வந்து வேதனையைக் கொடுக்கும்.
நிகழ்ந்த சம்பங்களை அலசி ஆராயுங்கள். நிச்சயமாக அதில் ஏதேனும் ஓர்பாடத்தை இணைத்து விடுங்கள்.
எப்பொழுதெல்லாம் அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறதோ படிப்பினை – பாடம் – இருக்கும்.
சம்பவம் நினைவுக்கு வரும்பொழுது அதனுடன் கற்றஅப்பொழுதெல்லாம் அந்தப் பாடம் – செய்தி நினைவுக்கு வரும்.
‘கற்றபாடத்தைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சி செய்து வெல்வேன்’ என்று உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவு நாள் தோல்விகள் நினைவுக்கு வந்து உங்களை கீழே இழுத்துக் கொண்டு சென்றிருக்கும்.
ஆனால் இனிமேல் அந்த நினைவுடன் அதனால் கற்ற பாடம் நினைவிற்கு வந்து, அந்தச் சம்பவம், படிப்பினையைக் கொடுத்து உங்கள் உயர்வுக்குத் துணை செய்யும்.
3. மாற்றும் பயிற்சி (Conversion Technique)
இது, தோல்வியைச் சவாலாக மாற்றும் பயிற்சி. தோல்வி நினைவுகள் வரும்பொழுது உங்களுக்குள்ளே நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.
“என்னிடம் அளவு கடந்த அறிவு, திறமை, ஆற்றல், சக்தி இருக்கிறது. அதைச் சிறிதளவு பயன்படுத்தியதால்தான் தோல்வி. என்னிடம் மறைந்துள்ள மாபெரும் ஆற்றலை – வெளிக் கொணர்ந்து தொடர்ந்து செயல்புரிவேன், வெற்றி அடைவேன். அது என்னால் முடியும்! இது என் திறமைக்கு – என் வாழ்க்கைக்கு ஓர் சவால். நான் விசுவரூபம் எடுப்பேன். வெல்வேன்! என்னால் முடியும்!” என்று முழு மனத்துடன் கைகளை உறுதியாக வைத்து, விரல்களை மடித்து வீரத்துடன் சொல்லுங்கள். உள்ளுக்குள்ளே பெரும் சக்தி விசுவரூபம் எடுப்பதாய்க் கற்பனை செய்யுங்கள். தொடர்ந்து போராட உறுதி கொள்ளுங்கள். எழுந்து நில்லுங்கள்.
தோல்வி நினைவுகள் வரும்பொழுது – அதனோடு மூழ்கி விடாமல் – எழுச்சி கொண்டு செயல்படத் தயாராகுங்கள். தோல்விச் சம்பவங்கள் உங்களை மீண்டும் மீண்டும் விடாமல் போராடத் தூண்டட்டும்.
அவ்வாறு மாற்றி விட்டால் – வாழ்க்கை முழுவதும் வெற்றி – வெற்றி – வெற்றிதான்.
4. வெற்றி மனக்காட்சிப் பயிற்சி
(Creative Visualisation & Success Goal Imagery)
காலையிலும் மாலையிலும் அமைதியான ஓர் அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். கண் களை மூடிக்கொள்ளுங்கள். மூன்று முறைமூச்சை நன்கு இழுத்து – நிதானமாக வெளியிடுங்கள். பின் எதை அடைய நினைக்கிறீர்களோ – அதை அடைந்து விட்டால் – வெற்றி பெற்றதற்குப் பிறகு எப்படி இருக்கும் என்றநிறைவுக் காட்சியைத் தெளிவாக மனக்கண்ணால் பாருங்கள். பிரச்சனை இருந்தால் அல்லது தீர்ந்து விட்டால் எப்படி இருக்கும் என்ற நிலையைக் காட்சியாக மனதில் பாருங்கள். பிறகு மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.
இதுபோன்ற வெற்றிக் காட்சியை அடிக்கடி மனத்தில் பார்த்து வாருங்கள். இது உள் மனதில் பதிந்து அவ்வாறேநடக்கும்.
வெற்றிக் காட்சிகளையும், உடன்பாட்டு எண்ணங்களையும் மனத்தில் அடிக்கடி எண்ணாமல் விட்டுவிட்டால் தோல்விக் காட்சி களும், தோல்வியால் ஏற்பட்ட பின்விளைவு களும் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து உங்களைக் கவலையடைய வைத்துச் செயல் பாட்டைத் தடுக்கும். சிந்தனையைக் குழப்பும்.
ஆகவே உடன்பாட்டு எண்ணங்களை நிரப்புங்கள். வெற்றி அடையுங்கள்.
உறுதிமொழிப் பயிற்சி (Charging Technique)
மனதுக்குள் கீழ்க்கண்டவாறு சொல்லிக் கொண்டே இருங்கள்.
நான் தன்னம்பிக்கை உள்ளவன்!
நான் சக்தி மிக்கவன்!
நான் சாதனையாளன்!
நான் அன்பு மிக்கவன்!
நான் உற்சாகமானவன்!
நான் சுறுசுறுப்பானவன்!
நான் மகிழ்ச்சி நிறைந்தவன்!
என்னால் முடியும்!
முடியும்! முடியும்!
வெற்றி நிச்சயம்!